ஓட்டு போட்ட 17 பேர் சிறை !
உண்மையில்
நடந்தது என்ன?
வெளிநாடுவாழ் இந்தியர் அங்கிருந்து இந்தியாவிற்கு வந்து ஓட்டுப்போட்டது குற்றமென்று கைது நடவடிக்கை எடுத்திருப்பது சரியா? என்கிற கேள்வி முன்வைக்கப்படுகிறது. உள்நாட்டில் இருந்துகொண்டே தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதற்கும், வெளிநாட்டிலிருந்து இங்குவந்து கள்ள ஓட்டு போடுவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. இந்தியாவிற்குள்ளே இருந்து கொண்டு கள்ள ஓட்டு போட்டாலே கைது நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் பிரதிந்தித்துவ சட்டத்தின் பிரிவு 16 மற்றும் 62 ஆகியவற்றின்படி மோசடி, முறைகேடான ஆவணங்கள் ஆகியன சம்பந்தமான குற்றங்களுக்கு 3 முதல் 4 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனைக்கான அம்சங்கள் உள்ளன. இங்கு வந்து அப்படியிருக்க வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து ஓட்டுப்போடுவது சிக்கலை இன்னும் கூடுதலாக்குகிறது. இந்தியத்தேர்தலில் இந்தியக்குடிமக்களே ஓட்டுப்போட முடியும் என்கிற வரையறை இருக்கையில், வெளிநாட்டிலிருந்து இங்கே வந்து ஓட்டுப்போடுவது அரசமைப்புக்கு விரோதமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நடைமுறை இருக்கும்போது வெளிநாட்டிலிருந்து இங்கே வந்து சர்வசாதாரணமாக ஓட்டுப்போட்டுவிட்டுச் செல்வது தங்கத்தை கடத்திவருவது போன்றது மட்டுமில்லை. இந்தியாவின் மானத்தை வெளிநாட்டிற்கு கப்பலேற்றிவிடுவது போலாகும். இது மிகவும் தீவிரமான குற்றவியல் சார்ந்ததாகும். அப்படியிருந்தும் ஏதோ ஓட்டுப்போடும் ஆசையினால் மட்டும் நிகழ்ந்ததாக சொல்லமுடியாது. SIR எனப்படும் வாக்களர் பட்டியல் சீர்திருத்தத்திற்குப் பிறகும், இந்தியக்குடியுரிமையை இழந்து, ஒரு வெளிநாட்டு பிரஜையாக வாழ்பவர் ஓட்டுப்போட்டது எப்படி என்பது கேள்விக்குறிய விஷயமாகும். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஏழை நாடாகத்தான் இருந்தது. அதே காலகட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு சமூகப் பிரிவினரும் வசித்து வந்தனர். அவர்களுக்கு வாக்களிப்பது உள்ளிட்ட சில உரிமைகள் கோரப்பட்டபோது, ‘இந்தியாவில் வாழ வேண்டுமென்றால் இங்கே மட்டும் வாழலாம். இல்லை நான் வெளிநாட்டில்தான் வாழ்வேன் என்றால்.. பரவாயில்லை. அங்கேயே வாழுங்கள்’ என்று இந்தியா ஒரு கொள்கை முடிவை தெளிவாக வரையறுத்து அறிவித்து விட்டது. இதையெல்லாம் கொச்சைபடுத்துவதுபோலத்தான் இன்று வெளிநாட்டிலிருந்து வந்து இங்கு நடைபெற்ற தேர்தலில் வாக்களித்துள்ளனர். SIR –க்குப்பிறகும் ஏதோ ஒரு மோசடியான ஆவணங்கள் அடிப்படையில்தானே அவர்கள் இங்கே வந்து வாக்களித்திருப்பர்? வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை என எதுவுமே இல்லாதபோது, வெளியிலிருந்து வந்து சுநினைவுடன்தான் வாக்களித்துள்ளனர். SIR பணிகளில் மரணித்தவர்களைக் கண்டறிந்து அவர்களின் பெயர்களை நீக்கியிருக்கிறார்கள். ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை வைத்திருந்தால் அதுவும் களையப்பட்டிருக்கிறது. இவ்வளவும் செய்தபிறகு வெளியிலிருந்து வந்து போலி ஆவணங்கள் அல்லது பழைய ஆவணங்கள் அடிப்படையில் சுயநினைவுடன், திட்டமிட்டு வந்துதான் வாக்களித்துள்ளனர். வீட்டுக்கு வீடு சரிபார்க்கும் பணியிலும் கூட யாரோ சிலர் ஏமாற்றியுள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தவறான, முறைகேடான சரிபார்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஆவணங்களில் இவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரியாக இருந்திருக்கலாம். ஆனால், அவர்கள் அந்நியக்குடியுரிமை பெற்ற தகவலை மறைத்திருக்கலாம். இப்படி முறைகேடாக வாக்களித்ததை இண்டலிஜென்ஸ் பீரோ (IB) எப்படி கண்டுபிடித்தார்கள்? விமான நிலையத்தில் தற்செயலாக ஒரு IB அதிகாரி வெள்நாடு செல்லவிருந்த நபரின் விரலில் அவர் வாக்களித்ததற்கான அடையாள மை இடப்பட்டிருப்பதைப் பார்த்து, அவரை விசாரித்து ஆவணங்களை சரிபார்க்கிறார். அப்போதுதான் இந்த குற்றம் நடந்திருப்பதை உணர்கிறார். உடனடியாக தன் துறை சார்ந்த அனைத்து இடங்களுக்கும் எச்சரிக்க அனுப்பியபோது, அவர்களும் உஷாராகி கண்காணித்து சோதனை