Is Bigg Boss REALLY Worth Your Time?
தமிழ்நாட்டில் மக்கள் மனங்களில் இடம்பிடித்து மாநிலத்தையே
உலுக்கக்கூடிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் ‘(Big Boss)’ நிகழ்ச்சியும் ஒன்றாகும்.
அந்த நிகழ்ச்சி என்றாலே எல்லோருடைய இல்லங்களும் ஒரே மாதிரி கொண்டாடுவது பிக்பாஸ் நிகழ்ச்சியாகும்.
இது சமுதாயத்தில் பிரபலமானவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது? என அறிந்து கொள்ள
விரும்பும் மனிதர்களின் அடிப்படையான எண்ண ஓட்டம் சார்ந்தது. இதற்கு ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி
பயன்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலமானவர்களையும் ஓரிட்த்தில் இணைக்கிறார்கள்.
வயதானவர்கள் இருவர், இளமையான நான்கு பெண்கள் மற்றும் நான்கு வாலிபர்கள், நகைச்சுவை
கமழும் ஒருவர், வில்லன் போல பரிணமிக்கக்கூடிய ஒரு நபர், இதுபோல் திரைத்துறையில் பிரபலமான,
அல்லது பிரபலமானவர்களாகக் கருதப்பட வேண்டியவர்களை ஒருங்கிணைத்து, அவர்களைப் பேசவைக்கும்போது,
விளையாட வைக்கும்போது, அவர்களின் அந்தரங்க விஷயங்கள் வெளிவருவதை தனி மனித ரசனையாக்குகிறார்கள்.
முன்னொரு காலத்தில் மன்னர்களின் அரண்மனைக்குள் நடக்கும் சில விஷயங்கள் வெளியுலகிற்குத்தெரிந்துவிட்டால்,
அதற்குக் காரணமானவர்களின் தலையைச் சீவி விடுவார்கள். எழுத்தாளர் கல்கியின் படைப்பிலும்
இது காணக்கிடைக்கும். மதுரை பாண்டிய அரசர்களின் அரண்மனையில் கூன், குருடு போன்ற மாற்றுத்திறனாளிகளைத்தான்
பணியாளர்களாக நியமித்திருப்பர். ’அரசரிடம் செலவழிக்க பணமா இல்லை? ஏன் இப்படிப்பட்ட
நபர்களை பணியாட்களாக நியமித்திருக்கிறார்கள்?’ என்று எண்ணினால், அதற்கான பதில் என்னவென்றால்,
அப்படிப்பட்ட நபர்கள்தான் அரண்மனைக்குள் நடைபெறும் விஷயங்களை வெளியே செய்திகளாக கசியவிட
மாட்டார்கள் என்கிற கருத்தியல்தான் அதன் அடிப்படை. இப்படிப்பட்ட கருத்தியலை அடிப்படையாகக்கொண்டு
பொருளீட்டும் வணிகமே ‘பிக்பாஸ்’ ஆகும்.
’பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் கரு நெதர்லாந்து
நாட்டினுடையது ஆகும். அங்கு இதன் பெயர் ‘பிக் பிரதர் (Big Brother)’. உலகம் முழுக்க
உள்ள தனிமனித அந்தரங்கம், கலாச்சாரம் ஆகியவற்றை வெளிகொணர்ந்து, அதை மிகப்பெரிய அளவில்
வணிகமாக்கி பொருளீட்டுவதே முக்கிய நோக்கம். இது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்போருக்குத்
தெரியுமா>? என்றால், நிச்சயம் தெரியும். அவர்கள் பிரபலமாகவும், அதன் மூலம் வருமானம்
ஈட்டவும் ஆசைப்படுகிறார்கள். சரி.. அவர்கள் அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதன் மூலம்
அவர்களின் அடையாளத்தை மேம்படுத்திக்கொள்ள முடியாதா? ’நம்மை எல்லோரும் கண்காணிக்கிறார்கள்.
ஆகவே ஏச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று இரூக்க முடியுமா? என்றால் அதுதான் இல்லை.
