GenZ நினைத்தால் எல்லாம்
சாத்தியமா?
ஒவ்வொரு தலைமுறைக்குமே ‘கலாச்சாரம்’ என்பது மாறுபட்டுக்கொண்டே இருக்குமென்பது இயல்பான ஒன்றாகும். இத்தகைய மாற்றமானது மரபணு சார்ந்து ஒருபுறமும், அவரவர் பெற்ற அனுபவத்தின் அடிப்படையிலும் சிறு சிறு அளவில் மாறக்கூடும். 1900 ஆம் ஆண்டுவாக்கில் இருந்த தலைமுறையானது The Greatest Generation (தி கிரேட்டஸ்ட் தலைமுறை) ஆகும். 1920 களிலிருந்து The Silent Generation (அமைதியான தலைமுறை). அது அதிகமான போர்கள் நிகழ்ந்த காலமாகும். 1940 களில் இருந்த தலைமுறை ‘Baby Boomer (பேபி பூமர்)’ என்றழைக்கப்பட்டது. (இக்காலத்தில் Boomer Uncle (பூமர் அங்கிள்) என்கிற வார்த்தைப் பிரயோகம் பரவலாக பிரபலமாகியிருக்கிறது!) இரண்டாம் உலகப்போர் முடிவிற்கு வந்தபின் உலகின் அனைத்து சமுதாயங்களும் தங்களை மறு கட்டமைப்பு செய்து கொள்கின்றன. போரினால், மக்கள் தொகை வீழ்ச்சி கண்டவுடன் ‘அதிகமாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்கிற எண்ணம் மேலோங்கியது. அதன்படி அதிகமாக குழந்தை பிறப்பு நிகழ்ந்தது. இதுவே Baby Boom [பேபி பூம்] என்று அழைக்கப்பட்டது. (Boom- ஏற்றம், செழிப்பு) அந்த வகையில் அன்று பெருகிய மக்கள் தொகை இன்றுவரை குறையவேயில்லை. அதன்பிறகு பேரழிவு தரக்கூடிய போர்கள் எதுவும் நடக்கவில்லை. அடுத்ததாக 1960- 80 காலகட்ட தலைமுறை Gen X என்றும், இதேபோல் 1980- 1996 க்குள் பிறந்த தலைமுறை Gen Y என்றும் வகைபடுத்தப்பட்டனர். 1996 க்குப் பிந்தைய தலைமுறை அதாவது இன்று பிரபலமாகப் பேசப்படக்கூடிய GenZ ஆகும். இந்த GenZ தலைறையினரிடத்தில் நாம் காணும் மிகவும் ஆச்சரியமான அம்சம் எது என்றால், இவர்களிடத்தில் தகவல்கள் அபிரிதமாகக் கொட்டிக்கிடக்கின்றன. கணினி சம்பந்தமான திறன்மேம்பாடு முதல் இன்னும் பல்வேறு நுட்பமான விஷயங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால், உணர்வுசார் நுண்ணறிவு [எமோஷனல் கோஷியண்ட் (Emotional Quotient)] மிகவும் மோசமான நிலையில் அதலபாதாளத்தில் உள்ளது. இந்த உலகத்தில் பணம்தான் முக்கியம், அதிகாரம்தான் முக்கியம் என்கிற சிந்தனையும், யாரைப்பற்றியும், எதைப்பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்ளாத மனோபாவமும், தனிப்பாதை அமைத்துகொண்டு தன் போக்கில் போகும் நடத்தையும் GenZ தலைமுறையினரிடத்தில் மிதமிஞ்சி காணப்படுகிறது. இவர்கள் பள்ளி, கல்லூரி வாழ்க்கை, குடும்பத்தில் பெற்றோர், உடன்பிறந்தோர், மற்றும் உறவினர்கள் போன்ற அனைவரிடமும் இவர்களின் அணுகுமுறை இதே அளவீட்டில்தான் இருக்கிறது. என் வயதொத்த தலைமுறையின் சிறுவயதில் குடும்பத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைக்கு ஆசையுடன் ஏதாவது சாப்பிடக்கொடுப்பர். அவ்வாறு