மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தற்கொலை ஏன்?
சமீபத்தில்
ஒரு வருத்தமான செய்தி. மங்களூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில்
எம்.பி.பி.எஸ் படித்துவந்த 20
வயது மாணவி தற்கொலை செய்து கொள்கிறார். தனது தற்கொலைக்கான காரணமாக அவர் எழுதிவைத்த
குறிப்பு:
‘I wanted to complete my M.B.B.S course but my obesity has
come in the way. My efforts to lose my weight have gone in vain and the development
cause me depression‘
இதன் மூலம் அவர் சொல்ல
வந்த விஷயம் என்னவென்றால், “நான்
எம்.பி.பி.எஸ் படித்து பட்டம் பெற ஆசைப்பட்டேன். ஆனால், என் ”உடல் பருமன்”
எனக்கு மிகப்பெரிய பிரச்சினையாகிவிட்டது. அந்த உடல் பருமனாலேயே எனது
மருத்துவப்படிப்பை முடிக்கவில்லை. நான் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகி
விட்டன. அதனால் எனக்கு மன அழுத்தம் (Depression) வந்துவிட்டது.”என்று குறிப்பு கொடுத்துள்ளார். அவர்
மருத்துவ மாணவி என்பதால் Depression என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கலாம். இதன் மூலம்
சமூக விழிப்புணர்வாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய செய்தி
என்னவென்றால், ஒரு ஆணோ, பெண்ணோ குண்டாக இருக்கக்கூடும். ஒரு சிலருக்கு தலைமுடி
உதிரும் பிரச்சினை இருக்கலாம். வேறு சிலருக்கு தலையில் வழுக்கை ஏறிக்கொண்டே
போகிறதே என்கிற வருத்தம் இருக்கலாம். இன்னும் பலருக்கு தலைமுடி நரைக்கிறதே என்கிற
வருத்தம் இருக்கும். சரி.. “இதற்கெல்லாமா தற்கொலை செய்துகொள்வார்கள்?” என்றால், இது
போன்ற பார்வை ஆண்களுக்கும் உண்டு. பெண்களுக்கும் உண்டு. தன்னை அழகாக வைத்துக்கொள்ள
வேண்டும் என்கிற எண்ணம் எல்லோருக்கும் உண்டு.
குண்டாக இருப்பது அழகுக்கு
எதிரானது என்கிற போக்கு இருக்கிறது. பொதுவாக நம் தமிழ் சினிமா ஹீரோயின்கள்
பெரும்பாலும் சற்று கூடுதல் எடையுடன் இருப்பர். கிராமத்து வழக்குச்சொல்லாக அதை
”பூசுனாப்புல” (பூசினாற் போன்று) என்று சொல்வார்கள். பாலிவுட் சினிமா உலகின்
ஹீரோயினிகளைப் பார்த்தோம் என்றால், எல்லோருமே இன்றைக்கு கல்லூரி இளைஞர், இளைஞிகள் பரவலாக சொல்லக்கூடிய ”ஜிரோ சைஸ்” என்கிற
அளவில்தான் இருக்க வேண்டும். பாலிவுட்டில் உள்ள ஹீரோக்கள் பாடி பில்ட் என்கிற
“சிக்ஸ் பேக் (six pack)” தோற்றத்தில்
இருப்பர். தமிழ் ஹீரோக்களுக்கு இது போன்ற நிபந்தனைகள் ஏதும் கிடையாது.
பாலிவுட்டில் காமெடியனைத்தவிர எல்லோருமே வெள்ளையாகத்தான் இருப்பார்கள். தமிழ்
ஹீரோயின்கள் அழகாக இருக்க ‘வெள்ளையாக’ இருக்க வேண்டும். கருப்பாக
இருக்கும் பெண்ணை ஹீரோயினாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தமிழ் இனத்திற்கே இல்லை.
இந்த இனம் கருப்பினம் தான். ஆனால் இதே கருப்புக்கு எதிரான இனமாகத்தான் இன்னும்
தமிழினம் இருந்து வருகிறது.
