வேட்புமனுவில் சொத்துக் கணக்கை
மறைத்தால் என்னவாகும்?
தேர்தலில் வேட்பாளராக நிற்பவர்கள் தங்களின் அனைத்து விவரங்களையும் அந்தத் தேர்தலை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் அதிகாரியிடம் சமர்ப்பிப்பதே ’அஃபிடவிட்’. இது முற்றிலும் உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்பதைத்தான் சட்டம் வலியுறுத்துகிறது.
அந்த அஃபிடவிட்டில் வேட்பாளர் குறிப்பிட்ட தன்னுடைய சொத்துகள் மற்றும் பொறுப்புகளின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்படும். தவெகவின் தலைவரும், தற்போதைய தமிழக முதல்வருமான திரு.விஜய் அவர்கள் தனக்கு ரூ.500 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அதே கட்சியிலிருந்து அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூன் அவர்களும் பெரும் அளவிலான சொத்து மதிப்பைக் காட்டியிருந்தார். திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அவரின் மனைவி திருமதி.துர்கா ஸ்டாலின் அவர்கள் ஆகியோர் ரூ.10 கோடிக்குள்ளான சொத்து மதிப்பையும், அவர்களின் மகனும், திமுக அரசில் துணை முதல்வராகவும் இருந்த திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ரூ.40 கோடி அளவிலான சொத்துமதிப்பையும்
தங்கள் அஃபிடவிட்டில் குறிப்பிட்டிருந்ததாக அறிகிறேன். நாம் தமிழர் சீமான் அவர்களின் சொத்து மதிப்பு ரூ1 கோடிக்கும் குறைவாக உள்ளது. மக்களின் பார்வைக்கும் அவர்களின் கணிப்பிற்கும் அந்த தலைவர்கள் அதிகமாக சொத்துவைத்திருப்பதுபோல தோன்றினாலும்,
தேர்தல் கால அஃபிடவிட்டில் அவர்களின் எண்ணத்திற்கு நேர்மாறாக மிகக்குறைந்த அளவிலான சொத்து மதிப்பே காட்டப்படுகிறது. இதில் முரண்பாட்டு விகிதம் அதிகமாக உள்ளது. பல்வேறு தவறுகளை நாம் கண்டுகொண்டிருந்தாலும் உலகிலேயே, குறிப்பாக தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிலேயே ஜனநாயக மாண்புகளை சீராக கட்டிக்காத்துவரும்
நாடு நம் இந்தியாதான். இதற்கு மிக முக்கியமான காரணம் நம் நாட்டின் தேர்தல் கமிஷனின் சுதந்திரமான, நியாயமான, நிதானமானப்போக்குடன்
செயலாற்றிவருவதுதான். இந்தியத் தலைமை தேர்தல் கமிஷனராகப் பணியாற்றி மறைந்த டி.என்.சேஷன் அவர்கள் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார்.
வேட்பாளர்கள் அஃபிடவிட்டை பதிவு செய்ய வேண்டும் என்கிற திட்டத்தை அமல்படுத்தியதும்
அவர்தான். அந்த காலகட்டத்திலிருந்துதான் தேர்தல் பாஎர்வையாளர்கள், தேர்தலின்போது வேட்பாளர்களின் செலவுக்கணக்கை கண்காணிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். தேர்தலில் வாக்களிக்கும் விஷயத்தில் பணம் ஒரு அம்சமாக இருக்க்க்கூடாது
என்பதும் ஒரு பார்வையாக இருக்கிறது. அரசியல்வாதிகள் தங்களின் பதவிகாலத்தில் ஏதேனும் ஒருவகையில் சம்பாதித்துள்ளனரா? என்றும், அவ்வாறு இருந்திருப்பின்
அது அவர்களின் அஃபிடவிட்டில் வந்திருக்க வேண்டுமல்லவா? இவற்றையெல்லாம் சரிபார்ப்பதற்காக ஒவ்வொரு தேர்தலின்போதும் இந்த நடைமுறை தேவையாகிறது. வேட்பாளர்கள் ஏற்கனவே தந்த அஃபிடவிட்டுகளை நிகழ்காலத்தில் அவர்கள் தரும் விவரங்களுடன் சரிபார்க்கப்படும். வருமானவரித்துறை
இலாகாவும் ஒப்பிட்டுப்பார்க்கிறது. படிவம் 26- இன் அம்சங்களில் ஒன்று எதுவெனில், வருமானவரிக்கணக்கு ரிட்டர்ன்ஸ் போட வேண்டும். உயர்நிலை தொழில்முனைவோர் போன்றோருக்கு இருப்புநிலை அறிக்கை (Balance sheet) ஏற்கனவே இருக்கும். இதையெல்லாம் தாண்டி புதிய சொத்துகளை மறைத்தோ அல்லது திருத்தங்களுடனோ அளிப்பதும் உண்டு. இந்தப்பிரச்சினையில், வரிமானவரி சம்பந்தமாக வழக்குகளும் இருக்கின்றன. ஆனால், மக்களின் பார்வையில் ‘அட..இவருக்கு இவ்வளவுதான் சொத்துகள் இருக்கின்றவா?’ என்று ஆச்சரியமளிக்கிறது. ஒருவேளை வெளிக்காட்டப்பட்ட சொத்து மதிப்பு அதிகமிருப்பின்,
