Coaching Institutes Business
போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் பெரிய எண்ணிக்கையில் இயங்கி வருகின்றனவே.. ஏன்? என்று கேட்டால் ‘நிச்சயமாக வியாபார நோக்கம்தான்’ என்று சொல்ல முடியும்.
பள்ளிக்கல்வியில் எதிர்கொள்ளக்கூடிய
தேர்வுகளைப் பொறுத்தவரை மாணவ, மாணவியர் தினமும் ஆசிரியர்களைச் சந்திக்கிறார்கள். அதனால், ‘இவைதான் பாடம், இவற்றை இப்படித்தான் படிக்க வேண்டும், இந்த கேள்விகளைத்தான்
கேட்பார்கள், இப்படி எழுதினால் வெற்றிபெற்றுவிடலாம்’ என்று நன்கு தெரிகிறது. ஆனால், எந்தவிதமான நுழைவுத்தேர்விற்கும் யார் கேள்வித்தாள்களை தயாரிக்கிறார்கள்?
எப்படிப்பட்ட கேள்விகள் வரப்போகின்றன? என்பவற்றைப் பற்றியெல்லாம் கட்டுக்கதைகள்
(Myth) உலவுகின்றன. எம்.பி.பி.எஸ்ஸில் நுழைவதற்காக நடத்தப்படும் தேர்வான ‘நீட்’தேர்வில் என்னதான பிரச்சினை? இந்த நீட் தேர்வு எழுதி ‘மெரிட்’ கிடைக்கவில்லை யென்றால் என்ன நடக்கிறது? மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டில் சுமார் 15 லட்சம் முதல் 20 லட்சம் வரை கட்டி எம்.பி.பி.எஸ் படிக்க நேருகிறது. ஐந்து ஆண்டுகால படிப்பிற்கும் தோராயமாக 1 கோடி வரை செலவழிக்க வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் அந்த தேர்விற்கான பயிற்சிப்படிப்பிற்கு லட்ச ரூபாய் செலவு செய்வதற்கு ஏன் யோசிக்கப்போகிறார்கள்? ஒரு மாணவருக்கு 2 லட்சமென்றால் ஆயிரம் மாணவர்கள் வரை வரக்கூடும். ஆக, ஒரு மருத்துவக்கல்லூரி ஈட்டும் வருமானத்தை விட மருத்துவ நுழைவுத்தேர்வு பயிற்சி நிலையங்கள் அதிகமான வருமானத்தை ஈட்டிவிடுகின்றன!
ஒரு மருத்துவக்கல்லூரியின் கட்டமைப்பு எப்படிப்பட்டது? படிப்பிற்கான கூடங்கள், அதற்கான உபகரணங்கள், மாணவ, மாணவியருக்கான அடிப்படை வசதிகள், விடுதிகள், ஆய்வுக்கூடங்கள், அவர்கள் செய்முறைப்பயிற்சிக்கான மருத்துவமனை கட்டமைப்புகள் என பல்வேறு விஷயங்களை செய்துதர வேண்டியுள்ளது.
இவற்றையெல்லாம் விதிமுறைகளின்படி செய்துதர, பெருமளவு முதலீடுகள் செய்யப்படுகின்றன. அவற்றை ஈடுகட்டியாக வேண்டும். ஆக, இது வியாபரமாகி விடுகிறது. மருத்துவத்தைப் பொறுத்தவரையில் ஐ.ஐ.டி. யையே மிஞ்சக்கூடிய அளவில் இருப்பது
ராஜஸ்தான் ஆகும்! வெயிலின் தாக்கம்
அதிகமிருக்க்க்கூடியது ‘கோட்டா’ எனப்படும் நகரம். அங்கு மட்டுமே என்.ஐ.டி, ஜே.இ, மற்றும் நீட் தேர்வுகளுக்காக இந்தியா
முழுவதிலிருந்தும் அங்கு சென்று, சுமார் 50 ஆயிரம் மாணவ, மாணவியர் படித்து வருகிறார்கள்!
விறுவிறுப்பாக
இயங்கும் ஒரு தொழிற்சாலையைப் போல இயங்குகிறார்கள். அங்கிருந்து வெற்றிபெற்று வரக்கூடியவர்களே
ஐ.ஐ.டியில் மற்றும் மருத்துவப்படிப்பில் சுமார் 50% பேர் இடம் பிடிக்கிறார்கள்.
எப்படி தமிழ்நாட்டில் நாமக்கல் உருவானதோ அதேபோல் அகில இந்திய அளவில் ராஜஸ்தானில் கோட்டா நகரம் பெயரெடுத்துவிட்டது. கேரள மாநிலத்திலும் ஒரு நீட் பயிற்சி மையம் பிரபலமாக உள்ளது. ஆக, ஏதோ ஒருவகையில் ஒரு இடம் குறிப்பிடத்தகுந்த வகையில் பெயரெடுத்துவிட்டால் போதும்.. பெரும்பாலானவர்கள் அங்கு குவிந்துவிடுகிறார்கள்! ‘கோட்டா’ நகரத்தில் முக்கியமான நான்கு பயிற்சி நிலையங்களில் தலா ரூ. 5000 கோடி, ரூ.2000 கோடி என்கிற அளவில் வருடாந்திர வருவாய் ஈட்டப்படுகிறது. அதைப் பார்த்து மற்றவர்களும் ஒன்றன்பின் ஒன்றாக தங்களுடைய வியாபரத்தையும் தொடங்குகிறார்கள். இன்னொரு பக்கம் பார்த்தால், பலரும் அங்கு படிக்கிறார்கள். தேர்வில் வெற்றி பெற முடியாமல் போய்விட்டாலோ..
