முதுகுளத்தூர் பிரச்சனையில்
நடந்தது என்ன?
நாடாளுமன்றத்தில் தேவரின் பேச்சு!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின்
பார்வார்டு கட்சியில் அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக
இருந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு
அருப்புக்கோட்டை சட்டமன்றத்தொகுதியிலிருந்து தேவாங்கு செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் மட்டுமின்றி தாழ்த்தப்பட்ட இனத்தின் சார்பில் மூன்று;நான்கு பேர் இருந்திருக்கிறார்கள். உண்மையில் ’முதுகுளத்தூர் கலவரம்’ சம்பந்தமான வரலாற்றை மீண்டும் அனைவரும்
படித்தறிய வேண்டிய ஒன்றாகும். அந்தக்கலவர்ரம் சம்பந்தமான மாவட்ட ஆட்சியர் ‘அமைதிக்கூட்டம்’ ஒன்றை நடத்தியபோது,
தாழ்த்தப்பட்ட
மக்களின் சார்பில், அவர்களால் எங்கள்
கட்சியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களையும் கையெழுத்து
பெறுங்கள்.
அவர்கள் போடாமால் மற்றவர்கள் எப்படி
போட முடியும்?
அவர் எல்லோரையும் அரவணைத்துதான் கட்சியினை
நடத்தியிருக்கிறார். தன் சாதிக்காக
என எதையும் அவர் பிரத்யேகமாகச் செய்யவில்லை. ஆனால், அப்படிப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத்
தேவர் அவர்களைத்தான் பின்னாளில் குறிப்பிட்ட சாதிக்கட்சித் தலைவராக பிற்பாடு அடையாளப்படுத்தி
விட்டனர்.
அவர் தனது
உயிர்மூச்சுக்
கொள்கையான
‘தேசியம், தெய்வீகம்’ என்கிற நிலைப்பாட்டிலிருந்து சற்றும்
கீழிறங்கவில்லை.
அவரை தெய்வீகத்தின் குறியீடாக மக்கள்
பார்க்கத் தொடங்கினர். ‘ஒரு
மாபெரும் தலைவர் வாழுங்காலத்தில் தாங்களும் வாழ்ந்து வருகிறோம்’ என்கிற
பெருமிதத்துடன்
அவரைப் பார்த்தார்கள். தமிழகத்தில் தேவர்
அவர்களைப் பற்றி புகழும் பாடல்கள் எண்ணற்றவை. ஒரு திரைப்படத்தில் ‘கண்டா வரச்சொல்லுங்க..’என்ற பாடல் இடம் பிரபலமானது. உண்மையில் அந்தப்பாடல் அக்காலத்தில்
இராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் மக்கள் அதிகமாக பாடிய பாடல்தான் அதூ! தேவர் அவர்களைப்பற்றி ஏற்கனவே வெளிவந்து
பிரபலமானதே.
முதல்வர்களாக இருந்தவர்களுக்கே கூட
இந்தளவிற்கு பாடல்கள் புனையப்பட்டதில்லை.
’அண்ணல் காந்தி, அம்பேத்கர் போன்ற தலைவர்களுக்கு ஏன்
மிகப்பெரிய பகழ் கிட்டியது?’ என்று எப்படித் தெரியாதோ.. அதேபோல்தான் தேவர் அவர்களுக்குக் கிட்டிய
புகழும். மக்கள் மனதில் அவர் மீது ஏற்பட்ட நம்பிக்கையின் வெளிப்பாடுதான்
என்று சொல்லலாம். ஆனால், அப்படிப்பட்ட மாபெரும் தலைவர்களை ஒரு
ஜாதிக்கான தலைவராக மட்டும் மாற்றிக்காட்டும் போக்கு தமிழகத்தில் அதிகம். என்னுடைய அனுமானத்தில் 1970 க்கும் முன்னால் வாழ்ந்த தலைவர்கள், அதற்குப்பின் வந்த தலைவர்கள் என இரண்டுவகையாகப்
பிரிக்கலாம்.
1970-க்கும் முன்பிருந்த
தலைவர்களை அப்பழுக்கற்ற தலைவர்களாக நான் பார்க்கிறேன். அவர்கள் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக
போராடியவர்கள்.
