வல்லபாய் பட்டேல் Vs நேரு இருவருக்கும் மோதல் ஏன்?
ஜம்மு – காஷ்மீர் பிரதேசத்தை இந்தியாவுடன் இணைக்க முடிவெடுத்தபோது
சட்டப் பிரிவின் ஆர்ட்டிகல் 370 – இன்படி சிறப்பு சலுகைகளை அறிவித்த்துதவறெனில் அந்த்த் தவற்றை சரிசெய்வதற்கு
70 ஆண்டுகாலம் ஆகிவிட்டது. இணப்பு மேற்கொண்ட காலகட்டத்தில் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அவர்கள் செய்தது தவறு என விமர்சிக்கப்பட்டது. உண்மையில் ஜவஹர்லால் நேரு போன்ற பெருந்தலைவர்களை
விமர்சிக்கும்போது சற்று எச்சரிக்கையுடனே பேச வேண்டும். வரலாற்றில் அந்த காலகட்ட்த்தில் அத்தகைய முடிவை ஏன் எடுத்தார்கள் என்பதை பொத்தாம் பொதுவாக இன்றைக்கு விமர்சிக்கக்கூடாது என்பதே என் கருத்து.
நேரு அவர்கள் ‘சோஷலிசக் கொள்கை’யில் ஈடுபாடு கொண்டவர். சர்தார் வல்லபாய் படேல் போன்றோர் ’முதலாளித்துவக் கொள்கை’யினைப் பரிந்துரைத்தவர்கள். அதனால், நேருவின் முடிவு தவறென்று கூறிவிட முடியாது. மகாத்மா காந்தி அவர்கள் ’வன்முறையே கூடாது’ என்கிற பாதையைத் தேர்ந்தெடுத்தவர். 1929 –இல் காங்கிரஸ் கட்சியில் ’நேருவா? பட்டேலா?’ என்கிற நிலப்பாடு தலைதூக்குகிறது. இந்த தருணத்தில் மகாத்மா காந்தி அவர்கள் பட்டேலைத் தவிர்த்துவிட்டு
நேருவை ஆதரித்தார். ஏனென்றால், காந்தியைப் பொறுத்தவரை ‘இந்து – முஸ்லிம்’ ஒற்றுமையினால் மட்டுமே இந்தியா சுதந்திரம் பெற முடியும் என்று கருதினார். ஆகவே வல்லபாய் படேலை முன்னிறுத்தினால் ஏதேனும் பிரச்சினைகள் எழக்கூடுமென காந்தி சிந்தித்தார்.
ஆகவே, அவர் நேருவை முன்னிலைப்படுத்தினார். (ஆனால், வல்லபாய் படேல் அதனை ஏற்கவில்லை. ஆனால், இது தவிர்த்து பல்வேறு விஷயங்களில் அவர்களுக்குள்ளே
ஒருமித்த கருத்து இருந்தது.)
1939- இல் காங்கிரஸ் உட்கட்சித் தேர்தலில் தேசியத்தலைவருக்கான
போட்டி ஏற்பட்டது. அதில் ’நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்’ அவர்கள் பங்கேற்றார். அவருக்கு எதிர் வேட்பாளராக ’சீதா ராமய்யா’ என்பவர் போட்டியிட்டார்.
’சீதா ராமையா தோல்வியுற்றால் அது என்னுடைய தோல்வி’ என்று காந்தி பகிரங்கமாகத் தெரிவித்தார்.
ஏன் அவ்வாறு தெரிவித்தார்? காரணம், காந்தியின் அகிம்சைப் பாதைக்கு எதிராக, ’ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறை’ (Organized
voilence) முன்னெடுக்கலாம் என்கிற நிலைப்பாடு கொண்டவர். ஆகவே, நேதாஜி காங்கிரஸ் தலைவராக வருவதைகாந்தி ஆதரிக்கவில்லை.
ஆனால், தேர்தல் முடிவில் நேதாஜியே தலைவராக தெரிவு செய்யப்பட்டார். பின் காந்தியை நேதாஜி நேரில் சந்தித்து, தன் நாட்டின் சுதந்திரத்திற்காக காங்கிரஸை தன்னுடைய சித்தாந்தத்தில்
வழிநடத்தப்போவதாகவும், அதனை காந்தி ஆதரிக்க வேண்டுமென்றும் கோரினார். அதற்கு ’ஒழுங்கமைக்கப்பட்ட
வன்முறை’ (Organized voilence) பாதையில் செல்வதற்கு தன்னுடைய ஆதரவு கிடையாது என்றும், காங்கிரஸ் அத்தகைய பாதையில் நடைபோட்டால், காங்கிரஸிற்கும் என்னுடைய ஆதரவு கிடையாதென்றும் காந்தி அவர்கள் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்தார். அப்போது, நேதாஜி அவர்கள் ‘நீங்கள் தான் மிகவும் முக்கியமான தலைவர். உங்கள் சித்தாந்த பாணியும் முக்கியம். ஆனாலும், நீங்கள் என்னை, என் சித்தாந்தத்தை ஒப்புக்கொள்வீர்கள்
என்று கருதிதான், நான் தேர்தலில் வெற்றி பெற்று தங்களிடம் வந்திருக்கிறேன்.
