"பெண் புத்தி பின் புத்தி" இது உங்களுக்கு தெரியுமா?
’பின் புத்தியானது பலவீனமான புத்தியா? அல்லது நல்ல புத்தியா? என்கிற கேள்வி இருந்து வருகிறது. இதைப்பற்றி எனக்கு சிந்தனை மேலோங்கியபோது
எனக்கு ஒரு உதாரணம் தோன்றியது. அதாவது குடும்பம் என்பது ஒரு கார் போன்றது. அதை ஓட்டக்கூடியவர் ஒருவர்தான். ஆனால், அதில் மனைவி, அம்மா, அப்பா மற்றும் குழந்தைகள் என அதில்
பயணிப்போர் பலர் இருப்பர். பயணம், இலக்கு மற்றும் வளர்ச்சி என மூன்று நிலைகள் என நாம் எடுத்துக்கொள்ளலாம். காரை அவ்வளவு எளிதாக ஓட்டிச் செல்ல
முடியுமா? ஏனெனில், எண்ணற்ற வாகனங்கள் பலவும் பயணிக்கும்
சாலையில் இவர்களின் காரும் பயணிக்கிறது. பிற வாகன்ங்களில் செல்வோரும் அவரவர்
தங்கள் இலக்கை நோக்கி, வளர்ச்சியை எதிர்பார்த்து முன்னேறிக்கொண்டிருப்பர். அரசியலாக இருந்தால் முதல்வர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் என்றும், வார்த்தகத்துறையென்றால், 100 கோடி, 1000 கோடி வருவாய் ஈட்டும் அளவிற்கு தங்கள்
மேலாண்மையை செலுத்த வேண்டும் என்றும், நீதித்துறையில் இருப்பவர்கள் சிறந்த
வழக்கறிஞராக புகழ் பெற வேண்டும், ’நீதிபதி’ என்கிற உயர்வினை எட்ட வேண்டும் என்றும், அவரவர் தங்கள் துறையில் எப்பாடியாவாது
சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தில் போட்டி போடுவர். காரணம், இவ்வுலகம் போட்டிகள் மிகுந்தது.
குடும்பத்தலைவர் வாகனத்தை ஓட்டுகிறார்
என்றும்,
அவரது
அருகில் குடும்பத்தலைவி அவருக்கு பக்கவாட்டில் என வைத்துக்கொள்வோம். முழுக்கட்டுப்பாடும் (ஸ்டீரிங், ஆக்ஸிலேட்டர், பிரேக்) அந்த குடும்பத்தலைவரின் வசத்தில்தான்
இருக்கும். அப்படியானால், மனைவியின் பங்களிப்புதான் என்ன? காரானது மணிக்கு சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, அந்த குடும்பத்தலைவரால் தனக்கு நேராகத்
தெரியும் சாலையில்தான் தன் அதீத கவனத்தைச் செலுத்தமுடியும், அதே அளவிற்கு மற்ற மூன்று பக்கங்களிலும்
கவனம் செலுத்த முடியுமா? என்றால் சற்று சிரமம்தான். இதேபோல் கார் பயணிக்கும் பாதையில் குறிப்பிட்ட
தூரத்திற்கு அப்பால் தெரியும் சாலையின் நிலவரத்தை தான் அவரால் பார்க்க முடியும். ஆகவே, அதிக வேகத்தில் சென்றுகொண்டிருக்கும்போது
சாலையில் சட்டென பார்வைக்குப்படும் வேகத்தடை, பிற கார்கள் இவர்களுடைய காரை முந்துதல், அல்லது பிற கார்களின் அஜாக்கிரதையால்
ஏற்படுகின்ற ஆபத்துகள், சாலையின் குறுக்காக, பக்கவாட்டிலிருந்து வெளிப்படும் கால்நடைகள், பிற வாகன ஓட்டிகள் போன்றோரைப்பற்றிய
எச்சரிக்கையை, குடும்பத்தலைவரின்
அருகில் அமர்ந்திருக்கும் அவருடைய மனைவிதான் கூற முடியும். ஏனெனில், ஒட்டுமொத்த குடும்பத்தின் பாதுகாப்பும்
காரை ஓட்டும் குடும்பத்தலைவரின் கைகளில் உள்ளது. ஒருவேளை நடுத்தர வேகத்தில் மணிக்கு
சுமார்
40 கி.மீ வேகத்தில் கார் சென்று கொண்டிருக்கும்போது
இவ்வளவு அதீத கவனம் தேவைப்படாது. ஓரளவு முன்னெச்சரிக்கை உணர்வுடன் காரைச் செலுத்தினால் போதும். அதற்கென பக்கவாட்டிலிருந்து பிரத்யேகமான
உதவி ஏதும் தேவைப்படாது. அதுபோலவே, நம் வாழ்க்கையைப் பொறுத்தவரை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வேகமாக
செயலாற்ற வேண்டிய கட்டாயமான தருணங்கள் வருகின்றன. அத்தகைய சந்தர்ப்பத்தில் யாராவது ஒருவர்
எடுத்துச்சொல்ல வேண்டியுள்ளது. இதுவே, ஒரு பெண் சுயத்தொழில் செய்பவராகவோ, தனியார் அல்லது அரசுத்துறையிலோ பணியாற்றுவதாகவோ
கொண்டால், நிச்சயம்
அவரது கணவர்தான் ஆதரவாக வழிநடத்த முடியும். சிவில் சர்வீஸில் ஐ.எஃப்.எஸ் (இந்திய வெளியுறவுத்துறை, I.F.S – Indian Foreign Service)
என்கிற
துறையை மட்டும் தேர்வு செய்ய வேண்டாமென பலரும் கருத்து தெரிவிப்பது உண்டு. இதற்கு காரணம் என்ன?
அந்த
பென்களுக்கு மணமகன் கிடைப்பது மிகவும் சிரமம். I.F.S பலநாடுகளையும் A, B, C என மூன்று பிரிவுகளுக்குள் உள்ளடக்கி
விடுவர்.
அவை
ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருக்கும். பணியிடம் என்று பார்த்தோமானால், உள்நாட்டில் எப்படி மாவட்ட வாரியாக
மாறுதல் செய்கிறார்களோ அதேபோல் ஒவ்வொரு நாட்டிலும் மூன்று ஆண்டுகள் என பணியமர்த்துவர். அவர்கள் வாழ்க்கை முறை மிகவும் வேகமாக
இருக்கும். ஆகவே, அவரது கணவரின் வாழ்வியல் சற்று இலகுவாக
இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் அவரும் பரபரப்பான வாழ்வியல் கொண்டவரென்றால், அவர்கள் வாழ்க்கை வண்டி இரண்டு என்றாகிவிடும். ’எனக்கென ஒரு தனித்துவம் இருக்க்க்கூடாது? எனக்கென ஏன் உயர்பதவி இருக்கக்கூடாது?’ என்று பெண்கள் கேட்டு செயல்பட்டால், இயல்பாகவே அவர்கள் வாழ்க்கை இரு வேறு
வண்டிகளாக பிரிந்துவிடும். வாகனத்தில் வேகமாக பயணிக்கும்போது இரண்டு டிரைவர்கள் தேவைப்படுகின்றனர். அப்படியிருக்க, சமுதாய வாழ்க்கை முறையில் ஒரு தம்பதியரில்
இருவருமே பரபரப்பாக இயங்குபவர்களாக இருந்தால், அவர்களில் யாருக்காவது பணி, சம்பாத்தியம் ஆகியன சுமாராக இருந்தால், இன்னொருவர் சற்று அதிவேகமாக வாழ்க்கை
வாகனத்தை ஓட்டமுடியும். குடும்பத்தலைவர் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பயணிக்கும்போது, அதே வேகத்தில் பயணிக்கும் தன் மனைவியையும்
வழிநடத்த முடியுமா? என்ரால் நிச்சயமாக முடியாதல்லவா? இதற்கும் ‘பெண் புத்தி பின் புத்தி’ என்பதற்கும் என்ன சம்பந்தம்?
குடும்பத்தலைவரான ஒரு ஆண் மட்டுமே சம்பாதிப்பதற்காக
வெளியில் சென்றகாலத்தில் அவரது மனைவியானவர் அவருக்கு பின்புலமாக இருந்து, வாழ்க்கையை வழிநடத்திக் கொண்டே போவார். இப்படி சுற்றுப்புறங்களை கண்காணித்து, எச்சரிக்கையுணர்வினை ஊட்டியபடி அவருடன்
அந்த பெண்ணும் பயணித்ததால்தான் ”பெண் புத்தி பின் புத்தி” என்று வழங்கப்பட்ட்தாகவேஎ நான் கருதுகிறேன். ஒருவேளை ஒரு பெண் உயர்பதவி, பரபரப்பான வாழ்க்கை முறையில் செல்வாரென்றால், அவருடைய கணவர் பின்புலமாக இருந்தால்
மட்டுமே,
வாழ்க்கைப்பயணம்
சூகமாக இருக்கும். தனித்தனியாக பயணித்தால் இரு பரிமாணங்களையும் நிர்வகிப்பதில்
சிரமம் ஏற்படும். இத்தகைய பிரச்சினைகள் ஏதும் துறவியர், சாமியார்களுக்கு கிடையாது. அவர்களுக்கென இலக்குகளும் கிடையாது. அவர்கள் தங்கள் போக்கில் சென்று கொண்டேயிருப்பர்.
ஆகவே, முடிவாக ‘பெண் புத்தி பின் புத்தி’ என்றால் அது ஒன்றும் தகாத வார்த்தை
அல்ல.
பெண்ணை
பிற்போக்காக பார்க்கும்பார்வையும் அல்ல. அது ஒரு பெண்ணை பலமாக்கக்கூடிய, உயரிய ஸ்தானத்தைத் தந்து நம் தமிழ்மொழி
தந்த அங்கீகாரமாகவும், பழமொழியாகவும் நான் கருதுகிறேன்.
----------------------------------------------------------------
No comments:
Post a Comment