Wednesday, July 22, 2026

26.தடை! மாமன் மகளை திருமணம் செய்ய தடை…

 

தடை! மாமன் மகளை திருமணம் செய்ய தடை…


யூனிஃபார்ம் சிவில் கோடு இதர மதங்களில் கொஞ்சம் நிறைய இருக்கிறது. ஒரு நாட்டிற்கு யூனிஃபார்ம் கிரிமினல் கோடு உண்டு. சிவில் கோடில் ஒரு சில காரணங்களால், அரசியல் அமைப்பில் அடிப்படை உரிமைகள் (Fundamental rights)”- இன்றைக்கு (1950 –யில்) implement பண்ண முடியாது. ஆனால் காலங்கள் செல்லச்செல்ல கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். இது குறித்து அரசாங்கம் பொறுபேற்க வேண்டும்என்று கூறியிருக்கிறார்கள். ஒரு பொதுவான சட்டம் அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டுவரக்கூடியதுதான். ஆனால், அதை நடைமுறைப்படுத்தும்போது வரக்கூடிய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியது சட்ட்த்தின் மிக முக்கியமான செயல்பாடு.

உத்ரகாண்ட்டில் யூ.சி.சி. (U.C.C – Uniform Civil Code) சட்டமானது இந்திய அரசின் பாராளுமன்ற மக்களவைக்கு வந்துவிட்டது. ஒவ்வொரு மாநிலமும் அதை பின்பற்றத்தொடங்கிவிட்டன. உத்ரகாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டபோது ஒரு ருசிகரமான நிகழ்வு என்னவென்றால், அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு. அதாவது அத்தை மகளை, மாமன் மகளை திருமணம் செய்துகொள்ளக்கூடாது! ”இப்படிப்பட்ட சட்டம் முன்பே வந்திருந்தால், கிராமம் சார்ந்த தமிழ்ப்படங்கள் எதுவுமே வந்திருக்காதுஎன வேடிக்கையாக யோசித்ததுண்டு. ஏனென்றால் ஏறக்குறைய எல்லா தமிழ்ப்படங்களிலுமே இதைச் சார்ந்த (அத்தை மகள், மாமன் மகள்) படங்கள் வந்திருக்கின்றன. உத்ரகாண்டில் ஏன் இதை நடைமுறைப்படுத்துகிறார்கள்? இதன் மூலம் என்ன சாதிக்க எண்ணுகிறார்கள்? என சோஷியாலஜிக்கலாக சில விஷயங்களைப் பார்க்க வேண்டும். இந்தியாவில் நிறைய Hinder System(தடை ஏற்படுத்தும் முறை ). அவற்றில் குறிப்பாக இரண்டுவிதம். முதலாவதாக வட இந்தியாவையும், மற்றொன்று தென்னிந்தியாவையும் மையமாகக் கொண்டுள்ளன. தென்னிந்தியாவில் நாம் Endogamous marriage (எண்டோகாமஸ் திருமணம்) அதாவது ஒரே சாதி அல்லது ஒரு குடும்பத்தின் நெருங்கிய உறவுவகையில் செய்துகொள்ளும் திருமணமாகும். இதற்கு நேர் எதிராக, இந்திபேசும் மாநிலங்களில் பெரும்பான்மை சமூகங்களில் Exogamy Marriage (எக்ஸோகமி திருமணமுறை) முக்கிய அங்கம் வகிக்கிறது. இது சொந்த இனம், குலம் அல்லது சமூகக் குழுவிற்கு வெளியே மணம் செய்யும் வழக்கத்தைக் குறிக்கிறது. அதாவது ஒரு ஊரில் வசிக்கும் அனைத்து பெண்களுமே அவ்வூரில் ஆண்களுக்கு சகோதரிகளே. அவர்களது திருமணமானது அந்த ஊருக்கு வெளியில், அதாவது வேற்று ஊர்களைச் சேர்ந்த ஆண்களையே திருமணம் செய்துகொள்ள முடியும். அதேபோல் அவ்வூரைச் சேர்ந்த ஆண்களும் வேற்று ஊர்ப்பெண்களையே திருமணம் செய்துகொள்வர். இதற்குப்பெயர் கிராமத்திற்கு வெளியிலான திருமணம் (village exodamy marriage). அதிலும் சில உள்ளூர் விதிமுறைகளும் உள்ளன.  அடுத்து, கோத்ரா எக்ஸோகமி திருமண முறை (Gothra exogamy marriage). இத்தகைய முறையானது பிராமணர்களால் அதிகம் பின்பற்றப்படுகின்றன. பிற சமூகங்கள் சிலவற்றிலும் உண்டு. அதாவது வகுக்கப்பட்டுள்ள ஏழு கோத்திரங்களில், ஒரே கோத்திரத்திற்குள் திருமணம் செய்யப்படுவதில்லை. இதற்கு காரணம், ஒரே கோத்திரமென்றால் அவர்கள் சகோதர, சகோதரிகளாக கருதப்படுவதே. தமிழகத்தில்  Land communities (நிலச் சமூகங்கள்) இல், ஒரே குலதெய்வத்தை வழிபடும் குழுக்களைபங்காளிகள்என்று கூறுவோம். அப்படி ஒரே குலதெய்வத்தை வழிபடும் குடும்பங்கள் சகோதர குடும்பங்களாக கருதப்படுவதால் அவர்களுக்குள் பெண்கொடுத்து, பெண்ணெடுக்கும் வழக்கம் இல்லை. இதேபோன்றுதான் கோத்திர அமைப்பு முறையும். ஆக, அங்கே ஏன் Exogamy Marriage (எக்ஸோகமி திருமணமுறை) –யும், இங்கே, Endogamy (எண்டோகமி திருமணமுறை) –யும் இருக்கிறது? Exogamy முறையில் திருமணம் செய்துகொள்ளும் சமூகங்கள் அனைத்துமே, ”ஏற்கனவே இருக்கின்ற உறவுகள் போதாது. இன்னும் புதிது புதிதாக உறவுகள் வேண்டும்என்கிற நோக்கில் தங்கள் உறவு வட்டத்தை அதிகப்படுத்தும் சமூகங்களாகும். இது போர் அச்சுறுத்தல்” (Threat of war) அதிகமுள்ள பகுதிகளில் இவ்வகையான திருமண முறை நிச்சயம் நடைபெறும். திடீரென ஒரு படையெடுப்பு நடந்தால், சுமார் 15 அல்லது 20 கிராமங்களில் உறவுமுறைகள் பரவி பலப்பட்டிருந்தால்தான் அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி தாக்குதலை எதிர்கொள்ள வருவர். தமிழ்நாட்டில் 18 கிராமங்களுக்குள்ளேதான் உறவுமுறைகள் இருக்கும். அதற்கும் மேல் வெளியே செல்ல விரும்புவதில்லை. நாம் இங்கே Consolidation (ஒன்று திரட்டல், ஒருங்கிணைப்பு) என்கிற முறையைக் கையாள்கிறோம். ஆனால், அங்கே Expansion (விரிவுபடுத்துதல்) என்கிற முறையைக் கையாளுகிறார்கள். பிற காரணங்கள் எவை என்று பார்த்தால், அடுத்த தலைமுறை குழந்தை நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறப்பு வேண்டுமென எதிர்பார்ப்பு இருக்கும். அதற்காக நிறைய முயற்சி எடுப்பர். இது Diversity (மாறுப்பட்ட) என்றழைப்போம். நம்மிடையேயும் இதுகுறித்த கருத்து என்னவென்றால், நெருங்கிய உறவுகளுக்குள்ளேயே திருமணம் செய்துகொண்டால், Diversity Gene கிடைக்காது. அது ஆரோக்கிய குறைபாடு உள்ள குழந்தை பிறப்பிற்கு வழிவகுக்கும் என்கிற கருத்து உண்டு. இது உண்மைதான். ஆனால், இதை உடனே வடிகட்ட முடியாது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிய உறவுகளுக்குள்ளேயே திருமணம் செய்துகொண்டு வாழும் பழங்குடியினர் உள்ளிட்ட பலரில் எத்தனைபேருக்கு மரபணு ரீதியான குறைபாடும், ஆரோக்கியமற்ற குழந்தை பிறப்பும் வந்துவிட்டது?  