‘ஏன்பா.. இவ்வளவு சொத்துகளை வைத்துக்கொண்டு இவர் ஏன் அரசியலுக்கு வந்தார்?’என்றும் மக்களின் சிந்தனை ஓட்டமுண்டு. எனக்குத் தெரிந்து தெலுங்குதேச கட்சியைச் சேர்ந்த திரு. சந்திரசேகர் பெமானி என்பவர்தான் 2024 ஆம் ஆண்டில் பாராளுமன்றத் தேர்தலின்போது தனக்கு 5,500 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இதுவரையிலும் இதுவே அதிகபட்சமாக கருதப்படுகிறது. அதே காலகட்டத்தில் ’கட்டா’ என்னும் பெயருடைய ஒரு வேட்பாளர் வெறும் ரூ.7- ஐ மட்டும் தன்னுடைய சொத்து மதிப்பாக காட்டியிருந்தாரென
அறிய முடிகிறது. தன்னுடைய ரூ.7 ஐ வைத்து வேட்பாளர் செலுத்தவேண்டிய ரூ.10000 த்தை பிணையத்தொகையாக செலுத்தியுள்ளார்.
(நான் ஒரு வேட்பாளரின் பெயரைக்குறிப்பிட்டு
அவருடைய விவரங்களைப் பேசுகிறேனென்றால், நான் ஒரு முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி என்பதால் ஆய்வு செய்யும் நோக்கில் அணுகுவதாக பொருள் கொள்ளப்படும்.) பொதுவாக வேட்பாளர்களிடம் ‘அசையாச் சொத்துகள்’ அதிகமாகவும், ‘அசையும் சொத்துகள்’ குறைவாகவும் இருப்பதாக்க் காட்டப்படும். ஆனால்,
2026 ஆம் ஆண்டு தமிழ்க சட்டமன்ரத் தேர்தலில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பல வேட்பாளர்களின் அஃபிடவிடுகளைப் பார்க்கும்போது அவற்றில் அசையும் சொத்து மதிப்பு கூடுதலாக இருக்கின்றன. கடந்த 50 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் இது வித்தியசமாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஒருவரின் பெயரில் இரு சக்கர வாகனம் ஒன்றினை அவர் பெயரில் வாங்கியிருந்தால் சரி. அதுவே விலைமதிப்பு அதிகமுள்ள உள்நாட்டு அல்லது வெளிநாட்டுத்தயாரிப்புகளான கார் ஒன்றினை ஒரு தலைவருக்கு அன்பளிப்பாகவோ அல்லது இடைக்காலப் பயன்பாட்டுக்காகவோ வேறு யாராவது அவருக்கு தந்து உதவுவதும் நடக்கிறது! அது அவரின் கணக்கில் வருவதில்லை. இது நடைமுறையில் சாத்தியமா? என்றால், இங்கே இப்போது அப்படித்தான் நடக்கிறது. ஆக, அரசியல் ரீதியாக இதை சர்ச்சையாக்க முடிவதில்லை. இது எப்படி எனில், ஒரு அசையும் சொத்திற்கு (கார்) ஒருவர் தான் உரிமையாக்கிக் கொள்ளாமல் அதன் பயன்பாட்டை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் அனுபவித்துக்கொள்ளலாம் என்கிற அடிப்படையில் வரும். (சட்டரீதியாக ஆங்கிலத்தில் இதனை USE – USE FEXTUS என வேறுபடுத்திப் பொருள்கொள்ளப்படும்.) பல்வேறு அரசியல்வாதிகளின் பயன்பாடும் இவ்வகையில் அனுபவிக்கப்படுகிறது. ஒரு தேர்தல் பிரச்சாரத்திற்குச்
செல்லும்போது தன் கட்சிக்காரர் வீட்டில் ஒரு தலைவர் பத்து பேருடன் சென்று மதிய சாப்பாடு சாப்பிடுகிறாரென்றால், அது தேர்தல் செலவுக் கணக்கில் வராது. ஆனால், ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு
பில் தொகையைச் செலுத்துகிறார்களென்றால் அது தேர்தல் கணக்கு வரையறைக்குள் சேரும். ஒருவேளை ஒட்டல் சாப்பாட்டையே அந்த வீட்டிற்கு வாங்கி வந்து அனைவரும் சாப்பிடுகிறார்கள் என்றால், அது தேர்தல் செலவுக்கணக்கில்
சேரும்! (இது போன்ற செலவின்ங்களை ஆங்கிலத்தில் Fringe Benefits என்போம்). தமிழகத்தைப்பொறுத்தவரை சட்டமன்றத் தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகள் மட்டுமே தேர்தலின்போது ஒரு தொகுதிக்கு சுமார் 60 கோடி என ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அவ்வகையில் 234 தொகுதிக்கும் கணக்கிட்டால் குறைந்தபட்சம் ரூ.