ஆனாலும், பரவாயில்லை. என்னுடைய தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன்’ என்று கூறி தன் தலைவர் பதவியை உடனே ராஜினாமாவும் செய்கிறார். அதன்பிறகுதான் ’ஃபார்வர்டு பிளாக்’ என்கிற கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து பிரிட்டிஷாரை எதிர்த்து,’ஆயுதக்கிளர்ச்சிப்பாதை’யில் பயணிக்கத்தொடங்கினார். ’ஆயுதக்கிளர்ச்சிப்பாதையைத்’ தேர்ந்தெடுத்த உலகின் மற்ற கிளர்ச்சிகளுக்கும், நேதாஜியின் ஆயுதக்கிளர்ச்சிப்பாதைக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருந்தது. இதை வரலாற்று நோக்கர்கள் சரிவர தெளிவுபடுத்தவில்லை என்றே நான் வருந்துகிறேன்.
காரணம், நேதாஜி இந்தியாவிலிருந்து வெளியேறியபின் முதலாவதாக சுதந்திர இந்தியாவைப் பிரகடனப்படுத்தி,
அதற்கு தன்னையே தலைவராக அறிவித்து விட்டார். அதன்பின்னரே அவர் இராணுவத்தை உருவாக்கினார். Rebel என்றால் என்ன பொருள்? ’இறையாண்மை இல்லாமல் ஆயுத கிளர்ச்சி’ என்று பொருள். ஆனால், சிங்கப்பூரிலிருந்தபடியே ஒரு தேசத்தை உருவாக்கி அறிவித்துவிட்டு, அதன் கீழேதான் இராணுவத்தைக் கட்டமைத்தார். அவர் தீவிரவாதத்தை முன்னெடுக்கவில்லை. இதில்தான் நேதாஜியின் அரசியல் ஆளுமையின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். சர்தார் வல்லபாய் படேலும் மகாத்மா காந்தியின் சுத்தமான அகிம்சைப்பாதையை
(வன்முறையற்ற) ஒப்புக்கொண்டதில்லை. ஒழுங்கமைக்கப்பட்ட
ஆயுதக்கிளர்ச்சியை ஆதரிக்கும் மனோபாவம் கொண்டவர்தான்.
ஆனால், அவர் சோஷலிஸ்ட் அல்ல; முதலாளித்துவ சித்தாந்தத்தை ஆதரித்தவர் என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளேன். ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களோ இராணுவத்தின் மூலம் பிரிட்டிஷாரை எதிர்க்க வேண்டும் என்று கருதினார். ஆனால், அவர் சோஷலிஸ்ட் சித்தாந்தவாதி. ஆக, இந்த மூன்றுபேரில் மகாத்மா காந்தி மிகவும் வித்தியாசப்பட்டவராக
விளங்கினார். அடுத்தகட்ட அரசியல் நகர்வு மகாத்மா காந்தியின் ‘வன்முறை கூடாது’என்னும் உறுதிப்பாடு இந்தியாவின் இரத்த்த்திலேயே ஊறியிருக்கிறது என்றே நான் கருதுகிறேன். இந்தியாவின் சுமார் 70% மக்கள் இதனை நம்பினார்கள். அதனால், அந்த காலகட்டத்தில் மகாத்மா காந்தியை தங்களின் ஏகோபித்த தலைவராக ஏற்றுக்கொண்டனர்.
இவர்கள் எல்லோருமே நம் நாட்டிற்காக நல்லெண்ணத்துடன் சிறப்பான சேவையாற்றியுள்ளனர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவற்றை நாம் படித்துத்தெரிந்து கொள்கிறோம். அவற்றிலுள்ள சில தவறுகள் மீண்டும் எழாமல் திருத்திக்கொள்கிறோம்.
சட்டப்பிரிவின் ஆர்ட்டிக்கல் 370 – ஐ அப்போது அமல்படுத்தியது தவறு என்பதை இக்காலத்தில் நம்மில் பலரும் ஒப்புக்கொள்கிறோம். ஏனெனில், ஒரு மாநிலத்திற்கு மட்டும் பிரத்யேகமான சலுகைகளை, முன்னுரிமைகளைத்
தரக்கூடாது என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளோம் அல்லவா?
