Thursday, July 23, 2026

41.மருத்துவம் படிக்க ஆசையா?

 

மருத்துவம் படிக்க ஆசையா?


            மருத்துவத்துறை – அது மிகவும் கடினமான ஒரு பாடப்பிரிவுதான். கலைப்பிரிவு, பொறியியல், சட்டம் போன்ற கல்விபயிலும் மாணவர், மாணவியர் தேர்வினை எதிர்கொள்ளும் ஒரு வாரத்திற்கு முன்பு படித்தால் போதுமென்கிற மனோபாவம் உண்டு. ஆனால், மருத்துவத்துறையைப் பொறுத்தவரை அதன் பாடங்கள் பரந்துபட்ட உள்ளடக் கங்களைக் கொண்டவை. நாள்தோறும் படிப்பதுடன், தேர்விற்கு 1 ½ மாத்த்திற்கும் முன்னரே கடுமையாக போராடிப் படிக்க வேண்டும்.  இப்படியெல்லாம் அரும்பாடுபட்டு படித்து, தேர்வில் வெற்றி பெற்று, தன் சர்வீஸில் நோயாளிகளைக் காப்பாற்றக்கூடிய உன்னதமான பணி. இதில் மாற்றுக்கருத்துகள் ஏதுமில்லை. ஆனால், அதற்குள் நுழையவும், ஆரம்பநிலை, அதன் பின் குறைந்தபட்சம் இரண்டு முதுகலை பட்டப்படிப்பையும் முடித்தபின் உச்சகட்டமான புள்ளியைத் தொடுவதற்கு மிகவும் கடுமையாக போராட வேண்டியுள்ளது. உதாரணமாக ஒரு மருத்துவர் நெஃப்ராலஜி (Nephrology) முதுகலைப்படிப்பை முடித்து அந்தத் துறை சார்ந்து தொழில் செய்ய வருகிறார் என்றால், தற்சமயம் அதற்கு சென்னையில் பெரிய அளவில் வரவேற்பில்லை என்று வைத்துக்கொள்வோம். அதனால், அடுத்ததாக நியூராலஜி (Neurology) பிரிவில் முதுகலை, அடுத்து ஆர்தோ (Ortho) என அடுத்தடுத்து மாஸ்டர் டிகிரிகளை வாங்கிக்கொண்டே செல்லும் அளவிற்குத்தான் இன்றைய நிலை உள்ளது. சுமார் 1 கோடி முதல் 3 கோடி வரை செலவு செய்து படித்துவிட்டு, மேலும் அதிநவீன மருத்துவ உபகரன்ங்கள், ஸ்கேன் எடுக்கும் இயந்திரங்கள் போன்றவற்றை நிறுவி விட்டு சும்மாவே இருக்க முடியுமா? அவரிடம் வரக்கூடிய சாதாரண நோயாளிகளை ஏதாவது ஒரு ஸ்கேன், யார் வந்தாலும் இரத்தப்பரிசோதனை  எடுக்குமாறுதான் கூறுவார். நாம் எந்த கேள்வியும் கேட்கமுடியாது. பெரும் முதலீடு செய்தபின் அதற்கான பலனை எப்படி திரும்பி எடுப்பது? இந்த நிலையானது ஒரு மருத்துவராலோ அல்லது மருத்துவமனைகளாலோ நடக்கும் தவறாக நான் கருதவில்லை. நம் சமுதாயத்தின் செயலமைப்புதான் தவறாக இருக்கிறது என்று கூறுகிறேன். மருத்துவர்களை செலவு செய்ய வைத்தால், அவர்கள் அதற்குரிய பலனை எதிர்பார்க்கத்தான் செய்வார்கள். அது மார்க்கெட்டிங் சம்பந்தப்பட்டது. ஆகவே, அவர்கள் செலவுகள் கட்டுக்குள் இருந்தாலே அவர்களால் சிறந்த முறையில் தங்கள் மருத்துவச் சேவையை திறம்பட செய்ய முடியும்.

------------------------------------------------------------           

 

No comments:

Post a Comment

43.LAW படிக்க ஆசையா ?

  LAW படிக்க ஆசையா ? Law- சட்டம் . நானும் சட்டம் படித்தவன்தான் . தொழிரீதியாக அதிகம் வருவாய் ஈட்டக்கூடிய துறை என்றால் அது சட்டத்...