அத்தகைய நிலை மிகமிகக்குறைவே. இருந்தபோதிலும், அனைத்து சமூகங்களுமே Diversity Gene என்கிற முறையை விரும்பியிருக்கின்றன. இதற்காக உருவாக்கப்பட்டதே Exogamy,  Endogamy விதிமுறைகளாகும். இன்றும் மதுரை வட்டாரத்தில் ஒரு பெண் தன்னுடைய தாய்மாமனை திருமணம் செய்துகொள்ளக் கூடாது. ஆனால், அவர் மகனை திருமணம் செய்துகொள்ளலாம். சில சமூகங்களில் தங்கள் தாய்மாமனை திருமணம் செய்து கொள்வதுண்டு. தாய்மாமன் என்பவர் ஒரு பெண்ணின் தாய்க்கு மிகவும் நெருக்கமான உறவாவார். அந்த தாய்மாமன் வேறொரு குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து, அவர்கள் பெற்றெடுக்கும் பிள்ளையை திருமணம் செய்யும்போது குறைந்தபட்ச Diversity Gene கிடைக்கிறது. ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்ய முனைகிறபோது, இயல்பாகவே சற்று போட்டிகள் இருக்கக்கூடும். ”பெண் அழகாக இருக்கிறாள், அந்த பெண்ணிற்கு சொத்து, வசதிவாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. அறிவாற்றல் மிகுந்த பெண்ணாக இருக்கிறாள், மேன்மையான நடத்தையுள்ளவளாக இருக்கிறாள்என்றெல்லாம் திருமணம் செய்யமுற்படும் போது, போட்டிகள் வரக்கூடும். அந்த போட்டிகளில் மோதல் (Conflict) ஏற்பட்டுவிடக்கூடாது என்பதனால், திருமண Hinder System- மும், கூடவே Diversity –யும் வருகின்றன. ஒவ்வொரு சமூகமுமே ஒவ்வொரு விதமான Diversity concept வைத்திருக்கின்றனர். வட இந்தியாவின் Exogamy, தென்னிந்தியாவின் Endogamy ஆகியன முழுமை பெற்ற HinderSystem ஆகும். இதை உத்ரகாண்டில் அமல்படுத்தும்போது, நிச்சயமாக அந்த சமூகங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அங்கே அவர்கள் (????) பெரும்பான்மை சமூகம் கிடையாது. இருப்பினும்,  இத்தனை ஆண்டுகளாக அவர்கள் தங்கள் பாரம்பரியப்படி செயல்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எத்தனை கனவுகள் இருக்கும்? உதாரணத்திற்கு ஒருவர் தன் அத்தை மகளை காதலித்துக் கொண்டிப்பார். விரைவில் திருமணம் செய்துகொள்ள விரும்பியிருப்பார். இப்படிப்பட்ட நேரத்தில் இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து, இனி அத்தை மகளை காதலிக்கவோ, திருமணம் செய்துகொள்ளவோ கூடாது என்றால், இதைவிட அவருக்கு வேறு என்ன பெரியதண்டனை இருக்கமுடியும்? இது சமூகத்திற்குள் சில சலசலப்புகளை ஏற்படுத்தக்கூடும். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளத்தில் உள்ள இந்து சமூகம் என தென்னிந்தியா முழுமையாகவும், மத்தியபிரதேசம், மஹாராஷ்டிரம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் பகுதி பகுதியாகவும் இந்த Endogamy முறைதான் நடைமுறையில் உள்ளது. இந்தி பேசும் மாநிலங்களில் முழுமையாக Exogamy முறைதான் நடைமுறையில் உள்ளது. குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் முற்றிலும் மாறுபட்ட Hinder System மற்றும் மேற்கு வங்காளத்திலும் அப்படியே. மேற்கு வங்கத்தின் தாக்கம் அஸ்ஸாம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும். ராஜஸ்தான் மற்றும் ஒடிஸாவில் பழங்குடியினர் மத்தியில் இது நிலவும். பஞ்சாப் மாநிலம் தமிழ்நாட்டைப்போல் தான். ஜம்மு-காஷ்மீர் முற்றிலும் வேறான அமைப்பு.

