உண்மை ஒளிரும் சூரியனிலும் கரும்புள்ளி உண்டு
பொய்யொளி பகரும் நிலவிலும் நிறைகள் உண்டு
ந்ந்த வனத்து தென்றலிலும் தூசி உண்டு
பாலைவனத்து புயலிலும் தண்ணீர் உண்டு
தெய்வத்திருமேனிலும் சிற்பிக்கு சறுக்கல் உண்டு
உளியில் வரும் விழிகளுக்கும் உன்னத அருள் உண்டு
உண்மையும் பொய்ம்மையும்
நன்மையும் தீமையும்
ஒளியும் நிழலும் என
நனவும் கனவும் என
விளையும் களையும் என
வாழ்க்கை முழுக்க பரவி கிடக்கிறது வார்த்தைகளாய்
வார்த்தைகளின் தொடர்ச்சிகளில் அல்ல வாழ்க்கை
வார்த்தைகளின் இடைவெளிகளில் தொங்கும் அர்த்தங்களில்
வாழ்ந்து விட்டு போகிறது வாழ்க்கை
வாழ்க்கையை ,வார்த்தைகளின் இடைவெளிகளில்
அழகாய் வாழ கற்றுக்கொள்வோம்