குழந்தைகள் எதிர்காலம் நல்லாயிருக்க!
இதுக்கெல்லாம் 'No' சொல்லிடுங்க ?
அம்மா, அப்பா, மகன் ஆகியோர் அடங்கிய ஒரு குடும்பம். அந்த மகனுக்காக வாங்கப்பட்டிருந்த ஐஃபோனுக்கு மாதாந்திரத் தவணையைக் கட்டமுடியாமல் போனதால், எங்கே தன்னுடைய ஃபோன் தன்னை விட்டுப்போய்விடுமோ எனும் வேதனையில் மகன் தற்கொலைக்கு முயல்கிறான். மகனைக்காப்பாற்றச் சென்ற தாய், அவரைக்காப்பாற்றச சென்ற தந்தை என மூன்றுபேருமே எதிர்பாராதவிதமாக மலையில் இருந்து கீழே விழுந்து இறந்து போயினர். மிகுந்த வேதனை தரக்கூடிய நிகழ்வாகும். பொதுவாகவே ஒற்றைக்குழந்தை என்கிற வாழ்க்கை நடக்கிறபோது, எதற்காகவும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் ‘இல்லை’என்று சொல்ல முடியாமல் போய்விடுகிறது. குழந்தைகள் எதை, எப்போது கேட்டாலும் ‘yes’ என்று சொல்லவேண்டும் என்கிற மனோபாவத்திற்கு ஆளாகிறார்கள். பெரிவர்களுக்கே விம்ஸ் அண்ட்ஃபேன்சிஸ் இருக்கும்போது, குழந்தைகளை என்ன சொல்வது? அவர்களுக்கு மூளை வளர்ச்சிபெற்றிருக்காது. அவர்களின் மனம் ஒன போக்கில் அவர்களின் இயல்புகளும் அமையும். இதனால்தான் அவர்களுக்கு பயம் தெரிவதில்லை. பெரியவர்களுக்கு மனமும் மூளையும் வளர்ச்சி பெற்றுள்ளதால் எதை எப்படிச்செய்யவேண்டும் என்கிற சிந்தனை மேலோங்கியிருக்கிறது. ஆகையால் பிரச்சினை இல்லை. அந்த குழந்தைக்கு ஐபோன் மேல ஒரு பெரிய அளவில் ஈர்ப்பு இருந்திருக்கிறது. அதை வாங்கக்கூடிய அளவிற்கு அந்தக் குடும்பத்தில் பொருளாதாரம் இல்லை. அதனால் அதை மாதாந்திரத் தவணையில் வாங்கியுள்ளனர். ஒரு பொருள் கிடைக்காமல் ஏங்குவதால் வரும் வருத்தத்தைவிட, அது கிடைத்தபின் எங்கே அது தன்னைவிட்டுப்போய்விடுமோ ? என்கிற பயம் அதிகமாகிறது. இது பொதுவாக எல்லா பொருட்களை பற்றியும் வரும். அது ஒரு வகையான பொஸ்ஸிவ்னெஸ். தவணையைச் செலுத்தவில்லை என்றால் பொருளைப் பறித்துச் சென்றுவிடுவார்களோ? அல்லது ஃபோனை முடக்கி விடுவார்களோ? என அந்தக்குழந்தை சிந்தித்திருக்கிறான். அந்த அளவிற்கு போனுக்கு அடிமையாகி இருக்கிறான். அதனால் தவணையைச் செலுத்த முடியாமல் தடுமாறும் போது தற்கொலை எண்ணத்திற்கு வந்து மிரட்டியிருக்கிறான். தன் காதல் கை கூடவில்லை என்றால் இறந்து விடுவதாக சொல்வதுபோலத்தான் இதுவும். மகனைக்காக்கும் முயற்சியில் முதலில் பையனோடு அப்பா. அதனால் அதிர்ச்சி அடைந்த அம்மாவும் வாழப்பிடிக்காமல் மலையிலிருந்து குதித்து இறக்கிறார். ஒரு காலத்தில் ஒவ்வொர்ரு குடும்பங்களிலும் ஆறு, ஏழு குந்தைகள் இருந்தன. அப்போது எதையாவது கேட்டு ஒரு குழந்தை அழுதால், அதற்கு உதைதான் விழும். அதன் வாழ்நாளின் பெரும்பகுதி ‘N0’ என்பதை எதிர்கொண்டே வளரும். வீட்டில் ’யெஸ்’ எப்போதாவது ஒரு முறைதான்! ’எனக்கு தோசை வேணும்’ என்று கேட்டால், ‘தோசை கிடையாது இன்றைக்கு இதுதான்’ அடுத்த நாள், ’எனக்கு சிக்கன் வேணும்’ ’சிக்கன் கிடையாது. இன்றைக்கு இதுதான்’. ஐந்தாவது படித்தபோது கொண்டு போன பையை ஆறாவது வகுப்புக்கு வேறு ஸ்கூல்ல முதநாள் அதே பையோடூ போகும் குழந்தைகள் அதிகம்.