கொடுக்கும்போது யாரும் மனம் கோணாதபடி அனைவருக்கும் பகிர்ந்து தருவர். எல்லோருடனும் ஒத்துப்போக வேண்டும் என்பதோ, எல்லோரும் ஒன்றாக கூடி வாழும் கூட்டு சமூகவாழ்வியல் மேற்கொல்ள வேண்டுமென்பதோ இல்லாமல் போய்விட்டது. ஆனால், இவர்களுக்கு எமோஷனல் கோஷியண்ட் (Emotional Quotient) என்பது இவர்களின் வருங்காலத்தில் நிச்சயம் வரத்தான் செய்யும். இப்படிச் சொல்வதால் அவர்கள் எதையுமே பொருட்படுத்துவதில்லை என்று நான் கூறுவதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அவர்கள் என்னதான் தகவல்களை அதிகளவில் தெரிந்து வைத்திருந்தாலும், விஷயதாரிகளாக இருந்தபோதிலும் சாதாரண விஷயத்திற்குக்கூட ‘மன அழுத்தம்’ அதிகமாகிவிடுகிறது. அந்த மன அழுத்தத்தினைப் போக்க வடிகால் எதுவென தீர்மானிப்பதில் தவறிழைத்து விடுகின்றனர். இவர்களின் நட்பு வட்டம் மற்றும் உறவினர் வட்டம் என்பதெல்லாம் விசாலமானவை அல்ல. அவை மிகவும் குறுகிய வட்டத்திற்குள்ளே சுருங்கிப்போய்விட்டன. ’நட்பு’ என எடுத்துக்கொண்டால் குறைந்த்து 20 அல்லது 25 நண்பர்கள் இருந்தால் ஒருவர் இல்லாவிட்டால் இன்னொருவரின் அனுசரணை, ஆறுதல், ஆதரவு போன்றவை கிடைத்துவிடும். ஆனால், இவர்களின் நெருங்கிய நட்பு வட்டம் என்பதே 2 அல்லது 3 பேர் மட்டும் என்பதாகிவிட்டது. இதனால், இந்த குறுகிய வட்டத்தில் தன் மன உணர்வுகளின் வெளிப்பாடுகளை சமன் செய்து கொள்ள அல்லது சீர் செய்து கொள்ள வாய்ப்பு கிட்டுவது அரிதாகிவிட்டது. குடும்ப ரீதியில் எடுத்துக்கொண்டாலும் இதேநிலைதான். அவர்கள் பெற்றோரின் இருதரப்பு குடும்பத்தினர் சார்ந்த ஒன்று அல்லது இரண்டு குடும்பங்கள்தான் இருக்கின்றனர். ஆகவே அவ்வகையிலும் சரியான கட்டுப்பாடுகளோ, வழிகாட்டுதல்களோ கிட்டுவதில்லை. ’எந்த விஷயத்திலும் நான் இப்படித்தான் செய்வேன், இதுதான் எனக்குப்பிடிக்கும், என்னால் ஒத்துப்போக முடியாது. நீ உன் வழியைப்பார்த்துக்கொள். நான் என் வழியைப்பார்த்துக்கொள்கிறேன்’ என துளியும் கவலையோ, வருத்தமோ இல்லாமல் கூறிவிடுகிறார்கள். இதுதான் GenZ தலைமுறையின் பழக்கமாக இருக்கின்றது. சமூகவியலில் ’சைக்கிளிக் தியரி (Cyclic theory)’ (சீனமாடல்) அதாவது ‘In and on’ என்பர். இவர்களின் இந்த அணுகுமுறையானது ஆல்ஃபாவிலோ அல்லது பீட்டாவிலோ மீண்டும் எமோஷனல் நிலைக்கு வருவார்கள் என்றே நான் கருதுகிறேன். பணிவு இல்லாமை, அலட்சியமான போக்கு ஆகியன இவர்களிடம் நிறைந்திருப்பதால் அவர்களை தங்கள் பணியாளர்களாக நியமித்து வைத்திருக்கும் நிறுவனங்களே இவர்களைக் கண்டு அலறக்கூடிய நிலையில் உள்ளனர். காரணம், GenZ மீது தேவையான மற்றும் நியாயமான கடுமை காட்டினால்கூட அவர்கள் ஒழுங்காக வேலைக்கு வருவதில்லை. ஏனெனில், அவர்களுக்கு வருமானம் தேவைப்படுவது இல்லை. காரணம் குடும்பமே