வேலையில் சேருவதற்கான நேர்முகத்தேர்விற்குச் செல்லும்போது முழு விழிப்புணர்வுடன்
(Conciuos) செல்வோம். அவ்வாறு சென்றவுடன் ஆழ்மன
உணர்வு (Sub consious) நிலைக்கு மாறிவிடுவோம். அங்கே கேட்கப்படும் கேள்விகளுக்கு மனதில்
பட்டதை பதிலாக கூறிவிட்டு வந்துவிடுவோம். இதேபோல்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியும். அங்கு
நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் வெளியுலகத் தொடர்புகளை துண்டித்து விடுகிறார்கள்.
இதனால் தங்கள் உலகமே அந்த பிக்பாஸ் வீடு மட்டுமே என்கிற சிந்தனை வந்துவிடும். பொதுவாக
காதல் மலர்வதற்கான காரணமே ஒரு ஆணும், பெண்ணும் இருக்கும் இடத்தில் தாங்கள் மட்டுமே
இருப்பதாகக் கருதுவார்கள். திரைப்பட்த்திற்கான படப்பிடிப்பில் நாயகனும், நாயகியும்
காதல் காட்சியில் நடிக்கும்போதோ, டூயட் பாடலில் நடிக்கும்போதோ அவர்களின் முகபாவனைகள்
மட்டுமே அவ்வாறு தோன்றும். ஆனால், அங்கே உண்மைக்காதல் வருவதில்லை. அதற்கான நேரமும்
இருப்பதில்லை. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி அப்படி அல்ல. நீண்ட கால அவகாசம் கிடைக்கிறது.
ஆகவே, அங்கிருக்கும் நடிகர்கள் வெளியுலகையே மறந்து, அவர்கள் அப்போது வாழ்வதுதான் இயல்பானது
என்று எண்ணத்தொடங்கி அதன்படியே நடக்கத்தொடங்கி விடுகிறார்கள். ’நாம் இப்படியெல்லாம்
இருக்கீறோமா?’ என்று அவர்கள் கருதும் அளவிற்கு அவர்களுக்குபயனுள்ளதாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்கும் சில சேதாரங்கள்
வருகின்றன. அவர்கள் ஒரூ பொய் சொன்னதூபோல் நடந்துகொண்டதாக அறிந்தால், அதன்பின் அவர்களை அவ்வாறுதான்
பார்க்கத் தோன்றும். அவையெல்லாம் ரிஸ்க் எடுக்கும் வகையறாதான். ஆனால், அவர்கள் அதையும் கடந்துதான்
வாழ்கிறார்கள். அதை நடத்துபவருக்கும் நல்ல வருமானம் வருகிறது. இந்த விளையாட்டை விளையாட்டாக மட்டும் பார்க்காமல் ரொம்பவும்
அதிகமாகவே உள்நுழைந்து செல்வதால், அவர்களுடைய பிரச்சினைகளை எல்லாம் மக்கள் தங்கள் பிரச்சினைகளாக
எடுக்கத்தொடங்குகிறார்கள். இது சம்பந்தமான பாதிப்புகள் குறித்து உளவியல்
நிபுணர்கள் பேசிய வீடியோக்களையூம் நாம் பார்க்க முடிகிறது. சரி... பிக்பாஸ் ஏன்
பிரபலமானது? மக்களுக்குத் தெரியும் உள்ளுணர்வு
அந்நிகழ்ச்சியில் கல்ந்து கொண்டிருப்பவர்களுக்கு ஏன் தெரியவில்லை? அங்கே அவர்கள் ஏன் நேச்சுரலாக
நடந்துகொள்கிறார்கள்? இதில்
நேர்மறையான நீதி இருக்கிறதா? என்றால் பெரிதாக ஒன்றும் இல்லை
என்றே சொல்லலாம். ஏதோ சிறு பொழுதுப்போக்கிற்காக பார்க்கலாம். இதற்காக தேர்விற்குப்
படிக்கும் மாணவர்கள் உள்ளிட்டோர் தங்கள் நேரத்தை விரையமாக்கத் தேவையில்லை.
-----------------------------------------------------------
No comments:
Post a Comment