Friday, August 28, 2026

79.நகரப் பெண்ணுக்கு குழந்தைப் பேறா? வேலையா?

 

நகரப் பெண்ணுக்கு குழந்தைப் பேறா? வேலையா?


          இந்தியாவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயின்படி, நகர்புறங்களில் 100 பெண்களில் 69 சதவீத பெண்கள் வேறு எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே தங்கள் குடும்பத்தைப்பேணுவதற்காக இல்லத்தரசிகளாக மட்டுமே வாழ்கிறார்கள் என்றும், மீதி 31 சதவீதப் பெண்கள் மட்டுமே பொருளீட்டுவதற்காக வெளியிடங்களில் வேலைக்குச் சென்று வருகிறார்கள் என்றும் தெரிய வந்துள்ளது. உலகளவில் பார்த்தால் நம்நாடுதான் மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ளோம். நாம் சுமார் 100 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று பார்த்தால், அந்த காலகட்டத்தில் நகர்புறங்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையிலும், கிராமப்புறங்கள் மிகுதியாகவும் இருந்தன. கிராமப்புற பகுதிகளில் 100 பெண்களில் சுமார் 90 சதவீதம் பெண்கள் வேலை செய்துகொண்டே இருப்பார்கள். அவர்கள் விவசாயம் சார்ந்த பணிகள், கால்நடை வளர்ப்பு மற்றும் இன்னப்பிற கிராமியத்தொழில்களில் ஈடுபட்டிருப்பர். அவை அவர்களின் சொந்தமானதாகவோ அல்லது வெளிநபர்களின் நிலங்களிலோ வேலை செய்து வாழ்ந்தனர். (பொதுவாக பெண்கள் 100% பணிபுரிகிறார்கள் என்றாலே வளர்ந்தநிலையை எட்டிவிட்டோம் என்று கருதமுடியாது.) 100 ஆண்டுகளுக்கும் முன்னர் நம் எல்லோருடைய பாட்டிமார்களுமே கடுமையாக வேலை செய்தவர்கள்தான். சொந்தமாக நிலமிருக்கிறது என்பதால் யாரும் வீட்டிலேயே இருந்த்தில்லை. காலையில் 6 மணிக்குச் சென்றால், கடுமையாக வேலைகள் பார்த்துவிட்டு மாலை 5 மணிக்குத்தான் மீண்டும் வீட்டிற்கு வருவார்கள். அவர்கள் தொடர்ந்து உழைப்பதகான வாய்ப்பு அன்றைய காலத்தில் அவர்களுக்கு இருந்தது.  இக்காலத்தில் இரண்டு குழந்தையோ அல்லது ஒரு குழந்தைதான் பெற்றெடுக்கிறார்கள். அக்காலத்தில் குறைந்த்து ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள்.  குழந்தைப்பேற்றுக்கு முன்னும் பின்னூமாக சுமார் 2 மாத காலம் தவிர, அவர்கள் பெரும்பாலும் வெலைப்பளுவோஒடுதான் வாழ்ந்தார்கள். அதற்கான சூழநிலைகளையும் சாத்தியக்கூறுகளையும் அக்கால வாழ்வியல் தந்தது. இன்றைக்கு அதுபோல் கிட்டாததால் நமக்கு சவால்கள் பெருகிவிட்டன. வெளிநாடுகளைப்பொறுத்தவரை குழந்தை வளர்ப்பில் பெரிய அளவில் உணர்வுகள் தேவையில்லை. எப்படிப்பார்த்தாலும் 15 வயதை எட்டியவுடன் அந்தக்குழந்தை வீட்டைவிட்டுன் வெளியேறிவிடும். அவர்களின் கடமை அதுவரைக்குமானதூ மட்டுமே. நாம் சற்று உணர்வுப்பூர்வமாக இருப்பதால் அவரவர் குழந்தைகளை 60 வயது வரை வளர்க்கிறோம்!. இப்படி இருப்பதனால், ஒரு பெண்ணால் வேலைகளப் பார்த்துக்கொண்டே குடும்பத்தைக் கவனிப்பது என்பதெல்லாம் சாத்தியமான விஷயமே அல்ல. அந்தப்பெண்கள் குடும்பவேலைகளைக் கவனீக்க முடியாது போனால், அவற்றை அவளது கணவன்தான் செய்தாக வேண்டும். சமீபத்தில் கட்டா குஸ்தி -2 எனும் படம் பார்த்தேன். அதில் இயக்குனர் மிகத்தெளிவாக காட்சிபடுத்தியிருப்பார். நீதிமன்றக்காட்சியில், ‘நாம் இன்னும் ஹவுஸ் ஒய்ஃபுகளுக்கே மரியாதை கொடுப்பதில்லை. பிறகெப்படி ஹவுஸ் ஆண்களுக்கு மரியாதை கொடுப்போம்?’ என்கிற ரீதியில் போகும்.  