இல்லாமல் இருக்கின்றரே! ஆகவே, இப்படிப்பட்டவர்களை எப்படி ஊக்கப்படுத்துவது? கடமைகளை சரிவரச் செய்வதற்கு எப்படி குறிக்கோள்படுத்துவது என்றெல்லாம் நிறுவங்கள் திணறிக் கொண்டிருக்கின்றன. GenZ- ஐ தக்க வைத்துக்கொள்ளவும் வேண்டும், திட்டவும் செய்ய வேண்டும், அவர்களிடம் வேலையையும் வாங்க வேண்டும்! ஆனால், என்ன செய்ய வேண்டும் என்பது மட்டும் தெரியவில்லை. தனிமனித அணுகுமுறையில் ஏதுவும் கலந்துரையாடால் இருப்பதில்லை. சமீபத்தைய தமிழக சட்டமன்றத்தேர்தலில் GenZ –யின் பங்களிப்பு மிகவும் அதிகம். ஆட்சி மாற்றம் நடந்து உண்மையில் நினைத்தது நிறைவேறினால், அவர்கள் வெற்றி பெற்றவர்களாவர்கள். காதலித்து வீட்டிற்குத்தெரியாமல் எங்கோ ஓடிச்செல்வது மட்டுமே வெற்றி ஆகாது. ஓடிச் சென்றவர்களே வாழ்ந்து காட்டி விட்டால் அதுவே வெற்றி ஆகும். இதனை சமுதாயம் காத்திருந்து அவர்களைக் கவனிக்கும். அவர்களின் பார்வையில் அந்தக் காதலர்கள் சாதித்தால் அதுவே அவர்களி வெற்றி. கோபத்தை வெளிப்படுத்துவது மட்டுமே வெற்றி என்று ஆகி விடாது. நேபாளம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் நடைபெற்ற GenZ –யினரின் செயல்களால் அவற்றின் கட்டமைப்புகளில் என்ன மாற்றம் நிகழ்ந்து விட்டது? வன்முறை செய்வது மட்டுமே மாற்றம் கொண்டுவந்து விட்டது என்று கருத முடியாது. அதற்குப்பின் எந்த மாதியான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்?
ஒரு விஷயம் நல்லதோ, கெட்டதோ உலகத்தில் நடைபெறும் எல்லாவகை மாற்றங்களுமே இளைய சமுதாயத்தினரால்
நிகழ்ந்தவையே. கம்யூனிஸ் சிந்தாந்தம் நுழைந்ததும், அது சுவடு தெரியாமல் போனதும் ஆகிய இரண்டுமே இதே இளைய தலைமுறையினரால்தான். இந்தியாவில் புத்தமதம் ஓங்கியதும், பின்னர் அது வீழ்ச்சியுற்று இந்து தழைத்தோங்கியது ஆகிய இரண்டுமே இளைய தலைமுறையினரால்தான். தமிழகத்தில் 1960
களில் நடைபெற்ற ‘இந்தி எதிர்ப்பு போராட்டம்’ என்கிற விஷயத்தை முன்னெடுத்தது திமுக தான் என எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மை அதுவல்ல. அது தன்னெழுச்சிப்போராட்டம். அது அக்காலத்தைய இளைஞர்களின் போராட்டம். உண்மையில் சொல்லப்போனால் 1944
–இல் அதே போராட்டம் நடந்திருக்கிறது.
ஆனால், திமுக என்னும் கட்சிதொடங்கப்படவேயில்லை. இளைஞர்களின் சிந்தனையில் ‘என்ன இந்தி? ஏன் அது?’ என்று அவர்கள் சிந்தனையில் தோன்றியது. அதனால் அவரகள் எல்லோரும் ஒன்று சேர்ந்தனர். அவர்களின் போராட்ட முன்னெடுப்பிற்கு அரசியல் ரீதியில் ஆதரவளித்தது. கலைஞர் திரைக்கதை வசனம் எழுதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பரபரப்பான வெற்றிபெற்ற திரைப்படமான ’பராசக்தி திரைப் படத்தின் காட்சியமைப்புகளில்
மிக நுட்பமாக வேறுபடுத்திக் காட்டியிருப்பர்.
