கல்யாண வாழ்க்கை ஈஸி தான்! 'No
Marriage' போகாதீங்க?
இன்றைய காலத்தில் கருத்தரிப்பு மையங்கள் இவ்வளவு அதிகமானதற்கு ஒருவகையில் காரணம், பெண்களின் உணர்வுகள்தான். கணவன் - மனைவிக்கிடையிலான உறவு, மாமனார்- மாமியார் பிரச்சினை, அதிகமாக நிகழும் விவாகரத்துகள், மேலும் அவரவர் சகோதர, சகோதரிகள் வாழ்வில் நிகழும் விரும்பத்தகாத சம்பவங்களைச் நேரில் கண்டுணர்வது ஆகியவற்றால் மனதில் பெரும் இறுக்கம் ஏற்படுகிறது. விவாகரத்து பெற்ற நபர்கள் மீண்டும் இன்னொரு திருமணம் செய்வதற்கு எவ்வளவெல்லாம் யோசிக்கிறார்களோ அவை அத்தனையும் மோசமான நினைவுகளாக மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. அவை அவ்வளவு எளிதாக வெளியேறாது. இன்னொரு திருமணம் செய்துகொண்டால், ’புதிதாக வரும் நபரும் பழைய நபர் போலவே விரும்பத்தகாத வகையில் நடந்துகொண்டால் என்ன செய்வது? வாழ்க்கையில் என்ன நிம்மதி கிடைத்துவிடும்?’ என்கிற அச்சம், இதுமட்டுமின்றி இந்த்த் தகவல்கலை எல்லாம் ஊள்வாங்கும் இன்னொரு மூன்றாம் நபர், ‘ஐயோ.. இவனுக்கே இப்படி ஆகிவிட்டதென்றால், எனக்கு இன்னும் எப்படியெல்லாம் நடக்குமோ?’ என்கிற பீதி ஏற்படுகிறது. ஒரு விமான விபத்து நடைபெற்றால், ’நான் பயணிக்கும் விமானமும் விபத்தில் சிக்கி விட்டால் என்ன செய்வது? என தன்னுடைய பயணங்களைக் குறைத்துக்கொள்வதுண்டு! இன்று கூட்டுக்குடும்பமுறை அற்றுப்போய்விட்டது. அந்த மகிழ்ச்சிகரமான சூழல் இல்லாமற்போய்விட்டது. ஒருவருக்கொருவர் தங்களுக்குள் விட்டுக்கொடுக்கும் மனோபாவம் நீர்த்துவிட்டது. இதனால் பாசமும் மகிழ்ச்சியும் நிச்சயம் குறைகிறது. பொதுவாக மகிழ்ச்சி இரண்டு வகைப்படும். ஒன்று உண்ணும் உணவு மற்றும் தின்பண்டங்களால் பார்த்தல், கேட்டல் போன்றவற்றால் கிடைக்கப்பெறுவது. இதுஒரு நபரின் தனிப்பட்ட மகிழ்ச்சி. ஆனால், இதற்கு ஒரு எல்லை உண்டு. இன்னொன்று கூட்டு மகிழ்ச்சி. அதாவது தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளை குடும்ப உறவுகளுடன், நட்பு வட்டாரத்துடன் கொண்டாடுவது, ஒரு ஊரே சேர்ந்து கொண்டாடும் திருவிழா போன்றவையாகட்டும், கூட்டாக பல நபர் சேர்ந்து கொண்டாடி அனுபவிக்கும் மகிழ்ச்சியானது ஒருபோதும் திகட்டுவதே இல்லை. அதேபோன்று அடுத்த மகிழ்ச்சிகரமான சம்பவங்களுக்காக மனம் ஏக்கத்துடன் காத்திருக்கும். ஆனால், தனிமனித மகிழ்ச்சியானது விரைவிலேயே திகட்டிவிடக்கூடியனவாகும். அதுவே மற்றவர்களுடைய துயரங்களை, அவர்கள் அனுபவிக்கும் வேதனைகளைக் கண்டு, அவற்றோடு தன்னையும் ஒப்பிட்டு எதிர்மறையான கோணத்தில் ஒரு நபர் சிந்திக்கத் தொடங்கிவிட்டால் என்னவாகும்? நிச்சயம் அது உளவியல் சார்ந்த பிரச்சினையாகும்.