            திருமண பந்தம் சம்பந்தமாக இந்த பொது சிவில் கோடு (Uniform Civil Code) கொண்டுவரப்படும்போது, எப்படி மத ரீதியான விஷயங்களை ஜாக்கிரதையாக கையாள வேண்டுமோ அதேபோல், மிகவும் சிரத்தையுடன் செயல்பட வேண்டும். நம் இந்திய அரசியல் அமைப்பில், Public Morality (பொது ஒழுக்கம்), Public Order (பொது ஒழுங்கு) மற்றும் Health (ஆரோக்கியம்) என மூன்று அம்சங்கள் உண்டு. இந்த மூன்றும் பாதிக்கப்படாதபோது அவற்றிற்கு Allowance (சலுகை) தரலாம். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை ஏற்கனவே வரி பகிர்மானங்கள் சம்பந்தமாக பிரச்சினைகள் நிலவுகின்றன. அதாவது, வரி அதிகமாக செலுத்திய எங்களுக்கு மத்திய அரசு தரும் பலன்கள் குறைவாகவும், வரி செலுத்தும் விகிதாசாரம் மிகவும் குறைவாக உள்ள வடமாநிலங்களுக்கு பலன்கள் அதிகமாக சென்று சேர்வதாகவும் தென்மாநிலங்கள் ஏற்கனவே குறைபட்டுக்கொண்டிருக்கின்றன. ஆக, கலாச்சார விஷயத்திலும் பிரச்சினை வந்துவிடக்கூடும். இவற்றில் எது உயர்வு தாழ்வு என்று கணிக்க முடியாது. உதாரணத்திற்கு வரதட்சணைக்காக கொலைகள், மரணங்கள் போன்ற குடும்ப வன்முறைகள் (Domectic Voilence) வட இந்தியாவில் மிகவும் அதிகம். ஏனென்றால், வட இந்தியாவில் நிலவும் Exogamy திருமண முறையில் மாமியார் என்பவர் அந்நியராகவே இருப்பார். தன் மருமகள் சிறுவயதினளாக இருந்திருக்கும் போது, அந்த மாமியார் ஒருமுறைகூட பார்த்திருக்கவே மாட்டார். பிறகெப்படி அந்த மருமகள் தன் புகுந்த வீட்டில் அனுசரித்து நடந்துகொள்வாள்? அதிலும் ஆணாதிக்கம் (patriarchal) சூழலில் அந்த பெண் ஒரு அடிமையாக இருக்கும் நிலை ஏற்படும். இக்காலப் பெண்களை அந்த சூழலில் வாழ்வதை நினைத்துக்கூட பார்க்க முடியாது.