முக்கிய கதையோட்டத்தையும்,
மாணவர்களின் போராட்டம் சம்பந்தமான காட்சியோட்டத்தையும்
ஒன்றோடு ஒன்றாக கலக்காமல், ஆனால், அதே வேளையில் கையோட்டத்தில் இணைத்து அமைத்திருப்பார்கள். அவர்கள் ’நாங்கள்தான் (திமுக) மாணவர் போராட்டத்தை முன்னெடுத்தோம்’ என்று சொல்லிக்கொள்ளவேயில்லை! இதுபோன்ற விஷயத்தைதான் சமீபத்தைய தேர்தலில் நாம் கண்டோம். பொதுவாக அரசியல் மீதும், அரசியல்வாதிகள் மீதும் GenZ
தரப்பிற்கு கடுமையான கோபம் உள்ளது. சமூகவலைதளங்களின் தாக்கத்தால் நிறைய செய்திகளைக் கிரஹிக்கின்றனர். அதீத தொழில்நுட்பத்தை அறிந்து கொண்டு, டிஜிட்டல் உலகின் வேகத்திற்கு ஈடு கொடுக்கிறார்கள்
அல்லவா? அதனால், வழக்கமான (திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளின்) அரசியல்வாதிகள் யாரெல்லாம் ‘தாம்தூம்’ என்றிருந்தார்களோ
அவர்கள் எல்லோரும் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். காரணம், இந்த GenZ பிரிவினரோடு
Alpha பிரிவினரும் சேர்ந்துவிட்டனர்.
அவர்களுக்கு வாக்களிக்கும் வயதும் உரிமையும் இல்லாதபோதும், பெரியோர்களை தாங்கள் நினைத்த கட்சிக்கு வாக்களிக்கசெ செய்யும் வல்லமை அவர்களிடத்தில் இருக்கிறது. திமுக, அதிமுகவில் கூட, அவர்கள் தங்களின் பதவிகாலத்தில் ஓரளவு சரிவர தங்கள் பணிகளைச் செய்தவர்கள் பலரும் தேர்தல் வெள்ளத்தில் தப்பித்து கரையேறியிருக்கின்றனர். ஆனால், தங்கள் பணிகளை சரிவரச் செய்யாதவர்கள்,
அதீத ஆடம்பரத்தை வெளிப்படுத்தியவர்கள், லஞ்சம் வாங்கும் செயல்களை வெளிப்படையாக ஊக்குவித்தவர்கள்,
தேர்தலில் மக்களை தங்களுக்கு வாக்களிக்க வைப்பதற்காக அதிக பணம் கொடுத்தவர்கள் என பலரையும் தோற்கடித்துவிட்டனர். ஆக் அவர்களின் கோபம் என்பதெல்லாம் ஒரே சீராக, ஒரே மாதிரியாக இருக்கவில்லை.
திமுக மீது கோபம் எனில் 1996
–இல் ஆனதுபோல் 230 தொகுதியிலும் சரிந்திருக்க வேண்டும். திமுக அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்கள் இப்போதுகூட சுமார் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கின்றனரே!? அவர்களின் கோபம் ரிலேடிவாக் மாறுகிறது! GenZ – யில், ‘நீ எனக்கு தருகின்ற பணம் இங்கே நீ கொள்ளையடித்த பணம். ஆகவே, உன்னை தேர்தலில் தோல்வியடயச் செய்கிறேன்’ என்பதே அவர்கள் நோக்கம்.
GenZ – யின் கோப வெளிப்பாட்டின் தாக்கம் இந்த அளவிற்கு நடந்திருக்கிறது. இதனாலேயே கட்சிகள் பலவற்றாலும் நிகழப்போகும் மாற்றத்தை கணிக்க முடியாமல் போனது. உதாரனமாக, ஒரு தொகுதியில் ஒரு வேட்பாளர் ரூ.3,000 தந்தார். வேறொருவர் ரூ.6,000
தந்துள்ளார். இன்னொரு வேட்பாளர் எதுவுமே தரவில்லை. இறுதியில் ரூ.3000/- கொடுத்தவர் வெற்றிபெறுகிறார். வேறு தொகுதியில் ரூ.3000/-
த்தை தந்திருக்கிறார்.
இன்னொருவர் ரூ.1000/-
த்தைத் தருகிறார். வேறொருவர் எதுவுமே தரவில்லை. இந்தத்தொகுதியில்
பணம் எதுவுமே தராத வேட்பாளர் வெற்றி பெறுகிறார். இவ்விஷயத்தில் ரிலேட்டிவான GenZ
–யின் அணுகுமுறையை நம்மால் காணமுடிகிறது.
