Wednesday, August 26, 2026

77.ஜப்பான் நாட்டை பார்த்து கத்துக்கணும்

 

ஜப்பான் நாட்டை பார்த்து கத்துக்கணும்


            பிரபலமான யூட்யூபர் திரு. சவுக்கு சங்கர் அவர்களின் 13 வயது மகன் தற்கொலை செய்துகொண்டார்என்கிற செய்தி மிக வருத்தமடையச் செய்தது. நம் கலாச்சாரமும், தொன்மையான சாஸ்திர நூல்களும்புத்ர, புத்ரிஆகியோரின் இழப்பானது தாங்க முடியாத வலியைத் தரும் என்கின்றன. மனித வாழ்வில் முக உச்சகட்டமான சோகமே இந்த சோகம்தான். எதிர்பாராத விபத்து போன்றவை நிகழ்ந்திருந்தால் கூஉட, ‘நம்மையும் தாண்டியும் ஏதோ நிகழ்ந்து விட்டதுஎன கருதலாம். ஆனால், தற்கொலை நிகழ்வுகள் அந்தக்குழந்தையின் பெற்றோர்நாம் தான் தவறிழைத்து விட்டோமோ?..’ என தங்களைத் தாங்களே தனிமையில் நொந்து கொள்ள வேண்டிய சூழல் வருகிறது. அவர்களின் பத்ர சோகத்தில் மறுபக்கத்தின் வலி இது. சமூகத்திற்கும்கூட இது காயத்தை ஏற்படுத்தக் கூடியது. இதுபோன்ற நிகழ்வுகளில் நேரடியாக குற்றம் சுமத்தப்பட வேண்டிய குற்றவாளி என்றால், அது இந்த சமூகம்தான். இந்தக் கலாச்சாரம் தான். மனோதத்துவ நிபுணர்கள் மற்றும் உளவியல் நிபுணர்கள்சூசைடோஜெனிஸிஸ்என்று குறிப்பிடுவர். அதாவது தற்கொலை செய்ய உந்தக்கூடிய மூலக்கூறுகள் சமுதாயத்தில் மலிந்து காணப்படுகின்றன. அந்த மூலக்கூறானது, எளிய சோகத்தில் இருப்பவரைக் கூட தற்கொலை செய்துகொள்ளத் தூண்டி விடும். ஒரு சில ஜாதிகள், ஒரு சில மதங்களில், ஒரு சில ஏரியாக்களில் தற்கொலை அதிகமாக நிகழக்கூடும்.  அப்படியென்றால், அந்தக் கலாச்சாரத்தில் ஏதோ பிழை இருக்கிறது என்று பொருள். தற்கொலையை நோக்கித் தள்ளக்கூடிய உந்துசக்தியைத்தான் நாம்சூசைடோ ஜெனிஸிஸ்என்று கூறுகிறோம். அந்த சிந்தனை மாற, மாற அவர்களின் சொந்த உணர்வு அப்படியாகிறது. அதாவது, ஒருவர் ஐந்துகிலோ எடையைத் தூக்கும்போது கை வலிப்பதில்லை. ஐம்பது கிலோ எடைத்தூக்கும்போது வலிக்கிறது.  இன்னொருவருக்கு அவர் ஐந்துகிலோ எடையைத் தூக்கும்போதே வலிக்கிறது. கைகளில் இருக்கும் தசைகளுக்கு எவ்வளவு  வலிமை இருக்கிறதோ அதேபோல் மனதின் தசைக்கும் ஒரு வலிமை இருக்கிறது. அதை அளவீடு செய்யக்கூடிய அளவிற்கு நம்மிடம் தொழில் நுட்பம் இல்லை.  வரலாற்று ரீதியில் நம் சமுதாயம் எப்படி இயங்கியிருக்கிறது என்றால்.. அந்த ஐந்து கிலோ எடையைக்கூட தூக்காத அளவிற்குத்தான் நம் சமுதாயம் இலகுவாக்கியிருக்கிறது. கிராமப்புறங்களில் ஒரு வீட்டில் மரணம் நிகழ்ந்துவிட்டால், அவர்களின் சோகத்தை ஆற்றுவதற்காக ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொருவிதமான கட்டமைப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. மரணம் நிகழ்ந்துவிட்டால் என்னென்ன செய்ய வேண்டும்? இறந்தவரின் உடலை எப்படியெல்லாம் மரியாதையாக அனுப்பி வைக்க வேண்டும்? எல்லோரும் ஒருங்கிணைந்து, ஒரு பூப்பல்லக்கினை தயார் செய்து, மாலை, மரியாதைகளுடன் ஊர்வலமாகக் கொண்டு சென்று மற்ற அனைத்தையும் செய்து முடிக்கிறோம். அதன் அடுத்த மூன்று நாள்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பெண்கள் சிலர் கூடி வீட்டில் விளக்கேற்றி வைத்து, இறந்தவரை நினைவில் கொண்டு அழுவர். இதன் மூலம் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களின் சோகத்தில் பங்குகொண்டு அவர்கள் மனதை இலகுவாக்குகின்றனர். அதுபோக, அந்தக்குடும்பத்தினருக்கு குறிப்பிட்ட தினங்கள்வரை வெவ்வேறு உறவினர்கள் தினம் ஒரு முறை வந்து சாப்பாடு செய்து தருவர். மதுரை மாவட்டத்தில் இறந்து மூன்றாம் நாள்காரியம்செய்வர். அன்றைய தினம் பங்காளிகள் ரேஞ்சி கட்டுதல் போன்றவற்றைச் செய்வர். அதற்கு அடுத்தநாள் தலைக்கு எண்ணெய் தேய்த்துக்குளித்து முடித்து, அசைவ உணவு சாப்பிடுவர். ஈஈஇதன் மூலம்உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட சோகத்திலிருந்து வெளியே வாருங்கள்என குறியீடாகச் சொல்லி அவர்களை இயல்பு நிலைக்குத் திருப்புவர். இதேபோல் 16 ஆவது நாள் காரியம். ’இறந்துபோனவர் இயற்கையோடு ஒன்றிவிட்டார்என்பதைக்குறிக்க அஸ்தியைக் கரைக்கிறார்கள்.  இவையெல்லாம் எதைக்காட்டுகிறது? ’ஒரு இழப்பை அவர்கள் தாங்கிக்கொள்ள வேண்டும். அதற்கு இந்த சமுதாயம் உடன் இருக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்யாமற் போனால் அந்த இழப்பின் வலி அவர்களை அதிகமாகத் தாக்கும்என்பதற்காகத்தான். ஆக, இவையெல்லாம் ஒரு நபரின் இறப்பிற்குப்பின் அவர் குடும்பத்திற்கு சமுதாயம் காட்டும் ஆதரவு. ஆனால், இன்றைக்கு ஒருவர் உயிரோடு வாழும் போதே அவருக்கு சமுதாயம் எங்கே உறுதுணையாக இருக்கிறதா? என்பதே நம் முன்னே வைக்கப்பட்டுள்ள கேள்வி. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான வித்தியாசம் எப்படி என்றால்.. காட்டில் விலங்குகள் தங்களுடைய இணையைப்பிரிய நேரிடும்போது, அந்த கணத்திலிருந்து சாப்பிடாமல் பட்டினிவிரதம் கிடந்து தங்களை மாய்த்துக் கொள்கின்றன. (ஜைன மதத்தில்கூட இதுபோன்ற விரதமிருப்பது உண்டு. நம் தமிழ்க்கலாச்சாரத்தில்கூட முற்காலத்தில்வடக்கிருத்தல்என்கிற உண்ணா நோன்பிருந்து உயிரை மாய்த்துக்கொள்ளும் வழக்கம் இருந்தது. இதற்குப்பின் மனிதனுக்கு ஆயுதம் கிடைக்கிறது. அதை வைத்து தன்னையும் மாய்த்துக் கொள்கிறான். பிறரின் உயிரையும் போக்குகிறான்.)