            வரலாறு புகழும் அசோக சக்ரவர்த்திக்கு அவரது தாய் ஏன் அந்த பெயரைச்சூட்டினார் என்பது பற்றி ஒரு கருத்து உண்டு. அசோகரின் தந்தைக்கு மூன்றவது அல்லது நான்காவது மனைவியாக அசோகரின் தாய் இருக்கிறார். அப்படி வாழும் காலத்தில் சொல்லொண்ணா துயரம் அசோகரின் தாயை வாட்டுகிறது. அங்கே ஆண் குழந்தை பிறந்தால்தான் அங்கீகாரம் கிடைக்கும். அத்தகைய சூழலில் அவருக்கு ஆன் குழந்தை பிறக்கிறது. அதன் பிறகுதான் குடும்பத்தில் அந்த அம்மையரின் மேல் மரியாதை உண்டாகிறது. ஆகவே, ஆண் குழந்தையாக பிறந்து, தன் சோகத்தை தீர்த்து வைத்த அக்குழந்தைக்குஅசோகன்என்று பெயர் சூட்டி மகிழ்ந்ததாக ஒரு செய்தி இன்றும் நிலவுகிறது. ஆக, மாமியார்மருமகள் இடையிலான பெரும் சர்ச்சைகள், வேதனைகள் Exogamy திருமண முறையில் எப்பொழுதுமே இருந்து வருகிறது. ஆனால், இப்பிரச்சினை  Endogamy சற்று குறைவுதான். இம்முறையில், ஒரு பெண்ணின் சொந்த பாட்டி அல்லது சொந்த அத்தையே அவளுக்கு மாமியாராக இருப்பதுண்டு. அவர்கள் அந்த பெண்ணை (தன் மருமகளை) சிறுவயதிலேயே பார்த்து பழகுதல், அவளைத்தூக்கி சீராட்டி, பராட்டி வளர்த்திருக்கும் வாய்ப்புகள் அதிகம். இதனால், தீக்குளிப்புச் சம்பவங்கள் போன்றவை மிக மிகக்குறைவு. இன்றைய காலகட்டத்தில்குடும்பங்களின் சொத்து சார்ந்த பிரச்சினை சற்று அதிகமாகி விட்டதால், இந்தச்சூழலும் மாறிவருகிறது. இயக்குனர் பாரதிராஜா இயக்கிய சூப்பர் ஹிட் படமானகிழக்குச்சீமையிலேதிரைப்படத்தில், அண்ணன்- தங்கை உறவுமுறையில், தன் தங்கையின் மகளுக்கு ஒரு தாய்மாமனாகஉசுரை மட்டும் வச்சிருக்கேன் தாரேன் தங்கச்சிஎன்றெல்லாம் உணர்ச்சிகரமாக படமாக்கியிருப்பார். அதெல்லாம் 1990 களின் தொடக்கத்தில். ஆனால்.. இன்றோ முதன்முறையாக நம் உசிலம்பட்டி பகுதியில் அண்ணன்தங்கை ஆகியோருக்கிடையில், அவர்கள் குடும்பச்சொத்து சார்ந்த பிரச்சினைகள் அதிகமாகியிருப்பதாக அறிய வருகிறேன். ஒருகாலத்தில், ஒரு அண்ணன் தன் சொத்துக்களை அவருடைய தங்கைக்கு (தன் நாத்தனாருக்கு) கொடுத்து விடுவாரோ?” என்று அவர் மனைவி பயந்த காலம்மாறி,  இன்று சொத்துக்காக நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் கலாச்சாரம் மாறிவிட்ட நிலையைக்காண்கிறோம். ஏனெனில், நிலங்களின் மதிப்பு பன்மடங்கு கூடிவிட்டது. தாய்மாமன் உறவெல்லாம் சாதாரணமாகிவிட்டது. அங்கு அண்ணன்தங்கை தெய்வங்களுக்கான வழிபாட்டு முறைகள்தான். ஆனால்.. இன்றைக்கு பெருமளவு மாறிக்கொண்டிருக்கிறது. பொதுவாக கலாச்சாரம் மாறக்கூடியவைதான். அதை சரியான திசையில் மாற்றி நடத்திச்செல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் சமூகத்திற்கும், மதத்திற்கும், அந்த மதம் சார்ந்த தெய்வங்களுக்கும்தான் இருப்பதாக நான் உணர்கிறேன். (original: இந்துமதம் நம்புகிறது.) குடும்ப வன்முறைகள் (Domectic Voilence) சார்ந்த பிரச்சினைகளுக்கு   Exogamy திருமணமுறை சரியானதல்ல. Endogamy திருமணமுறை மிகச் சிறந்ததாக விளங்குகிறது. அடுத்ததாக, Diversity –யை எடுத்துக் கொண்டால், நல்ல ஆரோக்கியமான குழந்தை என்றால் உயர் இனம் (HighBreed-ஹைபிரீட்) உதாரணமாக பயிர்வகைகளில் பெரும்பாலும் High Breed உண்டு. இந்த High Breed – இல் மரபியல் (Genetic), ஊட்டச்சத்து (Nutation), சிறந்த பண்புகள், நல்ல குணநலன்கள் அல்லது மேம்பட்ட இயல்புகள் (Better traits) ஆகிய எல்லாமே சிறந்தவைதான். அதில் மாற்றுக்கருத்துகள் ஏதுமில்லை. அடுத்த தலைமுறை நல்ல ஆரோக்கியமான சமுதாயமாகத்தான் பிறக்கும். ஆனால்.. அதில் Exogamy முறை சிறந்ததாகும். Endogamy முறை சரிபட்டு வராது. இருப்பினும், Endogamy-யில் அதிகளவில் சுவீகாரம் (தத்து-Adaptation) செய்கிறார்கள். உதாரணத்திற்கு, நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தில் சமீபத்தில் அறியப்பட்ட ஒரு வழக்கில், மறைந்த பிரபலமான செட்டியார் அவர்களுக்கும், அவர் சுவீகாரம் எடுத்துக்கொண்ட மகனுக்கும் இடையில் சொத்து