அவர்கள் திமுகவ்விற்கு எதிர்ப்பு, அதிமுகவிற்கு எதிர்ப்பு என்கிற நிலைபாட்டை எடுக்கவில்லை.
அந்தந்த வேட்பாளர்கள் ரீதியாகவும் வினையாற்றி இருக்கின்றனர் என்பதும் புரிகிறது. இவர்கள் சமூக வலைதளங்களின் செய்தித்தரவுகளைப் பார்த்துப் பார்த்து தொடர்ந்து இப்படித்தான் அரசின் செயல்பாடுகள் சரியில்லை என்கிற கோபத்தில் முடிவெடுத்துள்ளனர். இப்போது தமிழக வெற்றிக்கழகத்திற்கு
மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. ஏனெனில் இவர்களின் எதிர்பார்ப்பை எப்படி தமிழக வெற்றிக்கழகம் பூர்த்தி செய்யப் போகிறது? அரசு நிர்வாகத்தை சீர் செய்வது ஒருபக்கம்; லஞ்ச லாவண்யத்தை ஒழிப்பது மறுபக்கம் இவை இரண்டையும் தமிழக வெற்றிக்கழகம் செய்யத் தவறினால், ‘நான் உன்னை நம்பி ஓட்டுப்போட்டேன். ஆனால், என் நம்பிக்கையை காப்பாற்றிக்கொள்ளவில்லை’ என முடிவெடுத்து, கோபத்தில் தவெகவிற்கு எதிராக திரும்பி விடுவர்.
தவெகவின் தேர்தல் அறிக்கையைப்பார்த்து GenZ தரப்பினர் வாக்களிக்க வில்லை. சமூக வலைதளங்களில் வீடியோக்களைப் பகிர்ந்ததன் மூலம்தான் ‘தவெக வெற்றிபெற்றது’
என்கிற ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அதன் உண்மைத்தன்மை என்ன என்பது அரசியல் ரீதியாக பார்க்க வேண்டிய தனி விஷயம். ஆனால் அந்த வீடியோக்களைப் பார்த்து, ‘இப்படியெல்லாம் அநியாயம் நிகழ்கின்றன. இதை எப்படி சரி செய்வது? அப்படியானால் யாருக்கு ஓட்டுப்போடுவது?’
என்கிற தேடலின்போது ஒரு புதுமுகம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது.
அப்போதுதான் தென்பட்டவர்தான்
‘நடிகர் விஜய்!’.
Red Parrot – இன் மூலம் ’விஜயின் ரசிகர்கள்’ என நாம் கணித்தது 10% - 12% வாக்குகள் மட்டுமே. கூடுதலாக வந்த 23% வாக்குகள் அனைத்துமே 30 வயதிற்குட்பட்ட பிற GenZ
வாக்களர்கள் பதிவு செய்தவை. இதே தேர்தலில் குழந்தைகள் குழந்தைகள் கூறியதால் ஒரு பிரிவினர் வாக்களித்ததாகக்
கூறப்படுகிறது. இந்த வாக்கு சதவீதமானது சுமார் 4% இருக்கக்கூடும் என நம்புகிறேன். இது சம்பந்தமாக வழக்குகூட பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரவர் வீட்டிற்குள் குழந்தைகள் தங்கள் பெரியோர்களை நிர்பந்தித்து வாக்களித்ததாக கூறியிருந்தால் அதில் ஏதும் பிரச்சினை இருக்கவில்லை. ஆனால், ஒரு அரசியல் கட்சி குழந்தைகளை உளவியல் ரீதியில் தாக்கம் செய்து, அவர்களின் நிர்பந்தத்தினால்
அவர்களின் குடும்பப் பெரியோர்களை தங்கள் கட்சிக்காக வாக்களிக்கச் செய்ய வைப்பது அநேகமாக கிரிமினல் குற்றமாக இருக்கக்கூடும்.
ஆனால், சட்ட ரீதியாக எந்தளவிற்கு பாதிக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. இதுநாள்வரை ஜாதி, மதம், பணம் என்பதையெல்லாம் கருத்தில் கொண்டு வாக்களித்த மக்கள் இப்போது தங்கள் குழந்தைகளின் தூண்டுதலால் வக்களித்துள்ளதாக
அறியப்படுகிறது. இந்த விஷயத்தை ஆய்வு கோணத்தில் அணுகும்போது நான் இரண்டு விதங்களைப் பார்க்கிறேன்.