இது உண்மையில் சிந்திக்கவைக்கும் கூறுதான். நகர கலாச்சாரத்தில் ஹவுஸ் ஒய்ஃப்என்கிற கலாச்சாரமானது சமீப காலங்களில் உருவானதுதான். தனக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை என இல்லத்தரசிகள் யோசிப்பதுண்டு. பிற வேலைகளைப் பார்த்துக்கொண்டே இல்லத்தரசிகளாக வாழும் பெண்கள் தங்களுக்கு மரியாதை சற்று கூடுதலாக எதிர்பார்ப்பார்கள்.  இதுபோன்ற விஷயங்களில்தான் பெண்களின் முரணான உணர்வுகளை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. வீட்டுவேலைகள் ஒரு பெரிய விஷயமாக்க் கருதாமல் அவுட்சோர்ஸிங் மூலம் செய்துவிட முடியும். ஆனால், குழந்தைகளைப்பேணி ஆளாக்குவது  அவ்வளவு எளிதானதல்ல. ஒரு குழந்தையின் உடல் வளரும்போது அதன் மனதும் ஆரோக்கியமாக வளர வேண்டும். அதற்கு 360 டிகிரி கோணத்திலும் கவனம் கொள்ள் வேண்டும். பேசிக்கொண்டே இருக்க வேண்டும். கலந்துரையாடல் மிகவும் அவசியம். இவற்றை சரிவர செய்தாலும்கூட பல விஷயங்கள் விடுபட்டுப்போகின்றன. அதிலும் தாய்தந்தை இருவரும் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து வாழ்ந்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். ஒன்றாக வாழும் தாய் தந்தையராக இருந்தாலும் அவர்கள் மாறிமாறி குழந்தையின் வளர்ச்சியில் அதீத அக்கறை காட்ட வேண்டும். அப்போதுதான் நல்ல மனதை குழந்தைக்கு உருவாக்க வேண்டும். இல்லையேல் அது குழந்தையின் மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்தும். பின்னாளில் அது சமுதாயத்திலும் எதிரொலிக்கும். இந்தியாவில் நடைபெறும் குற்றவியல் சம்பவங்கள் பெரும்பாலானவற்றிற்குக் காரணமே சரியான மனநிலையுடன் குழந்தைகள் வளராததே. இரண்டு விதமான தத்துவங்கள் உள்ளன. சீனாவின் ‘கன்பூஸியஸ்’ காலத்திற்கும் முன்னர் ’மனிதர்கள் நல்லவர்களாக பிறக்கிறார்கள் அவர்கள் தெய்வங்கள்’ என்றெல்லாம் கூறியிருந்தனர். ஆனால், கன்பூஸியஸோ, ‘உண்மை என்னவென்றால் மனிதன் பிறக்கும்போதே தவறு செய்யக்கூடிய சிறு அளவிலான மனோபாவத்துடன்தான் பிறக்கிறான்’என்று கூறினார். அவர் சொன்னது கிறிஸ்து பிறப்பிற்கு 600 ஆண்டூகளுக்கும் முன்னர்! ஒரு குழந்தையின் முதல் படியே அதன் பெற்றோரே. ஆனாலும் அதுமட்டுமே போதுமானதில்லை என அமலாக்கமும் தேவை என்றார். இதனுடைய நீண்ட கால தோல்வியே இன்றைக்கு நாம் காணும் குற்றங்கள். படிநிலைகள் பலவற்றைக் கடந்துதான் குற்றம் செய்யக்கூடிய நிலையை அடைகிறது. அந்த குற்றசெய்யும் நிலைக்கு அந்தக்குழந்தையை ஆளாக்கிய குற்றம் சமுதாயத்திற்கு உள்ளது. ஆகவே பொருளீட்டும் விஷயத்தில் பெண்களின் பங்கு குறைவாக இருப்பதில் ஒன்றும் தவறில்லை. குழந்தையைப் பேணி வளர்ப்பது அதனினும் மேலானது. அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி போன்ற நாடுகளில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது என்பதற்காக நாமும் அவ்வாறு செய்யமுடியுமா? என்று தெரியவில்லை. ஆனால், பெண்கள் சுயமாக சம்பாதித்து, அவர்களின் சொந்தக்காலில் நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஒருபுறம் குழந்தையையும் பேண வேண்டும். மறுபுறம் பெண்களின் சொந்த பலத்தையும் உருவாக்க வேண்டும். இந்த இடைவெளியை சரிசெய்தாக வேண்டும். இதை எப்படிச் செய்ய வேண்டும்? என்பதே நம் முன்னால் நிற்கும் சவாலாகும்.

----------------------------------------------------------------

No comments:

Post a Comment

79.நகரப் பெண்ணுக்கு குழந்தைப் பேறா? வேலையா?

  நகரப் பெண்ணுக்கு குழந்தை ப் பேறா ? வேலையா ?           இந்தியாவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயின்படி , நகர்புறங்களில் 10...