தனிமனித உளவியல் மிகவும் சிக்கலானது. சமுதாய ரீதியிலான உளவியலானது சற்று இலகுவானது. ஒரு கிராமத்திற்குள் அடுத்தடுத்து இரண்டு விவாகரத்துகள் நடைபெற்றுவிட்டால் அதைப்பார்க்கும் மற்றவர்கள் மிகவும் யோசிக்கத் தொடங்கிவிடுவர். என்னுடைய உறவினர்கள் வட்டத்தில் நிறைய பேர் தங்கள் குடும்ப உறவு வட்ட்த்தைக் கடந்து வெளிகுடும்பங்களில் திருமண சம்பந்தம் கொள்ளத்தொடங்கினர். தங்கள் ஊரைவிட்டு வெளியூர்களிலும் அதைச் செய்தனர். அது போன்ற திருமணங்களிலும் பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்கியபின்னர் ட்ரெண்ட் மாறியது. அவர்கள் ‘இனி வெளி சம்பந்தமே வேண்டாம். நம் உறவுகளுக்குள்ளேயே சம்பந்தம் செய்துகொள்ளலாம்’ என்கிற முடிவினை எடுத்தனர். ஒரு காலத்தில் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு ஏகப்பட்ட கிராக்கி இருந்தது. (திரைப்படங்களில்கூட ’வெளிநாட்டு மாப்பிள்ளை’ கதாபாத்திரத்தில் நடிப்பதற்கென்றே சில நடிகர்களும் இருந்தனர்!) ஆனால், இன்று ‘வெளிநாட்டு மாப்பிள்ளையே வேண்டாம். உள்ளூர் மாப்பிள்ளை கிடைத்தால் போதும்’ என்கிற முடிவிற்கு பெண்கள் வந்துவிட்டனர். ஏன் அப்படி? வெளிநாட்டு வாழ்வியலானது ஒரு கட்டத்திற்கும் மேல் நம் பெண்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது. ஏன் அப்படி முடிவெடுத்தனர்? இங்கிருந்து திருமண பந்தத்தில் வெளிநாடு சென்று வாழ்ந்த பெண்கள் பலரும் அதன் பாதகமான அம்சங்களை சொல்லக்கேட்டு அம்முடிவிற்கு வந்தனர். சமுதாயத்தில் நிலவும் இப்படிப்பட்ட பல்வேறு சிந்தனை ஓட்டங்கள் எல்லாம் ஒருங்கிணைந்து ‘No Marriage’ என்கிற கருத்தியல் உண்டானது. இவ்விஷயத்தில் அதிகமான முடிவெடுப்பவர்கள் நம் பெண்கள்! வரலாற்றுப்படி நம் கலாச்சாரத்தை உருவாக்கியது பெண்கள். அப்படியானால் ’பெண்கள் ஏன் அடிமைப்படுத்தப்படடனர்? நீங்கள் கேட்கலாம். பணம் கூட நாம் உருவாக்கியதுதான்! ஆனால், அந்த பணத்திற்கு நாம் அடிமையாகிவிட்டோமல்லவா? அதுபோல்தான்.. திருமனம் என்கிற கலாச்சாரத்தை உருவாக்கியவர்களே பெண்கள்தான். குடும்பக்கலாச்சாரத்தை உருவாக்கியவர்கள் பெண்கள். கணவை உருவாக்கியவர்கள் பெண்கள். ஆண்களைக் கட்டுப்படுத்தக்கூடிய கலாச்சாரத்தின் நவீனம்தான் இது. ஒரு குழுவிலிருந்து தனித்துவம் கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. மார்ஷின் கூற்றுப்படி சொல்வதென்றால் Forces of Production Property Private Property Specialization of Industry வரும்போது கூட்டுக் குடும்பத்திலும் இல்லாமல் தனியாக வாழவேண்டிய கட்டாயம் வரும்போது, பெண்கள்தான் அதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.
