சைவப்பிள்ளை, முதலியார், ரெட்டி-
சமூகங்களின் வரலாற்று விளக்கம்
இன்று தமிழகத்தில் வாழும் பல்வேறு சமுதாயங்களைப்பற்றி
அவ்வப்போது வெளியிட்டு வருகிறேன். அவ்வாறு வெளியிடுகையில், அந்தந்த சமூகங்களின் பெருமைப்படத்தக்க
மாண்புகளை மட்டுமே குறிப்பிடுவது வழக்கம். அதில் கிடைக்கும் புதிதான நல்ல தகவல்கள் பிற சமுதாயத்தினரும் அல்லது தனி நபர்களும் அறிந்து கொள்ள வேண்டுமென்கிற ஒற்றைக்காரணமன்றி
வேறில்லை. தமிழகத்தில் சைவம் X அசைவம் என்கிற உணவு முறைகளில், அசைவ உணவு முறையை வெகுவாக ஆராதிக்கின்ற பிராந்தியங்களாக மதுரை, திருநெல்வேலி, சென்னை பெருமாநகரம் ஆகியன இருப்பதுபோல், தற்போது கோவைப்பகுதியிலும் (கொங்கு வட்டம்) விடுமுறைநாட்களில்
பெரும்பாலான நண்பர்களின் தோட்டங்களிலும் ‘கிடா வெட்டு’ பிரசித்தி பெற்று விட்டது என்றே கூறலாம். இப்படிப்பட்ட தமிழக அசைவப்பரம்பரைகளில் ’சைவம்’என்கிற வாழ்வியலுடன் மூன்று சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர்! திருநெல்வேலி முதல் மதுரை வரையிலும் உள்ள பகுதிகளில் ‘சைவப்பிள்ளை’ என்று ஒரு சமுதாயம் உண்டு. இவர்கள் ஒருபோதும் அசைவம் சாப்பிடுவதில்லை. ‘பிள்ளை’ சமூகத்திலேயே ‘அசைவ உணவுப்பழக்கம்’ உள்ள பிரிவினரும் இருக்கின்றனர்.
இவர்கள் பிள்ளை சமூகத்தவர்களாக இருப்பினும் இந்த இருபிரிவினரும் தங்களுக்கிடையே திருமண பந்தத்தினை ஏற்படுத்திக்கொள்வதில்லை. இதேபோல் ஆற்காடு போன்ற பகுதிகளில் ‘சைவ முதலியார்’, இதேபோல் திருநெல்வேலி பகுதியிலும், தென்னாற்காடு பகுதியிலும் ‘சைவ ரெட்டியார்’ என்கிற சமூகத்தவர் வாழ்கின்றனர். பிராமணர்களைப்பொறுத்தவரை அவர்கள் சைவர்களாக இருப்பதற்கான கருத்தாக்கங்கள் பல உண்டு. வேதகாலத்தில்
(தமிழகத்தின் சங்ககாலத்திற்கும்
சற்று முற்பட்ட காலம்) பிராமணர்கள் அசைவம் சாப்பிட்டார்களா?
என்றால் ‘ஆம். சாப்பிட்டார்கள்’என்றே சொல்ல வேண்டும். அக்காலகட்டத்தில் எல்லோருமே அசைவம் சாப்பிட்டனர்.
