Wednesday, July 22, 2026

27.திருவள்ளுவர் நாத்திகரா ? உண்மையில் திருவள்ளுவர் யார் ?

 

                    திருவள்ளுவர் நாத்திகரா ?

               உண்மையில் திருவள்ளுவர் யார் ?



     கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

அதாவது கற்றதனால் கற்றதனால் என்ன பயன்? நல்ல கல்வியைக் கற்றவர்களுக்கு அந்த கல்வியினால் அவர்களுக்கு என்ன பயன்? கடவுளின் கொவிலில் அவன் வழிபடவில்லையென்றால் அந்த கல்வியோட பயன் என்ன ? இந்த குறளானது “அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவ முதற்றே உலகு” என்கிற குறளைத்தொடர்ந்து இரண்டாவது குறளாக “கற்றதனாலாய” எனத்தொடங்கும் குறள் இடம்பெறுகிறது. அந்த அதிகாரத்தில் உள்ள 10 குறள்களுமே கடவுள் வாழ்த்து. முதல் குறளானது infinity to minus infinity என mathematics –இல் சொல்வோமே.. அதுபோல் எல்லா கல்வி கற்றலுமே ”அ” விலிருந்து தொடங்குகிறது. எண்களில் 1 –இலிருந்து தொடங்கும். சில பேர் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்குவர். இப்படி கற்றுக்கொள்ளும் அத்தனை கல்விக்கும் அவர் கடவுளை கும்பிடாவிட்டால் என்ன பயன்? என்கிறது அந்த குறள். திருவள்ளுவர் ஜெயினரா? புத்தமதத்தினரா? யேசு சார்ந்து இருந்தாரா? அல்லது இந்துவா? திருவள்ளுவருக்கு எப்படி காவி அடிக்கலாம்? அவர் பொதுவானவர். அவர் எழுதிய திருக்குறள் ஓர் உலகப்பொதுமறை. உலகப்பொதுமறை என்றால், அவர் பொதுவானவரா? அல்லது ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தினை பின்பற்றி எல்லோருக்கும் பொதுவானதாக குறட்பாக்களை இயற்றினாரா? என்பது ஆராயப்பட வேண்டிய விஷயம். திருக்குறளில் அவர், “கடவுள் இருக்கிறார்”என்று கூறியுள்ளார். கடவுளுக்கான விஷயங்களை முதல் 10 குறட்பாக்களில் அடக்கி விடுகிறார். அதற்குப்பின்னரும் நிறைய இடங்களில் கடவுளின் விஷ்யங்கள், பண்புகளைக் கையாண்டிருக்கிறார். முதல் 10 குறள்களில் நாம் இரண்டாவது குறளை மட்டும் ஆலோசித்திருக்கிறோம். இப்போதைக்கு நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம் கண்டிப்பாக திருவள்ளுவர் கண்டிப்பாக கடவுளை நம்பியிருக்கிறார் என்பதே. He is not a Atheist. He is a Theist. ஆனா.. அந்த கடவுள் யார் என்றால் ஒவ்வொரு மத்த்தினரும் ஒவ்வொரு கடளை சொல்வார்கள். திருவள்ளுவர் வாழ்ந்த காலம் சுமார் முதலாம் நூற்றாண்டு என்று வைத்துக்கொள்வோம். அதாவது சங்க காலம் மருவத்தொடங்கிய தொடக்க காலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். Probably ஜெயினஸுமும், புத்தமதமும், இந்துமதமும் அதிகமாக இருந்த காலகட்டம்தான். இந்த confluence (சங்கமம்) காரணத்தால்தான் அவர் எந்த ஒருகடவுளின் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லாமல் ”கடவுள்”என்பவரை ஒரு பொதுநிலையிலேயே வைத்திருந்ததாக நாம் புரிந்துகொள்கிறோம். அவர் ஒருபோதும் கடவுள் மறுப்பாளராக இருந்ததில்லை என்பதை உள்வாங்கிக்கொள்வோம்.

            ”கற்றதனாலாய” என இரண்டாவது குறளிலேயே கூறியதன் காரணம், படித்தவர்கள் கடவுளை பெரிதாக கண்டு கொள்ளமாட்டார்கள். ஆனால் படித்தவர்கள் “நான் படித்துவிட்டேன். எனக்கு சயின்ஸ் தெரியும். ரேஷனல் தெரியும்.” என மக்கள் இருந்துவிடக்கூடாது என்கிற சிந்தனை அவருக்கிருந்த்தாகவே நான் பொருள் கொள்கிறேன். ஆக, திருவள்ளுவர் சொன்னதுபோல் “அகர முதல எழுத்தெல்லாம் கற்ற்றிந்தவராக இருந்தாலும், அந்த தெய்வத்தை தொழாமல் இருந்தாரெனில் அவர் பெற்ற கல்வியால் ஒரு பயனும் இல்லை.” என்பதை இவ்விட்த்தில் உள்வாங்கிக்கொள்வோம்.


No comments:

Post a Comment

30. வல்லபாய் பட்டேல் Vs நேரு இருவருக்கும் மோதல் ஏன்?

                                  வல்லபாய் பட்டேல் Vs நேரு                                                    இருவருக்கும் மோதல் ஏன் ?  ...