Wednesday, August 12, 2026

64.திருமணம் தாமதம் ஆவது ஏன்? வரன் கிடைப்பதில் சிக்கலா?

 

திருமணம் தாமதம் ஆவது ஏன்?

வரன் கிடைப்பதில் சிக்கலா?


                இன்றைய காலத்தில் திருமணத்திற்கு பெண் தேடுதல் என்பது இளைஞர்களுக்கு மிகவும் சவால்கள் நிறைந்த விஷயமாகி விட்டது. ஊர்ப்புறங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இளைஞர்கள் தன்னுடைய பிறப்பு விவரம் முதல் தற்போதைய சம்பளம் மற்றும் பிற தகுதிகள் என அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டு பேனர் வைத்து, அதில் இப்படிப்பட்ட தன்னை திருமணம் செய்துகொள்வதற்கு ’மணமகள் தேவை’ என விளம்பரம் செய்யும் அளவிற்கு நிலைமை மோசமாகி விட்டது. உண்மையில் ஆந்திர மாநிலத்தில் இப்படி நடந்துள்ளது. ஏன் இப்படிப்பட்ட நிலை? பொதுவாக திருமன வயதை எட்டியவர்கள் இன்ன சம்பளத்தில், இன்ன வேலை, மற்றும் பல விஷயங்களில் செட்டிலாகிக்கொள்வது போன்ற பலவிதமான குறிக்கோளுடன் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் மிகச்சிறிய வயதில் நடைபெற்றுக்கொண்டிருந்த திருமணங்களை தடுத்து நிறுத்த, திருமண வயதிற்கான குறைந்தபட்ச வயது வரம்பை பெண்களுக்கு 18 ஆகவும், ஆண்களுக்கு 21 ஆகவும் நிர்ணயம் செய்திருந்தனர். ஆனால், தற்போது அதாவது இத்தனை வயதிற்குள் திருமணம் செய்தாக வேண்டும் என்கிற கட்டாய நிலை ஏற்படுத்தவும், அந்த வயதையும் சட்டப்பூர்வமாக நிர்ணயிக்க வேண்டும் என்கிற பாதையில் சமூகம் பயணிக்கிறதோ என எண்ணத்த்தோன்றுகிறது! காரணம் 30 வயதைக்கடந்தும் கூட எண்ணற்றவர்கள் திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள். குறிப்பிட்ட இளம் வயதில் திருமனம் செய்துகொள்ளும் போதுதான் அந்நியோன்யமும், உளப்பூர்வமான புரிதல் ஆகியன தம்பதியருக்கிடையே ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் அடுத்து வரக்கூடிய 40 ஆண்டு கால வாழ்க்கையை நகர்த்திச் செல்லும். 35 வயதிற்கும் மேல் திருமணம் செய்துகொள்ளும்போது காதல் உணர்வு எந்த அளவிற்கு மேலோங்கி இருக்கும்? நியாயமான இளமைப்பருவத்தில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும்போது அவை மருத்துவரீதியில் அரோக்கியமாகவும் இருக்கும். அந்த தம்பதியினர் பெற்றோர்கள் ஆனபின், தாங்கள் முதுமை அடைவதற்குள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அனைத்தையும் செய்தாக வேண்டும். இவை மட்டுமின்றி வயது ஏற, ஏற குழந்தைப்பேறுக்கான வாய்ப்பும் பெண்களுக்கு அரிதாகி விடுகிறது.  