ரஜினியின் பரம ரகசியம்
சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய ஒரு பதிவில் ’ கிரியா யோகா’ செய்வதே தன் உற்சாகத்திற்கு காரணம்
எனக் கூறியிருந்தார். ஏற்கனவே தமிழ்நாட்டில் ‘யோகா’ என்பது இந்து மதம் சார்ந்தது என்கிற
கோட்பாடு நிலவுகிறது. பள்ளிகளில், குறிப்பாக அரசுப்பள்ளிகளில் யோகாவை
கற்றுக்கொள்ளலாமா? கூடாதா? என்பதுவரை பிரச்சினையாக எழுப்பப்படுகிறது. யோகாசனம் என்பது ஒருமுறை. அது ஒரு வாழ்க்கைப்பாதை. யோகாசனமானது பல்வேறுவகை ஆசனங்களை உடலால்
செய்வது.
அடுத்ததாக ’பிராணாயாமா’ எனப்படும் ’மூச்சுப்பயிற்சி’. மூன்றாவதாக ‘தியானம்’. திரு.ரஜினிகாந்த் அவர்கள் ’கிரியா யோகா’ என்பது தியானம் செய்வதில்தான் இருக்கிறது
என்கிறார்.
அவரைப்போன்ற உலகப்பிரபலமான ஒருவர் இதுபோன்றுக்
கூறுவதை பிறரை ஊக்கப்படுத்தக்கூடிய கிரியா யோகத்திற்கான விளம்பரத்தூதுவராகத்தான் நான்
பார்க்கிறேன்.
அவ்வாறு அவர் கூறியதில் இன்னொரு தகவலையும் பதிவு செய்கிறார். அதாவது, ’கிரியா யோகாவைச் செய்யத் தொடங்கியபோது எனக்கு பெரிய வித்தியாசம்
தெரியவில்லை.
மெல்ல மெல்லத்தான் எனக்குப்புரிந்தது
இறுதியில் ஒரு சூசகமான ’அது பரம ரகசியம்’ என்றும் பதிவிடுகிறார்.
’சிதம்பர
ரகசியம்’
என்றால் என்னவென யாருக்கும் தெரியாது. அதுபோல், இதிலேயும் ஏதோ ஒன்று ரகசியமாக உள்ளது
போல்!
யாராவது நமக்குச் சொல்லித்தருவார்கள்’ என்று நாம் நினைத்துக் கொள்கிறோம்.
ஆனால், அந்த யோகாவில் தத்துவார்த்தமாக அணுகும்போது
அந்த
‘பரம ரகசியம்’ என்பது முட்டைக்குள் இருக்கும் கோழிக்குஞ்சினுடைய
உயிர்போல்!
பார்வைக்கு அது முட்டை! அதனுள் இருப்பது உயிருள்ள ஒரு கோழிக்குஞ்சு எனப் பார்க்கும்போதுதான்
நாம் நம்புகிறோம். இதேபோல் தான் ‘பரம ரகசியம்’ என்பதுகூட! அந்த ரகசியமானது நமக்குள்ளே இருக்கிறது
என்பதுதான் விஷயமே. அது ரகசியத்தை
வெளியில்
இருந்து யாரும் கூறக் கேட்க முடியாது. நமக்குள்ளிருந்து உணர்ந்து நாமேதான் கண்டுபிடிக்க முடியும்.
திரு.ரஜினிகாந்ந்த் அவர்கள் கூட ஆவருக்கு ‘பாபா’ போஒன்றோர் சொல்லிக்கொடுக்காமலேயே தானே
உணர்ந்து கண்டூபிடித்திருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். போதுவாக யோகா, தியானம் ஆகியவற்றைச் செய்யத் தொடங்கியதுமே, தனக்குள் ஒரு பேரொளி வந்துவிடுமென்றும்,
கடவுளைக் கண்டுவிடலாம் என்றெல்லாம் பலரும் ஆசைப்படுவதுண்டு. சுமார் 20 ஆண்டுகளுக்கும்
முன்னர் எனக்கும் கூட இப்படிப்பட்ட ஆசை வந்ததுண்டு. யோகா செய்யும்பொழுது முதலில் உடல்நலன் அடுத்ததாக
சிந்தனை நலன் இதற்கு அடுத்த நிலையில் தெய்வீகத்தை உணரும் நிலை ஏற்படும். ஆக, இவற்றில்
எந்த நிலையாக இருப்பினும் ஆக்கப்பூர்வமான மேம்பாடு கிடைக்குமென்பதைக்காண்கிறேன். திரு.ரஜினி
அவர்கள் கூறியதைப்போல் இதனை ஒரு நேர்மறைச் செய்தியாக இளைஞர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மீண்டும் ஒரு முறைச் சொல்கிறேன், பரம ரகசியம் என்பது வெள்யிலிருந்து அதனை யாரும் சொல்லித்தரப்போவதில்லை.
ஆனால், யோகா, தியானம் ஆகியவற்றினை தொடர்ந்து பயிற்சி செய்துவந்தால் திரு.ரஜினி அவர்கள்
தன்னுள் உணர்ந்த பரமரகசியத்தை உணர வாய்ப்பிருக்கலாம். இது எந்த ஒரு தனிமனிதருக்கும் சொந்தமானதல்ல. எல்லோருக்கும்
பொதுவானது, அந்த ரகசியத்தை எவர் வேண்டுமானாலும் கண்டுபிடிக்கலாம் என்றே திருமூலர் குறிப்பிடுகிறார்.
பரம ரகசியத்தைத் உணர்ந்து கொண்ட்தன் மூலம்தான் திரு.ரஜினி அவர்கள் சினிமாவில் ஜெயித்திருக்கிறாரா?
என்று கேட்டால், ’இல்லை’ என்றும், ஆனால் அதேவேளையில் கிடைத்த சக்தியைக்கொண்டு தனது
வெற்றிப்பாதையை மெருகேற்றியிருக்கலாம் என்று நம்புகிறேம்.
----------------------------------------------------------------
No comments:
Post a Comment