#Dictionary to
save a #language from extinction
சமீபத்தில் ஒரு செய்தியை நாளிதழில் வாசித்தேன். அது என்னவெனில், ‘A Dictionary to save a language from Extinction’ அதாவது ஒரு மொழியைப் பாதுகாப்பதற்காக ஒரு அகராதி (Dictionary - டிக்ஷனரி) உருவாக்கப்படுகிறது. ஒருவர் தன் தாய்மொழியல்லாத பேற்று மொழியைக் கற்றுக்கொள்வதற்காக அந்த வேற்றுமொழி வார்த்தைகளை தன் தாய் மொழியில் உள்ள அகராதியைப் படித்து, புரிந்துகொள்வர். ஆனால், இந்த செய்தியானது முற்றிலும் புதிதானது மட்டுமின்றி மிகுந்த ஆச்சரியமளிக்கும் செய்தியும் கூட! அதாவது அழியும் நிலையில் இருக்கும் ஒரு மொழியைப் பாதுகாப்பதற்காக அதற்கென ’அகராதி’ உருவாக்கப்படுகிறது. என் நண்பர் அடிக்கடி, ‘What is in a language? Let it die’ என்று சொல்வார். ஒரு மொழி அழிவதைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? இவ்வுலகில் மனிதர்கள் வாழும்வரை ஏதோ ஒரு மொழியை பேசத்தானே போகிறார்கள்? அந்த மொழி எதுவாக இருந்தால் என்ன? ஒரு மொழிக்காக ஏன் அடிதடி? அப்படி என்னதன்ன் அந்த மொழியில் இருந்துவிடப்போகிறது? உதாரணமாக ’தமிழ்’ மொழியை எடுத்துக்கொள்வோம். தமிழ்மொழியின் பெருமைகளைப்பற்றி பேசி என்ன சாதித்துவிடப் போகிறோம்? தமிழ்மொழி இதற்காக எதையும் கொடுக்கப் போவதில்லை. மொழி என்பதே மனிதர்களிடயேயான செய்திப் பரிமாற்றத் தொடர்பிற்காகத்தானே? உலகியல் வாழ்வில் ஒரு சமூக அமைப்பாக இயங்குவதற்கும் தானே? இதில் என்ன பெருமை இருக்கிறது? இப்படிப்பட்ட கேள்விகள் உலவிக்கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு மத்தியில் ’டோட்டோ’ (Toto Language) என்னும் ஒரு மொழி. திபெத் – மேற்குவங்க மாநில எல்லைப்பகுதியில், வெறும் 1,600 நபர்கள் மட்டுமே பேசக்கூடிய ஒரு மொழியாகும். இந்த டோடோ மொழியானது ’ அஸ்ஸாமி, நாகா, கூர்கா, நேபாளி போன்ற சினோ திபெத்தியன்’ என்று வகையைச் சார்ந்தது. ’மங்கொலாய்ட்’ என்றும் கூறலாம். இந்த மொழிக்கு ‘எழுத்து வடிவம்’ கிடையாது. வடகிழக்கு மாநிலப்பகுதியிலிருந்து ஒரு நண்பர் ஒரு செய்தித்தாளை அனுப்பியிருந்தார். அது ஆங்கிலத்தில் இருந்தது. ஆனால், நான் படிக்க முயற்சித்தபோது எனக்கு எதுவுமே புரியவில்லை. அதற்கான காரணம் பிறகுதான் புரிந்தது. அதாவது, ’டோடோ மொழியில் வந்த செய்தி. ஆனால் அந்த எழுத்துவடிவங்கள்’ ஆங்கிலத்தில் உள்ளன. ’நாகா’மொழிக்கான எழுத்து வடிவத்திற்கு ஆங்கில மொழி பயன்படுத்தப்பட்டு, நாள்தோறும் செய்தித்தாளும் வெளியாகிறது. அத வாசித்துவிட