நாட்டுக்கோட்டை செட்டியார் -
நகரத்தார்களின் வரலாறு
நாட்டுக்கோட்டை செட்டியார்கள்
–அவர்கள் நகர்புற விரிவாக்கத்தை மேற்கொண்டவர்கள்.
இன்று சி.ஐ.டி நகர், சி.ஐ.டி.காலனி போன்ற அனைத்துமே சிட்டி இம்ப்ரூவ்மெண்ட் டிரஸ்ட் ஆகும். இதையெல்லாம் நகரத்தார் (செட்டியார்) கட்டமைப்பே. இன்றைக்கும் சென்னையில் மிகவும் பிரபலமான பகுதிகளாக சி.ஐ.டி நகர், சி.ஐ.டி.காலனி ஆகியன அமைந்துள்ளன. ஏன் இத்தகைய கட்டமை செய்தார்கள்? அதற்குக்காரணம் அவர்கள் (நகரத்தார்) எப்பொழுதுமே ஒரு நகர்புற அமைப்பிலேயே வாழ்ந்து பழகியவர்கள். காரைக்குடி உள்ளிட்ட சுற்றுப்புற ஊர்களை நாம் கிராமம் என்று கூறினாலும், அவை அனைத்துமே ஒரு சிறந்த நகர்புற கட்டமைப்பைக் கொண்டவை ஆகும். அது சாலையாகட்டும், செங்குத்தாகவும், வீடுகள் சதுர வடிவமைப்பாகவும் காணப்படும். ஒரு நகரம் என்றால் மக்கள் எப்படி இருக்க வேண்டுமென ஆசைப்படுவார்கள்?
லே-அவுட் எப்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்? அதெற்கு என்ன பணமதிப்பு கிடைக்கும்? சென்னையிலேயே
100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர்களுக்கே எதிர்காலத்தில் சென்னை எந்த அளவிற்கு வளர்ச்சி பெறும் என்று அறியாமல் இருந்தனர். ஆனால், இதனை நகரத்தார் துல்லியமாகக் கணித்திருந்தனர். ஆக, இங்கே (சென்னையில்) காணப்படும் அனைத்து வளர்ச்சிகளுக்கான கட்டமைப்புகளின்
ஆரம்பக்கட்டத்தை முன்னெடுத்தவர்கள்
அவர்களே! அவர்கள் கட்டமைத்த சாலைகள் அனைத்துமே இன்றைய நெரிசலான கடும் போக்குவரத்திற்கும், மக்கள் தொகைப் பெருக்கத்திற்கும்
ஈடு கொடுக்கும் வகையில் அமைத்திருந்தனர்
என்பது ஆச்சரியமான ஒன்று. இதன் மூலம் அவர்களின் கலாச்சார ரீதியிலான நன்மைகள் நமக்கும் வந்து சேர்ந்தது. அவர்கள் மிகச்சிறந்த கடலோடிகள்
(Seafarers) என புகழ்பெற்றதற்கு
அவர்களின் பன்னெடுங்காலத்திற்கும் முந்தைய வரலாற்றுப்பின்னணியின் மூலம் அறிந்து கொள்ளலாம். ’காவிரிப்பூம் பட்டினம்’என்பத நாம் நன்கறிவோம். சித்தர்களில் ஒருவரான ‘பட்டினத்தார்
(எ) பட்டினத்தடிகள்’
இந்த நகரத்தார் சமுதாயத்தைச்சேர்ந்தவர்தான். காவிரிப்பூம்பட்டினம் முன்னொரு காலத்தில் ’கடற்கோளால் (சுனாமி)’ அழிந்தபோது, இனி தங்களின் சந்ததியினர் இதுபோன்று நாசத்திற்கு ஆட்பட்டுவிடக்கூடாது
