Thursday, July 23, 2026

42.இன்ஜினியரிங் படிக்க ஆசையா?

 

 

இன்ஜினியரிங் படிக்க ஆசையா?


இன்ஜினியரிங்- நான் கல்லூரியில் படித்த காலம் தொட்டே இன்ஜினியரிங் படிப்பு என்பது மிகவும் முக்கியத்துவமும், பிரபலமான படிப்பாகும். காரணம், 4 ஆண்டுகளில் படிப்பை முடித்துவிடலாம்.  வெளிநாட்டு வேலை வாய்ப்பு எளிதாக கிடைக்கும். அவ்வப்போது சம்பள உயர்வும் கிட்டி வரும். எனக்குத்தெரிந்து மருத்துவப்படிப்பு கிடைத்து கூட அதை தவிர்த்துவிட்டு பொறியியல் (Engineering) படிப்பை தேர்வு செய்து படித்தனர். பின்னர் அவர்கள் வெளிநாடுகளில் நல்ல வேலையில் செட்டிலாகி, தங்கள் வீட்டிற்கு பணம் அனுப்பி, தங்கள் தம்பி, தங்கைகளின் படிப்பு உள்ளிட்ட அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக கட்டமைத்தனர். மருத்துவத்துறையானது பொறியியற் படிப்பினைவிட சற்று மேலான ஒன்றாக கருதப்படுகிறது. ஒருகாலத்தில் அதிகபட்சமாக 40 இன்ஜினியரிங் கல்லூரிகளே இருந்தன.  ஆனால், இன்றைய நிலையில் ஏறத்தாழ 500 என்கிற எண்ணிக்கையில் இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த கல்லூரிகளில் இருந்து வெளிவருவோர் சுமாராக 500 பேர் என்று வைத்துக்கொண்டாலும்கூட, மொத்தம் 2,50,000 பேர் பொறியியலாளராக வெளியுலகில் கால் பதிக்கிறார்கள். இவவள்வு பேருக்கும் நாம் வேலை வாய்ப்பை உருவாக்கிவிட்டோமா? என்றால் இல்லை என்றே சொல்லமுடியும். பொறியியற் படிப்பை பெரிதாக நம்பி, அங்கு சேர்ந்து விடுகிறார்கள். அதில் படித்து வெளிவந்தபின் இன்றைய திறன் அடிப்படையில் இன்ஜினியரிங் சம்பந்தமான மார்க்கெட் போட்டிகளுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கோ, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள பெரிய நிறுவனங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்காமலோ அல்லது தானே பெரும் முதலீடு செய்து ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கான வாய்ப்புகளோ கிட்டாமல் போனால், ஏதாவது ஒரு சாதாரண கம்பெனிக்கு வேலைக்குச் செல்ல வேண்டுமென்கிற கட்டாயம் ஏற்படுமானால், ’இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு இந்த வேலைக்குச் செல்ல வேண்டுமா?’ என்கிற மனரீதியான அழுத்தத்திற்கு ஆளாகி விடுகிறார். நான் வருமானவரித்துறையில் பணியாற்றியபோது, TA recruitment – இல் ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டதைப் பார்க்கின்றபோது அவர்களில் பலரும் இன்ஜினியர்களாக இருந்தனர்.  இன்னும் சொல்லப்போனால், மருத்துவத்துறையிலிருந்து கூட ஒருவர் வந்திருந்தார். போட்டிகள் அதிகமாக இருப்பதனால், இதிலாவது பணியமர்வோம் என்கிற நோக்கத்துடன் வந்திருக்கின்றனர். எனக்கே பெரும் ஆச்சரியமாக இருந்தது.

