Friday, May 1, 2026

காதல் திருமணம் செய்தாலும் மதம் மாறப்படுமா? பார்சி மதம் பற்றிய முழு உண்மைகள் (பகுதி -5)

 

             காதல் திருமணம் செய்தாலும் மதம் மாறப்படுமா? பார்சி மதம்  பற்றிய முழு உண்மைகள்


 (அடேங்கப்பா.. மதம் மாற முடியாதா?)



காதல்என்றால் என்ன? ”காதல் திருமணம் செய்தால் ஜாதி அழியுமா?” என்கிற தலைப்பில் பேசியிருந்தேன். எல்லாமே என் தனித்துவமான பார்வையும், தனிப்பட்ட கருத்துகளும்தான். அதற்கு நிறைய கருத்துகள் வந்திருந்தன. அதில் நிறைய நண்பர்கள்காதல் செய்தால்தான் ஜாதி அழியும்என்று ஜாதியை ஒரு எதிர்மறை விஷயமாக சொல்லியிருந்தார்கள். ஜாதிகளுக்கிடையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் எதிர்மறைதான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சமூகநீதி என்று வரும்போது, அதில் ஜாதி ரீதியிலான பாகுபாடுகள் ஏற்புடையதல்ல. சமூகநீதி எப்போதும் சமநிலையுடனே இருக்க வேண்டும். இதிலும் எவ்விதமான மாற்றுக் கருத்துகளும் இல்லை. ஆனால்.. அதே நேரத்தில் நம் கண்களுக்கு முன்னால் இருக்கும் சமூகத்தின் உண்மையான நிலையானது (social reality) நாம் கண்களை மூடிக்கொண்டால் அது தானாகவே மறைந்துவிடும் என நினைத்தால்அதுவே ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும்.

என் கருத்துக்கு பதில் கருத்துகளை பதிவிட்டவர்கள், “காதல் பண்ணப் பண்ண மனித இனம் ஒருங்கிணைந்து விடும். மதத்தில் இந்த பிரச்சினை இல்லை. மதத்தில் மட்டும்லவ் ஜிஹாத்போன்ற விஷயங்களில் இன்னொரு மதத்திற்கு மாறுவதை ஏன் தடுக்குறீர்கள்? என்பன போன்ற கேள்விகள் நிறைய இருந்தன. அப்படி கேள்வி எழுப்பியவர்களின் புரிதலுக்காக பார்சி மதத்தினையே உதாரணமாக சொல்ல நினைக்கிறேன்.

முதலாவதாக, “பார்சி மதத்திற்கு மாற முடியுமா?” என ஒரு கேள்வி. இந்த பார்சி மதத்தினை பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். Zoroastrianism என்று அழைக்கப்படும் மதம். நம் இந்தியாவை பொறுத்தவரை பிரபலமான தொழில்துறையைக் கட்டமைத்த டாடா குடும்பம், அக்கால பம்பாயை பின்னணியாகக் கொண்ட தாதாபாய் நெளரோஜி, பொருளாதார வல்லுனர்கள், பட்டயக்கணக்காளர்கள் (charted accountants) வழக்கறிஞர்கள், பல உச்சநீதி மன்ற நீதிபதிகள் போன்றவர்கள் என பெரும்பாலும் பார்சி மதத்தினர்தான். நம் இந்தியாவில் பார்சி மதத்தினைச் சேர்ந்தவர்கள் தோராயமாக 10 லட்சம் மக்கள் இருக்கக் கூடும். இவர்கள் பெரும்பாலும் இன்றைய மும்பையில் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள். அந்த பத்து லட்சம் பேரில் 99.99% மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள். இது இன்றைக்கு மட்டுமில்ல. 1950 களில் இருந்தே இப்படித்தான். கடந்த 70 ஆண்டுகளாகவே அவர்கள் கல்வியறிவு பெற்றவர்கள்தான். அவர்கள் வணங்குவது நெருப்புக் கடவுள் (Fire God).  இந்த நெருப்புக்கடவுள் வழிபாடானது இந்தியாவிற்கு எங்கிருந்து, எப்பொழுது வந்தது? என்கிற கேள்வி எழலாம். இதற்கான பதில், வரலாற்றின்படி, கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் அன்றைய பெர்ஷியா (PERSIA) விலிருந்து வந்திருக்கிறார்கள். (பெர்ஷியா- PERSIA என்பது இன்றைய ஈரான் நாடு) இதனால் அவர்கள் பெர்ஷியன்ஸ் PERSIANS என்று அழைக்கப்பட்டார்கள்.