நேருவிற்கும் படேலுக்கும் இடையே மோதல் இருந்ததா? என்றால், கொள்கை ரீதியாக அவர்களுக்குள் மோதல் இருந்தது உண்மைதான் என்று கூறமுடியும். அவர்கள் இருவருமே ’சோஷலிஸம்’ என்கிற கோட்பாட்டில் ஒரே நிலைப்பாடு கொண்டவர்கள். ஆனால், நேருவின் சோஷலிஸமானது நவீனகால சிந்தனையும், மேற்கத்திய பாணியும் ஒன்றிணைந்த கலவையான சித்தாந்தம். ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சுவாமி விவெகானந்தரை நேசித்தவர். ஆகவே, நேதாஜியின் சோஷலிஸமானது இந்திய பாரம்பரிய கலாச்சாரப் பின்னணியை முன்னிலைப்படுத்தியது. நேரு அவர்களோ மகாத்மா காந்தியின் ‘அகிம்சை’ என்கிற பாதையில் மிகத்தீவிரமாக நம்பி அதன் வழியில் பயணித்தவர். நேதாஜி வேகமாக எதிர்வினையாற்றக்கூடியவராக இருந்தார். ’ஏனோதானோ’ என பூசி மெழுகக்கூடியவரல்லர். உதாரணமாக நேரு அவர்கள் ‘இந்து- முஸ்லிம்’ பிரச்சினை ஏற்பட்டால், அதை அணுகும் விதத்தில் மென்மையாக இரண்டு தரப்பினரையும் அரவணைத்துப் போக வேண்டும் என்பவர். ஆனால், நேதாஜியோ இருதரப்பினரில் யார் செய்த தவறாக இருந்தாலும் ‘தவறென்றால் தவறுதான்’ என்கிற அணுகுமுறை கொண்டவர். மகாத்மா காந்தியின் அகிமசை தத்துவத்தில் அதீத நம்பிக்கை கொண்டிருந்ததால் கிஞ்சிற்றளவும் நேரு விலகியதில்லை.
ஆனாலும் சிறுசிறு முரண்பாடுகள் வந்தன. ஆகவேதான் இந்திய சுதந்திரத்திற்குப்பின் மகாத்மா காந்தி ஆயுள் தொடர்ந்திருந்தால் நிச்சயம் நேருவிற்கும் மகாத்மா காந்திக்கு இடையே சண்டை வந்திருக்கலாம் என்று கூறப்படுவதுண்டு.
ஏனெனில் இந்தியாவின் நவீனகால கோவில்கள் என்றால் அது தொழிற்சாலைகள்தான் என்று கூறுவார். அதனால்தான் நேரு பிரதமராக இருந்த காலகட்டத்தில் மிப்பெரிய தொழிற்சாலைகளை அதிகளவில் நிர்மாணித்தார்.
அதற்கு தனியாரிடமிருந்து
நிதி பங்களிப்பு இல்லாததால், அவர் தலைமையிலான மத்திய அரசே தொழிற்சாலைகள்,
சாலைகள், அணைகள் அனைத்திற்கும் நிதி பங்களிப்பு செய்தது. ஆனல், மகாத்மா காந்தி என்ன கூறினாரென்றால், தொழிற்சாலைகளே கூடாது என்றார். இன்னும் சொல்லப்போனால், நோய்களைக்கொண்டு
வரக்கூடியது என ரயில் போக்குவரத்தே கூடாது என்றவர் மகாத்மா காந்தி. ஒவ்வொரு குடிமகனும் 5,
10 ஏக்கர்களில் விவசாயம் செய்து முன்னேர வேண்டும் என்றும், ’கிராமங்களே கோவில்’ என்று கூறியவர். ஆக, ஏதோ ஒரு காரணத்தினால்,
இறைவன் நேரு பாணியிலேயே பயணிக்கச் செய்துவிட்டார்!
மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, நேதாஜி ஆகிய மூவர்மே ஒப்பற்ற தலைவர்கள் என்பதே நிஜம். அந்த காலகட்ட்த்தில் இந்தியாவிற்கு எது சிறந்தது என்பதை தீவிரமாக சிந்தித்திருக்கின்றனர். எது எப்படியாயினும், தேசத்தின் ஒற்றுமையில் அதீத அக்கறை செலுத்தியவர் சர்தார் வல்லபாய் படேல் அவர்கள். ’ஒற்றுமை’ என்கிற விஷயம் இல்லாமல் இன்றைய இந்தியாவின் அதீதமான கட்டமைப்பு, வளர்ச்சி ஆகியவற்றை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்பதே உண்மை. அந்த வகையில் இந்திய வரலாற்றில் வல்லபாய் படேல் அவர்களின் என்றென்றும் தனித்துவமாக நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை என்றே நான் கருதுகிறேன்.
---------------------------------------------------------------