10,000 கோடி வரை செலவாகலாம். இவ்வளவு பெரிய தொகை எங்கிருந்து வருகிறது? என நான் கேட்கிறேன். ஒரு துறையில் ரூ.10,000
கோடி வருவாய் வருகிறது என்றால், அந்த வர்த்தகத்தின் சுழற்சி மதிப்பு 1 லட்சம் கோடியாக இருக்கவேண்டுமல்லவா? இவ்வளவு பெரிய தொகைக்கான தொழிலை/வர்த்தகத்தை செய்யும் அரசியல்வாதிகள் யாராவது இருக்கின்றனரா?
இந்த பணமானது அரசியலில் இருந்துதான் வருகிறது என்பது நாடறிந்த ரகசியம்தானே!? இதையெல்லாம் கண்காணிக்கத்தான்
தேர்தல் கமிஷனானது தேர்தல் பார்வையாளர்கள்,
மைக்ரோ அப்சர்வர்கள்,
பறக்கும்படை போன்றவற்றை நடைமுறைப்படுத்திவருகிறது. இருந்தபோதும் நான் மேலே கூறிய விஷயங்கள் நடந்தவண்ணமே இருக்கின்றன. ஆக, இப்படி தேர்தல் நேரத்தில் செலவிட வேண்டிய பெரும் தொகைக்காகத்தான் அரசியல்வாதிகள் பல்வேறு வகையில் பணம் சம்பாதிக்க முனைப்பு காட்டுகின்றனர்.
இதை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அரசு, பதவி, அதிகாரம் ஆகியவற்றை அனுபவிப்பதற்காக 30 கோடி ரூபாயை செலவு செய்ய அவர்கள் தயாராக இருக்கின்றனர்.
அதனால், அந்த தொகையை அவர்கள் சம்பாதிக்கவே ஆசைப்படுவர். அவர்கள் ஒருவரும் புத்தரில்லை. ஆகவே பண விஷயத்தில் தூய்மை எதிர்பார்ப்பது சாத்தியமேயில்லை. மக்கள் பணம் கேட்கிறார்கள்;
அதனால் பதவிக்குப் போகிறவர்கள் அரசாங்கத்தின் மூலம் சம்பாதிக்க சுழற்சி நடைபெறுகிறது.
முயற்சிக்கிறார்கள். அரசாங்கப்பதவியில்
இருப்பவர்கள் நன்கு சம்பாதிக்கிறார்கள். அதனால், மக்கள் பணம் வாங்குகிறார்கள். அரசாங்கத்தின் மூலம் சம்பாதிக்க இயலாதவர்கள் முறைகேடான கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கிறார்கள். இதை உடைக்க வேண்டுமானால்,
ஒன்று பதவ்யாளர்கள் பணம் சம்பாதிப்பதை நிறுத்தவேண்டும். அல்லது மக்கள் பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும்! இப்படி ஒரு தாங்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக
மக்கள் பணம் வாங்கும் வரையில், நல்லாட்சி என்பது ஒரு கனவாகவே இருக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. இப்படிப்பட்ட ஒரு தரம்தாழ்ந்த நிலைமை இந்தியாவின் ஏறத்தாழ 20 மாநிலங்களில் இல்லை. மத்திய பிரதேஎசம், உத்திரப்பிரதேசம்
போன்ற மாநிலங்களில் எந்த ஒரு கட்சியின் வேட்பாளாராக இருப்பினும் ஒரு பாராளுமன்றத்தொகுதியை வென்றெடுக்கவே ரூ.15- 20 லட்சம் வரைதான் செலவாகிறது. ஒருவேளை நான் கூறுவதில் நம்பிக்கையில்லை
என்றால், நான் குறிப்பிட்டுக்கூறிய மாநிலங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களைக்