            இங்கே சவுக்கு சங்கர் அவர்களின் 13 வயதுடைய மகன் தற்கொலை செய்துகொண்டான் என்பது ஆழ்ந்து யோசிக்க வேண்டிய விஷயமாகும். காதலில் தோல்வி, பள்ளி, பள்ளிப் பொதுத்தேர்வுகள் வேலைவாய்ப்பிற்கான போட்டித் தேர்வுகள், பொருளாதார நஷ்டம் போன்ற விஷயங்களில், ’இனி எப்படி வாழ்வது?’ என்கிற மனோபாவம் உண்டாகும்போது, அப்போது உளவியலாக தாங்கிப்பிடிக்கக்கூடிய, ஆத்மார்த்தமான ஆதரவு காட்டக்கூடிய நபர்களோ அல்லது சூழலோ இல்லாத பட்சத்தில் சிலர் இதுபோன்று தற்கொலை முடிவை எடுத்து, தங்கள் உயிரைப் போக்கிக்கொள்கிறார்கள். ஆனால், அந்த 13 வயது பையனுக்கு அம்மா இருக்கிறார். அந்த அம்மாவின் முகநூல் பதிவுகளில் அந்தப்பையனின் முன்னேற்றத்திற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, தான் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அதற்காக எல்லாவற்றையும் செய்திருக்கிறார்கள். அவர்களின் எழுத்துப்பதிவுகள் இதனைத் துல்லிய மாக்குகின்றன. அந்தப்பையனுக்கு அம்மாவின் அரவணைப்பு இருக்கிறது. எவருக்குமேதாத்தா- பாட்டிஎன்கிற உறவுக்கு ஈடாக வேறு இருக்கமுடியாது. அவ்வகையில் அப்பையனுக்கு அவனுடைய பாட்டியின் அனுசரணையும் கிட்டியிருக்கிறது.  இவ்வளவு பக்கபலமிருந்தும் அந்த பையன் எடுத்த முடிவை நினைத்தால், எதிர்கால சமுதாயத்தின் நிலை எப்படியிருக்குமோ? என்கிற அச்சம் மேலிடுகிறது. இன்றைய தலைமுறைக்கு அறிவாற்றல் மிகுந்து கொண்டே போகிறது. அந்த அறிவாற்றலுக்கு ஈடுசெய்யக்கூடிய உணர்வானது மேம்படவில்லை என்று தெரிகிறது. இதைப்பற்றியெல்லாம் அவர்களால் யோசிக்க முடியவில்லையோ எனத் தோன்றுகிறது. இதுபோன்ற சம்பவங்களில் முதல் குற்றவாளியே இந்த சமுதாயம்தான். முன்பெல்லாம் ஒருவர் தனது அல்லது தன் குடும்பத்தின் இக்கட்டான தருணங்களில் அவர்கள் வசித்துவந்த இடங்களிலேயே, ஊர்களிலேயே வாழ்ந்தாக வேண்டுமென்கிற நிலை இருந்தது. ஆனால், இன்று அந்த நிலைமை. தனது புதுவாழ்க்கையைத்தொடங்க, வேற்றிடம் செல்ல வாய்ப்புகள் மலிந்து கிடக்கின்றன. அதிவேகமான நகரமயமாக்கல் விரிவடைந்துவிட்டபடியால் ஒரு பகுதியில் வசித்தபோது, பட்ட வேதனைகள், அவமானங்கள், ஆகியவற்றிலிருந்து விட்டு விடுதலையாகி, புது ஏரியாவில் வாழ்க்கையைத் தொடங்க முடியும். யாரும் அதற்காக கவலைப்படப் போவதில்லை. பழைய வசிப்பிடத்திலேயே வாழ்ந்தால் சமுதாயம் ஏதாவது ஒன்றை கூறத்தான் செய்யும்.  அதன் சுபாவம் அப்படி! ஆனால், இங்கே நாம் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.    

