Tuesday, August 11, 2026

56.Politicians' LIFESTYLE EXPOSED!

 

                 Politicians' LIFESTYLE EXPOSED!

’அரசியல் ஒரு சாக்கடை. அதில் இறங்கக்கூடாது’ என்று பலரும் கூறுவார்கள். உண்மையில் பள்ளி, கல்லூரிகளில் முதன்மையாளர்களாக வருபவர்கள், அதன் மூலம் வெற்றிகளை ஈட்டுபவர்கள்  ’நான் டாக்கடராகப்போகிறேன், இன்ஜினியராகப்போகிறேன், என்றுதான் கூறுவார்களே தவிர, ‘அரசியல்வாதியாகப்போகிறேன், சினிமாவில் சூப்பர் ஸ்டாராகப் போகிறேன்’ என்று ஒருபோதும் கூற மாட்டார்கள். குறிப்பாக தங்கள் குழந்தை அரசியலுக்குப் போகக்கூடாது என பெற்றோரும் எண்ணுகிறார்கள். ஆனால் அந்த அரசியல் வாதிகள்தான் இந்த ஜனநாயகத்தையே வழிநடத்துகிறார்கள்.  அவர்கள்தான் ஆட்சியை நடத்துகிறார்கள். அவர்களின் கீழ்தான் IAS, IPS, IRS, Doctor, Engineer எல்லோருமே வருகிறார்கள். ஆனாலும் அதை ஏன் சாக்கடை என்று கூறுகிறார்கள் என்றால், அதில் மலிந்திருக்கும் நிறைய குறைபாடுகள் (minus0 வைத்துதான் அவ்வாறு கூறுகிறார்கள். ஆனாலும் அந்த அரசியல்வாதிகளிடமிருந்தும்  நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன! நாள்தோறும் காலையில் எழுந்து எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் கூட, நல்ல மொரமொரவென்று ஒரு வெள்ளைச் சட்டை, வெள்ளை வேஷ்டியோட புறப்படணும். தனக்கு எவ்வளவோ பிரச்சினை இருந்தாலும் கூட, முகத்தை சிரித்தவண்ணம் வைத்திருக்க வேண்டும். எங்கு, எப்போது, யாரைப் பார்த்தாலும், வணக்கம், வந்தனம், நம்ஸ்தே, நமஸ்கார், கும்புடுகிறேன் என்று விதவிதமாக கூறியபடியே ’நன்றாக இருக்கிறீர்களா?’ என பாசத்துடன் விசாரிக்க வேண்டும்! (அவர் அடுத்த தேர்தலில் ஓட்டுப்போடுவாரோ இல்லையோ தெரியாது!) உணமையில் செல்வச்செழிப்பாக இருக்கிறாரோ இல்லையோ, வேறுயாரும் பார்த்தால் பளிச்சென தெரியும்படியாக தன் சட்டைப்பாக்கெட்டில் ஒரு 500 ரூபாய்த்தாளையாவது வைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் ட்ரெண்டு. அந்த ஒரு பாஸிடிவிட்டி, தன்னம்பிக்கை எப்பொழுது என்ராலும், எந்த ஒரு இடத்திலாவது திடீரென ஒரு பிரச்சினை என்றால், உடனே இறங்கி என்ன ஏதென்று விசாரிப்பது! (யார்பக்கம் நியாயம் இருக்கிறது? என்கிற விவரம் தெரியுமோ… தெரியாதோ.. அது சரியா? தவறா? என்பதெல்லாம் வேறு விஷயம்!) இதெல்லாம் தமிழகத்தில் எந்த ஒரு கட்சியாக இருந்தாலும்கூட அரசியல் பாங்கில் இவற்றை ஒரு பொதுவான நிலவரமாகக் காண்கிறேன். நான் கூறுவது ஏதோ நகைச்சுவைபோன்று தோன்றலாம்.  ஆனாலும், இப்படியெல்லாம்  நடந்து கொள்வதற்கு நிறைவான நேர்மறை ஆற்றல் (பாஸிடிவ் எனர்ஜி – Positive Energy) தேவைப்படுகிறது.

எனக்குத்தெரிந்தவரை மார்க்கெட்டிங், ஏர் ஹோஸ்டஸ் என பணிபுரியும் ஒருசிலரைத்தவிர பெரும்பாலும் ஒரு அலுவலகத்தில் வேலைபார்ப்பவர்கள் அவர்களின் Mood –ஐப் பொறுத்துதான் தங்கள் முகத்தை வைத்துக்கொள்வர். ஆனால், அரசியல் வாழ்வென்பது அவ்வாறு கிடையாது. எந்த நேரமும் தங்கள் உடை, பேச்சு, முகமலர்ச்சி, தன்னம்பிக்கையை வெளிப்படுத்த வேஎண்டும். இதுவே மாபெரும் நேர்மறை ஆற்றல் ஆகும். இத்தகைய பண்புகள் அரசியல் சாராதவர்களிடத்திலும், அரசியலுக்கு வரவே விருப்பம் கொள்ளாதவர்களிடத்திலும் இருக்க வேண்டிய நல்ல விஷயமாகப் பார்க்கிறேன்.

நல்ல விஷயங்களை கவனித்து நாமும் அவற்றை செயல்படுத்தினால், நமக்கு நல்லதுதானே!

-------------------------------------------------------

No comments:

Post a Comment

134.நாட்டுக்காக நான்கு மாதங்கள் உழைக்க வேண்டுமா?

  நாட்டுக்காக நான்கு மாதங்கள் உழைக்க வேண்டுமா? வருமான வரி கட்டும் தன் நண்பரின் எண்ண ஓட்டத்தைக்குறித்து ட்விட்டர் வலைதளத்தில் ஒருவர் சமீப...