அரேபியப்பகுதியில் இஸ்லாம் மதம் உருவாகும்போது  பெர்ஷியாவில் வழிபாடு செய்து வந்த தங்கள் கோவில்களில் இருந்து நெருப்புக்கடவுளை கடல், மலைகளின் வழியாக காப்பாற்றிக் கொண்டு வந்து இந்தியாவில் குஜராத்தின் கடலோரப்பகுதியில் தருகிறார்கள். பெரும்பாலும் உலகம் முழுக்க நிறைய இடங்களுக்கு கப்பல்கள் மூலமாக சென்றிருக்கிறார்கள். அவர்களெல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள் என யாருக்கும் தெரியாது. ஆங்காங்கே வாழ்ந்த சமூகங்களுடன் ஒன்றிணைந்து விட்டனரோ? ஆனால்.. இந்தியாவிற்கு வந்தவர்கள் கச்சிதமான செளகர்யங்களுடன் இன்றும் வாழ்கிறார்கள்.(இது  இந்தியாவின் பெருமை என்றே சொல்லலாம்) கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் குஜராத் கடலோரத்தில் தங்குகிறார்கள். அந்த பகுதியை ஆண்டுவந்த ஒரு குஜராத் மன்னர்தான் அவர்களுக்கு அடைக்கலம் தந்திருக்கிறார். அவர்கள்தான் இன்றைய காலத்தில்பார்சிஎன்கிற பெயரில் இருக்கிறார்கள். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் (GDP) பொருளாதாரத்திலும் (Economy) யிலும் பார்சி மதத்தவர்களான டாடா குழுமத்தின் செல்வாக்கு நமக்கெல்லாம் தெரிந்ததுதான். டாடா அறக்கட்டளை (TATA Trust) போன்றவற்றின் பங்களிப்பு இன்றும் தன் தன்னிகரற்ற சேவையில் சிறந்து விளங்குகிறது. ’அவர்களைத்தாண்டி (பார்சியினர்) ஒரு அறிவாளியான சமுதாயம் இல்லைஅளவிற்கு இருக்கக்கூடியவர்கள். அந்த சமுதாயத்தில், அவர்கள் மதத்திற்கு வேறு எவரும் மதம் மாறி உள்நுழைய முடியாது. ஒரு பார்சி இனத்தவராக பிறக்காதவர்கள் அவர்களின் கோவிலுக்குள்ளே நுழைய முடியாது. இன்றைக்கும் இதுவே நியதி. இதுதான் சட்டம். ஜாதி மாறுவது, ஜாதிகளை அழிப்பதையெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்ன? பார்சி மதத்திற்கு யாரும் மாற முடியாது. மாறவேண்டிய அவசியமும் இல்லை. அதாவது ஒரு பார்சி பெண்ணை திருமணம் செய்துகொண்டால்கூட, அவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அந்த பார்சி இனப்பெண்ணை கடைசி வரை அவர்கள் தங்களின் வழிபாட்டுத்தலத்திற்குள் (கோவிலுக்குள்) விடுவதேயில்லை. [இதை நீங்கள் மூடநம்பிக்கை என்று சொல்வீர்களா? பிற்போக்குத்தனம் என்று சொல்வீர்களா? என்னவென்று சொல்லப் போகிறோம்? இன்னும் அந்த பார்சி சமூகத்திற்கு பிற சமூகங்கள் மீது நம்பிக்கை வரவில்லையோ? என்று எண்ணுவோம்.]

பார்சியினர் இறப்பிற்குப்பின் அவர்கள் உடலுக்கான சடங்குகளில் ஒன்றான எரிப்பதா? புதைப்பதா? அல்லது ஒரு கல்லிலே கட்டிவைத்துவிடுவதா? என்பதையெல்லாம் பிறகு பார்க்கலாம். இப்போது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், படிப்பிற்கும் கலாச்சாரத்திற்கும் ஒருபோதும் சம்பந்தமில்லை. ஒரு சமுதாயம் மெத்தப் படித்திருந்தால் மட்டும் அந்த சமுதாயம் மேம்பட்டு விடும் என்பது கிடையாது. கீழ்நிலைக்குச் சென்றுவிடுவதும் கிடையாது. படிக்காத சமுதாயத்தின் கலாச்சாரம் கீழே இருக்கவேண்டும் என்கிற அவசியமுமில்லை. மதத்தை முழுக்க முழுக்க மூட நம்பிக்கையாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அது ஒரு தொடர்பு சார்ந்தது மட்டுமே. நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், பார்சி இனத்தின் கடவுளை மனதார ஏற்றுக்கொண்டு, அது சம்பந்தமான புத்தகங்களைப் படித்து, புரிந்துகொண்டு அதில் நீங்கள் மேதையானால்கூட உங்களை அவர்கள் சமுதாயத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் பார்சி இனத்தின் ஆணையோ, பெண்ணையோ திருமணம் செய்துகொண்டால்கூட நீங்கள் பார்சியாக உருவெடுக்க முடியாது. அந்த சமூகத்திற்குள் செல்ல முடியாது. ஆக, ஜாதி மாற முடியாதது என்பது மட்டுமல்ல. மதத்தையும் மாற்றிக்கொள்ள முடியாது என்னும் நிலை இந்த உலகத்தில் இன்னும் இருக்கிறது என்பதே ஆச்சரியமான உண்மை.

---------------------------------------------

 

 

 

காதல் திருமணம் செய்தாலும் மதம் மாறப்படுமா? பார்சி மதம் பற்றிய முழு உண்மைகள் (பகுதி -5)

                காதல் திருமணம் செய்தாலும் மதம் மாறப்படுமா ? பார்சி மதம்   பற்றிய முழு உண்மைகள்   ( அடேங்கப்பா .. மதம் மாற முடியாதா ?) ” காத...