பொதுவாக நமக்கு சமூக வலைதளங்களில்
‘ரீல்ஸ்’ பார்க்கும் மோகம் மிகுந்து காணப்படுகிறது. இதையே ஒரு இலக்காக நிர்ணயம் செய்து குழந்தைகளைக் கொண்டு பல ரீல்ஸ் தயாரித்து வெளியிட்டிருக்கின்றனர். அவை பெரும்பாலோனோரின் ஆர்வத்தைத்தூண்டியது. அதனால், பிரபலமானது. அவற்றைத் தொடர்ந்து அதே பாணியிலான ஏராளமான ரீல்ஸ்கள் தன்னார்வமாக வெளிவரத்தொடங்கி விட்டன. இது ஒருவிதம். இரண்டாவதாக இன்னொரு காரணி உண்டு.
1970, 80 களில் ஒரு குடும்பத்தில் 4 குழந்தைகளாவது இருப்பர். அந்த குடும்பங்களில் குறிப்பிட்ட ஒரு குழந்தைக்கு மட்டும் பிரத்யேகமான முக்கியத்துவம் இருக்காது. எல்லோரையும் சம அளவிலான கோணத்திலேயே அணுகுவர். ஆனால், இன்றைய காலத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. அதாவது ஒவ்வொரு குடும்பத்தில்,
ஒறைக்குழந்தை! ஒற்றை பேத்தி அல்லது பேரன் என எல்லார் குடும்பங்களிலும்
ஒற்றைக் குழந்தை கலாச்சாரமாக மாறிவிட்டது. ஆகவே, குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் அனைவருக்கும் அந்த ஒற்றைக்குழந்தைகள் மட்டுமே மையப்புள்ளியாக மாறிவிட்டனர்.
ஆகவே அந்த குழந்தையின் செல்வாக்கு மிக அதிகம். கடந்த 20 ஆண்டுகளில் பெரியவர்களுக்கான ஆடைகளின் விலையை விட குழந்தைகளுக்கான ஆடைகளின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளன. ஏனென்றால் குழந்தைகளுக்கான தேவை என்றால் அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யக்கூடிய மனோபாவத்திற்கு பெற்றோர்கள் வந்துவிட்டனர். ஆடைகள் மட்டும் என்றில்லை. விளையாட்டுப்பொம்மைகள், சைக்கிள் உள்ளிட்ட அவர்களுக்கான விளையாட்டு வாகனங்கள் அனைத்திலும் இதேநிலைதான். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்த காலத்தில் அவர்கள் மீது தற்போது போல ஒரே மாதிரியான கவனக்குவிப்பு இருந்ததில்லை.
தவெகவினர் கூட இதுதான் எதிர்காலம் என்கிற கருத்தாக்கத்தில் செய்திருப்பது போல் தெரியவில்லை. அவர்கள் தங்களின் பிரதானமான விஷயமாக கையாண்டிருக்கலாம். ஒவ்வொரு கட்சியினருக்கும் ஒவ்வொரு விதமான வழிமுறையைக் கையாண்டிருக்கலாம். தவெகவினர் அதிகமாக நாம் பேசிக்கொள்ளும் டிஜிட்டல் பிரச்சார யுக்தியைப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனலும் அவர்களே கூட ’இவ்வளவு அதிகமான ஓட்டு சதவீதத்தையும், ஆட்சியையும் பிடிப்போம்’ என்று நினைத்திருக்கமாட்டார்கள். திமுக, அதிமுக, பிஜேபி போன்ற கட்சிகள் பெரும்பாலும் ஆஃப் லைனிலும், 30% -ம் அளவில் ஆன்லைனிலும் செயல்பட்டிருக்கின்றனர். அந்த கட்சிகள் ஒவ்வொன்றிலுமே ஐ.