உடல்
குண்டாக இருப்பதற்கும் அழகிற்கும் சம்பந்தமிருக்கிறதா என்றால், ’இல்லை’ என்பதே
பதில். தமிழ்நாட்டின்
கோலிவுட்டில் இருக்கக்கூடிய ஹீரோயின் பாலிவுட்டில் நடிக்க முடியுமா? என்றால் அது முடியாது. ஏனென்றால்,”இவங்க என்ன இவ்வளவு வெயிட்டா இருக்காங்க?” என நாங்களே காதுபட கேட்டிருக்கிறோம். அந்த
கலாச்சாரம் அதாவது வட இந்தியாவில் இருக்கிறது. உடல் பருமன் அதிகமாக இருக்கும்
பெண்களை அழகுடையவர்களாக பார்ப்பது இல்லை. இது தென்னிந்திய கலாச்சாரத்தில்
கிடையாது. இங்கே குண்டாக இருக்கலாம். சற்று பூசினாற்போல் இருக்கலாம். இதை நான் கூறிய
இரண்டு ஒப்பீட்டைப்பார்த்தாலே தெரியும். இதுக்காக ஒருவரின் உயிரைப்பறிக்கின்ற
அளவுக்கு ஒரு உண்மையான காரணமா? என்றுதான் கேட்கிறேன்.
நிகழ்ந்துவிட்ட துயரம் குறித்து விசாரணை செய்யவில்லை. இது உண்மையான
காரணம்தான் என பேசுகிறபோது, இதேபோல் இன்னொரு பையனோ அல்லது
ஒரு பெண்ணோ இந்த தவறை செய்துவிடக்கூடாது என்றுதான் ஆதங்கம் மேலிடுகிறது. குண்டு, ஒல்லி
ஆகிய இரண்டில் ஒன்று அழகு; இன்னொன்று
ஆரோக்கியம் (health). சிலர் நடந்துகொண்டே இருக்கிறார்கள். ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஜிம்மில் (உடற்பயிற்சி நிலையம்)
மாரடைப்பு (cardiac arrest) என செய்திகள் பார்க்கிறோம். நமக்கு என்ன புரிதல்? டாக்டர்கள் என்ன சொல்கிறார்கள்? இதுபோன்ற விஷயங்கள் மக்களிடம் இன்னும் போய்ச் சேரவில்லை என்றுதான்
சொல்ல வேண்டும்.
காட்டுயானைகளில்
குண்டான யானைகளும் உண்டு. ஒல்லியான யானைகளும் உண்டு. பொதுவாக வித்தியாசம்
தெரிவதில்லை. ஆனால், யானைகளின்
கூட்டத்தில் அது நல்லா தெரியும். கால்நடை மருத்துவர்களுக்கும் (veterinary doctor) தெரியும். அவற்றில் average weight, average
height என சில நிலைகள் இருக்கின்றன. அனைத்து யானைகளும் ஒரே அளவில்
இருப்பதில்லை. ஆனால்… எந்த யானையும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. எல்லா
யானைகளும் அவற்றின் எடையைப் பொருத்தவரை மகிழ்ச்சியாகவே உள்ளன. சில யானைகள் நல்ல உயரத்தில் இருக்கின்றன. சில யானைகள் உயரம் குறைவாக
இருக்கின்றன. இந்த body mass index –இல் வேறுபாடுகள் எல்லா விலங்குகளுக்கும் உண்டு. சரி.. அதே காடுகளில்
நடக்கும் யானை பதினைந்து, இருபது
கிலோ மீட்டர் நடந்துகொண்டே இருக்கின்றன. சாப்பிட்டுக்கொண்டே இருக்கின்றன.
தூங்குகின்றன. குளிக்கின்றன. சுற்றிக்கொண்டே இருக்கின்றன. அதன் 150
(60- 70 வருஷம்) ஆண்டுகால வாழ்க்கையிலும்
அவற்றின் செயல்பாடுகள் அப்படித்தான். ஆனால்.. சில யானைகளை பிடித்துவந்து கோயிலில்
கட்டிவைத்து விடுகிறோம். அந்த யானை
தினமும் இரண்டு, மூன்று
கிலோ மீட்டர் நடக்கும். அதற்காக
அந்த யானைக்கு உடல் எடை கூடிவிடுகின்றதா? ஆரோக்கிய குறைபாடு ஏற்பட்டுவிடுகிறதா?
இவற்றை அறிந்துகொள்வதே கடினமாக உள்ளன.
நமக்கும் அவற்றிற்கும் physiology ஒன்றுதானே?..
பொதுவாக எல்லா பாலூட்டிகளுக்கும் பல விஷயங்களில் ஒற்றுமை
உண்டு. யானை என்னதான் நடந்தாலும் ஒரு அளவுக்குமேல் அது
ஒல்லியாக முடியாது. என்னதான் நீச்சல் பண்ணிக்கிட்டே இருந்தாலும் திமிங்கலம்
ஒல்லியாக முடியாது. இதேபோல் மனிதர்கள் சிலபேருக்கு body weight இருக்கு. ஆனால்.. அது ஆரோக்கியக் குறைபாடு
கிடையாது.