பதவி, அதிகாரம் எல்லாம் வருமா? என அவர்கள் எதிர் பார்த்ததில்லை. அவர்கள் புனித ஆன்மாவாகவே வாழ்ந்திருந்தனர். அந்தப் புனித ஆன்மாக்கள் போல் மீண்டும்
நமக்கு கிடைக்கவேயில்லை.
நேதாஜி
சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் மீது அளவற்ற மதிப்பு கொண்டவர் முத்துராமலிங்கத்தேவர். நேதாஜி அவர்களின் மறைவுச்செய்திக்குப்பின்
‘புளிச்சிகுளம்’ எஸ்டேட்டிற்கு தங்கிய தேவர் அவர்கள்
தொடர்ந்து நான்காண்டுகளை தனது ஆன்மீக சாதகங்களை மட்டுமே செய்வதில் செலவிட்டார்.
இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகுதான் அவர் அந்த எஸ்டேட்டிலிருந்து
வெளியே வந்தார்!
காமராஜருக்கும் – பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கும் ஒரு இடையில் மோதல் போக்கு இருந்ததாகச்
சொல்லப்படுகிறது. இது பற்றிய புரிதல் நமக்கு வேண்டும்.
நேதாஜி அவர்களின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணகர்த்தா ஜவஹர்லால் நேருதான்
என்கிற எண்ணம் கொண்டவர். நேதாஜி தொடங்கிய ’பார்வார்டு பிளாக் கட்சியைச்’ சேர்ந்தவர் தேவர் அவர்கள்.
அவருக்கு நேருவின் காங்கிரஸ் பேரியக்கத்தில் அசைக்க முடியாத நிலையில்
இருந்தவர் காமரஜர் அவர்கள். ஆரம்ப காலத்தில் தேவரும் காமராஜரும்
காங்கிரஸிலேயே ஒன்றாக தொண்டாற்றியவர்கள்தான். இருவரும் அரசியலில்
ஒன்றாக வளர்ந்தவர்கள்தான். கட்சியில் அமைப்பு ரீதியாக செயல்பட்டு
பலப்படுத்துவதில் காமராஜர் வல்லவர். அவர் அறிமுகப்படுத்திய
’கே-பிளான்’ என்பதூ சாதாரண
விஷயமில்லை. இனி வருங்காலத்தில் கூட இன்னொரு தமிழனால் அதை செய்துகாட்ட
முடியாது. உண்மையில் அவர் ‘கிங் மேக்கர்’.
இந்நிலையில் தமிழகத்திற்கு முதல்வராகும்
வாய்ப்பு காமராஜருக்கு வருகிறது. காமராஜர் – தேவர் சந்திப்பானது சென்னை தி.நகர் வீட்டில் நடந்திருக்கிறது.
அப்போது நிர்வாக ரீதியிலான கண்ணோட்டத்தில் பார்த்த தேவர் அவர்கள்,
காமராஜரிடம், ‘அரசியல் தலைவராக யார் வேண்டுமானாலும்
இருக்கலாம். கட்சியின் தலைவராக யார் வேண்டுமானாலும்
இருக்கலாம். எம்எல்ஏவாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.
நம் மனதில் பட்டதைப் பேசிவிட்டுப்போகலாம். ஆனால்,
நிர்வாகம் செய்வதற்கு முறையான படிப்பு படித்திருக்க வேண்டும்.
அதனால் வேண்டாம்’ என கூறியதாக சொல்லப்படுவதுண்டு. முத்துராமலிங்கத்தேவர்
அவர்களும் அதற்கு முந்தைய காலத்தில் ஒரு படிக்காத மேதை யாரையாவது பார்த்திருந்த அனுபவம்
இருந்திருந்தால், ஒருவேளை அவரும் நம்பியிருக்கலாம். இந்த இடத்தில்தான் அவர்கள் இருவர்ருக்குமிடையே சிறிய
இடைவெளி வந்திருக்கலாம். அடுத்து காமராஜர் முதல்வராக இருந்தபோது தேவர் அவர்கள் மீது
கொலைவழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவமும் சில திருப்பங்களை உருவாக்கியிருக்கலாம். இவற்றில்
எது சரி? எது தவறு? ஏன இன்றைக்கு நாம் கண்டிபிடிப்பது மிகவும் கடினம். ஆனால், நான்
அறிந்த வகையில் காமராஜர் – தேவர் அவர்களுக்கிடையே நட்புறவில் எவ்வீத மார்றமூம் இருந்திருக்கவில்லை.
