ஒரு மாபெரும் தலைவரையே
விமர்சனம் செய்தாங்க!?
உலகளவில் ‘எப்ஸ்டீன் ஃபைல்ஸ்’ என்பது அரசியல் ரீதியில் பேசுபொருளாக
இருக்கிறது. வரலாற்றில் நிறைய சம்பவங்களை ‘Blot’ என்று கூறுகிறோம். பெரும்பாலும் தவிர்க்கப்பட
வேண்டிய, கடினமான விஷயங்களை நம் சமுதாயம் கண்டிருக்கிறது. எப்ஸ்டீன் என்பவர் 1990 களிலிருந்து
இப்படித்தான் இருந்து வருகிறார் என்று அறிகிறோம். போதை கலாச்சாரம், குழந்தைகள் சம்பந்தமான
பாலியல் அருவெறுப்புகள் போன்றவை அரங்கேறியுள்ளன. இதில் பிரபலங்கள் பலரும் பங்கெடுத்திருப்பதாகக்
கூறப்படுகிறது. எப்ஸ்டீன் இறந்து விட்டார். அவர் இறந்தபின்னால் ‘எப்ஸ்டீன் லீக்’ என்கிற
பெயரில் செய்திகளை விவரமாக அமெரிக்க அரசாங்கத்தால் வெளியிடப்படுகின்றன. அந்த விவரங்களில்
காணப்படும் ஒவ்வொரு பெயர்கள் சம்பந்தமாகவும் பிரத்யேகமாக கருத்து தெரிவிப்பது சரியல்ல.
ஆனால், அது எந்த காலகட்டத்தில் எழுதப்பட்டவை? எதற்காக எழுதப்பட்டன? என்பதும் தெரியவில்லை.
அவை சம்பந்தமான நபர்களுக்குத் தெரிந்தும் எழுதப்பட்டிருக்கலாம் அல்லது தெரியாமலும்
எழுதப்பட்டிருக்கலாம். நடந்தவை அனைத்துமே அகோரமான சம்பவங்கள்தான் என்பதை வரையறுக்கவோ
கணிக்கவோ இயலவில்லை. உதாரணமாக அவரின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கேனும் அந்த
விஷயங்கள் தெரிந்திருக்குமா? என்றும் தெரியவில்லை. அவ்வாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
என்றே எண்ணுகிறேன். ஆக அதில் கிடைக்கப்ப்பெறும்
பெயர் கொண்ட நபர்கள் ‘இன்ன காரணத்திற்காகத்தான்’ சந்திருப்பார்கள், பேசியிருப்பார்கள்
என்றெல்லாம் செய்திகள் உலா வருகின்றன. இதுதான் பெரும்பாலான அரசியல்வாதிகளை பாதிக்கப்படுவதற்கான
காரணமாகக் கூறப்படுகிறது. அமைப்பு ரீதியாக இன்றைய காலம் இப்படித்தான் இருக்கிறது.
ஒருநாள் நான் ஒரு பள்ளிக்கூட விழாவிற்குச் சென்றிருந்தேன்.
அங்கே ஒரு பெண்மணியுடன் நான் உரையாடினேன். அப்போது அந்த பெண்மணி மகாத்மா காந்தி அவர்களைப்
பற்றி ‘அவர் Pedophilia என்கிற பாதிப்பு
(குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு
அல்லது குழந்தைகளைத் தவறான நோக்கத்தோடு அணுகும் ஒருவித மனநலக் கோளாறு) குறிப்பிட்டார்கள்.
அதைக்கேட்டதும் நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். காரணம், அந்தப் பெண்மணி ஒரு ஆசிரியை!
மேலும் அவர் கூறுகையில் அதற்கான ஆதாரங்களை நிறையபேர் எழுதியுள்ளதாகவும் கூறினார். அவரிடம்
நான், ‘எக்ஸ்பெரிமெண்ட் தி ட்ரூத் (Experiment the Truth)’ என்கிற புத்தகத்தைப் படிக்குமாறு
கூறினேன். அது எழுதப்பட்டது 1893- இல். அந்த ஆண்டானது இரண்டு, மூன்று விஷயங்களுக்கு மிகவும் பிரபலம். ஒன்று அந்த ஆண்டில்தான் சுவாமி
விவேகானந்தர் அவர்கள் அமெரிக்காவில் தன்னுடைய பிரபலமான உரையை ஆற்றினார். இரண்டாவது
மகாத்மா காந்தி எழுதிய விஷய்ம்! இந்து மத விஷயங்களில் எப்போதுமே நிறைந்த ஆர்வமுடைவர்.
