Thursday, August 20, 2026

73.The REAL Story Behind Baba Harbhajan Singh's Mysterious Life

 

 

The REAL Story Behind

Baba Harbhajan Singh's Mysterious Life


 

            நாதுல்லா பாஸ் (Nathula pass) – அந்த இடத்தில் ஒரு ஐயனார். நாதுல்லா பாஸுக்கும் ஐயனாருக்கும் என்ன சம்பந்தம்? அனைத்து பெரியக்கோயில்களிலும் ஐயனார், கருப்பசாமி ஆகிய தெய்வங்களை நாம் காவல் தெய்வமாக வைத்திருக்கிறோம். இப்போது விஷயத்திற்கு வருவோம். ’’பாபா ஹர்பஜன் சிங்’ என்பவருடைய கதை மிகவும் ருசிகரமானது! இவருக்காக நிர்மாணிக்கப்பட்ட கோயில் சிக்கிம் மாநிலத்தில் சீனதேசத்தின் எல்லையில் ‘நாதுல்லா பாஸ்’ என்கிற இடத்தில் அமைந்திருக்கிறது. ’இது பழைய பட்டுப்பாதை’ என்றழைக்கப்படுகிறது. இந்தப்பாதையானது சீனாவிலிருந்து அரேபியா வரை செல்லக்கூடிய வழியாகும். இதன் மிகமுக்கியமான ஒரு சந்திப்பில்தான் நாதுல்லா பாஸ் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 14,000 அடி உயரத்தில் இருக்கும் இவ்விடத்தில் கோடைகாலத்தில் இயங்கும் ஒரு பெரிய சந்தை இங்கே இருக்கிறது. உலகிலேயே மிக அதிகமான உயரத்தில் இயங்கும் சந்தையும் இதுவே! சரி.. பாபா ஹர்பஜன் சிங் அவர்களை ஐயனார் என்றும், காவல் தெய்வம் என்றும் ஏன் சொல்கிறோம் என்றால், சீன-இந்திய எல்லையில் காவல் காப்பவராக இந்திய இராணுவத்தால் அங்கீகரித்துள்ளது. இவர் 1968 –இல் இந்திய இராணுவத்தின் ரோந்துப்பணியின்போது எதிர்பாராத விதமாக திடீரென எப்படியோ மறைந்து விடுகிறார். அதன்பிறகு எவ்வளவு தேடியும் அவர் உடல் கூட கிடைக்கவேயில்லை. ஆகவே ராணுவ விதிகளின்படி அவர் இறந்துவிட்டதாக, இராணுவம் அறிவித்தது. அவருடைய சேவைக்காக அவருக்குரிய ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்தும் உரியமுறையில் வழங்கப்பட்டு வருகிறது. அவரது மரணத்திற்குப்பின்னால், அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த இராணுவ வீர்ர்களின் கனவில் தோன்றி, அவ்வப்போது எல்லையில் நமக்குச் சொந்தமான பகுதிகளில் எதிரிகளின் நடமாட்டத்தைக்குறித்து கூறிவருவது வழக்கமாக இருந்துவந்தது. அந்தத் தகவல்களின் அடிப்படையில் , அந்த இடத்தை உடனே நேரில் சென்று ஆய்வு செய்தால் அது உண்மையான தகவல்கள்தான் எனத் தெரிய வருகிறது. எங்கெல்லாம் இது போன்ற நிகழ்வுகள் நடந்தாலும், இராணுவ வீர்ர்களின் கனவில் தோன்றி துப்பு கொடுப்பது வழக்கமானது. இத் அறிவியலுக்கு அப்பார்ப்பட்ட வீஷயமாக இருந்தாலும் இந்திய இராணுவ வீரர்களுக்கு ‘ஹர்பஜன் சிங்’ மீது மதீப்பும், மரியாதையும் கூடியது. இதனால் அவருக்கு ஒரு கோயில் எழுப்பப்படுகிறது. இதில் மிக ஆச்சரியப் படத்தக்க  விஷயம் என்னவென்றால், சீன இராணுவ வீர்ர்களும் கூட அவரைப் பிரமிக்கிறார்கள் என்பதுதான்! அவர்களும் வந்துபோகிறார்கள்!

நமது இந்திய இராணுவம் ஹர்பஜன் சிங் அவர்கள் பயன்படுத்திய உடைகள், தலைப்பாகை, செருப்பு, நாற்காலி முதலியனவற்றை ஒரு மகான் அல்லது பெரும் சுவாமிஜிகளுடையவர்றை எப்படி மதிப்போடும், பக்தியோடும் வைத்துப்போற்றுவோமோ அப்படி வைத்திருக்கிறார்கள்! அவர் வாழ்ந்த காலத்தில் ஒவ்வொரு வருடமும் தன் சொந்த மாநிலமான பஞ்சாபில் உள்ள ஜலந்தருக்குச் செல்வதூ வழக்கம். அந்த வழக்கப்படியே அவர் மறைவிற்குப்பின்னும் ஒரு குறிப்பிட்ட நாளில் இரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. இது இன்றும் தொடர்கிறதூ. இன்றைக்கு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லைப்பங்கீடு குறித்து பல்வேறு சர்ச்சைகள் மற்றும் பூசல்கள் நிலவுகின்றன. இந்த எல்லைப்பகுதியில் இன்றைக்கு வரைக்கும் எதிரிகளின் ஊடுருவல்கள் குறித்து தகவல் அளிப்பதில் முனைப்போடு இருப்பதால், பாபா ஹர்பஜன்சிங்  இந்திய இராணுவத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக போற்றப்படுகிறார். இப்படி தன் மறைவிற்குப் பின்னரும் எல்லையைக் காக்கும் நம் தமிழக பக்தி நெறியின்படி ‘நாதுல்லா பாஸ் ஐயனார்’ என பாசத்துடன் அழைக்கிறோம். அவரைப்போல் எத்தனையோவீர்ர்களும், தீரர்களும் நம் நாட்டின் எல்லையைப் பாதுகாத்து வருவதால்தான் நாம் கெளரமாகவும், பாதுகாப்புடன் வாழ்ந்து வருகிறோம்.

’பாபா ஹர்பஜன் சிங் புகழ் ஓங்குக’.   

 

--------------------------

No comments:

Post a Comment

74.மன அழுத்தம் இல்லாமல் வாழ புதிய வழி !!

    மன அழுத்தம் இல்லாமல் வாழ புதிய வழி !!                 முன்னாள் ஐ . ஏ . எஸ் அதிகாரி திரு . இறையன்பு அவர்கள் ஒரு புத்தகத்தில் ...