கேட்டு தெளிவு பெறலாம். தேர்தல் கமிஷனின் பட்டியல் விவரப்படி ரூ.25 லட்சம். இங்கே (தமிழகத்தில்) எல்லோருமே அதற்குள்தான் செலவுக்கணக்கை காட்டுவர். இது மிகவும் கேவலமான ஒரு கலாச்சாரம். இங்கே ஆணிவேராக ஓடி நிலைபெற்று விட்டது. பூனைக்கு யார் மணி கட்டுவது? என்பது போன்ற பிரச்சினை இது. இந்த சவாலை ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்ள வேண்டும். 1967 ஆம் ஆண்டில் திமுக தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள், ‘காங்கிரஸ்கார்ர்கள் மக்கள் தங்களுக்கு (காங்கிரஸ்) வாக்களிக்க வேண்டுமென்பதற்காக
ஒரு செம்பில் (சொம்பு) பாலையும் வெங்கடாஜலபதி ஃபோட்டோவையும் வைத்துக்கொண்டு, 5 ரூபாயைத்தந்து பால் சொம்பின் மீது சத்தியம் வாங்குகிறார்கள். தாங்கள் செய்துகொடுத்த சத்தியத்திற்கு மக்கள் விசுவாசமாக இருப்பார்கள் என்கிற எண்ணத்தில் அவ்வாறு செய்கிறார்கள்.’ ஆக, செலுத்தப்படும் வாக்குகளுக்காக பணம் வாங்கும் கலாச்சாரமானது, 1967 – லிலேயே தொடங்கிவ்ட்ட்தென அண்ணாவின் பேச்சிலிருந்து புரிகிறது. அது அப்படியே வளர்ந்து, படர்ந்து 1985
காலகட்டத்தில் 10ரூ – 20ரூபாய் என ஆனது. இன்றைக்கு கணக்கிடங்காமல் சென்று விட்டது! தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்கப்படும் அஃபிடவிட், வருமான வரி ரிட்டர்ன், தேர்தல் செலவுக்கணக்கு கண்காணிப்பு ஆகிய எல்லாமே தேர்தலுக்கான செலைவைக்கட்டுப்படுத்தவே. சரி.. எதற்காக கட்டுப்படுத்த வேண்டும்? காரணம், தேவையில்லாமல் அதீத செலவுகளைச் செய்து வென்றபின் அரசாங்க கஜானாவில் முறைகேடு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே.
மற்றொரு காரணம், கொள்கை, கருத்தியல்தான் ஜனநாயகத்தில் வெற்றியை முடிவு செய்யலாம். ஆனால், ஜனநாயகத்தை பணநாயகம் முடிவு செய்யக்கூடாது. இது தன்னுடைய எண்ணத்தால் மதம் மாறுவதற்கும்,
ஒரு பலன் கிட்டும் என்பதற்காக மதம் மாறுவதற்கும் உள்ள வித்தியாசம் போன்றது. இது ஜனநாயகத்தையே கேளிவிக்குறியாக்கி, கேலிக்கூத்தாகவும்
ஆக்கிவிடுகிறது. பொதுவாக ஒரு வேட்பாளரின் வருமானம், சொத்து, பொறுப்பு(கடன்) விவரங்களும், இதேபோல் அவருடைய மனைவியின் விவரங்களும் கட்டாயமாக சேர்க்கப்படும். மேலும் பொருளாதர ரீதியில் அவரைப் பின்பற்றி அவரது குடும்பத்தில் இருப்பவர்கள் கணக்கில் கொள்ளப்படுவர்.
ஒருவேளை அந்த வேட்பாலர் வயது முதிர்ந்தவராக இருந்து, அவர்களின் பிள்ளைகள் வேறு இடங்களில் தனித்தொழிலோ அல்லது பணி புரிந்து கொண்டிருந்தாலோ அவர்களின் விவரங்களைக் கணக்கில் கொண்டுவரத் தேவையில்லை. ஒரு குடும்பத்தில் நான்கு பிள்ளைகள் இருந்து, அவர்களில் ஒருவர் தேர்தலில் நிற்கும்போது மீதியுள்ள மூவரும் அஃபிடவிட் தந்தாக வேண்டுமென கூறமுடியுமா? முடியாது. ஆனால், இத்தகைய விவரங்கள் வருமானவரித் துறையின் கணக்கீட்டில்,
கோர்ட் வழக்குகளில் இணைக்கப்பட்டு விடும். அந்த விஷயத்தில் தேர்தல் கமிஷன் நடைமுறைபோல் வேட்பாலரை பொருளாதார ரீதியில் பின்பற்றுவோர் அல்லது சுதந்திரமானவர் என்றெல்லாம் பிரித்துப்பார்க்கப்படுவதில்லை.
-----------------------------------------------------------