சைவம் vs அசைவம்: சமூகத்தில்
கலாச்சார சர்ச்சைகள் ?
உலகம் முழுக்க உணவு என்றாலே அது ‘ உணவு’ என்பது மட்டுமே. இந்தியாவில் மட்டுமே உனவுப் பழக்கமானது ‘சைவம்- அசைவம்’ என இருபிரிவாக கொள்ளப்படுகிறது.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாகத்தான் இப்படி இரு பிரிவாக நடைமுறைக்கு வந்திருக்கிறது!
பொதுவாக ஆன்மீகப்பணியை மேற்கொண்டு ஆசிரமங்களில் வாழ்ந்த முனிவர்கள் இதை மேற்கொண்டிருந்தனர். அன்றைக்கு உருவான இந்த விஷயமானது இன்றைக்கு வரையிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சைவம் என்றாலே அது ‘உடல் தூய்மை, மனத்தூய்மை’ என இறைவனுக்கு நெருக்கத்தில் கொண்டு வைத்து விட்டனர். இதனால்தான் இந்துக்களின் பெரிய கோவில்களில் ‘அசைவ உணவுப்பழக்கம்’ வழக்கத்தில் இருப்பதில்லை. கிராமப்புற சிறுசிறு நாட்டார் தெய்வங்களுக்கான கோவில்களில் மட்டும்தான் ’கிடா வெட்டு, கோழிக்காவு’ ஆகியன இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டும் ‘அசைவ உணவு’ தயாரிக்கும் நடைமுறை. அசைவ உணவு சாப்பிட்டுவிட்டால்
தாங்கள் அசுத்தமாகி விடுவதாக்க் கருதி கோவிலுக்குச்செல்லாமல் இந்துக்கள் தவிர்த்து விடுகின்றனர்.
இதனை கிறிஸ்தவம் உள்ளிட்ட வேறெந்த மதங்களிலும் காணமுடியாது. அசைவம் சாப்பிட்டு விட்டால் கடவுள் பக்கத்தில் போக முடியாது என்கிற கருத்தியல் கிடையாது. சைவ உணவு மட்டும் உட்கொண்டால் ஆத்ம பலம் வரும் என்றும், அசைவ உணவு சாப்பிட்டால் மிருகபலம் கூடும் என்றொரு கருத்தியல் உண்டு. இதேபோல் அசைவ உணவு சாப்பிட்டால் மூளை சரிவர வேலைசெய்யாது என்றும், சைவ உணவு சாப்பிட்டால்தான் மூளை திறம்பட வேலை செய்யும் என்றும் நீண்ட நெடுநாட்களாக எல்லோரும் கருதினர். இந்த கருத்தியலை “யூத இன மக்கள்” தகர்த்தெறிந்தனர்.
புகழ்பெற்ற நோபல் பரிசினை வென்றவர்கள் பட்டியலில் 50% சதவீதத்திற்கும் மேலாக யூதமக்களே
இடம் பிடித்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அதிதீவிர அசைவ உணவாளர்கள். மனிதர்கள் குரங்கிலிருந்து
வந்தவர்கள் எனும் விஞ்ஞானத்தை நாம் நம்புகிறோம். உலகம் முழுக்கவே குரங்கினம் ஒரு சைவப்பட்சிணிதான்.
ஆனால், குரங்கிலிருந்து தோன்றிய மனித இனம் மட்டும் அசைவ உணவினை எடுத்துக்கொள்கிறது!
இது எப்படி சாத்தியம்? ஒருவேளை நாமும் சைவத்திலிருந்து அசைவத்திற்கு மாறிவிட்டோமா?
அப்படியானால், எந்த காலகட்ட்த்தில் மாறினோம்? அசைவ உணவினை எடுத்துக்கொள்ளத்தேவையான
உடல் அமைப்புகள் நம் மானிட இனத்திடம் இல்லையென ஒரு கருத்தியலை தொடர்ந்து கூறிவருவோர்
இருக்கிறார்கள். இது சம்பந்தமாக ‘வேகன்’ என்கிற
இயக்கமானது 1990- இல் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்
பசும் பாலைக்கூட அருந்தாத மிகத்தீவிரமான சைவர்கள். அவர்கள் (வேகன் இயக்கத்தவர்கள்)
நவீன காலத்து சைவர்கள். அதாவது மிருகவதை கூடாது என்னும் கோட்பாடு உடையவர்கள். ஆனால்,
நம் நாட்டின் ’சைவம்’ என்பது ’தெய்வீகம்’ சார்ந்தது. குரங்கிலிருந்து வந்தவர்கள் நாம்
என்றால், குரங்கு சைவம்! ஆனால், நாம் மட்டும் அசைவம்! இது எப்படி சாத்தியமாகும்?
-----------------------------------------------------------
No comments:
Post a Comment