என்று சிந்தித்து, கடற்கோள் அபாயமின்றி குடியேறி வாழ முடிவெடுத்தனர். அதற்குப் பொருத்தமான ஒரு நிலப்பரப்பைத் தேடினர். ’கடலால் பாதிப்பிருக்கக்கூடாது, எவ்வளவு மழைபொழிந்தாலும் வெள்ளம் ஏற்படக்கூடாது என்றெல்லாம் சிந்தித்து அவர்கள் தேடிக்கண்டுபிடித்த ஒரு நிலப்பரப்புதான் இராமநாதபுரம் பகுதிக்கும், சிவகங்கை நிலப்பரப்பிற்கும் இடைப்பட்ட மிகவும் வறண்ட பூமியான இன்றைய ’காரைக்குடி’ பகுதி! இதற்குக் காரணம், ‘தொழில்ரீதியாக குடும்பத்தைப்பிரிந்து நாம்தான் பலமாதங்கள் கடல்பயணம், அந்நியமண்ணில் வசிப்பது என எப்போதும் உயிருக்கு உத்திரவாதமற்ற நிலையில் வாழ்கிறோம். நாம் ஈட்டும்பொருளை நம் குடும்பத்தினருடன்
சேர்ந்து சிலகாலமேனும் அனுபவிக்கவும், குறைந்தபட்சம் நம் சந்ததிகளாவது பாதுகாப்பாக வாழட்டும்’ என ஒரு மேடான இடத்தைத்தேடிச் சென்று தங்கள் வாழ்விடத்தை அமைத்துக்கொண்டனர். நகரத்தார் பெருமக்களின் நாட்டுப்புறக்கதை
என்ன செல்கிறதென்றால்,
அவர்கள் தங்கள் வாழ்விடத்தைத் தேடியபோது, அக்காலத்தில் இராமநாதபுரம் மன்னர் சேதுபதி அவர்களின் ஆளுகைக்கு இன்றைய காரைக்குடிப்பகுதி
உட்பட்டிருந்ததாகவும், நகரஹ்தர்களின் கோரிக்கைக்கு இணங்கி அவர்களுக்கு ’எட்டு குடிகள்’ என்னும் அளவில் ஒப்புதல் அளித்திருக்கிறார். அதன்படி அவர்களின் ஒன்பது வகையான குலதெய்வங்களுக்கு
கோவில்கள் எழுப்பி, அவற்றை மையமாகக் கொண்டே அவர்கள் வாழ்க்கையின் அடுத்தக்கட்ட பயணத்தைத் தொடரத் தொடங்கினர். இன்றைக்கு நாம் ஓட்டல்களுக்குச்
சென்றால், ’ காரைக்குடி சிக்கன், சில்லிசிக்கன்,
காரைக்குடி மட்டன்’ என சைவ, அசைவ வகைகளில் என்னென்ன உண்டோ அவை அனைத்திற்கும்
’காரைக்குடி’ என்னும் அடைமொழியுடன் மிகவும் பிரபலமானவை. அதென்ன காரைக்குடிக்கு மட்டும் இப்படி ஒரு சிறப்பு? இதற்கான காரணம் என்னவென்று சிந்தித்தபோது, அதே நகரத்தார்
சமூகத்தைச் சேர்ந்தவரான கவியரசு கண்ணதாசன் அவர்களின் எழுத்துக்களிலிருந்து நான் அறிந்ததை
இங்கே பார்க்கலாம். நகரத்தார் சமூகம் கடல்கடந்து வாணிபம் செய்வதில் வல்லவர்கள் என்று
ஏற்கனவே கண்டோம். அவர்கள் கடல்கடந்து வாணிபம் செய்துவிட்டு மீண்டும் தங்கள் சொந்த ஊருக்குத்
திரும்பிவரும்பொழுது, தங்கள் வீட்டில் குறைந்தது இரண்டு, மூன்று மாதங்கள் குடும்பத்தாருடன்
மகிழ்ச்சியோடு நேரத்தைச் செலவிடுவார்கள். அவர்கள் தங்களுடன் வாணிபம் செய்யும் குடும்பத்தாரையும்
இணைத்துக்கொண்டு, தினமும் காலையில் ஒரு பங்களாவில் ஒன்று கூடுவர். ஒருபக்கம் ‘சீட்டு
விளையாட்டு’ தொடர்ந்து மும்முரமாக ஓடிக்கொண்டிருக்கும். இன்னொருபக்கம் மணமணக்கும் உணவு
தயாராகிக்கொண்டேயிருக்கும். அப்படி உணவு தயாரிக்கும்பொழுது தினந்தோறும் ஒரே சுவையிலான
சாம்பாரையும் ரசத்தையுமே சாப்பிட முடியுமா? அதனால், அவற்றில் பலவகைகளில், பல சுவையுடன்
சமைப்பார்கள். ரசத்தில் மட்டும் குறைந்தபட்சம் பத்துக்கும் மேற்பட்ட சுவையுடையதாக சமைப்பர்.