ஒரு குழந்தை எவ்வளவு அறிவாக இருக்கிறது?’ என்பதை வெறும் மதிப்பெண்களைக் கொண்டு அளவிட முடியாது. மதிப்பெண்கள் அதிகம் பெற்றதனால் அறிவாளி என்றோ, குறைவாக மதிப்பெண்கள் பெற்றதனால் அறிவாளி அல்ல என்றோ கணித்து விடக்கூடாது. அப்படி என்றால் மதிப்பெண்களுக்கு என்னதான் மரியாதை? எதற்கு அந்த அளவுகோல்? ’ஒரு தேர்விற்கு மிக நன்றாகப் படித்தான். இப்படி மதிப்பெண் பெற்றான்என்றால், அதுவே அறிவாகாது. அவனது அறிவுக்கூர்மையை தனியாக சோதித்துப்பார்க்க வேண்டும். ஏனென்றால் அந்த அறிவுக்கூர்மைதான் அசலான (Original) இருப்பதாகும். ஒருவர் படிக்கவேயில்லை ஆனால், நல்ல மதிப்பெண் பெற்றுவிட்டாரென்ரால், அவரின் அறிவுக்கூர்மையை ஓரளவு சிறந்ததென அனுமானிக்கலாம். ஒருவர் நன்கு படிக்கவும் இல்லை; நல்ல மதிப்பெண்களும் வாங்கவில்லை என்பதற்காக அவர் அறிவற்றவர் என்றும் ஒதுக்கிவிட முடியாது. அவருக்குள் அறிவானது புதைந்திருக்கக்கூடும். இதையெல்லாம் பெற்றோர் நன்கு பரிசீலிக்க வேண்டும். எந்த ஒரு வேலைவாய்ப்பு சம்பந்தமாக போட்டிகள், மிகப்பெரிய அழுத்தம் இருக்கத்தான் செய்யும். இன்ஜினியரிங் படிப்பதால் மட்டுமே வேலை கிடைத்துவிடாது! மருத்துவம் படித்த எத்தனை பேர் பரபரப்பான செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர்? MMC KMC –யில் படித்திருந்தாலும் அவரவர் பேட்சில் (Batch) பத்து மருத்துவர்கள் வேண்டுமானால் அப்படி பரபரப்பாக இருக்கலாம். அவர்கள் முழு மெரிட்டில் வந்தவர்கள்தான்! ஒரு சிலர்,’என் தந்தை ஆஸ்ப்த்திரி வைத்திருக்கிறார். நான் அங்கே சென்று செட்டிலாகி விடுவேன்என்றால் அது நல்லதே. ஏனென்றால் அது ஒரு நிர்வாகம். மருத்துவம் சார்ந்து படித்திருப்பதால் அது சார்ந்த தங்கள் சொந்த ஆஸ்பத்திரியை நிர்வகிப்பது மிகச்சிறந்த விஷயமே. ஆகவேஎ, வெறும் மதிப்பெண்களைக் கொண்டுமட்டுமே எதையும் தீர்மானிக்க முடியாது. ’நம்மிடம் பணம் இருக்கிறதுஎன்றும் தீர்மானிக்கக் கூடாது. நம் குழந்தை தேர்வு செய்யும் துறையில் நீண்டகாலம் செயல்பட முடியுமா? அதற்கேற்ப ஒத்துழைப்பு, ஆதரவு கிடைக்குமா? என்று பர்க்க வேஎண்டும். ஒருவேளை அமைய வாய்ப்பில்லாமல் போனால் அந்த குழந்தை முடங்கிவிடக்கூடாது. அதன்பிறகு வேறெந்த வகையில் செயல்படமுடியாத நிலை ஏற்படும். மேலும் தான் படித்ததையே மறந்துவிடக்கூடும்.