                           ஜப்பானின் ஒரு டவுன் இருக்கிறது. அங்கு ஒரு விசித்திரமான அணுகுமுறை உண்டு. உதாரணமாக அங்கே ஒரு நபருக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்து சேருகிறது. அவருக்கு நிம்மதி இல்லை. அதனால் தான் வாழும் வாழ்வியல் அடையாளம் தனக்கே பிடிக்கவில்லை என்று கருதுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் நான் கூறிய டவுனுக்குச் சென்று அதிகாரிகளிடம் விஷயத்தைச் சொல்ல்லாம். உடனே அந்த நபரின் அதுநாள்வ ரையிலான முழுவிவரங்களையும் பதிவு செய்து வைத்துக்கொண்டு புதிய ஒரு அடையாளத்தைக் கொடுத்து விடுவார்கள். இதனால், அந்த நபரைப்பற்றிய எந்த விவரமும் பிறருக்குத் தெரியாமல் போய்விடும். அதன்பின் அந்த நபர் தன் புது அடையாளத்துடன் வாழத்தொடங்குவார். அது அவருக்கு நிம்மதி தருவதாக அமையும். அங்கேபுதுவாழ்க்கையைத் தொடங்குவதுஎன்றால், தன் திருமணம், குழந்தைப்பேறு, வேலைவாய்ப்பு என அனைத்தையும் புதிதாக அமைத்துக்கொள்ள முடியும்! ஒருவர் உயிரோடு வாழும்போதே புறவுலக புனர்ஜென்மம் எடுப்பதுபோன்ற ஒரு வாய்ப்புதான் இது! ஜப்பானியர்களின் இந்த கலாச்சாரமானது அவர்களிடம் சுமார்ர் ஆயிரம் ஆண்டுகளாக நீடித்துவரும் விஷயமாகும். நம்மிடையே அதற்கு வழியில்லை. ஆனால், வாய்ப்புகள் இருக்கின்றன! நம் நாட்டில் எவரும் தன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் சூழலுக்கு சமுதாயத்தை ஏன் மூதன்மைக் குற்றவாளி என்கிறோம்? உதாரணமாக ந்நீட் தேர்வை எழுதும் ஓருவர் அந்தத் தேர்வில் தோல்வியடைந்தால், அவரை யார் திட்டப்போகிறார்கள்? அவரின் அப்பா, அம்மா திட்டக்கூடும். நட்பு வட்டத்தில் ஒரு நான்கைந்து நண்பர்கள் கிண்டல் செய்ய வாய்ப்புண்டு. அவர்கள் வசிக்கும் தெருவில் ஒரு பத்துபேர்என்ன ஃபெயிலாயிட்டியா?’ என்று கேட்பார்கள். இந்த பத்து பதினைந்து நபர்களைத் தவிர இந்த சமுதாயத்தில் வேறு எவர் இவரின் தோல்வியைக் கண்டு கொள்ளப் போகிறார்கள்?

                           ..எஸ் தேர்வினை முதன்முறையாக நான் எழுதினேன். அதில் நான் வெற்றி பெறவில்லை. அப்போது என் ஊருக்குச் சென்றிருந்தேன். அப்போது தற்செயலாக என்னை சந்தித்த என் பால்ய நண்பன், ‘என்னப்பா.. ..எஸ்ஸில் ஃபெயிலாயிட்டியாமே?!’ என்று கேட்டான். இதில் வேடிக்கை என்னவென்ரால், கேள்விகேட்ட அந்த நண்பன் ஏழாம் வகுப்பிலேயே ஃபெயிலானவன். ஆனாலும்கூட, அதுபோன்று கேள்வி அமக்கு ஒருவிதமான வலியைத் தரும். ஒரு திரைப்படத்தில் கவுண்டமணி- செந்தில் நகைச்சுவைகாட்சியில், கவுண்டமணியிடம் அண்ணேநீங்க 10 கீளாஸ் ஃபெயிலுண்ணே.. நான் எட்டாம் கிளாஸு பாஸுண்ணேஎன செந்தில் தன்னைப்பற்றி பெருமையாகக் கூறியபடியே கவுண்டமணியை மட்டம் தட்டிப்பேசுவார்! இதில் என்னவென்றால், எதுவாக இருந்தாலென்ன? ஃபெயில் என்ரால் ஃபெயில்தானே? இது எதார்த்தமான விஷயம்தான். நம் வெற்றி;தோல்வியைப் பற்றி பேசுவோர், நம்மிடம் நேரிடையாகக் கேட்போர் என அந்த சுமார்ர் 15 பேர்களைக் கடந்துதான் ஆகவேண்டும். அவ்வாறு கடந்து விட்டால் அதன்பின் வேறொன்றுமில்லை. ஆக, இந்த எதார்த்த நிலையை மனதளவில் சோர்ந்துபோகும் அந்தக்குழந்தைக்கு எடுத்துச்சொல்லி புரியவைத்து, அதன் மனதைத் தேற்ற வேண்டும். ஆனால், இன்றைய நிலையில் அவ்வாறு செய்வதற்கு சமுதாயத்தில் எவருமில்லை என்பதே வருந்தத்தக்க விஷயம். இதனால்தான் சமுதாயத்தை முதன்மைக்குற்றவாளிஎன்கிறேன்.

