Tuesday, August 11, 2026

54. Educational debates போட்டி தேர்வுகள் – 1

 

 

             Educational debates போட்டி தேர்வுகள் – 1


                எனக்குத்தெரிந்த வகையில் சென்னையில் மட்டுமே சுமார் 20000 முதல் 25000 நபர்கள் வரை படித்துக்கொண்டிருக்கலாம் என்று அனுமானிக்கிறேன். இப்படி படித்துக்கொண்டிருப்பவர்களை நாம் இரண்டு வகையாகப் பிரிக்கவேண்டும். முதலாவதாக, சென்னையை எடுத்துக் கொண்டால், வேறு எந்த வேலையையும் பார்க்காமல் ஐ.ஏ.எஸ் போட்டித்தேர்விற்காக மட்டுமே முழுநேரத்தையும் அர்ப்பணித்து, அகாடமிகளில் இணைந்து சுமார் தோராயமாக 10000 பேர் படித்துக்கொண்டிருக்கக்கூடும். குரூப் 2, குரூப் 4, கிராம நிர்வாக அலுவலர், போன்ற பிற போட்டித்தேர்வுகளுக்கு ஆன்லைனில் படித்து வருபவர்கள் லட்சக்கணக்கில் இருப்பர். அவர்கள் 20 வய்து முதல் 30 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கின்றனர். இவற்றையெல்லாம் உணர்ந்துதான் தமிழகத்தில் ‘முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சிமையங்களை தொடங்கியிருக்கின்றனர். அவற்றில் படிப்பவர்களையும் கூட்டினால்,  பெரும் எண்ணிக்கை இருக்கலாம். இதுவே தில்லியில் மட்டுமே 1 பேட்சிற்கு மட்டுமே (Batch) தோராயமாக 2 முதல் 3 லட்சம் பேர் ஐ.ஏ.எஸ். படிப்பிற்காக மட்டுமே, அதுவும் முழுநேரப் பயிற்சியில் இருப்பர்.

            ஒரு ஆண்டில் காலியாக உள்ள 1000 பணியிடங்களுக்கு 10 லட்சம் பேர் எழுதுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் அந்த 1000 பேரைத்தவிர 9,99,000 பேர் வெளியேறிவிடுவர். அவர்களில் பலர் மீண்டும் முயற்சிப்பர். வேறு பணிகளுக்கும் சென்றுவிடுவதுண்டு. ஒவ்வொரு ஆண்டும் புதியவர்களும் பங்கேற்பர். ஆக, இந்த எண்ணிக்கையானது சராசரியாக தொடரும். மக்கள் தொகை கூடும்போது இது மேலும் கூடலாம்.

            சென்னையில் மடும் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் 170 வரை இருக்கின்றன. தமிழகம் முழுமையும் எடுத்துக்கொண்டால் சுமார் 1500-த்தைத் தாண்டக்கூடும். ஐ.ஏ.எஸ். தேர்விற்கான பயிற்சி மையங்கள் மட்டுமின்றி, I.A.S, Staff Selection, தமிழ்நாடு சார்ந்த அனைத்து போட்டித்தேர்வுகள், காவலர்களுக்கான தேர்வுகள் போன்ற அனைத்திற்குமே பயிற்சி மையங்கள் இயங்குகின்றன. அனால், ஒரே பயிற்சி மையமே அனைத்து போட்டித்தேர்விற்கும் வகுப்பகள் நடத்துவதில்லை. அப்படி நடத்தவும் முடியாது. மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளில் ஒரு பெரிய கல்யாண மண்டபத்தில் ஒலிபெருக்கிகளைக் கொண்டு காவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நட்த்திக்கொண்டிருப்பார்கள். இதைப்பற்றி சமூக வலைதலங்களில் ‘ஒருமுறை கட்டணத்தொகை செலுத்திவிட்டால் போதும். ஆண்டு முழுவதும் படித்துக் கொண்டிருக்கலாம்.’ என்று மீம்ஸ்கள் வந்ததாக அறிந்தேன். ‘முதலில் சேர்ந்தவர் வெளியேறி விட்டால் அங்கு மானவர் இல்லாதது போல் தோன்றலாம்’ என்றெல்லாம் மீம்ஸ் வந்ததாம். ஒருவேளை அந்த பகுதிகளில் இருக்கும் எளிய பொருளாதரச்சூழல்கூட அதன் காரணமாக இருக்கலாம். தொடர்ந்து ஏனோதானோ என்று படித்துக்கொண்டிருப்பவர் திடீரென முழு அக்கறையும் கவனமும் கொண்டு படிக்க ஆரம்பித்து, வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்தை அடையக்கூடும். (ஐ.ஏ.எஸ். தேர்வுகளுக்கான பயிற்சி தரும் கட்டமைப்பு அதுபோன்ற இடங்களில் இருப்பதற்கு வாய்ப்பில்லை). ஆனாலும், ”இளைய தலைமுறைக்கு அவர்களின் ஊர்களிலேயே படித்து முன்னேற வாய்ப்பு கிடைக்கிறதே..’ என்கிற அளவில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.   

---------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

67.வேட்புமனுவில் சொத்துக் கணக்கை மறைத்தால் என்னவாகும்?

                  வேட்புமனுவில் சொத்து க்  கணக்கை                          மறைத்தால் என்னவாகும் ?   தேர்தலில் வேட்பாளராக நிற்பவர்கள்...