Thursday, July 23, 2026

35.ஜூடாயிஸம் மதத்திற்கு மாறமுடியுமா?

 

ஜூடாயிஸம் மதத்திற்கு மாறமுடியுமா?

ஏன் அந்த மதம் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை?


உலகின் பல்வேறு மதங்களில் ஒன்று யூதர்கள் பின்பற்றும் ’ஜூடாயிஸம்’ என்னும் மதமாகும். இதுதான் உலகத்தில் மிக நீண்ட காலமாஇருந்துவரும் மதம் என்று சொல்லலாம்.இயேசுநாதர் பிறந்த மதம் இது. இயேசுநாதரின் கருத்துகளை இந்த ஜூடாயிஸம் மதம் ற்கவில்லை. இயேசுநாதர் பிறந்தது 1 நூற்றாண்டில். கிறிஸ்தவம் 550 A.D. யில் ஐரோப்பாவில் ரோமானிய பேரரசர் கான்ஸ்டண்டைன் (Constantine ) என்கிற மன்னனால் அதிகாரப்பூர்வ மதமாக அங்கீகரிக்கப்பட்டது. அதன் பிறகுதான் ஐரோப்பா முழுமையாக கிறிஸ்தவத்தை ஏற்றது. இதற்குபின் ஒரு நூறு ஆண்டுகள் கழிந்தபின்னர் ‘இஸ்லாம்’ தோற்றுவிக்கப்படுகிறது.’பழைய ஏற்பாடு’என்னும் நூல் ஜூடாயிஸம்தான். வேற்று மதங்களிலிருந்து இந்த மதத்திற்கு யாரும் மாறி வர முடியாது. காரணம், மொழி (ஹீப்ரூ), தனித்துவமான மதக்கோட்பாடுகள், உணவு முறை வேறுபாடு என பல காரணிகள் உண்டு. காதல் திருமணம் செய்து கொண்டாலும் கூட அம்மதத்திற்குள்ளோ, மொழிக்குள்ளோ, சமூக மைப்பிற்குள்ளோ நுழைய முடியாது!

இதுநாள் வரையிலும் நோபல் பரிசை வென்றவர்களில் 30% முதல் 40% வரை யூத இனத்தவர்கள்தான்! இயற்பியல், வேதியியல், உயிரியல், பொருளாதாரம் போன்ற அனைத்து துறைகளிலும் அவர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும். எனக்கு மிகவும் பிடித்தமான புத்தகம் ஹோமோ ஸேபியன்ஸ் (homo sapiens). அதன் ஆசிரியர் யூத இனத்தைச் சேர்ந்தவர்தான். இவ்வளவு ஆதிக்கம் செலுத்தும் இவர்களுக்கு ஜெர்மனியில நடந்த துன்புறுத்தல் விஷயங்கள் எல்லாம் நாம் நன்கு அறிந்தவையே. ஆனாலும், இவ்வளவிற்குப் பின்னரும் அவர்கள் தங்கள் மதத்தை வேற்று நபர்களுக்கு திறந்துவிட விரும்பவில்லை. மதம் மாறிக்கொள்வதை அவர்கள் ஏற்க விரும்பவில்லை. நிறைய மதங்கள் பணத்தை செலவு செய்து மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபடுவதைப்போல் அவர்கள் செய்வதில்லை. உண்மையில் அவர்கள் இயேசு நாதரையே கூடப்புக்கொள்ளவில்லை. இயேசு சிலுவைறையப்பட்டு மரணித்தபின் சுமார் 15 அல்லது 20 ஆண்டுகளுக்குப் பின்னர் யூதர்களின் கவுன்ஸிலில் ஜான் பால் பேசினார். அப்போது “ஏன் நாம் யூத மதத்தின் கருத்துகளுடன் யேசுவின் கருத்துகளை உள்ளடக்கி மாற்றக்கூடாது?” என்று கேட்டார். அதற்கு, “அப்படியெல்லாம் செய்யவே முடியாது.. ஒரு எழுத்தைக் கூட மாத்த மாட்டோம்” என கூறிவிடுகிறார்கள். உணமையில் ‘சுன்னத்’ செய்யும் பழக்கம் கூட அவர்களின் ஜூடாயிஸத்தின் ‘பழைய கோட்பாட்டில்’ உள்ளதுதான். இதுபோன்ற பல விஷயங்கள், பல மதங்களிலும் பரவியிருக்கின்றன. உணமையில் சொல்லப்போனால், இந்துக்களின் “ஓம்”, கிறிஸ்தவர்களின் “ஆமென்இதெல்லாம் ஜூடாயிஸத்தில் இருக்கக்கூடிய ஒரு வார்த்தைகளின் மருவல் என்று கூறலாம். வர்கள் (யூதர்கள்) “அமின்” என கூறுகிறார்கள். ”ஓம்” என்பது பொதுவான ஒரு வார்த்தைதான். இந்துமதம், கிறிஸ்தவம், ஜூடாயிஸம் இப்படி நிறைய மதங்களில் குறில், நெடில் மாற்றங்களுடன் ’ஓம்’ ஒலி வருகிறது.

-----------------------------------------------------


 

No comments:

Post a Comment

43.LAW படிக்க ஆசையா ?

  LAW படிக்க ஆசையா ? Law- சட்டம் . நானும் சட்டம் படித்தவன்தான் . தொழிரீதியாக அதிகம் வருவாய் ஈட்டக்கூடிய துறை என்றால் அது சட்டத்...