அழகு
என்கிற விஷயமானது கலாச்சாரத்தில் எப்படி மாறுகிறது என்று பாருங்கள். நான் ஏற்கனவே
கூறியதுபோல் உடல் குண்டு என்பது வட இந்தியாவில் அழகு குறைவான ஒன்றாகவும், தென்னிந்தியாவில் அழகு கூடுதலாக ஒன்றாகவும் இருக்கிறது.
ஆனால்,
ஆரோக்கிய ரீதியாக பாக்கும்போது சிலருக்கு இயற்கையாகவே உடல் பருமனாகத்தான்
இருக்கிறது. ஆக, நீங்கள்
ஆரோக்கியத்திற்காக உடல் எடையைக் குறைக்கிறீர்கள் என்றால், உங்க உடம்புக்கு இந்த எடை ஓ.கே.தானா? மற்ற ஆரோக்கியமுறைகள் நன்றாக இருந்தால் அந்த எடையை நீங்கள் மகிழ்ச்சியுடன்
அனுபவியுங்கள். நான்கு நெய்தோசை சாப்பிட வாய்ப்பிருந்தால் சாப்பிடுங்கள். நான்கு சிக்கன் பீஸ் சாப்பிட வேண்டுமென ஆசை
இருக்கிறதா?.. சாப்பிடுங்கள்.
ஆனால், அதற்கும் உங்க ஆரோக்கியத்திற்கும் சம்பந்தம்
இருக்கக்கூடாது. BMI தப்பா
இருக்கு. தொப்பை வருகிறது. தொப்பை வேறு. குண்டு வேறு. இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை
புரிந்துகொள்ள வேண்டும். அந்த மாணவி தன்னுடைய ஆரோக்கியம், அழகு இவை இரண்டையும் எண்ணி குழம்பி, அதற்காக பெரும் முயற்சி எடுத்திருக்கிறார் என்றே
கூற வேண்டும். உண்மையிலேயே ஒரு யானைக்குரிய உடல்வாகு இருந்திருந்தால்
எடை குறைந்திருக்காது. அந்த எடை உடலில் இருக்கும். ஆகவே இதை சாதிக்க முடியாதென தெரியாமலேயே
சாதிக்க முயற்சி செய்து, அதனால்
மன அழுத்தம்
ஏற்பட்டதால் அந்த குழந்தையை நாம் அநியாயமாக இழந்து விட்டோம்.
ஓராண்டில்119 மருத்துவ மாணவ, மாணவியர் இறந்து விட்டதாக ஒரு அதிர்ச்சியான தகவல் வருகிறது. இவர்கள்தான்
பின்னாளில் அவர்களிடம் வந்து போகப்போகிற 140 கோடி மக்களுக்கு தைரியம் சொல்லப்போகிறவர்கள்!? அவர்களை வாழவைக்கப்போகிறவர்கள்?! இந்த குழந்தைகளுக்கு மருத்துவக்கல்வியில் தேவையான
விழிப்புணர்வு தரப்படவில்லையா? மாணவர்கள் ஒரு மருத்துவக்கல்லூரியில் தற்கொலை செய்து கொள்வதையும், ஐ.ஐ.டியில் தற்கொலை செய்துகொள்வதையும் இணைத்துப்பார்த்தால் நான் ஒரு பைத்தியக்காரனே. ஐ.ஐ.டி.யில் அவர்களுக்கு பலவிதமான பாடங்கள். அவர்கள் பொறியியலில் ஆழமாக செல்லக்கூடியவர்கள். அவர்களுக்கு கவுன்ஸிலிங் கொடுக்க வேண்டியது
மருத்துவர்கள். மருத்துவம் படிப்பவர்களுக்கு தற்கொலை பற்றிய விழிப்புணர்வை ஏன் இன்னும்
நம்மால் தரமுடியவில்லை? ஒரு மருத்துவர் தற்கொலை
செய்துகொள்ளக்கூடாது. ஒரு
பொறியியலாலர், I.A.S, I.P.S, I.R.S. I.I.M, Harvard University இல் படிக்கிறவர்கள் கூட தற்கொலை செய்துகொள்ளக்கூடும். (இதைச் சொல்வதால் அவர்கள் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று நான் கூறவில்லை) ஆனால், மருத்துவம் படிப்பவர்கள் தற்கொலை செய்துகொண்டால்
மருத்துவப்படிப்பு சார்ந்த முறையே தவறாக இருப்பதாகவே கருதுகிறேன். ஆகவே, அவர்களை முதலில் விழிப்புணர்விற்கு ஆட்படுத்தி,
ஆயத்தப்படுத்த வேண்டும். அதற்கு பிறகுதான்
சமுதாயத்தில் இருக்கிற அச்சுறுத்தலுக்கு எதிராக போர் செய்ய முடியும் என்பதுதான் என்னுடைய கருத்து.