90’s கிட்ஸ் தங்கள் திருமணவாய்ப்பிற்கான பேருந்தை விட்டுவிடுகிறார்கள். அவர்கள் 25 வயதில் திருமணம் செய்யாமல் விட்டுவிட்டு 32 வயதைத்தொடுகிறார்கள். அதற்குள் 2 k கிட்ஸ்- க்கு 25 வயது ஆகிறதென்றால் அந்த இளைஞர் தன் சம வயது பெண்ணையே திருமனம் செய்து கொள்கிறார். அதனால் 90’s கிட்ஸிற்கு ஒரு அளவிற்குமேல் பொறுமை போய்விடுகிறது. அதனால் திருமணத்தின் மீதே ஒருவித சலிப்பு வந்துவிடுகிறது. குறைந்த அளவில் மக்கள் தொகை கொண்ட ஒரு சில சாதிகளில் இந்தப் பிரச்சினை அதிகமாகவே உள்ளது. அங்கு பெண்ணே கிடைப்பதில்லை. பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்யும் திருமணம்தான் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பி இருக்கும் நபர்களுக்கு இத்தகைய பிரச்சினை அதிகமாக இருக்கும். அந்த சமூகங்களில் பெண்கள் படித்து வேலைக்குப் போகும்போது சூழ்நிலையின் காரணமாக வேற்று சமூகத்தில் திருமணம் செய்துகொள்கிறார்கள். அதனால், அதே சமூகத்தில் உள்ள ஆண்கள் 26 வயதில் பெண் தேடும்போது, அவர்கள் கிடைப்பதில்லை! பிராமணர்களில் ஐயங்கார் சமூகத்தில் இந்த நிலையைக் காண முடிகிறது. நிலப்பரப்பு வாரியாகவும் இதுபோன்று நிகழ்கின்றது. உலகிலேயே இந்தியாவில்தான் ‘ஆண்குழந்தை’ வேண்டுமென அதிகமாக விரும்புகின்றனர். அதிலும் நம் தமிழகத்தில் எதிர்பார்ப்போர் இன்னும் அதிகம். கலாச்சாரம் என்கிற அடிப்படையில் என்னதான் முயன்றாலும் 100 குழந்தைகளில் 45 ஆண் குழந்தைகள் 55 பெண்குழந்தைகள் என்பதுதான் நூறாண்டுகளாக ஆனாலும் ஏற்படுத்தும் திருப்பம். ஆனால், இறைவனின் நியதி என்னவெனில் 51 (பெண்) : 49 (ஆண்) என்கிற விகிதாச்சாரம்தான். இதைத்தான் நாம் தெய்வீகம் என்கிறோம். மேலே கூறிய விகிதமானது 100 தம்பதிகளின் வாழ்வில் அவர்களுக்கிஉப் பிறக்கப்போகிற குழந்தைகள் இதே நிலையாக விகிதாச்சாரத்தில்தான் பிறக்கின்றன. இப்படித்தான் ஒவ்வொரு ஆண்டும்! இதுவே ஒவ்வொரு நூற்றாண்டும்! கடவுளுக்கு எப்படித் தெரிகிறது? 100 ஆண்குழந்திகளுக்கு 100 பெண்குழந்தைகள் என அமைக்கவில்லை? இதையெல்லாம் பலகாலம் நிகழ்ந்துவரும் புள்ளிவிவரங்களைப் பர்றிய தரவுகளின் அடிப்படையில் நாம் புரிந்து கொள்கிறோம். ஒரு ஆண் குழந்தை பிறக்கும்போதே அதற்குரிய பெண் குழந்தையும் பிறந்துவிடுகிறது. இந்த கண்டுபிடிப்பானது வரலாற்று ஆய்வாளரான ஒரு பிரிட்டிஷ்காரரின் கண்டுபிடிப்பாகும். ஒருமுறை ராஜஸ்தானில் இருக்கும் ஒரு அரண்மனைக்கு அவர் சென்றிருந்தார். அப்போது அங்கே, அந்த ராஜவம்சத்தின் ராஜ தலமுறையினரின் படங்கள் வரைந்துவைக்கப்பட்டிருப்பதக் கண்டார். அவ்வாறு அவர் கண்டவற்றில் ஒரு பெண் வாரிசுகள் கூட காண முடியவில்லை. மிகுந்த ஆச்சரியப்பட்ட அவர் அதுபற்றி கேட்டபோது, அப்போதுதான் அந்த மாபெரும் உண்மை வெளிப்பட்டிருக்கிறது. அந்த உண்மை என்னவென்றால், அந்த வம்சத்தில் பெண் குழந்தைகள் பிறந்தாலும் அதை ‘முடித்து விடுதல்’ என்பது தொடர்ச்சியாக நடந்திருக்கின்றது. அதற்கு காரணம் என்னவென்றால் பெண்குழந்தை பிறந்தால் கலாச்சார ரீதியிலாக (திருமணபந்தம்) மூன்றாம் தரப்பினருக்கு