ஆகவே அவர்களும் சாப்பிட்டனர். வேதகாலத்தின் நிகழ்வுகள் அனைத்துமே இமயமலை உள்ளைட்ட வட இந்தியப்பகுதிகளை
சார்ந்துதான். வேதத்தின் பயன்கள் நம்மை வந்து சேர்ந்திருக்கின்றன. அந்த காலகட்டத்தில் அசைவம் சாப்பிட்ட பிராமணர்கள் திடீரென இந்தியா முழுவதும் சைவத்தை நோக்கி நகர்ந்தனர். ஒவ்வொரு நகர்தலும் வித்தியாசமாக இருந்தன. இன்றைய ’கொல்கத்தா’வைச் சேர்ந்த பிராமணர்கள் ‘மீன் உணவு’ எடுத்தனர். அதற்கு அவர்கள் இட்ட பெயர் ‘சமுத்திர புஷ்பம் (கடல் பூ)’. ஆனால், தென்னிந்திய பிராமணர்கள் மிகவும் ‘ஆச்சாரமானவர்கள்’ என்றே கூறலாம். இவர்கள் சைவத்தின் உச்சநிலையில் வாழ்பவர்கள். ஆக, ஒரே ஜாதியிலேயே ஒரு பிரிவினர் சைவர்களாகவும், இன்னொரு பிரிவினர் அசைவர்களாகவும் மாறினர்? முக்குலத்தோர்,
கவுண்டர், வன்னியர் போன்ற சமுதாயங்களில் எனக்குத்தெரிந்து ‘சைவர்’ என்கிற பிரிவு எனக்குத்தெரிந்தவரை ஒரு ஜாதியாக இல்லை. இதற்கெல்லாம் என்ன காரணம் என்னவென சில சமூகநலச் சிந்தனையாளர்கள் இந்தியா முழுமையையும் அலசுகிறார்கள்.
அதில் அவர்கள் கண்டறிந்த ஒரு விஷயம்தான் ’சம்ஸ்கிருத தோற்றப்படுகள் (Sanskrit phenomena - (Sanskritization)’! இது எம்.எஸ்.ஸ்ரீநிவாஸ் கூறிய வார்த்தை: ’சைவர்களாக இருப்பதால்தான் பிராமணர்களுக்கு தனித்துவமான மரியாதை இருக்கிறது. சைவ உணவில் ஒரு தூய்மை இருக்கிறது, சைவ உணவு சாப்பிடுவதால் சாதுவான குணாதிசயங்களோடு
இருக்கலாம். மூர்க்க குணம் இருக்காது’ போன்ற சிந்தனையின் மூலக்கூறுகளாகும். இந்த கருத்தியல் சரியா? தவறா? என்பது விரிவான விவாதத்திற்குட்பட்ட
விஷயமாகும். ஆக இவர்கள் ‘இப்படிச் செய்வதனால் இவர்களுக்கு இப்படி தனித்துவமான மரியாதை கிடைக்கிறது. இதேபோல் நாமும் செய்தால் நமக்கும் அத்தகைய மரியாதை வந்துவிடுமல்லவா?’ என்று யோசிக்கத்தொடங்கியதால் ஆங்காங்கு வாழ்ந்து கொண்டிருந்த சமூகங்களில் ஒரு பங்காளி குழு, சிற்சில கிராமங்கள் ஒரே கோயில் வாழிபாடு கொண்டவர்கள் திடீரென தங்கள் உணவுப்பழக்கத்தை மாற்றிக்கொண்டுள்ளனர். இதனை ஆங்கிலத்தில் ‘Sanskritization (சமஸ்கிருதமயமாக்கல்)’ என்று கூறுவர். சம்ஸ்கிருதம் என்றாலே பிராமணர்களைக் குறிப்பிடுமாகையால் அவ்வாறு பொருள் கொள்ளப்படுகிறது.
அவ்வகையில் தமிழகத்தில் சைவர்களாக மாறியவர்கள்தான்
இந்த மூன்று சைவப்பிள்ளை, முதலியார், மற்றும் ரெட்டியார் சமுதாயத்தினர் ஆவர். இதனால் என்ன பயன்? நாட்டுக்கோட்டை செட்டியார்களுக்கு இணையாக
இவர்கள் திருநெல்வேலியிலிருந்து அளிக்கும் சைவ உணவுவகை ஏராளம். அனைத்து சமுதாய்த்தினருக்கும் இது வித
பயன்தானே?!
ஒரு ஜாதியில் ஒரு பிரிவினர் சைவராக
மாறும்போது ஆம்லெட்டில் கூட ‘’சைவ ஆம்லெட்’ என்று ஒரு ரகம் பிறக்கிறது! ஆக, இதுதான் சைவைப்பிள்ளை, சைவ முதலியார், சைவ ரெட்டியார் போன்ற சமூகங்களின் கதையாகும்.
No comments:
Post a Comment