சார்ந்த பிரச்சினை சண்டையாக உருவெடுத்தது. இது குறித்து நிறையபேர்என்னப்பா இது? என்னதான் இருந்தாலும் தத்து எடுத்துக்கொண்ட மகன்தானே.. அவர் எதுக்கு சண்டை போடணும்?” என்றெல்லாம் கருத்து தெரிவித்தனர். ஆனால்.. நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தில், அசலான மகனைவிட, தத்து எடுத்துக்கொள்ளப்பட்ட மகனுக்கு உரிமை அதிகம். ஏனென்றால், தத்தெடுக்கப்பட்ட பின் அந்த மகன் தன் சொந்த தாய்-தகப்பனிடத்திற்கு, அவர்கள் வீட்டிற்குச் செல்ல முடியாது. தத்து கொடுக்கப்பட்ட பின் த்த்து எடுத்துக்கொண்டவர்தான் உண்மையான அப்பாவாக ஆகிவிடுகிறார். அந்த மகனும் அப்படியே. தன் பூர்வீகத்தை மறந்துவிட்டு தத்து எடுத்துக் கொண்டவரை மட்டுமே தன் தகப்பனாக முழுமையாக ஏற்றுக்கொள்கிறார். இறுதி வரைக்கும் அவ்வாறே பார்க்கிறார். உயிரியல் ரீதியாக ஒரு உண்மையான தகப்பன்மகனுக்குமிடையே எவ்வகையான Conflict (மோதல்) இருக்குமோ.. அது அப்படியே தத்து எடுத்துகொள்ளப்பட்ட மகனுக்கும், தத்து எடுத்துக்கொண்ட தகப்பனுக்கும் இடையிலும் வந்துவிடுகிறது. அது என்ன நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தில் மட்டும் அப்படி? என்று கேட்டால், அவர்கள் ஒரு Endogamy சமூகமாகும். ஆக, Endogamy சமூகத்தில் Diversity Hit (பன்முகத்தன்மை வெற்றி) ஆகும்போது, இயற்கையாகவே குழந்தை பிறப்பில் சில பிரச்சினைகள் இருக்கலாம். பிற சமூகங்களில் Polygamy உண்டு. அப்படி ஏதாவது பிரச்சினை என்றால், உடனே இரண்டாவது, மூன்றாவது திருமணம் என்று கடந்துவிடுவர். ஆனால்.. நாட்டுக்கோட்டை செட்டியார்களிடத்தில் இது மிகவும் குறைவு. ஆக, தனக்கு குழந்தை இல்லை என்றானபின் சுவீகாரம் (தத்து) என்கிற நிலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். நம் தமிழ்ச் சமுதாயத்தில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க்க்கூடிய சமுதாயம் நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகமாகும். அச்சமூகப் பெண்களுக்குஆச்சிஎன்கிற அடை மொழியுடன் மிகப்பெரிய மரியாதை உண்டு.  மதுரைப் பகுதியில் இருக்கும் மற்ற சமூகங்களில் இரண்டாவது, மூன்றாவது திருமணம் செய்துகொள்ளும் பழக்கம் இருந்தாலும், நாட்டுக்கோட்டை செட்டியார்களிடத்தில் அது இல்லை. அதனால் சுவீகாரம் மேற்கொள்ளப்படுகிறது. Diversity என்று பார்க்கும்போது  Exogamy System சிறந்ததாகும். Domestic Violence என்று பார்க்கும்போது Endogamy சிறந்ததாக அமைகிறது. இதுபோல் ஒவ்வொரு வகையில் நோக்கும்போது, ஒரு Hindered System சிறந்ததாக இருக்கிறது. ஆகவே, அரசாங்கங்கள் இது சம்பந்தமாக சட்டம் இயற்றும்போது, மிகவும் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். ஏனென்றால் இந்து மதத்தின் மீதுதான் அதிகமாக ஒழுங்கமைப்பு செய்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் Monogamy க்கு என தனித்துவமான சட்டம் ஏதும் இந்து மதத்தில் கிடையாது.1956- இல் தான் அது சட்டமாக்கப்பட்டது. ஆனால்.. பிற மதங்களுக்கு இதுபோன்ற ஒழுங்கமைப்பு ஏதும் செய்யப் படவில்லை. ஆனால் Monogamy யைக் கொண்டு வரவேண்டும்? ஏனென்றால் உலகம் முழுவதும் Monogamy ஒழுக்கம் மிகுந்ததாக இருக்கிறது. Polygamy தடை செய்கிறார்கள். Polygamy –யை இந்துக்கள் ஒருபோதும் மறுக்கவில்லையே! அப்படியானால் ஏன் செய்ய வேண்டும்? என்கிற கேல்வி எழுகிறது. இந்து மதத்தில் சில விஷயங்களை ஒழுங்கமைக்கும்போது, அரசாங்கங்கள் சற்று எச்சரிக்கையுடனும், சர்வ ஜாக்கிரதையுடனும் கையாளவேண்டும் என்பதே என் உறுதியுடன் செய்யும் பதிவாகும். 

-------------------------------------------------------------  

No comments:

Post a Comment

30. வல்லபாய் பட்டேல் Vs நேரு இருவருக்கும் மோதல் ஏன்?

                                  வல்லபாய் பட்டேல் Vs நேரு                                                    இருவருக்கும் மோதல் ஏன் ?  ...