இந்து மதத்தில் ’பிரம்மச்சரியத்தால்’ ஆற்றல் கூடும் என்கிற எப்போதுமே ஒரு கருத்து உண்டு.
இது குறித்து மகாத்மா காந்திக்கும் அந்த எண்ணம் மேலிட, அவருக்குள் ஒரு வைராக்கியம்
ஏற்படுகிறது. அதனால், அவர் தானும் பிரம்மச்சரியத்தை மேற்கொள்ள முடிவு செய்தார். அவருக்கு
இந்த எண்ணம் ஏற்பட்டபொழுது அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்திருந்தனர். அதுகுறித்து
தன் மனைவி கஸ்தூரி பாய் அவர்களிடம் கூறுகிறார். அதைக்கேட்டு எதையுமே யோசிக்காமல் ‘சரி’
என ஒப்புதல் அளிக்கிறார். ’நான்கு குழந்தைகள் பிறந்தபின்னர் இன்னுமென்ன பிரம்மச்சரியம்?
ஆனாலும், பரவாயில்லை. இத்துடன் பிரச்சினை முடிந்ததே’ என என் பள்ளிப்பருவத்தில் எண்ணியதுண்டு.
ஆனால், சொந்த வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட வயதை நான் கடந்த்போது மகாத்மா காந்தியின்
முடிவு எத்தகைய கடினமானது! என்கிற எண்ணம் மேலோங்கியது. அதை நடைமுறைப்படுத்துவது எவ்வளவு கடினமான விஷயமென்பது
இன்றைக்கு துறவறம் மேற்கொள்ள ஆவலுள்ளவர்களுக்கு நிச்சயம் நன்கு தெரிந்திருக்கும். இதற்கு
வயது வரம்பு என்பதே இல்லை. அப்படியெல்லாம் திகழ்ந்த மகாத்மா காந்தியைப்பற்றியே அந்த
ஆசிரியப்பெண்மணி அப்படிக்கூறுகிறார்கள்! அதனால்தான் முடிந்தவரை அவரின் புத்தகமான
Experiment the Truth மற்றும் அவரது வாழ்க்கை வரலாற்றை முழுவதுமாக படியுங்கள் என்றேன்.
உண்மையில் Pedophilia என்பது
ஒரு வகையான ’மனநோய்’ என்றுதான் கூற வேண்டும். ‘பசி, காமம்’ ஆகிய இரண்டிலுமே இயற்கைக்கு
மாறான, மக்கள் சமுதாயத்தின் வழக்கமான செயல்பாட்டிற்கு மாறான எதுவுமே சட்டப்பூர்வமாக
கிடைக்காது. உதாரணத்திற்கு ஒரு மானின் இறைச்சியை சாப்பிட வேண்டும் என்று தோன்றினால், அது சட்டப்பூர்வமாக கிடைக்குமா? நிச்சயம் சட்ட விரோதமாகத்தான்
கிடைக்க வாய்ப்புண்டு. அப்படி சட்டவிரோதமாக சாப்பிடக்கூடியவன் நிச்சயம் தனிமைப்பட்ட
நிலையில்தான் வாழக்கூடும். அவனுக்கு என்ன தேவை? தான் வாழ அரசியல் அதிகாரம் தேவை. அதற்காக
அவன் எதை விநியோக்க்ம் செய்கிறான்? சட்டவிரோதமான ஒன்ரையே விநியோக்ம் செய்கிறான். இது
ஒரு வகையான மனப்பிறழ்வினால் செய்யப்படும் ஒரு தேடல். அந்தத் தேடலில் காணப்படுபவர்கள்தான்
‘எப்ஸ்டீன்’ போன்ற நபர்கள். இதுபோன்ற நபர்கள்
உலகம் முழுவதும் ஆங்காங்கு இருக்கக்கூடும்.