குழந்தைக்கு
சொல்கிற வகையில் ஒரு திருக்குறளை சொல்லி நான் முடிக்கிறேன். ”உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்”அதாவது
நாம் நினைப்பவற்றை உயர்வாகவே நினைக்க வேண்டும். “மற்றது தள்ளினும் தள்ளாமை
நீர்த்து” திருவள்ளுவர் என்ன சொல்கிறார்? எவ்வளவு ஊக்கம் இருக்கிறதோ.. எவ்வளவு நல்ல எண்ணங்களுடன்
நாம் சிந்திக்கிறோமோ அந்த அளவிற்கு வெற்றி நிச்சயம். அப்படி இல்லாட்டாலும் அது ஒரு
வெற்றி மாதிரிதான் கருதப்படும் என்று சொல்கிறார். சாலமன் பாப்பையா அதனுடைய
விளக்கவுரையாக மிக அழகாக ”ஒருவேளை அந்த உயர்ந்த
எண்ணத்துக்குரிய விஷயத்துல நீ தோத்துட்டா கூட.. நீ உயர்ந்த இடத்துல ஜெயிச்சதாவே இந்த உலகம் நெனைக்குது.
அதனால் உயர்ந்த எண்ணத்தோட நில்லு.” என்கிறார். ஊக்கமுடமை அதிகாரத்தில்தான் இந்த கருத்து
வருகிறது. தற்கொலை செய்துகொண்ட மருத்துவ மாணவியும் தன்
உடலைக்குறைக்க வேண்டும் என்று எண்ணியது உயர்ந்த எண்ணம்தானா? என்றால்,
நிச்சயமாக இல்லை. அந்த எண்ணம் தேவையும் இல்லை.
சரி.. ஊக்கத்துடன் போகிறார்கள். உயர்ந்த எண்ணமிருந்தும் தோற்றால்கூட ஒரு முயற்சி எடுத்ததாகவே மக்கள் நினைக்கப்
போகிறார்கள். முயற்சி எடுத்தும் உடல் எடையைக்குறைக்க முடியவில்லை. சரி விட்டுவிடுவோம். யாரும் வந்து தவறாக பேசப்போவதில்லை. இதை நன்கு புரிந்துகொள்ள
வேண்டும்.
உடல்
எடையைக் குறைப்பதை உயர்ந்த எண்ணமாக கொண்டால்கூட,
தன் முயற்சியில் கூடுதல் எடையைக்குறைக்க முடியாவிட்டாலும் தவறு இல்லை.
இந்த உலகம் எப்படி நினைக்கப்போகிறது? ”தேவையான முயற்சி எடுத்தார்கள். தவறு அவர்கள் மேல் இல்லை”என்றுதான் நினைக்கும். ஒருவேளை அவ்வாறு நினைக்காவிட்டால் அதற்காக நீ ஏன் வருத்தமடைகிறாய்?
இந்த உடலை, இந்த
உயிரை காதலிப்பதற்கு ஒரு ஆண் வந்திருப்பான். ஏன் அவசரப்பட்டாய்? இந்த திருக்குறளை சரியாகப் புரிந்துகொண்டு உயர்ந்த
எண்ணத்துடன் பயணம் செய்யுங்கள். அப்படி பயணிக்கும்போது ஒருவேளை தோற்றுவிட்டாலும் பரவாயில்லை.
உலகம் அதை தோல்வியாக பார்க்காது. ஆனால் அது உயர்ந்த எண்ணம்தானா? என்பதை நீங்களும் தாய், தந்தையரும், உங்கள் குருவும், உங்கள் நண்பர்களும் உங்களின் மிக நெருங்கிய நண்பர்களான உங்கள்
மனைவியோ கணவரோ எல்லாரும் பேசிவிட்டு, அதை நோக்கி நீங்கள் பயணிக்க வேண்டும். என்னுடைய இந்த செய்தியை
N.M.C. கேட்குமென்று நம்புகிறேன்.
--------------------------------------------------------
No comments:
Post a Comment