Saturday, July 25, 2026

46.தூக்குத் தண்டனை தேவையா?

 

தூக்குத் தண்டனை தேவையா?


உலகின் சில நாடுகளில் மரண தண்டனை நடைமுறையில் உள்ளது. வேறு சில நாடுகளில் அது நடைமுறையில் இல்லை. மேற்காசியாவின் சில நாடுகளில் அந்த தண்டனை குற்றவாளியை கற்களால் அடித்தே கொல்லும் அளவிற்கு மிகவும் கொடூரமாக இருக்கும். சில நாடுகளில் ஊசியின் மூலம் விஷத்தை உடலினுள் செலுத்தி கொல்லும் நடை உண்டு. இந்தியாவைப்பொறுத்தவரைஉயிர் பிரியும் வரை தூக்கிலிடுதல்என்பது உண்டு. மனித நாகரீகம் வளர வளரமரண தண்டனைஎன்பது மிகவும் கொடூரம், ஆகவே அந்த நடைமுறையை சீரமைக்க வேண்டும்என்னும் கருத்தியல் உண்டு. இந்தியாவில் பல்வேறு நிலைகளைக் கடந்த பின்னரும் உடனடியாக மரணதண்டனை நிறைவேற்றப்படுவதில்லை. கவர்னர், ஜனாதிபதி ஆகியோருக்கு கருணை மனு அனுப்பி அவர்களின் பரிசீலனைக்காக்க் காத்திருந்தபின் மரணதண்டனை நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்கப்படுகிறது. குற்றவாளி என்று தீர்ப்பிற்கு ஆளான அந்த குறிப்பிட்ட நபரின் மனவலி மற்றும் உளைச்சலைப் பொறுத்தவரை அது விவரிக்க இயலாத வேதனை தரக்கூடியதாக நான் பார்க்கிறேன். அதுமட்டுமல்ல அவரால் நிகழ்த்தப்பட்ட சம்பவம் (கொலை) காலம் செல்லச்செல்ல மறக்கப்படக் கூடும். ஆனால், குடும்பத்தினரிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ’அதற்குப்பதிலாக அந்த நபர் ஜெயிலிலேயே இருந்துவிட்டுப் போகட்டுமேஎன்கிற பார்வையும் இருக்கிறது. அமெரிக்காவில் மரணதண்டனையானது சில மாகாணங்களில் இருக்கவில்ல்லை. ஒருசில காரணங்களை முன்னிட்டு சீனாவில் மரணதண்டனையானது இன்றும் உள்ளது. அது துப்பாக்கிச்சூட்டின் மூலாமாகவும் நிறைவேற்றப்படுகிறது. நிறைவேற்றப்படும் தண்டனைகளிலேயே மிகவும் கடினமான தண்டனை என்றால், அது மரணதண்டனைதான். இது சம்பந்தமாக நான் என்ன யோசிக்கிறேனென்றால், நிரைய வழக்குகள் லோயர் கோர்ட், செஷன்ஸ், ஹைகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் என பலநிலகளைக்கடந்து வந்தாலுமே, மரண தண்டனை கொடுக்கப்படுமளவிற்கு, சம்பந்தப்பட்ட நபர் குற்றமிழைக்கவில்லை என்றாலும், குறைந்தபட்சம் ஏழாண்டுகள் ஜெயிலுக்குள் இருக்கவேண்டிய அளவிற்கு குற்றம்  செய்திருக்கக்கூடும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், ஓரிடத்தில் மிகப்பெரிய தவறு ஒன்று எதிர் தரப்பினரால் நிகழ்ந்துவிட்டால், சரியான அணுகுமுறையானது குற்றவாளியின் தரப்பில் இல்லாமல் போனால், அதுவே தூக்குத்தண்டனைக்கு ஏதுவாக போய்விடுகிறது. அவர் குற்றத்திற்கான சிறைத்தண்டனை என்னவோ வெறும் 7 ஆண்டுகள்தான். ஆனால், சில நேரங்களில் சட்டத்தின் நகர்வுகள் அத்தகையதாக இருக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம்.  இதற்கு முதல் காரணம் திறன் வாய்ந்த நல்ல வழக்கறிஞரை அமர்த்தாமல்/இல்லாமல் போவது. பொதுவாக ஒரு எம்.பி.பி.எஸ் படித்து பட்டம் பெற்ற மருத்துவர்கள் அனைவருமே ஒரேமாதிரியான நிபுணத்துவம் கொண்டிருப்பதில்லை. அதேபோல் சட்டம் படித்தவர்களும் அப்படித்தான். சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர், பொருளாதார வசதி அற்றவர்களுக்காக நீதிமன்றத்தில் இலவசமாக வழக்கு நடத்த இளம் வழக்கறிஞர்கள் முன்வர வேண்டும்’ என கூறியிருந்தார். ’மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் திறன்வாய்ந்த வழக்கறிஞர்கள் இதுபோன்ற வழக்குகளுக்குள் நுழைய முடியாது. அத்தகைய சூழலில் திறன்குறைவாக கொண்டிருக்கும் வழக்கறிஞர்களின் வாதத்திறமையின்மையால் ஒரு குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்படும் நிலைக்குச் சென்று விடுகிறதோ?’ என்று கூறியிருப்பவர் திரு.சுனில் குமார் குப்தா அவர்கள். இவர் 35 ஆண்டுகள் திகார் ஜெயிலில் பணி புரிந்தவர். மேற்கூறப்பட்டுள்ள கருத்தினை அவர் தனது, ‘Black Warrant (ப்ளாக் வாரண்ட்)’ என்னும் நூலில் எழுதியுள்ளார். மேலும் அவர்,’I am against death penalty. Poor are hanged because they cannot affor good lawyers’. மகாத்மா காந்தி அவர்கள்கூட, ‘நூறு குற்றவாளிகள் கூட தப்பித்துவிடக்கூடும். ஆனால், ஒரே ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது’. நாம் இப்போது எப்படி நினைக்க வேண்டியுள்ளதென்றால், குற்றமிழைத்த பணக்காரர்கள் 10 பேர்கூட தப்பித்துக்கொள்ளட்டும். ஆனால், ஒரு ஏழைகூட சட்டத்தின் சரியான அணுகல் இல்லாமல் போவதால் தூக்குத்தண்டனைக்கு ஆலாகிவிட்டார் என்று ஆகிவிடக்கூடாது. இலவச சட்ட ஆலோசனைகள் இருந்தாலுமே, இதுபோன்ற வாக்கியஹ்தை நிலைநிறுத்த வேண்டுமென்பது எனது பார்வையாக உள்ளது.

---------------------------------------------------------------

 

 

 

No comments:

Post a Comment

46.தூக்குத் தண்டனை தேவையா?

  தூக்குத் தண்டனை தேவையா ? உலகின் சில நாடுகளில் மரண தண்டனை நடைமுறையில் உள்ளது . வேறு சில நாடுகளில் அது நடைமுறையில் இல்லை . மே...