தாழ்ந்துபோக வேண்டிருக்கலாமென்றும், கெளரவத்தில் பங்கம் ஏற்படலாமென்றும், மேலும் அதனால் சொத்து வேறிடத்திற்கு சிதறுண்டு போகக்கூடுமென்றும், இத்தகைய காரணங்களால்தான் தாங்கள் அவ்வாறு செய்துவருவதாக கூறியுள்ளனர்! இந்திய வரலாற்றில் ‘பெண் சிசுக்கொலை’ சம்பந்தமான முதல் ஆவணமே அதுதான்! ஆக, ஆணுக்கு பெண் கிடைக்கவில்லையென்றால், நிச்சயமாக கலாச்சார ரீதியிலான பின்னணிக் காரணம் இருக்கும். இதுபோன்ற பிரச்சினை ஒரு சமூகத்திற்குள் மற்றும் ஒரு வட்டார ரீதியாகவும் வரக்கூடும். பொதுவாக 21 வயது பெண்ணானவள் 23 வயது ஆணைவிட அதிகமாக யோசிப்பாள். தன்னை எப்படி நிலைநிறுத்திக்கொள்வது? சமூகத்தில் எப்படி அணுக வேண்டும்? சிறந்த நிலையில் எப்படி முன்னேறிச்செல்ல வேண்டும்? போன்ற அறிவார்ந்த விஷயங்களில் சற்று அதிக முதிர்ச்சியுடன் விளங்குவர். இன்றைக்கு ஆண்களுக்கு இணையாக பல்துறைகளிலும் பெண்கள் போட்டியாளர்களாக   வந்து விட்டனர். ஆகவே, சொந்த மாமன் மகனாகவே இருந்தாலும் கூட, அந்தப் பெண் எதிர்பார்க்கும் அனைத்து தகுதிகளும் இருந்தால்தான் ஒரு பெண் திருமணத்திற்கு சம்மதிக்கிறாள்> அப்படி இல்லையென்றால் நிச்சயம் நிராகரிப்புதான். கொண்டயன் கோட்டை மறவர் குலத்தில் ஒரு பழக்கம் தொன்றுதொட்டு இருக்கிறது. ஒரு மாமன் தன் முறைப்பெண்ணை திருமணம் செய்யாமல் வேறு பெண்ணை திருமணம் செய்வதாக இருந்தால், ஒருவேளை தன் முறைப்பெண்ணுக்கு எவ்வளவு சீர் தர வேண்டுமோ அவற்றைத் தந்து விட்டுத்தான் வேறு திருமணம் செய்து கொள்ள வேண்டும்! இந்த முறையில் திருமனத்தை ஏற்கவோ அல்லது மறுக்கவோ சம்பந்தப்பட்ட பெண்ணுக்குத்தான் உண்டு. ஆனால், இன்றைக்கு பெண்கள் கல்வி, நல்ல வேலை, அதிகப்படியான சம்பளம் போன்ற நிலைக்கு சுயத்தன்மையுடன் முன்னேறி விடுவதால் அந்தப்பெண்ணின் முடிவே தீர்க்கமானதாகவும், உறுதியானதாகவும் மாறிவிடுகிறது. பெண்கள் 21 வயதிலேயே அதீதமாக சிந்திக்கின்றனர். அதேபோல் ஆண்களும் தங்கள் வாழ்க்கையைப்பற்றி தெளிவாக சிந்தித்து, தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். பெண்ணை மையமாக வைத்துதான்  ஆண்களின் நடை, உடை, பாவனை சிறப்புகளுடன் தன்னை அழகாக வைத்துக்கொள்ளுதல் உள்ளிட்ட அனைத்துமே!  அந்த ஆணை ஒரு ஒழுங்கமைப்பான கட்டமைப்புக்குள் இயக்குவதே பெண்கள்தான். ஒரு பெண் தன்னை அழகாக காண்பித்துக்கொள்வதன்மூலம் அவர்களே அவர்களே விரும்புவர். ஆனால், ஒரு ஆணுக்கு அனைத்துமே பெந்தான் என்பதே உண்மை.

----------------------------------------------------------------

No comments:

Post a Comment

67.வேட்புமனுவில் சொத்துக் கணக்கை மறைத்தால் என்னவாகும்?

                  வேட்புமனுவில் சொத்து க்  கணக்கை                          மறைத்தால் என்னவாகும் ?   தேர்தலில் வேட்பாளராக நிற்பவர்கள்...