Wednesday, December 25, 2019

உண்மை ஒளிரும் சூரியனிலும் கரும்புள்ளி உண்டு
பொய்யொளி பகரும் நிலவிலும் நிறைகள் உண்டு

ந்ந்த வனத்து தென்றலிலும் தூசி உண்டு
பாலைவனத்து புயலிலும் தண்ணீர் உண்டு

தெய்வத்திருமேனிலும் சிற்பிக்கு சறுக்கல் உண்டு
உளியில் வரும் விழிகளுக்கும் உன்னத அருள் உண்டு

உண்மையும் பொய்ம்மையும்
நன்மையும் தீமையும் 

ஒளியும் நிழலும் என
நனவும் கனவும் என
விளையும் களையும் என

வாழ்க்கை முழுக்க பரவி கிடக்கிறது வார்த்தைகளாய்

வார்த்தைகளின் தொடர்ச்சிகளில் அல்ல வாழ்க்கை
வார்த்தைகளின் இடைவெளிகளில் தொங்கும் அர்த்தங்களில்
வாழ்ந்து விட்டு போகிறது வாழ்க்கை

வாழ்க்கையை ,வார்த்தைகளின் இடைவெளிகளில்
அழகாய் வாழ கற்றுக்கொள்வோம்
                              

134.நாட்டுக்காக நான்கு மாதங்கள் உழைக்க வேண்டுமா?

  நாட்டுக்காக நான்கு மாதங்கள் உழைக்க வேண்டுமா? வருமான வரி கட்டும் தன் நண்பரின் எண்ண ஓட்டத்தைக்குறித்து ட்விட்டர் வலைதளத்தில் ஒருவர் சமீப...