எல்லாம் இருந்தபோதும்…
’தன்முனைப்பு’ இல்லையென்றால்?
இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 145 கோடி. இதில் சிவில் சர்வீஸ் பதவிகளில் பணியாற்றி வருவோர் சுமார் 25,000 பேர். அப்படியென்றால் அந்த பதவி எவ்வளவு பெரிய முக்கியமானதாக இருக்கிறது? அந்த நிலைக்கு நம்மை நாமே கொண்டு செல்வதற்கு அதிகமாக கஷ்டப்பட்டாக வேண்டும். அதற்கான எண்ணத்தையும், உத்வேகத்தையும் மிக விரைவாக கொண்டு செல்வதற்காக பயிற்சிமையங்கள் செயல்படுகின்றன. இந்த உலகத்திற்கு நல்லது செய்ய வேண்டுமென்றால் வெறும் எண்ணம் மட்டும் போதாது. பணம், பக்தி ஆகியவை தேவை. அதைவிட மிக முக்கியமானதாக இன்னொன்று மிகவும் அவசியம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நம் இந்தியா ஒரு விஷயத்தைக் கையாளவில்லை. அது யாருக்கும் தெரியாமலேயே போயிருந்தது. அது என்ன? 1800 களில் ஆங்கிலேயர் ஒருவர் ஒரு பெயரைச் சூட்டுகிறார். அதன் பெயர் ‘Anthrepermeessive’ . தமிழில் இதன் பொருள் ’தன் முனைப்பு’. எத்தனை வசதி வாய்ப்புகள், வழிகாட்டுதல்கள், அரவணைப்புகள் ஆகிய அனைத்தும் இருந்தாலுமே ’தன்முனைப்பு’ இருந்தால்தான் எதிலும் வெற்றி பெற முடியும். தன்முனைப்புதான் மூளையை சுறுசுறுப்பாக்கும். ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு வழிகோலும். அதன்மூலம் வெற்றிகள் கைவசமாகும். இதன் மூலம் அடுத்துவரும் தலைமுறைக்கு வழிகாட்டும் வாய்ப்புகளை வழங்கும். இதுபோன்று ஒவ்வொரு தலைமுறையும் சங்கிலித்தொடர்போல செல்லும். இது நமக்கு மட்டுமல்ல. உலகத்திற்கே நன்மை பயக்கும். பல்லவ நாட்டைச் சேர்ந்த இளவரசராக இருந்தவர் காஞ்சிபுரத்திலிருந்து சீனாவிற்குச் சென்று அதன் இன்றைய பெருமைக்கும், புகழுக்கும் தன் அளப்பரிய ஞானத்தை ஈந்து வாழ்வித்தவர் ’போதிதருமர்’. அதுபோல எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் நாம் ஒவ்வொருவரும் பிறருக்கு பாரபட்சமில்லாத அன்பையும் ஞானத்தையும் வழங்க நம்மை நாமே தன்முனைப்புடன் முன்னேற்றிக்கொள்ள வேண்டும். இதனை நம் வாழ்நாளின் ஆகச்சிறந்த குறிக்கோளாக கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment