Wednesday, June 17, 2026

21.மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் யோகா செய்யலாமா?

 

                   

                             மாதவிடாய்க் காலத்தில்

                      பெண்கள் யோகா செய்யலாமா?

                Achieve Your Fitness Goals with Yoga & Gym | PART - 2 |



          யோகாவானது உடல் எடை சம்பந்தமாக எந்த ஒரு பங்களிப்பையும் தருவதில்லை. அவரவர் உடல் தகுதிக்கு ஏற்றவாறு, உடல் எடையை அது தரவல்லது. ஆனால், நம் உடலுக்கு எது சரியான எடை என்று கண்டுபிடிப்பதற்கு நிறைய சவால்கள் உள்ளன. ”திமிங்கலம் கூட எப்போதும் கடலில் நீந்திக்கொண்டே தான் இருக்கிறது. ஆனால் ஒருபோதும் அது ஒல்லியாவதில்லை. காட்டில் யானைகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. அதுவும் ஒல்லியாவதில்லைஎன நான் பல நேரங்களில் நகைச்சுவையாக குறிப்பிடுவதுண்டு. ஆனால், மனிதர்களாகிய நாமோ,”அதிகமாக நடந்தாலோ, அதிகமாக நீச்சல் பயிற்சி செய்தாலோ ஒல்லியாகிவிடுவோம்  என்று நம்புகிறோம். நமது உடம்பிற்கான சரியான எடை எது? சரியான வடிவமைப்பு எது? என நாம் கண்டுபிடித்தாக வேண்டும். ஏனென்றால் அலோபதி மருத்துவத் துறையானது மனிதர்களின் சராசரி நிலை சம்பந்தமாகவே பணி செய்கிறது. அதில் உயரமோ, எடையோ, பருமனோ WBC, RBC இப்படி எதுவாயினும் இன்னன்ன அள்வீடுகள் இப்படித்தான் என்கிற வரையறையில் கணிக்கிறது. ஒருபோதும் ஒவ்வொரு தனிமனிதர் சம்பந்தமான விவரங்களுக்குச் செல்வதில்லை. அலோபதியானது ஆணின் விவரங்களுக்கும், பெண்ணின் விவரங்களுக்குமிடையே கூட அதிகம் வித்தியாசத்தைக் குறிப்பிடுவதில்லை. ஆனால், ஆயுர்வேதமோ மனிதர்களை ஏழு விதமாக பிரிக்கிறது. வாதம், பித்தம், கபம் மற்றும் இவற்றின் கூட்டாக உள்ள இன்னும் நான்கு பிரிவுகளையும் வகைப்படுத்துகிறது. மனிதர்கள்கபம்என்று வகைப்படுத்தப் பட்டால் அந்த மனிதர்கள் அதிக எடையுடனே இருக்கிறார்கள். ”வாதம்என்று வகைப்படுத்தப்படுபவர்கள் குறைந்த எடையுடனே இருக்கிறார்கள். ”பித்தம்என்று வகைப்படுத்தப்படுபவர்கள் எது சாப்பிட்டாலும் அவர்கள் உடலுக்கு ஒத்துப்போகிறது. ஆயுர்வேதத்தில், ஏழுவிதமான மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப் படுகின்றன. முதலில் நோய் பீடித்திருப்பவரின்நாடியைப்பிடித்துப் பார்த்தவுடனே அவர்களின் உடம்பு எந்த வகையைச் சார்ந்தது என்பதை கண்டுபிடித்து விடுவார்கள்.  இதைக்கண்டு பிடித்துவிட்டாலே பாதி பிரச்சினை சரியாகி விட்டது என்றே பொருள். ஆனால், அலோபதி அப்படி அல்ல. யார் எப்போது எந்த நிலையில் சென்றாலும் அவர்களின் அணுகுமுறை ஒன்று மட்டுமே. யோகாவைப்பொருத்த வரையில் இப்படி ஒவ்வொருவரின் ஆரோக்கியமும் நல்ல ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பான செயல்பாட்டில் இருக்கிறோமா? என்பது மட்டும்தான். நான் சுமார் 25 ஆண்டுகளாக யோகப் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். அந்த வகையில் எனது அனுபவம்யோகா மிகவும் நல்லதுஎன்பதே. ”சத்குரு யோகா செய்தார். ஆனால் அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. பதஞ்சலி யோகா செய்தார்.  ஆனால், அவருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை. விவேகானந்தர் யோகப்பயிற்சி செய்துகொண்டேயிருந்தார். ஆனால், அவருக்கும் ஏகப்பட்ட ஆரோக்கிய குறைபாடுஎன்றெல்லாம் கேட்பவர்கள் இருக்கிறார்கள். பொதுவாக உடலுக்குள் ஏற்படும் ஆரோக்கிய குறைப்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்தும் ஆற்றலானது அலோபதி, ஆயுர்வேதம் ஆகிய இவை இரண்டிற்குமே கிடையாது. உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன். ஒரு பூகம்பம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞான தொழில்நுட்பத்தின் மூலம் எந்த ஒரு இடத்திலும் பூகம்பம் வருவதை ஒருபோதும் முன்கூட்டியே அனுமானிக்க முடியாது. ஆனால், ஒருவேளை ஓரிடத்தில் பூகம்பம் வரக்கூடிய வாய்ப்பு இருந்தால், அதை எதிர்கொள்வதற்கு ஏற்றவாறு கட்டிடங்களை எப்படி கட்டிக் கொள்வது? என்று நாம் முன்னெச் செரிக்கையுடன் செயல்பட முடியும். அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ மற்றும் ஜப்பான் போன்ற இடங்களில் பூகம்பத்திற்கான வாய்ப்புகள் அதிகமுண்டு. அத்தகைய பகுதிகளில் கட்டுமானங்கள் இருக்கத்தான் செய்கின்றன. பூகம்பத்தின் ரிக்டர் அளவில் 8 அல்லது 9 என அதிகபட்சமாக வந்தால்கூட உயிரிழப்புகள் இருப்பதில்லை. ஏனெனில் சக்தி வாய்ந்த பூகம்பத்தைத் தாங்கும் வண்ணம் அந்த கட்டடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை சிமெண்ட் காங்க்ரீட் கட்டடமோ அல்லது மரத்தினாலான கட்டடமோ எதுவாயினும் அப்படித்தான். ஏனெனில், அங்கெல்லாம் பூகம்ப ஆபத்துகள் மிகவும் அதிகம். அவர்களால் பூகம்பத்தை முன் கூட்டியே கணிக்க முடியுமா? என்றால் நிச்சயமாக முடியாது. ஒருவேளை கணிக்க முடிந்தால்தான் முன்னெச்சரிக்கையாக கட்டடத்தை விட்டு வெளியேறி விடலாமேதிறந்தவெளிக்கு வந்துவிட்டால் பூகம்பத்தினால் என்ன பாதிப்பு ஏற்பட்டு விடும்? பூகம்பத்தின்போது எல்லா விதமான அபாயமும் கட்டடத்திற்குள்ளே இருந்தால்தான் வரும். இதிலிருந்து நாம் புரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால், நம் உடலும் அப்படித்தான். பூகம்பம் வருவதை எப்படி முன்கூட்டியே கணிக்க முடியாதோ  அதேபோல் உடலினுள்ளே என்ன நோய் உண்டாகிறது என்பதை யாராலும் கண்டுபிடிக்க இயலாது. ஆனால், ஒருவேளை அதற்கான சூழல் வந்துவிட்டால், அதை எப்படி கட்டுப்படுத்துவது? அது மேற்கொண்டு தீவிரமாகாமல் தடுப்பது? என்பனவற்றை யோகாவின் மூலம் முயற்சிக்கலாம். ஒருவேளை அவ்வாறு முயற்சித்தும், அது தீவிரமானால் நம் உடல்லுக்கான வாய்ப்பு அவ்வளவுதான் என்று பொருள். இந்த இடம்தான் நம் விதிக்கும், மதிக்கும் இடையிலான வித்தியாசத்தை காண முடியும்.  நாம் மதியைக்கொண்டு நோயைத் தடுக்க முயற்சிக்கிறோம். ஆனால், அதையும் மீறிவிட்டால் அதுவிதிஎன்கிற வட்டத்திற்குள் சிக்கிவிடுகிறது என்று பொருள் கொள்ள வேண்டும். 1950, 60 களில் தமிழகத்தில் திராவிட இயக்கச் சிந்தனை வெகுவாக வேரூன்றிய காலகட்டம். சிவனின் அவதாரமாக கருதப்பட்டதுடன், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பெரும்பாலான பக்தர்களைக் கொண்டிருந்த திருவண்ணாமலை ரமணமகரிஷி அவர்களுக்குபுற்றுநோய்வருகிறது. அப்போதுஎன்ன கடவுள் இது? கடவுள் அவதாரமென்றால் புற்றுநோய் வருமா?” என திராவிட இயக்கத்தவரின் மத்தியில் கேல், கிண்டல், நையாண்டிகள் வலம் வந்தன. அது குறித்து பரப்புரைகளும் நிகழ்ந்தன. ரமண மகரிஷி தனக்கு வந்த நோயை எதிர்கொண்ட விதம், வலியைத் தாங்கி கொண்ட விதம் எல்லாம் வியக்கவைத்த விஷயங்கள். அவருக்கு அறுவை சிகிச்சையும் நடந்தது. பின்னர் ஒருமுறை தேவைப்பட்டபோது தனக்கு மீண்டும் அறுவை சிகிச்சை தேவையில்லை என்று அறிவித்தார். அதன்பிறகு இயற்கையின் நியதிப்படி இறைவனடி சேர்ந்தார். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களுக்கும் இது போன்ற ஒரு நோய் வந்தபோது, அவர் சொன்னது, “எனக்கு எவ்வித சிகிச்சையும் தேவையில்லை. இந்த உடலை நான் சேதப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. இறப்பையே விரும்பி ஏற்கிறேன்என்று கூறினார். தன் மதத்தின் வழியில் சில சாதகங்கலைச் செய்வதால் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய ரியாக்ஷன். அந்த ரியாக்ஷனுக்கும், உடலினுள்ளே இருந்த நோயை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதற்கும் அறிவியல் பூர்வமாக விளக்கமளிக்க முடியாது. ஆக, எவ்வளவோ சாதகங்கள் செய்தும்கூட, இப்படி ஆகிவிடுகிறதென்றால், நாம் அனுமானிக்க வேஎண்டியது என்னவென்றால், ஒருவேளை அவர்கள் சாதகங்களை செய்யாமல் இருந்திருந்தால், அவர்களின் வாழ்நாளில் இன்னும்15 ஆண்டுகளுக்கும் முன்னரே இந்நோய் தாக்கியிருக்கக்கூடும் என்றுதான். புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளர்கள் அனைவருக்கும் புற்றுநோய் வருவதில்லை. ஆனால், புகைப்பிடிப்பவர்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.  யோகப்பயிற்சி செய்வடூ, ஆயுர்வேதத்த்தை எடுத்துக்கொள்வதால் உடலில் எந்தவிதமான பிரச்சினைகளும் வராது என்றெல்லாம் அறுதியிட்டுக்கூற முடியாது. அந்த உடலில்திடீர் பூகம்பம்ஏதும் வருமா என்று முன்கூட்டியே தெரியாததால், பிரச்சினைகள் வரக்கூடிய நிலை எதுவும் இருந்தால் அதை எதிர்கொள்வதற்கான வாய்ப்பையும், ஆற்றலையும் யோகா தரக்கூடும். ரமண மகரிஷியோ, சத்குருவோ அவர்களால் தங்கள் நோய் பாதிப்பை தடுக்க முடியவில்லை என்பதே உண்மை. இதனால்தான் இந்துமதத்தில்கர்மவினைஎன்கிற கூற்றின்படி, நமக்கான கர்மாவை நாம் ஜீரணித்துக்கொள்ளத்தான் வேண்டும் என்பர். திராவிட இயக்கத்தின் சி.என். அண்ணாத்துரை அவர்களை புற்றுநோய் தாக்கியபோது, ”நீங்கள் பலவிதமாக இழிவாகப் பேசியதால்தான் உங்களுக்கும் வந்துவிட்டதுஎன்று கூறினார்கள். ஆனால், நடைமுறையில் இருதரப்பினரின் கருத்துகளுமே உண்மையில்லை. ஆன்மீக சக்தி என்கிற ரீதியில் ரமணர் தன் உடல்நோயினை இலகுவாக எதிர்கொண்டார்கள். சி.என்.அண்ணாத்துரை அவர்கள் (அண்ணா) தன் நோயை பொருட்படுத்தாமல், மக்களுக்காக ஓய்வில்லாமல் உழைத்தார்ஒருவேளை அண்ணாத்துரை அவர்கள் யோகப்பயிற்சியை மேற்கொண்டிருந்தால், இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் கழித்து அந்த நோய் தாக்கியிருக்கலாம், அல்லது அது வராமலே  போயிருக்கலாம்.

            யோகாவின் மூலம் ஐந்து கோசாக்களுக்கான அற்புதமான விஷயத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த உலகிற்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறார்கள். எவ்வளவு பெரிய விஞ்ஞானியோ, பணக்கார தொழிலதிபராக இருந்தாலும், இன்னும் பல தரப்பினராக இருந்தாலும் சரி, ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இன்றைய அதிகப்படியான மன அழுத்தம் மிகுந்த வாழ்வியல் சூழலையும் சமாளிக்கும்படியான ஆற்றலைத் தரக்கூடியவகையில் யோகாவானது முக்கியப் பங்காற்றுகிறது. இதனாலேயே  இன்றைய இளைஞர்களும், பெண்களும் அவர்களால் எவ்வளவு சீக்கிரம் யோகப்பயிற்சியைத் தொடங்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தொடங்க வேண்டும். இதனை கடந்த 25 ஆண்டுகளாக யோகப்பயிற்சியினை செய்து வரும் என்னுடைய அனுபவத்தின் மூலம் கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பெண்களைப் பொறுத்தவரையில், அவர்களின் மாதவிடாய்க் காலங்களில் யோகப்பயிற்சியை மேற்கொள்ளக்கூடாது என்கிற தடைகள் அக்காலத்தில் இருந்திருக்கின்றன. பெண்களுக்கு சுதந்திரம் அளிக்கும் வகையில்தான் அத்தகைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் என்றே நான் கருதுகிறேன். ”தீட்டுஎன்கிற காரணத்தினால் நிச்சயம் இருந்திருக்காது. நானும் அதையே பரிந்துரைக்கிறேன். இன்றும் கூட மாதவிடாய்க் காலத்தில் சிவன் கோயிலுக்கோ, பெருமாள் கோயிலுக்கோ செல்லக்கூடாது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், எனக்கு அதுபற்றி எந்த நம்பிக்கையும் கிடையாது. அக்காலத்தில் எதனால் அப்படி ஒரு கருத்தியலை வைத்திருந்தார்கள் என்று சிந்தித்துப் பார்த்தால், மூன்று அம்சங்கள் நம் சிந்தனையில் விரிகிறது. அவை என்னவெனில், முதலாவதாக மாதவிடாய்க்காலத்தில் நிச்சயம் ரத்தவாடை இருக்கும். அந்த வாடையில் ஈர்க்கப்படும் மிருகங்கள் தாக்குதல் தொடுக்கக்கூடும். இரண்டாவதாக, அதிகப்படியான இரத்த இழப்பினால் ஹீமோகுளோபின் மிகக்குறைவாக இருந்தால், உடல் பலகீனம் இயல்பாக வரும். அத்தகைய தருணத்தில் மயக்கம் ஏற்படக்கூடும். அதனால், ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடலாம். இதற்காக கட்டுப்பாடு விதிக்கப்படிருக்கலாம். மூன்றாவதாக அந்த சமயத்தில் அதிக சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டு, சற்று ஓய்வாக இருந்தால், கருப்பை பலமடையும். அதனால் கரு உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இதற்காக மதரீதியில் ஒரு பாதுகாப்பு தந்திருக்கிறார்கள். இதையே பிற்காலத்தில்தீட்டு  என்கிற பெயரில் குழப்பங்களை விளைவித்துவிட்டனர். இன்றைய காலத்தில் பெண்கள் பள்ளி, கல்லூரிக்குச் செல்கிறார்கள். விளையாட்டில் ஈடுபடுகின்றனர். ஆனால் கோயிலுக்குச் செல்லமட்டும் அச்சப்படுகிறார்கள். ஏனென்றால், அந்த சமயத்தில் ஒருவித அசுத்தம் இருக்கும் என்று அவர்களுக்கே தோன்றுகிறது. அது உடலிலிருந்து வெளியேறும் பொருள்தான் . அது அசுத்தமல்ல. இது உடலியல் ரீதியிலான ஒரு சுழற்சி. இதற்கும் கடவுளுக்கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லை. உடலில் சக்தி இருந்தால் நிச்சயம் தைரியமாக யோகப்பயிற்சியை செய்யலாம். இந்துமதத்தில் மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் கோயிலுக்குச் செல்லவே கூடாது என எங்கும் சொல்லப்படவேயில்லை. மாதவிடாயின்போது இயல்பாகவே தசைகள் களைப்படைந்திருக்கும். அப்போது அவர்கள் ஓய்வெடுப்பதன் மூலம் அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிற கோணத்தில்தான் சொல்லப்பட்டிருக்கின்றன. இதையே தற்காலப்பெண்கள்,”பழையகாலத்திலாவது மாதவிடாய் ஏற்பட்டால் அந்த மூன்று க்நாட்களாவது ஓய்வு கிடைத்த்து. ஆனால், இப்போது அப்படி இல்லையேஎன்று கருதுவதாக கருத்துகள் நிலவுகின்றன. பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் பயீற்சி மேற்கொள்வதற்கென்றே சில யோகப்பயிற்சி முறைகள் உள்ளன. சிறந்த யோகா நிலையங்கள் அவற்றை கற்றுத்தருவார்கள். சில தியானப்பயிற்சி முறைகளும் உள்ளன. இதன் மூலம் வருங்காலத்தலைமுறைக்குத்தேவையான உடல், மனம் சார்ந்த, மரபணுரீதியிலான ஆதரவு கிடைக்கும்.

            நம் முன்னோர்கள் வழங்கிய யோகாவானது மற்ற நாட்டினருக்குத்தான் இறக்குமதி செய்யப்பட்ட ஒன்று. ஆனால் நமக்கோ இது உள்நாட்டிலேயே கிடைத்த வரம். அதனால் சிந்தனைத்தெளிவுடன் அனைவரும் யோகப்பயிற்சியை மேற்கொண்டு பயனடைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

----------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

25.பெண் புத்தி பின் புத்தி" இது உங்களுக்கு தெரியுமா?

  " பெண் புத்தி பின் புத்தி" இது உங்களுக்கு தெரியுமா ?