                           நம் தற்கால வாழ்வியலில் கணவன்மனைவி என்கிற பந்தத்தில் தனி மனித ஆசாபாசங்கள் அதிகமாகி, தங்கள் குடும்பத்தின் நலனுக்காக அவர்கள் இருவரில் யாராவது ஒருவராவது விட்டுக்கொடுக்கலாம் என்கிற மனம் இல்லாமல், தியாகம் செய்வது என்கிற சிந்தனையே இல்லாமல் தம்பதிகள் தனித் தனியாகப் பிரிந்து விடுகிறார்கள். இதனாலேயே சமூகத்தில்ஒற்றைப் பெற்றோர்என்பது சமுதாயத்தில் மலிந்து விட்டது. பழைய நூல்களாயினும் சரி, நம் தத்துவவாதிகள் மற்றும் உளவியல் நிபுணர்கள் ஆகியோரும் சரி.. என்ன கூறுகிறார்களென்றால், மனித வாழ்வில் குழந்தைகளுக்கு அப்பா-அம்மா ஆகிய இருவரும் நிச்சயம் அவசியமானவர்களாவர். ஒரு கோழி குஞ்சு பொரித்தபின் சுமார் 1 அல்லது 1 ½ மாதம் வரை சேவலானது அந்த கோழி மற்றும் குஞ்சுகளுடனே சுற்றித்திரியும். பாதுகாப்பில் ஈடுபடும். அந்த  குஞ்சுகள் 1 அல்லது 1 ½ மாதத்தில் சற்றே பெரிதானதும், அதன்பின்னர் சேவல் விலகிச் சென்றுவிடும். விலங்குகளும் இவ்வாறுதான் வாழ்கின்றன. உதாரணமாக, ஒரு ஆண்சிங்கத்தின் ஜோடியான பெண் சிங்கம் கருவுற்ற செய்தி அறிந்தபின் அதன்பின் அந்த பெண் சிங்கம் குட்டிகளை ஈன்று, அந்தக் குட்டிகள் சற்று வளர்ந்த பருவம் வரும்வரை ஆண் சிங்கம் தனித்து எங்கும் செல்லாது. சிலகாலம் ஆன பின்னரே மற்றவை எல்லாம்! அந்த ஆண் சிங்கத்திற்கு தன் பொறுப்பைப்பற்றிய கவனம் அதிகமாகவே இருக்கின்றது! ஆக, பாலூட்டி இனங்கள் எல்லாவற்றிற்குமே  தாய்-தந்தைஎனப்படும் பெற்றோர் மிகவும் அத்தியாவசியமானத் தேவையாகும். இன்றைக்கு தம்பதியர் பிரிந்த பின்னும்கூட தந்தையானவர் அந்தக்குழந்தைக்கு தேவையானவற்றை செய்தாலும்கூட, பிரிந்துவிட்ட தம்பதியின் குழந்தைகளின் மனதில் முறிவு அல்லது காயம் என்பது நிச்சயம் ஏற்படும். அதை எதைக்கொண்டும் ஈடு செய்யமுடியாது என்பதே உண்மையாகும்.  தம்பதியர் சேர்ந்து வாழ்ந்தபடியே குழந்தைகளைப் பேணி வளர்த்தால்தான் அது சிறந்த பண்பாகும். அந்தக்குழந்தையின் மன ஆரோக்கியம் மேம்பாடு காணும்.  ‘My children and your children are playing with our children (என் குழந்தைகளும்,, உன் குழந்தைகளும் நம் குழந்தைகளோடு விளையாடுகிறார்கள்)’ என்று ஆங்கிலத்தில் ஒரு கூற்று உண்டு. இதிலிருந்து என்ன புரிகிறது? அந்த கணவன் மனைவி இருவருமே ஏற்கனவே அவரவர் இணையரிடமிருந்து சில குழந்தைகளுடன் பிரிந்து, இப்போது புதிதாக இவர்கள் ஒன்றாக வாழ்கிறார்கள் என்று பொருள். அப்படிப்பட்டக் குடும்பத்தில் என்னதான் குழந்தைகள் கவனிக்கப்பட்டாலும் உண்மையான பிணைப்பு என்பது அந்த புதிய தாய் அல்லது தந்தை ஆகியோரிடத்தில் உண்டாகாது. மனம் விலகியே இருக்கும். அதை மிக இலகுவாக ஏற்றுக்கொண்ட குழந்தைகள் 1% என்கிற அளவிற்குக்கூட இருக்காது. ஏனெனில் இது இயல்பிற்கு மாறான விஷயமாகும். இதனால்தான் நம் இந்து வாழ்வியல் கலாச்சாரத்தில் திருமண பந்தம் எனப்படுவது வாழும் ஜென்மத்திற்கு மட்டும் என்றில்லாமல், ’ஏழு பிறவிகளுக்குமே அதே ஆணும்;பெண்ணுமே கணவன் – மனைவியாக வாழவேண்டியிருக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது. ஆக, கணவன் – மனைவி பந்தம் என்பது பிரிக்கப்படக்கூடிய பந்தமில்லை. இந்த பந்தமானது தம்பதியரின் காதல் என்பதற்காக மட்டுமல்ல. அவர்களுடைய குழந்தைகளின் மன ஆரோக்கியத்திற்காக! பெற்றோர் இரண்டுபேருமே தங்களின் முழு முயற்சியையும் கொட்டி ஆளாக்கினாலுமே, சமுதாயத்தில் 100 குழந்தைகளில் 90 குழந்தைகள் மட்டுமே சமநிலை மனரீதியில் பெறுகிறார்கள். மீதி 10 குழந்தைகளுக்கு பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. உண்மை இப்படி இருக்க, பெற்றோர் ஒருவராக மட்டுமே பாடுபட்டு ஆளாக்கும் குழந்தையின் மன ஆரோக்கியத்தைப் பற்றி என்ன சொல்வது!? ஆகவே, சமூகமே பொறுப்பேற்று இதுவரை கூறிய விஷயங்களின் அடிப்படையில் அலசி ஆராய்ந்து, குழந்தைகளைக் பேணிக்காக்க வழிநடத்த வேண்டும்.

---------------------------------------------------------

No comments:

Post a Comment

77.ஜப்பான் நாட்டை பார்த்து கத்துக்கணும்

  ஜப்பான் நாட்டை பார்த்து கத்துக்கணும்             ’ பிரபலமான யூட்யூபர் திரு . சவுக்கு சங்கர் அவர்களின் 13 வயது மகன் தற்கொலை செய...