முடியும். ஆனால், ‘நாகா’ மொழி தெரிந்தால்தான் அந்த செய்திகளை புரிந்துகொள்ள முடியும்! இதேபோல ‘டோடோ’ மொழியை வங்காள மொழியின் எழுத்து வடிவைப் பயன்படுத்துகிறார்கள். ஒருவர் இந்த மொழிக்காக பிரத்யேகமாக ஒரு எழுத்துவடிவை உருவாக்க முயற்சித்திருக்கிறார். மேலும் பலவாறாக யோசித்தபின் இனியும் இந்த மொழியைப் பாதுகாக்க முடியாது என்கிற முடிவிற்கு வந்தபின், ஒரு வங்கி ஊழியரான ’பக்த தோட்டா’ என்பவர் (’தோட்டா’ என்பது குடும்பப் பெயராகும்) டோடோ மொழிக்காக ஒரு ‘அகராதியை’ உருவாக்க முடிவு செய்தார். அதன் மூலம் அம்மொழியின் வார்த்தைகளாவது மிஞ்சும் என்றும் குறைந்தபட்சம் தொல்லியல் சான்றுபோலாவாவது நிலைத்திருக்கும் எனக்கருதினார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் ‘comparities 1990’ என்னும் அறக்கட்டளை உள்ளது. அதன் முக்கியப்பணியே Marginal languges from extinction விளிம்பு நிலையில் உள்ள தொன்மை மொழிகளின் பெருமைகளை இயன்ற அளவு காப்பதாகும். திராவிட மொழிக்குடும்பத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குடகு, மற்றும் துளு போன்றவை அல்லாமல் மேலும் சுமார் 8 மொழிகள் உள்ளன. அவையும் various level of extinction என்கிற நிலையில்தான் உள்ளன. இவை மட்டுமின்றி இன்றும் ஆப்கானிஸ்தான் நாட்டில் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த பிராகுயி (Brahvi) மொழி பேசப்பட்டு வருகிறது என்பது ஆச்சரியமளிக்கும் தகவலாகும். இந்து மதத்தினைப் பின்பற்றக்கூடிய சுமார் 40- 50 லட்சம் நபர்கள் பிராகுயி மொழியை தங்கள் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். இவர்கள் ஆப்கானிஸ்தான் - பலுசிஸ்தான் எல்லைப்பகுதியில் வசித்து வருகின்றனர். என் நண்பர் அடிக்கடி சொன்னதுபோல் ‘What is in a language? Let it die’ என்று சொல்லிவிடலாம். ஆனால், ஒரு மொழியானது என்னவெல்லாம் செய்கிறது என்று நோக்கினால், மொழி என்பது வெறும் தொடர்புக்காக மட்டுமின்றி, ஒரு குழுவிற்கு தனித்துவமான ஒரு அடையாளத்தைத் தருகிறது. ஒரு குழுவானது தன்னையும் பிறரையும் பிரித்துப் பார்க்கும்போது அல்லது பிறர் நம்மைப் பிரித்துப்பார்க்கும்போது ’We, Them as and Day’ என்பதுபோல், மொழி ஒரு அடிப்படைக் காரணியாக வந்து முன்நிற்கிறது. மொழி என்பது தனித்து இயங்குவதில்லை. அது நிலத்தைச் சார்ந்து இயங்குகிறது. உதாரணமாக, தமிழ்க்குடி கட்சிகளின் கோட்பாட்டைப்பார்த்தோமானால், ‘இந்த தமிழ் மண் எங்களுக்கே உரிமையானது’ என்பதாக