பதவி, பணம் ஆகியவற்றில்
அதீதமான உச்சத்தில் இருப்பவர்களுக்கு, சட்ட விரோதமான விஷயங்களுக்குத் தேவை ஏற்படுகின்றபொழுது
அவற்றை விநியோகம் செய்வதற்கென்றே யாரோ ஒருவன் வந்துவிடுகிறான். தேவைப்படும் பொருள்
தவறானது என்றால், தவறான ஒரு சந்தை உருவாகிவிடும். அவ்வாறு உருவாகிவிட்டால், அதைக் காப்பாற்றிக்கொள்வதற்காக
தவறான ஒரு அதிகாராம தேவைப்படுகிறது! அந்த சந்தை விரிவடைய, விரிவடைய யாரோ ஒரு சிலர்
சிரமப்பட நேரும். சுயநினைவுடனோ அல்லது அல்லாமலோ, தெரிந்தோ கூட யாரோ ஒரு சிலர் இதனைச்
செய்யக்கூடும். விபச்சாரம் என்பது கூட இந்த சமுதாயத்திற்கு தேவையான ஒன்று எனக்கூறலாம்.
நம் நாட்டில் அதற்கான தேவையிருக்கிறது. ஆனால், நாடு அது சம்பந்தமாக சில குழப்பத்திற்குள்
உழல்கிறது. அதாவது விபச்சாரத்தை தொழிலாக செய்தால் அது சட்டத்திற்குப் புறம்பானதாகவும், அதுவே தனி நபராக செய்தால் சட்டத்திற்குட்பட்டதாக
விளங்குகிறது. துபாய் போன்ற நாடுகளில் எந்த நிலைப்பாட்டில் செய்யப்பட்டாலும் அது சட்டத்திற்கு
புறம்பானதாகவும், அதேவேளையில் ’தாய்லாந்து’ நாட்டில் எப்படிச் செய்தாலும் சட்ட்த்திற்கு
உட்பட்டதாகும்! நம் சங்ககால தமிழ் நாகரீகத்தில் ‘பரத்தையர்’ என்கிற விஷயம் இருந்திருக்கிறது.
அதேபோல் உலக நாகரீகம் எல்லாவற்றிலும் உண்டு. ஏற்கனவே நான் கூறியபடி விபச்சாரம் என்பதற்கான
தேவை இங்கே இருக்கிறது. ஆனால் அதை குழப்பத்துடனேயே வைத்துள்ளோம். சட்ட விரோதமான விஷயமாகப்
பொருள்கொள்ளப்பட்டால் அங்கே ஒரு சட்டவிரோதமான வலைப்பின்னல் உருவாகிவிடும். அங்கே அரசியல்வாதிகள்,
அதிகார உச்சத்திலிருப்போர், அரசு அதிகாரிகள், பெரும் வர்த்தகம் நடத்துவோர் போன்ற அனைவரும்
அந்த வட்ட்த்திற்குள் வந்துவிடுவர். அத்தகைய இடத்திற்கு
தனக்கு உச்சபட்சமான வசதிவாய்ப்பு வேண்டுமென தன் சுய நினைவுடன் வந்த பெண்களும்
இருப்பர். அதே வேளையில் சுயவிருப்பமில்லாமல், யாராலோ ஏமாற்றப்பட்டு, சிக்கி வந்த பெண்களும்
இருக்கக்கூடும். சுய விருப்பத்துடன் வருபவர்களைப் பற்றி பிரச்சினையில்லை. ஆனால், இரண்டாம்
ரகத்தினர்தான் இங்கே அதிகமானோர் இருப்பார்கள். ஆக, சட்டவிரோதமான விஷயங்களைத் தேடுபவர்கள்
இருக்கும்வரை இது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். இதனாலேயே நம் அரசும், நீதிமன்றமும்
‘பாஸ்கோ’ போன்ற விஷயத்தில் மிகவும் கண்டிப்புடனே இருக்கின்றன. ---------------
No comments:
Post a Comment