சங்க இலக்கியத்திற்கு முன்னும் பின்னும் பார்த்தால் இது நமக்கு நன்கு புரிய வரும். சங்க இலக்கியத்திலும் சரி, வேதகால கலாச்சாரத்திலும் சரி, பெண்கள் ஆண்களுடன் இணைந்தே மதுபானம் அருந்தியிருக்கிறார்கள்! மதுபானம் அருந்துவது, அசைவம் உண்பது, நடனம் ஆடுவது என்றுதான் வாழ்ந்திருக்கிறார்கள். அதற்கு மாறாக கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள் மதுபானம் அருந்துவது தவறு என்கிற மனோபாவம் பிறந்து அது இன்றுவரை நிலவுகிறது. தமிழ் மன்னம் அதியமானுடன் பெண்பாற்புலவர் ஒளவையார் மது அருந்தியதாக அறிய வருகிறோம். அப்படி எல்லாம் வாழ்ந்தவர்கள் மது அருந்துவதை ஏன் கட்டுப்படுத்தியிருப்பார்கள என்றால், ஆண்கள் மது அருந்துவதைக் கட்டுப்படுத்துவதற்காகவே. ஆக, திருமணம் என்கிற பந்த்த்தை உருவாக்கிய பெண்களே. இன்று திருமணம் தேவையில்லை என முடிவெடுத்தால் சமுதாயம் கட்டுப்பாடில்லாமல் போய்விடும். ஆண்கள் என்ன தவறுகள் செய்தாலும் அவர்களைப் பெண்கள் கட்டுப்படுத்துவதும், ஆனால், அதே தவறுகளை அந்தப்பெண்கள் செய்யும் பொழுது அவளை இந்த சமூகமே ‘வில்லி’ யாகப் பார்க்கும் நிலை ஏன் வருகிறது? இது பெண்களால் உருவாக்கப்படுவதாகும். ’No Marriage’ என்கிற கோட்பாடு வரலாற்றில் ஏற்கனவே இருந்திருக்கும். நம் வாழ்வியல் கடமையைப் பிரிக்கும்பொழுது அறம், பொருள், இன்பம் எனவும், இதையே பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வனப்பிரஸ்தம், சந்நியாசம் எனவும் பிரிக்கிறோம். இல்லறவாழ்வியலை நாம் காமத்திற்காக என கடைப்பிடிக்கவில்லை. தர்மமாக்க் கொள்கிறோம். கல்வி எந்த அளவிற்கு முக்கியம் என்கிறோமோ அதே அளவில் தர்மத்தையும் கடைப்பிடிக்க வேண்டுமென்கிறோம். வேதங்களின் கருத்துக்களும் இவையே. கிருகஸ்தன் உழைத்துப் போட்டால்தான் எல்லோரும் சாப்பிட முடியும். இல்லையெனில் சுவாமிஜிகள் நிலைமையும் கஷ்டமாகிவிடும் என்பதே திருவள்ளுவரின் வாக்கு. வாழ்வின் தர்மம் திருமணம் என்பது. ஆகவே திருமணம் செய்தே ஆகவேண்டுமென ஏன் அழுத்திச் சொல்கிறார்கள்? அந்த காலகட்டத்திலேயே இப்போது போன்றே ஒரு கருத்தியல் உலவி, பலரும் திருமணம் செய்துகொள்ளாத நிலை இருந்திருக்க வேண்டும். திருமணம் செய்தால்தான் குழந்தைகள், அந்தக்குழந்தைகள் இருந்தால்தான் கலாச்சாரம் தழைக்கும் என்ற்எல்லாம் வலியுறுத்திருக்கிறார்கள். ’திருமணமே வேண்டாம்’ என்கிற கோட்பாடு கொண்டவர் சற்று குறைந்த எண்ணிக்கையில் இருந்திருப்பர். ஆனால், இன்று எண்ணிக்கையில் அதிகரித்திருக்கலாம். ஜப்பான் உள்ளிட்ட