இருக்கும். தமிழ்மொழியைத்தாண்டியும் அவர்களின் மண்சார்ந்த உணர்வோடு அவர்கள் பிணைக்கப்பட்டிருப்பர். அமெரிக்காவிலோ, ஐரோப்பா கண்டத்திலோ தமிழ் வாழ வைக்கலாம். ஆனால், தமிழ் நிலத்திற்கான சண்டையாக இருக்கிறதல்லவா? முதலாவதாக, ஏனென்றால், மொழி ஒருபோதும் தனித்து இயங்குவதில்லை. அது நிலத்திற்கான சண்டையாக எடுத்துக்கொள்கிறது. அதுவே மனிதர்களுக்கான அடையாளத்தைத் தருகிறது. இரண்டாவதாக அம்மொழி சார்ந்தவர்களின் ஒட்டுமொத்த கலாச்சாரமும் அங்கேதான் இருப்புவைக்கப்படுகிறது. நிறைய மாற்றங்கள் இருப்பினும் கலாச்சாரம், புரிதல் இருக்கிறது. நம் தமிழ் மொழியுடன் 3000 ஆண்டுகளுக்கும் முன்னர் நிலவிய கலாச்சாரத்தை நாம் புரிந்து கொள்கிறோம். தலைவன் – தலைவிக்கு இடையிலான காதலைப் புரிந்து கொள்கிறோம். வீரத்தின் மாண்புகளைப் புரிந்து கொள்கிறோம். இதுகூட ஒரு மொழியானது காலங்கள் தோறும் தொடர்ச்சியாகப் பயணப்பட்டுக்கொண்டிருப்பதால்தான்! இல்லையென்றால் ஒரு மொழிக்கான மொழிபெயர்ப்பைக் கண்டுபிடித்தால்கூட உணர்ச்சி பொங்காது. சிந்து சமவெளி நாகரீகத்தின் மொழிக்கான ’வரிவடிவம்’ இருக்கிறது. ஆனால், எவருக்குமே அவற்றின் பொருள் புரியாது. ஒருவேளை பொருள் புரிந்தால்கூட ‘உணர்ச்சியோடு’ படிக்க முடியுமா? என்று தெரியவில்லை. ஆக், ஒரு மொழியானது உயிர்ப்போடு இருக்கும்போதுதான் அந்த கலாச்சாரத்தின் உணர்ச்சி, கடவுள் சார்ந்த நம்பிக்கை ஆகியவற்றிற்கெல்லாம் உயிர்கொடுக்க முடியும். ஆகவே நாம் ‘What is in a language? என்று கூறிவிட முடியாது. அவரவர் மொழிக்காக போராட வேண்டிய கட்டயம் இருக்கிறது. அதேவேளையில் சக மனிதர்களை இணைப்பதற்கு ஒரு ’தொடர்பு மொழியாக’ ஆங்கிலம் போன்று ஏதாவது ஒரு மொழி என்பது கட்டாயமான தேவையாயுள்ளது. ’டோடோ’மொழியில் புத்தகங்கள் ஏதுமில்லை. அவ்வாறு இருந்தால் அதையாவது பாதுகாத்து வைக்கலாம். அம்மொழிக்கு இப்பொழுதுதான் ‘அகராதி’ உருவாக்கும் பணியில் உள்ளனர். இது முழுமைபெற்ற பின்னர்தான் புத்தகங்கலை எழுதும் முயற்சி தொட உள்ளது. இவர்களும்கூட சாதாரண நபர்கள் கிடையாது. இந்த ‘’டோடோ’ மொழிகூட நம் தமிழ்மொழிபோல் 3000 ஆண்டுகள் பழமைவாய்ந்த மொழியாகத்தான் இருக்கக்கூடும். அதில் செழுமையான இலக்கியமோ, வலுவான இலக்கணமோ அமையவில்லை. இது போன்றெல்லாம் இல்லாமல் அரிய வாய்ப்பு கிடைத்த தமிழர்களாகிய நாமெல்லாம், நம் மொழியை அடுத்தகட்டத்திற்கு எப்படி கொண்டு செல்லப்போகிறோம் என்பதே நம் முன்னே வைக்கப்பட்டிருக்கும் கேள்வியாகும்.
No comments:
Post a Comment