Thursday, March 26, 2026

உள்ளதைச் சொல்கிறேன் (சமூகம் பகுதி-1)

 

உள்ளதைச் சொல்கிறேன்

(சமூகம் பகுதி-1)

 

1.      ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடலாமா?

ஆங்கிலப்புத்தாண்டினைக் கொண்டாடலாமா? வேண்டாமா?’

சிலர் அதை உல்லாசமாக கொண்டாடுகிறார்கள். வேறு சிலர் அதைகொண்டாடலாமா? வேண்டாமா?” என்கிற சந்தேகத்துடன் இருக்கிறார்கள். இதில் என்னுடைய பார்வை என்னவென்றால், யாருக்கெல்லாம் இந்த பூமியில் புத்தாண்டு என பார்த்தால், இந்த அண்டத்தில் (Cosmic system) எனக்குத் தெரிந்தவகையில் கடவுளுக்கு கிடையாது. ஏனெனில் அவர் ஆதியும், அந்தமும் இல்லாதவர். ஆக, அவருக்கு புதுவருடம் என்பதே கிடையாது. அதுபோல விலங்குகளுக்கும் கிடையாது, அவர்கள் வாழ்க்கை நேரியலாக (linear)  போகும், பிறந்த அன்றைக்குத்தான் புத்தாண்டு. அதன்பின் அவற்றின் வாழ்க்கையின் முடிவு வரைக்கும் ஒரே ஆண்டுதான். மனித இனத்துக்கு மட்டும் தான் இந்த புத்தாண்டு என்னும் கருத்தியல் இருக்கிறது. ஒவ்வொரு 365 நாட்களையும் நாம் ஒரு சுழற்சியாகப் பார்க்கிறோம். இந்த பூமியானது சூரியனை ஒரு சுற்று சுற்றி முடிக்கிறது. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வது ஒருநாள். அது சூரியனைச் சுற்றி வருவது ஒரு ஆண்டு. 5 பில்லியன் ஆண்டுகளாக பல கோடி முறை இந்த பூமி சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. இன்னும் 5 பில்லியன் ஆண்டுகள் சுற்றத்தான் போகிறது. ஆனால்.. அதிகபட்சமாக ஒரு 80, 85 சுற்றுதான் ஒரு மனிதனுக்கு! சூரியனை  80, 85, தடவை பூமி சுற்றி வந்துவிட்டாலேஅவரவர் கிளம்பி விடுவர். இருந்தாலும், இந்த சுழற்சி என்னும் கருத்தியலுக்குள் வந்து, ஒவ்வொரு சுழற்சியையும் ஒரு கொண்டாட்டத்துடன் முடிக்கிறோம்.முந்தைய ஆண்டிலிருந்து படிப்பினைக் கற்று, அதிலிருந்து வாழ்க்கையை நவீனப்படுத்தி கொண்டாடலாம் என்கிற இந்த புத்தாண்டு என்னும் கருத்தியல், மனித இனத்திற்கே பொதுவானது. எனக்குத் தெரிந்தவகையில் ஆப்பிரிக்கா, அந்தமான் ஆகியவற்றில் வாழும் பழங்குடியினர்கூட புத்தாண்டு என்னும் கருத்தியல் கொண்டிருக்கிறார்கள்! ஒரு நாளை வசந்த விழா என்றோ, அறுவடை நாள் என்றோ, தைப்பொங்கல், சித்திரை, தெலுங்கு வருடப்பிறப்பு, மலையாளத்தில் வருடப்பிறப்பு, பஞ்சாபில் லொஹரிஇப்படி எல்லா இனமுமே ஒரு நாளை  தங்களுடைய பொது ஆண்டாக ஏற்று, இந்த சுழற்சியை அங்கீகரிக்கிறார்கள்.

இந்த சுழற்சியை எவ்வளவு, எப்படி, எவ்வாறு அங்கீகரிக்கிறார்கள் என்பதில்தான் வித்தியாசம் இருக்கின்றது. இப்போது தமிழ்நாட்டில் விமர்சையாக நம்மால் கொண்டாடப்படுவது ஆங்கிலப்புத்தாண்டுதான். ஒரு காலத்தில் அவர்களின் ஆதிக்கம் இந்த உலகம் முழுவதும் இருந்தது. அதனால் அவர்கள் கால்பதித்த தேசங்கள் எல்லாம், அவர்கள் நாட்கணக்கீட்டின் படியும், வழி முறையிலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல தேசங்களில் இன்று ஆங்கிலப் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

ஆங்கிலப்புத்தாண்டுஎன்பது ஆங்கிலேயர்களின் அரசியல் மற்றும் பொருளாதாரத்திலிருந்து வருகிறதுஅதை நாம் கொண்டாட வேண்டுமா? என்றால்.. நாம் அவர்களுக்கு பயந்துகொண்டு கொண்டாடினால்தான் தவறு. ஆனால்.. மகிழ்ச்சிக்காக கொண்டாடலாம் தவறில்லை. ஏன் அப்படி என்றால், நம்முடைய நிறைய தனிப்பட்ட மற்றும் பொருளாதார செயல்பாடுகள் எல்லாமே இந்த ஆங்கில புத்தாண்டை அடிப்படையாக கொண்டுதான் அமைந்திருக்கிறது. தமிழ்ப்புத்தாண்டை அடிப்படையாகக் கொண்டு அமையவில்லை. அதனால் என்னுடைய தீர்க்கமான பதில் என்னவெனில், நம் தமிழ்ப் புத்தாண்டை தெய்வீகமாக கொண்டாடலாம். ஆங்கிலப்புத்தாண்டை ஒரு மகிழ்ச்சிக்காக கொண்டாடலாம்இதுவே என் முடிவான கருத்தாகும்.

    --------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 


No comments:

Post a Comment

உள்ளதைச் சொல்கிறேன் (சமூகம் பகுதி-3)

 உள்ளதைச் சொல்கிறேன்  (சமூகம் பகுதி-3) குஜராத் ’ கர்பா ’ நடனத்தின் பழமை !   இந்த கர்பா நடனம் 4000 ஆண்டுகள் பழமையானது என்பது சரியா ? ...