அசைவத்திலும் இப்படித்தான்! ஒரே மாதிரியான சுவையுடன் சிக்கன், மட்டன், மீன் போன்றவற்றை
சாப்பிட்ட முடியுமா? ஆகவே, அவற்றிலும் விதவிதமான மசால் கலவையுடன், புதுப்புதுச் சுவையுடன்
சமைத்து உண்பர். மாலை வேளையில் பல்வேறு இனிப்பு, காரவகைகள் என பட்டியல் நீளும். இப்படி
உணவு உண்பது சலித்துப்போய்விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு
புதுப்புது உணவு வகைகளை சமைத்திருக்கிறார்கள். இப்படி சுழற்சி முறையில் ஒவ்வொரு பங்களாவிலும்,
வெவ்வேறு சமையல்காரர்கள் , அவர்கள் கைப்பக்குவத்தில் ஏராள ரகங்கள்! செட்டிநாட்டு குடும்பத்தலைவியரை
‘ஆச்சி’என்றழைப்போம். அவர்கள் நட்சத்திர உணவு விடுதிகளின் தலைமை சமையலாளர் (Chief
cook) போன்றுதான். அவர்கள் எதையும் தொடமாட்டார்கள். தேவையான கட்டளைகளைப் பிறப்பிப்பதோடு
சரி. அந்த கட்டளைகளின்படி பிறப்பெடுத்தவையே இன்றைக்கு நாம் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும்”செட்டி
நாட்டு உணவு வகைகள்” ஆகும். நகரத்தார் வணிகர்கள் அவர்கள் கடல்கடந்து பயணித்தபோது பர்மாவிலிருந்து
தேக்கு, இத்தாலியிலிருந்து மொசைக், பெல்ஜியமிலிருந்து கண்ணாடி ரகங்கள் இப்படி உலகின்
பல தேசங்களில் தாங்கள் கண்ட மிகச்சிறந்தவற்றை தெரிவு செய்து இங்கு கொண்டுவந்தனர். ஒரு
மன்னரின் வாழ்க்கைத்தரம் எப்படியோ அதேபோன்று தங்களின் குடும்பத்தின் தேவைகளையும் அதற்கு
சரிசமமாக நிர்வகித்திருந்தனர். நகரத்தார் சமூகத்தில் ஆச்சரியப்பட்த்தக்க ஒரு விஷயம்
என்னவென்றால், வாழ்க்கைத்தரத்திலும், பொருளாதார பலத்திலும் கொடிகட்டிபறந்தபோதும் அவர்கள்
ஒருபோதும் அரசியல் செல்வாக்கிற்காக வெகுவாக ஆசைப்பட்டதில்லை. அவர்கள் எண்ணியிருந்தால்
மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை எழுப்பியிருக்க முடியும். ஆனாலும், அவர்கள் தமிழகத்தில் பெரும்பாலன
விஷ்யங்களில் அவர்கள் முன்னோடியாக விளங்குபவர்கள். வரலாற்றின்படி சோழர்களின் மிகப்பெரிய
வணிகப்பிரிவின் ஆளுமையாக இருந்திருக்கிறார்கள். இவர்களின் அருமையை நான் அதிகம் அறிந்த
காரணத்தாலேயே என்னுடைய வலைப்பக்கத்தில் (வலைப்பக்க முகவரி: ) ’maritime
dynasty’ என்று பதிவு செய்துள்ளேன் எனக்கு
மட்டற்ற மகிழ்ச்சி.
----------------------------------------------------------------
No comments:
Post a Comment