அடுத்தடுத்த முயற்சியிலும் தோல்வியுற்றாலோ, மேலும் வயதும் கூடி விட்டாலோ.. அத்தகையவர்களுக்கு
இந்த வணிகமானது வரப்பிரசாதமாகி விடுகிறது! ’போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறாதவர்கள் பயிற்சிமையம் தொடங்கியதும், அவற்றில் படிப்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்!’ என்றெல்லாம் நகைச்சுவைக்கருத்துகளுடன் ‘மீம்ஸ்கள்’ உலா வருகின்றன. அது சரியல்ல என்பதே என் கருத்து. உதாரணமாக ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற நிறுவனங்களில் கல்வி கற்றுத்தருபவர்கள்
எல்லோருமே அதே ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்றவற்றில் படித்தவர்கள் மட்டும்தானா அங்கே ஆசிரியர்களாக பணியாற்றுகிறார்கள்? இல்லையே! படித்து வெற்றி பெறுவதும், அந்த படிப்பினைச் சொல்லி கொடுப்பதும் வெவ்வேறு முனைகள் ஆகும். அர்ஜுனர்
துரோணாச்சாரியராக முடியாது. துரோணாச்சாரியார் அர்ஜுனராக மாற வேண்டுமென்கிற அவசியமில்லை.
இரண்டும் வெவ்வேறுவிதமான திறனமைப்பு. ஒரு துரோணாச்சாரியரால் நூறு அர்ஜுனர்களை உருவாக்க
முடியும். ஆனால், துரோணாச்சாரியரே அர்ஜுனராக ஒருபோதும் மாற முடியாது. இதைத்தெரிந்து
கொள்பவர்தான் ஆசிரியர். அவரே யாருக்கு, எந்த விஷயத்தை, எப்படிச் சொல்லிக்கொடுத்தால்
வெற்றி பெறுவார் என்பதை கணிக்கக் கூடியவர். அதேபோல் ஒருவரின் திறனில் காணப்படு பலவீனத்தைச்
சரிசெய்து, அவரையும் மிளிரச் செய்யக்கூடியவர் ஆசிரியரே. இதெல்லாம் ஒரு ஆசிரியரின் கடமை.
ஆனால், இவரைப்போல் சிறந்த வழிநடத்துதலைச் செய்வதற்கு ஒரு காலத்தில் அவருக்கு யாரும்
இல்லாமல் போயிருக்கலாம். தமிழகத்தில் சிலரை உதாரணமாகச் சொல்ல முடியும். முதலாவதாக
‘சங்கர் ஐ.ஏ.எஸ்’ அகாடமியின் நிறுவனர் சங்கர், அவர் யு.பி.எஸ்.ஸி தேர்வுகளில் வெற்றி
பெற்றதில்லை. ஆனால், அவர் அதிக அளவிலான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பலரை உயர்நிலை அதிகாரிகளாக
உருவாக்கியிருக்கிறார். அடுத்ததாக ‘ஆபிஸர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி’ நிறுவனர் திரு.இஸ்ரேல். அவர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக
சில ஆண்டுகள் பணி செய்துட்டு பின், கல்வித்துறையில் எதையாவது சாதிக்க வேண்டுமென அகாடமியை
நிறுவி, இன்று பலரின் வெற்றிக்கு உறுதுணை செய்துவருகிறார். ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில
இந்திய அளவில் முதல் ரேங்க் பெற்ற ஷைனி என்பவர் நிறுவிய ‘அன் அகாடமி’. அவரும் அதிகாரியாக
பணிசெய்துவிட்டு வந்தவரே. அதற்காக சர்வீஸில் இருந்துவிட்டு வருபவர் எல்லோரும் இதைச்
செய்துவிட முடியாது. ஆசிரியர் என்பவ்ரின் திறமை தனக்கான தேர்வில் வெற்றி பெற்றவ்ருக்கும்
வரும். வெற்றி பெறாதவருக்கும் வரும். ஆசிரியர்களைப் பற்றியும், தான் படிக்க விரும்பும்
அகாடமியைத் தேர்ந்தெடுப்பதிலும், மாற்று அகாடமிகளிடம் காணப்படும் குறைகளையும் கணிப்பதில்
மாணவர்கள் மிகவும் திறன் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். மிகவும் தெளிவானவர்களாக விளங்குகிறார்கள்.
இத்தகையவர்கள் மிகவும் தீவிரமாக, லட்சிய உறுதியோடு விளங்குபவர்கள். ஆனால், வேறு சிலர்
’ஏனோதானோ’ என ஏதோ ஒரு பேருக்காகப் படிக்க வருபவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த
நிலவரம் எதுவும் தெரியாது. மீம்ஸ்களில் வருவதுபோல் வீட்டில் தொலைக்காட்சித் தொடர்களைப்
பார்த்துக் கொண்டிருப்பார். உண்மையில் தீவிரமாக ஐ.ஏ.எஸ் பேர்விற்காக படிப்பவருக்கு
எந்த தியேட்டரில் என்ன திரைப்படம் வெளியாகிறது என்கிற விவரம் கூட தெரியாது! என்ன பாடல்
பிரபலமாகியுள்ளது என்றுகூட தெரியாது!
---------------------------------------------------------------
No comments:
Post a Comment