Monday, August 17, 2026

70.ஜப்பானில் சரஸ்வதியும் விநாயகரும் (முருகன் எங்கு பிறந்தார் வடக்கா? தெற்கா? (பகுதி -3)

 

               ஜப்பானில் சரஸ்வதியும் விநாயகரும்

(முருகன் எங்கு பிறந்தார் வடக்கா? தெற்கா? (பகுதி -3)


            பொதுவாகவேஎ எல்லோருக்கும் ஒரு சந்தேகம் எழக்கூடும். அதாவது, மலைவாழ் மக்களுக்கும், சமவெளிப்பகுதியில் வாழும் மக்களுக்குமிடையே அதீதமான தொடர்புகள் இருந்ததில்லை. அப்படியிருக்க மலைமீது வாழ்ந்துகொண்டிருந்த மக்கள் வணங்கிய தெய்வமானது எப்படி சமவெளிப்ப்பரப்பில் பிரபலமான தெய்வமாக மாறியிருக்க முடியும்? மேலும் அதுவரையிலும் சமவெளியில் வணங்கப்பட்டுக்கொண்டிருந்த தெய்வங்களின் வழிபாடு என்னவாயின? என்கிற சந்தேகம் கேள்வியாக பலரின் மனதிலும் எழுகிறது. இதற்காக எனது பார்வையில் ஒரு விளக்கம் தரமுடியும். மனித குல வரலாறே மலைகளிலிருந்துதான் தொடங்குகிறது. நிலம் கூஉட முதலில் ’மலை’, அங்கிருந்து கீழிறங்கினால் ’காடு’, அதையும் கடந்தால் ’கடல்’. இவை அனைத்தையூம் தொடர்புப்படுத்துவதுபவை நதிகள். இதுதான் சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த அமைப்பு. நம் தமிழ் மரபின் தொன்மையை ஆய்ந்தோமானால், மலை மீது வாழ்ந்த மக்கள் ‘குறவர், குறத்தி’ என வழங்கப்பட்டனர். நாம் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வரும் ‘குறவர், குறத்தியர்’ அனைவரையும் நாம் அவ்வாறே எண்ணுகிறோம். ஆனால், உண்மை அதுவல்ல. முழு தமிழ்மண்ணும் முன்னொரு காலத்தில் குறவர்- குறத்தியர்தான். எல்லோரும் மலைமீது வாழ்ந்தவர்கள்தான். மலைகளிலிருந்து கீழிறங்கி அவர்கள் கால்பதித்த இடம் காடு. காட்டில்தான் விலங்குகளைப் பராமரித்தல், வேட்டையாடுதல் போன்ற ஆயர் சமூகமாக (pastoral society) பரிணாமம் அடைகிறார்கள். அதன்பின்னர், காட்டைத் திருத்தி விவசாயப் பயிர் வளர்க்கத் தொடங்கினர். இதுவே ’மருதநிலம்’ என்றழைக்கப்பட்டது. இங்கு வாழத்தொடங்கியவர்களுக்கு ‘உழவர், உழத்தியர்’ என்று அடையாளப்பெயர்கள் வழப்படலாயிற்று. இக்காலக்கட்டத்தில்தான் ‘பரத்தையர்’ எனும் சொல் பிறப்பெடுக்கிறது. அதற்கும் முன்னர் அந்த சொல்லும், அதன் வாழ்க்கை முறையும் வழக்கத்தில் இருந்ததில்லை. அதுநாள்வரையில் மக்களிடையே செல்வ வளத்தில் எவ்வித வேறுபாடுகளும் இருந்திருக்கவில்லை. இதற்கும் அடுத்ததாக ’நெய்தல் (கடல்சார் பகுதி)’. இந்த நெய்தல் பகுதியில் ’பரதவர், பரத்தியர்’ என்று மக்கள் வகைபடுத்தப்பட்டனர். இவை அனைத்துமே அந்தந்த நிலவியல் அமைப்பு சார்ந்து வழங்கப்பட்ட பெயர்கள். மேற்கூறிய நான்குவகை திணை நிலங்கள் திரிந்துபோனால் அதன் பெயர் ‘பாலை’ என ஏற்கனவே அறிந்திருந்தோம். இந்த நிலையில்தான் உக்கிரமான தெய்வமாக ‘கொற்றவை’ எனும் பெண் தெய்வம் வணங்கப்படலானது. இங்கு வாழ்ந்தவர்கள் எயினர், எயிற்றியர் ஆவர். இவ்வாறு குறிப்பிடப்படுபவை அனைத்துமே அந்தந்தப்பகுதியில் வழங்கப்பட்ட பெயர்கள். சாதிய கட்டமைப்பு என்பது வெறும் தொழில் சார்ந்த வாழ்வியல் முறையால் வரவில்லை. வட்டாரப் பெயர்ச் சொல்லாடல்களால் உண்டாயின என்பது ஒரு கருத்து. இப்படியெல்லாம் சுமார் 5000 ஆண்டுகளுக்கும் மேலாக திணைகள் மாறி, தொழில்முறை மாறி, பெயர்கள் மாறி, தொடர்ந்து பயணித்த போதும் தமிழர்கள் மலைமீது தாங்கள் வணங்கிய கடவுளான முருகனை நெய்தல் பகுதியில் இருந்த திருச்செந்தூர் (மணற்குன்றின்மீது) வரை கொண்டு சென்றுவிட்டனர். இங்கே முருகனுக்கு வழங்கப்படும் பெயர்களுக்கு இணையாக வேதத்திலும் பெயர்கள் வருகின்றன. வருணன், இந்திரன், ஆகியோர் பெருங்கடவுளர்கள். மாயோன் என்கிற பெயர் வேதத்தின் ஆரம்பத்தில் வரவில்லை. விஷ்ணு என்கிற பெயர்கூட பின்னால்தான் வருகிறது. அதன்பின் இராமர், கிருஷ்ணர் போன்ற தெய்வப்பெயர்கள் வேகமெடூக்கத் தொடங்கிய போது, நீலநிறமுடைய ‘மால்’, மிகப்பெரியவர் என்கிற பொருளில் ‘பெருமாள்’ என காலப்போக்கில் கலந்து விட்டன. 

