Exam motivation: Study Motivation and
Tips for Top Grades
தேர்வு என்றாலே அகில இந்திய அளவில் முதலிடம் பெறுபவர், கடைசி இடம் பிடிப்பவர் ஆகிய இருதரப்பிற்குமே பிடிக்காது. இதில் நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால்,
ஒரு Pressure ஏறும்போது நன்றாக இருக்கும். இன்னொரு Pressure ஏறும்போது நன்றாக இருக்காது. ஒரு ஸ்கூல்ல மாணவன் ஒருவன் ”ஏன் சார்.. படிங்க, படிங்கங்கிறீங்களே.. எவ்வளவு படிச்சாலும் ஒருத்தந்தானே முதல் ரேங்க் எடுக்கப்போறான்” என்று கேட்டான். உண்மைதான். ஒருவர் மட்டுமே முதல் ரேங்க். ஒருவர்தான் இரண்டாம் ரேங்க். ஆனால், உங்கள் பள்ளியில் படித்து, அதில் முதல் ரேங்கராக மேலே வந்து, அடுத்த பள்ளியிலும் அதேபோல் மேலே வந்தாக வேண்டும். நீங்கள் மாவட்டத்தில் முதல் நபராக வந்துவிடுவீர்கள்.
அந்த பள்ளி மாணவன் முதல் ரேங்க் எடுக்க வேண்டுமென்றால் அவன் இன்னும் நன்றாக படிக்க வேண்டும். பள்ளி, மாவட்ட அளவில் வருகின்ற இப்போட்டியானது மாநில அளவில் வரும்போது இந்த மாவட்டமா? அந்த மாவட்டமா? என்கிற நிலை வரும். அடுத்த கட்டமாக அகில இந்திய ரீதியில் எந்த மாநிலம் முதன்மை? என்கிற போட்டிநிலை வரும். எல்லோருமே அவரவர் திறனை மேம்படுத்திக்கொள்ளும் போது ஒட்டுமொத்த சமூகத்திற்குமே ஒரு பலன் கிடைக்கப்போகிறது. இந்த வகையில் போட்டி அவசியமான ஒன்றுதான். மூன்றாவதாக நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், இரண்டாயிரம் வருடங்களாக இப்போதுபோல் சீரியஸாக படித்தவர்கள் என நம் மரபியலிலேயே கிடையாது. தேர்வு என்கிற கருத்துருவாக்கம் உருவாகி வெறும் 100 ஆண்டுகளே ஆகின்றன. அதிலும் தற்போது மிக அநியாயமான போட்டிகள். 98.75, 98.73, 98.71, 98.7 என்கிற சதவீதத்தில் இவ்வளவு போட்டியானது முன்பெல்லாம் கிடையாது. இன்று எல்லோராலும் பிரபலமாக சொல்லப்படும் 2 K kids - க்கே அதிகம். ஒரு பக்கம் மனவுணர்ச்சி,
இன்னொரு பக்கம் சுதந்திரம், வேறுபக்கம் தகவல்கள், மறுபக்கம் போட்டிகள், இதுமட்டுமில்லாமல்
பணத்திற்கான தேவை என கிறுகிறுக்க வைக்கிறது. ஆக, 2 K
கிட்ஸ் என்பவர்கள் Huge
psychological Persons. இப்படியெல்லாம் இருந்தாலும் ஒவ்வொரு மனிதர்களும் அந்தந்த காலகட்டத்தில் சமாளித்திருக்கின்றனர். அதேபோல் நீங்களும் சமாளிப்பீர்கள்.
உங்கள் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த சமாளிப்புடன் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது, உங்கள் வம்சத்தில் இல் தேர்விற்கு பெரிய தயாரிப்புகள் இருக்கவில்லை.
இவ்வளவு அழுத்தத்துடன்
உங்கள் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா என எவரும் படித்திருக்கவில்லை. அவர்களுக்கும் முன்னால் யாரும் தேர்வுகளையே எழுதியிருக்கவில்லை. மனிதர்களின் தலைமுறைகளிலேயே நீங்கள் இந்த அழுத்தத்தை முதல்முறையாக நீங்கள் எடுக்கிறீர்கள்.
உங்கள் குழந்தைகள், அடுத்து அவர்களின் குழந்தைகளுக்கு பொதுவாகவே ஒரு Genetical Tuning (மரபியல் தயாரிப்பு) குறைந்தபட்சமாகவாவது நிச்சயம் இருக்கும். ஆனால், கண்டிப்பாக அதிகமான
Stress இருக்கும். இதை சமாளிப்பது எப்படி? உங்கள் ஆசிரியர்கள், நண்பர்கள், தாய்-தந்தையர் ஆகியோருடன் கலந்துரையாடுங்கள். அம்மாவை மிஞ்சிய ஒரு தோழமையோ டீச்சரோ இல்லவே இல்லை. அப்பாவை மிஞ்சிய ஒரு தோழமையோ, டீச்சரோ கிடையாது. என்னுடைய Education Carrier- இல் நான் இறைவனை முழுமையாக நம்புவேன். ”எப்படியாவது என்னை பாஸாக்கி விடு” என நான் ஒருபோதும் இறைவனிடம் வேண்டிக்கொண்டதேயில்லை. நன் படிப்பதற்கு உதவி செய். நல்ல மதிப்பெண் வாங்க உதவி செய்” என்றுதான் வேண்டிக்கொள்வேன்.
பிரச்சினைகள், பஞ்சாயத்துகள் எல்லாவற்றையும் குறைத்து நன்கு படிப்பதற்கு உதவி செய், அருள் செய்” என்றுதான் கேட்பேன். நீங்கள் மந்திரத்தில் சொல்கிறீர்களோ’.. தந்திரத்தில் சொல்கிறீர்களோ.. உங்கள் இஷ்ட தெய்வத்தை நம்பும்போது அதற்கென ஒரு சக்தி 100 சதவீதம் உண்டு. அந்த இறைவனை வேண்டுங்கள். அந்த Exam ஐ மிக எளிதாக உங்களால் கடக்க முடியும். இதுமட்டுமின்றி
Exam மிற்கு நிறைய
Technics இருக்கின்றன. Exam is an Art. Not a science.
-----------------------------------------------------------
No comments:
Post a Comment