செய்தபோது 22 பேர் பிடிபட்டிருக்கின்றனர். உண்மையில் அந்த IB அதிகாரியும், அந்த ஒட்டுமொத்த துறையுமே மிகுந்த பாராட்டுக்குரியவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இதை அடிப்படையாகக்கொண்டு இன்னும் யாரெல்லாம் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டனர் என்பதை அவர்கள் தேர்தல் நேரத்தில் பயணம் செய்த சரித்திரத்தை ஆய்வு செய்யும் போது ஒரு பகுதி வெட்ட வெளிச்சமாகிவிடும். வாக்களித்தவர்கள் தங்கள் உண்மையானப்பெயரிலேயே வாக்களித்திருந்தால் ஒப்பீட்டில் தெரிந்துவிட்டும். வேறுபெயர்களில் ஒருவேளை வாக்களித்திருந்தால் அதையும் சரிபார்ப்பர். இப்படி வாக்களித்தவர்களின் எண்ணிக்கையானது 100க்கும் மேற்படுகிறது என்று வைத்துக்கொண்டால், முதலாவதாக SIR பணியை கேள்விக்குறியாக்குகிறது. இரண்டாவதாக இந்தியத் தேர்தல்களின் மீது, இந்திய இறையாணமை மீது அந்நிய சக்திகளின் ஆதிக்கம் செலுத்துகின்றனவா? என்கிற கேள்வியையும் எழுப்புகிறது. இங்கே தேர்தலில் வாக்களிப்பதற்காக ரூ.1000- ரூ.2000 –ம், இன்னும் ஒரு சில தொகுதிகளில் அதிகபட்சமாக ரூ.10,000- ம் தரப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆக, இந்த தொகைக்காக அமெரிக்கா, லண்டன் போன்ற தூரதேசங்களில் இருந்து அதிகபட்ச விமானக்கட்டணம் செலுத்தி இங்கே வருவார்களா? இவ்வளவு பணம் செலவுசெய்து அவர்களை ஊக்கப்படும் நபர்கள் யார்? என்பதும் மிஉக முக்கியமான பிரச்சினை. வெளிநாடு என்பது வெளிநாட்டு ஏஜென்ஸிகளாக இருக்கலாம் அல்லது வெளிநாட்டில் செயல்படும் பிற கட்டமைப்புகளாக இருக்கலாம் அல்லது வெளிநாட்டில் செயல்படும் மதம் சார்ந்த அசோஸியேஷன்களாக இருக்கலாம். இதுவும் நம் முன்னால் நிற்கும் கேள்விக்குறி. அடுத்ததாக, இப்படி கள்ளத்தனமாக வாக்களித்தது எந்த தொகுதியில், அதுவும் யாருக்காக வாக்களிக்கப்பட்டது? அதனால் அந்த தொகுதியின் வெற்றி வாய்ப்பில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள் என்பன போன்ற விஷயங்கள்வேறு அடுத்த பிரச்சினை. உதாரணத்திற்கு ஒரு தொகுதியில் மோசடியாக மூன்று வாக்குகள் விழுந்திருப்பதாக அறியவந்தால், அந்த மூன்று ஓட்டுக்களை கழித்து விடுவதுண்டு. அது சட்டவிரோதமான, செல்லாத வாக்குகளாகி விடுகின்றன. ஆனால், 100, 200 என்கிற அளவில் வாக்களிக்கப்பட்டிருப்பதாக அறிய வந்தால், நிச்சயம் மறுதேர்தலுக்கான சூழலை யோசித்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படும். யாரோ ஒரு நுட்பமும் அதீத கவனமும் கொண்ட IB அதிகாரி தனது வழக்கமான பயணிகளுக்கான பயோ மெட்ரிக் சோதனையின் போது தற்செயலாக கவனித்திருக்கிறார். வெளிநாட்டு வாழ் பிரஜை இங்கே வந்து வாக்களிப்பது தவறு என்பதை துல்லியமாக அறிந்த அவர் உடனடியாக அனைவருக்கும் தகவல் தந்துள்ளார். முறைகேடாக வாக்களித்தது வெறும் ஆர்வத்திலா? வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலினாலா? அல்லது பணத்திற்காகவா? என்பது குறித்து நான் சரிவர தெரிந்திருக்கவில்லை. ஆனால், அவர்கள் செய்த இந்த குற்றத்திற்காக குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறைதண்டனை கிடைப்பதற்கு வாய்ப்பு அதிகம். அவர்கள் குறித்து கிடைத்துள்ள வலுவான ஆதாரங்களின்படி அவர்கள் இதிலிருந்து தப்பிக்க வாய்ப்பே கிடையாது. ஒரு வெளிநாட்டு பிரஜைக்கான அடிப்படை உரிமைகளுடன் இங்கே அவர்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். இத்தகைய தண்டனையைப் பெற்றதனால் அவர்கள் எந்த நாட்டின் குடியுரிமையைப் பெற்று வாழ்ந்து வருகிறார்களோ அந்த நாட்டின் நடைமுறைக்கு அவர்கள் உள்ளாக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் இருக்கலாம். ஏதோ ஒரு உணர்ச்சி வசத்தால் செய்தேன் என்றாலும் அதை சட்டம் ஒப்புக்கொள்ளாது. வெளிநாட்டில் குடிமகனாக ஆகாமல், அதேவேளையில் இடைக்காலமாக அங்கே தங்கியிருந்து இங்கே வந்து வாக்களிப்பதில் எவ்வித பிரச்சினையுமில்லை. (அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ‘க்ரீன் கார்டு’ வைத்திருப்பதால் அதுவே அந்நாட்டின் குடிமகனுக்கான அங்கீகாரம் என்று ஆகிவிடாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
------------------------------------------------
No comments:
Post a Comment