அவர்களுக்கிடையே மனஸ்தாபம், சண்டை என வந்திருந்தாலும் கூட அது நாட்டுக்காக, நாட்டுமக்களின்
நலனுக்காகத்தான் இருந்திருக்கும். நிச்சயமா அவங்கவங்க வீட்டைக்காப்பாத்திக்கிறதுக்கில்ல. பின்னாளில் காமராஜரின் ஆட்சித்திறனைப்பார்த்து,
’என்னய்யா படிப்பு? இத்தனை ஸ்கூல் கட்டிட்டார். இத்தனை அணைகள் கட்டிட்டார். இவ்வளவு
பெரிய தொழிற்சாலைகள் அமைச்சிட்டார்’ என்றெல்லாம் பெருமையாக்க் கருதியிருப்பார். அடுத்து
எதிர்கொண்ட தேர்தலில் எந்தப்பிரச்சினையுமில்லை. ஆனால், எதிரியாக விளங்கிய காங்கிரஸ்
அரசை நீக்க வேண்டும் என்பதுதான் தேவர் அவர்களின் இலக்கு. தேவர் அவர்கள் புதுக்கோட்டை செஷன்ஸ் நீதிமன்றத்தில்
ஆஜராகிவிட்டு, பாராளுமன்றத்தில் 2 ½ மணி நேரம் உரையாற்றிருக்கிறார். அவருடைய இறுதியான நீண்ட உரை அதுவாகத்தானிருக்கும்.
அதனை மிக உன்னிப்பாக நான் கேட்டிருக்கிறேன். தேவர் அவர்கள் அப்படிப்பேசும்போது முதலில்
ரஷ்யா, ஜெர்மனி ஆகியவற்றின் செயல்பாடுகள் என சர்வதேசப்பிரச்சினைகள் பற்றியே பெரும்பாலும்
பேசி, தொடர்ந்து மெல்ல இந்தியாவைப்பற்றிப் பேசுகிறார். ’’இப்படி நாட்டுக்காக, நாடு
நன்றாக விளங்க உழைக்கிறோம். நாட்டை வளர்க்க வேண்டுமென்கிறோம். ஆனால், எங்கள் மீதுதான்
கொலைவழக்கு போட்டு ஆட்சி நடத்துகிறார். கடைசி
இரண்டுநிமிடங்களில்தான் தமிழ்நாட்டைப்பற்றிப் பேசுகிறார். அப்போதுகூட அவர் காமராஜர்
பெயரைக்குறிப்பிடவில்லை. காமராஜர் மீது சந்தேகம் இருந்திருந்தால் அவருடைய பெயரைக்குறிப்பிட்டு
பேசியிருப்பார். அவர் பயந்துபோகக் கூடியவரில்லை. அவர்களுக்கிடையே அரசியல் காழ்ப்புணர்ச்சிகள்
இருந்திருக்கலாம். ஆனால், சுயநலம் இருக்கவில்லை. ஆக, 1970 களுக்கு முன்னால் வாழ்ந்த
தலைவர்களைப்பற்றி அரசியலுக்காக படிக்க வேண்டுமே தவிர, இன்றைக்கு நிலவும் அரசியல் சூழ்நிலைகளைக்
கொண்டு ஒப்பிடக்கூடாது. அவர்களெல்லாம் ஒப்பற்ற மாணிக்கங்கள். காமராஜர் இருந்த காங்கிரஸூம்,
அவர் உருவாக்கிய ஸ்தாபன காங்கிரஸும் பலவீனமான நிலையில் உள்ளன. தேவர் அவர்களின் கட்சியும் பலவீனமாக உள்ளது. ஆனால்,
தேவரும், காமராஜரும் மக்களின் இதய சிம்மாசனத்தில் இன்றைக்கும்கூட அதிக பலத்துடன் அமர்ந்திருக்கிறார்கள்!
----------------------------------------------------------------
No comments:
Post a Comment