இன்ஜினியரிங் படிப்பைப் பொறுத்தவரை இன்னொரு முக்கியமான விஷயத்தை நாம் அடிக்கடி பார்க்கிறோம். அதாவது, ‘இன்ஜினியரிங் படிப்பில் இந்த ஆண்டு ஒரு புதுப்பாட பிரிவு வந்திருக்கிறது. அதைப் படிக்கலாமா?’ என்கிற கேள்வி வரும். திடீரென ஒரு பாடல் வைரலாவது போல் அந்த பாடப்பிரிவும் வைரலாகிவிடுகிறது. உதாரணமாக,திடீரென யாராவது போன் செய்துசார்..பயோடெக்னாலஜி கோர்ஸில் ஏதோ நானோ டெக்னாலஜிஎன புதுப்பாடப்பிரிவு வந்துள்ளதாமே.. அதில் சேர்ந்து படித்துவிட்டால், வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாமாமேஎன்றெல்லாம் கேட்பார்கள். அந்த கோர்ஸே இப்போதுதான் அறிமுகமாகிறது. அதில் படித்து எப்படி வேலைக்குப்போய் எப்போது சீனியராகி, என்னவெல்லாம் ஆகுமோ? என்று எதுவும் நமக்குத்தெரியாது. இன்னும் சில கோர்ஸுகளுக்கு இந்தியாவில் வேலை கிடைப்பதற்கு வாய்ப்பேனில்லாதிருக்கலாம். அமெரிக்காவில் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் வண்ணம் இருக்கலாம். அந்த மாணவனின் தந்தி ஏற்கனவே ‘’பயோ டெக்னாலஜிதுறையில் இருந்தால், அந்த மாணவன்நானோ டெக்னாலஜிபடிப்பில் சேர நான் வலுவாக ஆதரிப்பேன். அதற்கு பொதுவான ஒரு நல்ல பாடப்பிரிவை தேர்ந்தெடுத்துப் படித்துவிட்டு, முதுகலைப்பட்டப்படிப்பில் குறிப்பிட்ட நல்லதொரு பாடப்பிரிவிவைத் தேர்ந்துடுத்து படிப்பதே புத்திசாலித்தனம் என்று கூறுவேன். நீங்கள்எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்படித்துவிட்டு முதுகலையில் ராக்கெட் இன்ஜினியரிங் படித்தால் மிகவும் நல்லது. எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் படிக்கலாம். அதன்பின்பயோ சிப்பிரிவிற்குப் போகலாம். ஆனால், ஆரம்பநிலையில் அதாவது, இளநிலைப்படிப்பிலேயே குறிப்பிட்ட பிரிவில் சேர்ந்துவிட்டால், பின்னர் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே முடங்கிவிட வாய்ப்பு உண்டு. ஆனால், எதை எடுத்துப் படித்தாலும்கூட, ’இந்தியாஎன்கிற வரப்பிரசாதம் ஒன்று இருக்கிறது. நான் மிக முக்கியமாக இங்கே குறிப்பிட விரும்புவது என்னவென்றால், +2 வில் சேருவோர் மற்றும் கல்லூரியில் சேர இருப்போர் இவற்றை மனதில் கொண்டு அவரவர் திறமை, இயல்பு மற்றும் பெற்றோரின் சூழல், ஆவல், எதிர்பார்ப்பு ஆகியவற்றையும் கணிது செயல்படவேண்டும் என்பதே. இதனால் நல்ல பயன்களைப்பெறலாம்.  ஒருபோதும் தோல்விகளைப்பற்றி அச்சம் கொள்ளவேண்டாம். நான் ஏற்கனவே சொன்னதுபோல் பார்த்து, பரிசீலித்து துறைகளைத்தேர்ந்தெடுத்தாலும், சுமார் 25% நபர்களே அவரவர் படிப்புக்கேற்ற துறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். டாக்டருக்குப் படித்துவிட்டு ஹோட்டல் வைத்து நடத்துபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஸ்டெதாஸ்கோப்பை ஓரங்கட்டிவிட்டு, பாத்திரங்கள், கரண்டிகலை பிடிக்கத்தொடங்கி விடுகிறார்கள். இதில் தவறுகள் ஏதுமில்லை. தனக்கு இயல்பாக ஒத்துப்போக்க்கூடியதை அவர்கள் தெரிவு செய்கிறார்கள். ஆனாலும், ஏதேனும் ஒருபட்டப்படிப்புஎன்பது மிகவும் அவசியமானது. ஏனென்றால், ஏதோ ஒரு பட்டப்படிப்பு படித்தபின்னர்தான் பலரும் அவர்களின் சுயத்தை உணர்ந்து கொள்கிறார்கள்.  படிப்பிறகா ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து, அதன்படி எல்லாம் நல்லபடியாக நடந்தால் மகிழ்ச்சியே. ஒருவேளை தவறாக தேர்ந்தெடுத்துவிட்டால், அதற்காக மனம் குமுறத் தேவையில்லை. ஏனெனில், இங்கே 75% சதவீதம் பேர் தவறாகத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். அதன்பின் தங்களின் சுயத்திற்கேற்ப வாழ்க்கயை வடிவமைத்துக் கொள்கிறார்கள். ஆகவே, மாணவ, மாணவியருக்கு என்னுடைய செய்தி என்னவென்றால், எந்த ஒரு முடிவையும் மகிழ்ச்சியோடும், தைரியத்துடனும் எடுக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் நீங்கள் வெற்றிபெற முடியும். உங்கள் வெற்றியினால்தான் உங்கள் குடும்பமும் மகிழ்ச்சியையும், வெற்றியையும் காணமுடியும். அதன் மூலம் இந்த தேசம் வெற்றிபெறும். ஒட்டுமொத்த மனித சமுதாயமும் மகிழ்ச்சியும் வெற்றியும் அடையும். இனிவரும் பலநூற்றாண்டுகளுக்கு நீங்களே வழிகாட்டி என்பதை எப்போதும் நினைவில் கொண்டு செயல்படுங்கள்.

--------------------------------------------------------------------

No comments:

Post a Comment

43.LAW படிக்க ஆசையா ?

  LAW படிக்க ஆசையா ? Law- சட்டம் . நானும் சட்டம் படித்தவன்தான் . தொழிரீதியாக அதிகம் வருவாய் ஈட்டக்கூடிய துறை என்றால் அது சட்டத்...