பல வெளிநாடுகளில் மூத்தகுடிமக்களின் எண்ணிக்கை ஏன் அதிக எண்ணிக்கையில் இருக்கிறது? ’திருமணம் வேண்டாம்’ என்கிற நிலைப்பாட்டால் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து போனது. இதனாலேயே வயது முதிர்ந்தோர் அதிகமானார்கள். ரஷ்யா, ஸ்வீடன் போன்ற நாடுகளில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள ஊக்கத்தொகையே வழங்குகிறார்கள்! வயது முதிர்ந்தவர்களை முதியோர் இல்லத்திற்கு சேர்க்கும் கலாச்சாரம் பெருகிவிட்டது. இதைப்பார்த்து வளரும் தலைமுறை ‘திருமணமாகி, குழந்தை பெற்றுக்கொண்டாலும்கூட, கஷ்டப்படு படிக்கவைத்து, நல்லமுறைஒயில் பாதுகாப்பாக வளர்த்து ஆளாக்கினாலும்கூட, பின்னாளில் எப்படியும் முதியோர் இல்லத்திற்குத்தான் போகப்போகிறோம்.. பிறகெதற்கு திருமணம், குழந்தை எல்லாம்!?’ என்கிற மனோபாவம் பலருக்கும் வந்துவிடுகிறது. தலைமுறை, தலைமுறையாக அவரவர் வாரிசுகளை அவரவர் அக்கறையுடன் பார்த்துக்கொள்ளும் கலாச்சாரம் இன்று அருகி விட்ட்து. ’தண்ணீரும் பாசமும் எப்போதும் கீழ்நோக்கித்தான் பாயும்’ என என் பாட்டி அடிக்கடி ஒரு பழமொழியைக் கூறுவார். பெற்றோர் தங்கள் குழந்தைகள் மீது பாசம் காட்டுவர். ஆனால், அந்தக்குழந்தைகள் அவர்களுடைய குழந்தைகள் மீதுதான் பாசம் கொள்வர். அடுத்தடுத்த தலைமுறைக்கும் இப்படித்தான் செயல்படும்.
இத்தகைய நிலையைத்தான் நாம் ’கலாச்சாரம்’ என்கிற சாதனத்தால் மாற்றுகிறோம். ஆகவேதான் மூத்தோர் காலில் விழும் பழக்கம், அவர்களின் அலோசனையைக்கேட்பது போன்ற எல்லாமே இவ்வகையில்ம் தான் கட்டமைக்கப்பட்டது. ஒரு மாவட்ட கலெக்டர் எனது நண்பர். அவரிடம் அவரது தந்தை, ‘என்னப்பா.. ட்ரெயினைக் கரெக்டா புடிச்சி தொழுகைக்கு போயிருவியா? சரி.. சாப்பாடு வாங்கிட்டுப்போ’ என அவனிடம் கூறுவார். நண்பரின் அம்மாவோ, ‘தம்பி..உனக்கு புளியோதரை ஒத்துக்கொள்ளாது. பார்த்துச் சாப்பிடு’ என்பார். என்னதான் உயரதிகாரியாக இருந்தபோதிலும் அந்தப் பெற்றோருக்கு அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒரு குழந்தைதானே!? சரி.. இளையதலைமுறைக்கு மூத்தோர் மீது அதே அக்கரையும் பாசமும் இருக்குமா? என்றால் இருக்காது. ஆகவே, இதை நிரவல் செய்யும் பணியைத்தான் நம் கலாச்சாரம் செய்கிறது. இத்தனை பிணைப்புச்சங்கிலிகளை தகர்தெறிந்துவிட்டு ஏன் ’திருமணமே வேண்டாம்’ என்கிறார்கள் என்று கேட்டால் என்ன சொல்வது?
----------------------------------------------------------------
No comments:
Post a Comment