டி, (I.T.Wing) செயல்படுகின்றன. ஆனாலும் அவர்கள் யூட்யூப் தளத்தில் கவனம் செலுத்தினர். ஆனாலும், தவெக போல இன்ஸ்டாகிராமில் கவனம் செலுத்தவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களேகூட, எங்கோ கிராமத்தில் ரீல்ஸ் வெளியிட்டுக்கொண்டிருந்த இரு சிறுவர்களை அழைத்து ரீல்ஸ் வெளியிட்டார், ஆனாலும் கூடுதல் கவ் அனம் செலுத்தவில்லை போலும். இது வரலாற்று ரீதியில் மக்களின் ஒரு கூட்டு எண்ணம் என்பதாகத்தான் நான் காண்கிறேன். ஜனநாயகத்தில் அவ்வப்போது கோபம் வெளிப்படுதல் இயல்பான தாகும். இம்முறை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் நிர்வாகத் தன்மையின் மீதான மக்களின் கோபமானது ஒரு கூட்டு நடவடிக்கையாகிப் போனது. அதற்கான ஒருன் புது அறிமுகம் தேவைப்பட்டது. ஆனால், அந்த முகம் ‘விஜய்’ தான் என்பதை மற்ற கட்சிகள் கணிக்கத்தவறிவிட்டனர். இந்த அபிரிதமான செல்வாக்கு கடைசி ஒரு மாதத்தில் வேகமாக கட்டமைக்கப் பட்டிருக்கிறது. திருப்பரங்குன்றம் மலைமீது கார்த்திகை தீபம் ஏற்றவிடல்லை என பல ரீல்ஸ்கள் வெளிவந்தவண்ணமிருந்தன. ஆனாலும் மக்களின் கோபம் பிஜேபிக்கு ஆதரவாக மாறவில்லை. நாம் தமிழர் சீமான் அவர்கள் தன் உரையின் போதெல்லாம் ‘ஆறுகளை பாழ்படுத்தி விட்டனர். மலைகளைக் குடைந்து விட்டனர். குளங்கள், ஏரிகளை தூர்வாரவில்லை’ என்றெல்லாம் அதிகமாக குற்றம் சாட்டினார். அதுவும் எடுபடவில்லை. ஆனால், வெறுமனே ‘பெண்கள் பாதுகாப்பு, தீயசக்தி’ என்பவற்றை மட்டுமே மீண்டும் மீண்டும் சொல்லிவந்த தவெகவின் செயல்பாடுகள் ஏன் GenZ- ற்கு பிடித்துப்போனது? அதை ஏன் அவர்கள் அப்பட்டமாக நம்பினர்? இதை தேர்தல் களநிலவர ஆய்வாளர்கள் நிச்சயம் ஆய்வு செய்யக்கூடும்.
வயதில் முதிர்ந்தவர்கள் தங்கள் கோபமான உணர்வுகளை வெளிப்படையாகச் சொன்னால் ’நம்மை சமாதானப்படுத்திவிடுவார்கள்’ என்று அவர்கள் வெளிப்படுத்தவேயில்லை போலும். உதாரணமாக காதலர்கலை எடுத்துக்கொண்டால், அவர்கள் வீட்டிற்கு அது தெரிந்து, அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல், சமாதானப்படுத்துவர். அந்த காதலர்களும் தங்களின் வீடுகளில் அதை ஏற்றுக்கொள்வதுபோல், இயல்பாக இருப்பதைப்போல காட்டிக்கொள்வர். ஏனென்றால் வேறு உறவினர்களைக் கொண்டு தங்களை சமாதானப்படுத்த முயற்சிப்பார்கள் என சில தினங்கள் சென்றபின், தங்கள் மீதான கண்காணிப்பு குறைந்ததும், சட்டென வீட்டை விட்டு ஓட்டமெடுத்துவிடுவர். இதுபோல் வாக்களிக்க்க்கூடிய பெரியவர்கள் தங்கள் குடும்பக்குழந்தைகளின் எண்ண ஓட்டத்திற்கேற்பவும், அதேபோல் ஏற்கனவே ஆண்ட கட்சிகளின் மீது தங்களுக்கு இருந்த கோபத்தையும், வெளிப்படுத்திக்கொள்ளாமலேயே மறைத்து வைத்திருந்து வாக்கு செலுத்தும் தினத்தன்று தங்கள் எண்ணத்தை பூர்த்தி செய்துவிட்டதாகவே கருதுகிறேன். GenZ யைப்பொறுத்தவரை ஜனநாயக வாக்களிப்பு முறையைக் கண்டனர். அவர்களுக்கு கடந்த நிர்வாகங்களின் மீது கோபம் இருந்திருக்கிறது. இத்தகைய எண்ண ஓட்டத்தை தவெக மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்டது.
---------------------------------------------------------
No comments:
Post a Comment