நமது இந்து பாரம்பரியத்தை ‘Synchronitic ’ என்று கூறுகிறோம். இதன் பொருள் என்னவென்றால், ’அங்கங்கே சென்று, அந்தந்த இடத்தை அப்படியே அரவணைத்துக்கொள்’ என்பதே. ஆக, தத்துவம் பயணித்துக்கொண்டே இருக்கும். ஆங்காங்கே இருக்கும் தெய்வங்களை மறைத்து அழிப்பது கிடையாது. அவற்றை தன்னகத்தே எடுத்துக்கொள்வது. அவ்வாறு எடுத்துக்கொண்டு சிவ ரூம், சக்தி ரூபம் அல்லது விஷ்ணு ரூபமோ கொடுத்துவிடும். விநாயகர், முருகன், ஐயப்பன் போன்ற கடவுளர்கள் சிவ, சக்தி, விஷ்ணு ரூபங்கங்களைக் தாண்டியவை. கடவுளர்களின் மனைவியர் பற்றியும் ருசிகரமான செய்திகள் உள்ளன. தமிழ் மண்ணில் விநாயகர் பிரம்மச்சாரியாகவும், வடஇந்தியாவில் அதே விநாயகர் இரண்டு மனைவியரை கொண்டவராகவும், அதேவேளையில் முருகனுக்கு இரண்டு மனைவியர்  என்றால் மிக ஆச்சரியமாகவும் பார்ப்பார்கள். இன்னும் ஜப்பானியரிடம் கூறினால் இரண்டையுமே ஆச்சரியமாகக் காண்பார்கள்.  ஏனென்றால் ஜப்பானில் விநாயகர், சரஸ்வதி ஆகிய இருவருமே உள்ளனர். சரஸ்வதிக்கு கணவர் ‘பிரம்மா’வைப்பற்றி ஜப்பானியர்களுக்குத் தெரியாது. ஆனால், தொடர்ந்து சரஸ்வதியை வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். விநாயகரைக் கும்பிடும் அவர்களுக்கு சிவனைப் பற்றி தெரியாது. அவர்களுக்கு சரஸ்வதி என்பவர் அறிவிற்கான தெய்வமாகவும், விநாயகர் ஞானத்திற்கான தெய்வமாகவும் விளங்குகிறார்கள். இந்த இரு தெய்வங்களுமே புத்தமதத்தில் இணைக்கப்பட்டு ஜப்பானில் இர்ருக்கிறார்கள். ஆக அவரவர்கள் அவர்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொள்கின்றனர்.  பொதுவாக இறைநம்பிக்கை, வழிபாடுகள் பொறுத்த செய்திகள் இதிகாசத்தில் ஒன்று, நிலத்தில் ஒன்றுமாக நிலவி, அவை ஒன்றுக்கொன்று பயணிக்கின்றன. ஆனால், முருகன் விஷயத்தில் மட்டும் ஆங்காங்கே கலந்து பயணிக்கின்றன. மதம், தெய்வங்கள் பற்றிய நம்பிக்கைகளில் Mythology – இல் இருந்து வரவேண்டும். பைபிளில் யேசு கிறிஸ்துவை தெய்வீகமாகப் பார்க்கலாம். அல்லது உண்மைச் சம்பவமாகவும் பார்க்கலாம். தெய்வீகப்படி பார்த்தால் கன்னி கழியாத பெண் மாதா பெற்றெடுத்தக் குழந்தை யேசு. இது அறிவியல் கோட்பாட்டிற்குள் வராது. உண்மைச் சம்பவமாகப் பார்த்தால் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுப்பது. இதேபோன்ற பார்வையைத்தான் முருக கடவுள் விஷயத்திலும் பார்க்க வேண்டும். முருகன் விஷயத்தில் இரண்டுமே உள்ளன. தமிழ்மரபில் தொடர்ந்து பன்னெடுங்காலமாக கொண்டாடப்படும் கடவுள். என்னைப்பொறுத்தவரையிலும் முருகனுக்கு Mythology பின்புலமாக அமைந்திருக்கிறது என்றே கூறுவேன்.

---------------------------------------------------

No comments:

Post a Comment

70.ஜப்பானில் சரஸ்வதியும் விநாயகரும் (முருகன் எங்கு பிறந்தார் வடக்கா? தெற்கா? (பகுதி -3)

                 ஜப்பானில் சரஸ்வதியும் விநாயகரும் ( முருகன் எங்கு பிறந்தார் வடக்கா ? தெற்கா ? ( பகுதி - 3)             பொதுவாகவேஎ எல்ல...