அந்த வருடம் ஜவுளிவாங்கியபோது கிடைத்த மஞ்சள் பையை பள்ளிகளில் பயன்படுத்துவது அதிகம். குழந்தைகள் கேட்பார்கள். ஆனால், பெற்றோர் வாங்கித்தர மாட்டார்கள். இப்படியே ‘No’
என்பதற்கு பழகிவிடுவார்கள். நாமும் தரமானவற்றைதான் கேட்க வேண்டும். அப்போதுதான் ‘எஸ்’ என அப்ரூவல் கிட்டும் என தங்களைத் தேற்றிக்கொண்டே இருப்பர். இதனால் ‘No’ வை தங்களுக்குள் பழக்கப்படுத்திக்கொண்டு விடுகிறார்கள், சில நேரங்களில் ஏதாவது ஒரு விஷயத்தைத் தியாகம் செய்துதான்
பிறவற்றைப் பெற வேண்டியிருக்கும். இன்றைய குழந்தைகளிடத்தில் அடம் பிடிக்கும் குணம் அதிகம். அதனால் நாம் அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து ‘No’ சொல்வதேயில்லை. எல்லாவற்றிற்கும் ‘yes’ தான். இதனால் இரண்டு விதமான பிரச்சினை வருகின்றன. ” yes” சொன்னால்தான் நான் இருப்பேன். Yes சொல்லவில்லை என்றால், நீங்கள் ஏன்? என்பதாக மாறுகிறது. மூன்றாவதாக முதல் No’ என்பது காதலில் வருகிறது. எப்படியாவது அம்மா - அப்பா காதலை வாங்கித்தர முடியுமா? இதுபோல நட்பு, அன்பு என எளிதில் வாங்க முடியாத சூழ்நிலை அடுத்தடுத்து
வருகின்றன. எவ்வளவு பணம் செலவு செய்தும் டாக்டராகவோ, இஞ்ஜினியராகவோ, ஆக முடியும். ஆனால், அந்தந்த துறைக்கேற்ற திறமையை வாங்க முடியாது. ஏனென்றால் அது அவரவருக்குள் இருந்து எழுவது. ஆகவே சிறுகுழந்தையாக இருக்கும்போதே எதற்கெடுத்தாலும் ‘yes’ சொல்லாமல், அவ்வப்போது No’ சொல்லி வளர்க்க வேண்டும். இவ்விஷயத்தில் ஜென்ஸி மற்றும் ஆல்ஃபா தலைமுறையினரிடத்தில்
மிக அதிகம். போராடினால் வெற்றி பெற்றுவிடலாம் எனக் கருதுகிறார்கள். அதுசரியாக இருக்கலாம். ஆனால், போராடும் விதத்தில் பல வகையுண்டு. நம்முடைய உடல், மனம் சார்ந்த வரையறைகள் இருக்கின்றன. இந்த உலகத்திற்கென பிஸிக்கல் , கெமிக்கல் வரையறைகள் உள்ளன. எப்போதும் எப்படியாவது வென்று விடலாம் என எண்ணம் கொண்டிருந்தால்
அசம்பாவிதங்களைச் சந்திக்க நேரலாம். ஜென்ஸிக்கள் ’யாருமில்லாமலேயே வாழ்வேன்’ என்கிற போக்கு இருந்தாலும், மறுபக்கம் ’அதுவோ / அவரோ இல்லாமல் வாழ முடியாது’ என்கிற மனோபாவம்! மனதிற்கு எமோஒஷன் மிக அவசியம். ’நான் யாரையும் கண்டுகொள்ள மாட்டேன்’ என்பது அவர்களுக்கான எமோஷன் கிடைத்துக்கொண்டிருக்கிறது
என்று பொருள். ஆனால், அதை உணரவோ அங்கீகரிக்கவோ மாட்டார்கள். சாப்பாடு சாப்பிடும்போது அனிச்சையாக நம் கையானது உணவை வாய்க்குக் கொண்டு செல்கிறது. மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது. வகுப்பில் ஒருவன் சண்டையிடுகிறானானென்றால், இனி வாழ்நாள் முழுவதும் பேசமாட்டேன் என முடிவு செய்துவிடுகிறார்கள். ஆனால், மனித வாழ்க்கையில் வயது ஏற, ஏற, நம் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வோர் எண்ணிக்கையில் குறைந்துகொண்டே வருவார்கள். நாம் ஒரு உறவுக்கு ஒன்றுமே செய்யவில்லையென்றாலும் கூட
அவர்கள் நம் மேல் பாசமாக இருப்பதுண்டு. அவர்கள் எமோஷனைத் தந்து கொண்டிருப்பார்கள். திடீரென அது கிடைக்காமல் போகும்போது ஏதோ உணர்வுப் பற்றாக்குறை
நிகழும். ஆனால், அது தேடும்போது கிடைக்காது. அதுமட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு தன்னுடைய எமோஷனைப் பகிரும் இடத்திற்குச் சென்றுவிடுவோம். ஜென்ஸிக்களுக்கு அதுபோன்ற நிலையை அவர்கள் எட்டும்போது
புரியும். காதல் உணர்வானது ஹார்மோன்கள் சம்பந்தமானது. அதன் விளைவுகள் பெற்றோர் உள்ளிட்ட எல்லோரையும் ஓரம் கட்டி விடுகிறது. இதனால்தான் காதல் விஷயத்தில் பெற்றோரால் தங்கள் பிள்ளைகளைக்
காப்பாற்ற இயலாமல் போகிறது. அத்தகைய தருணங்களில் நெருங்கிய உறவினர்களையெல்லாம் வரவழைத்து அவர்கள் மனதை மாற்றவும்
இலகுவாக்கவும் முயற்சிப்பார்கள். இன்றைக்கு அதுபோன்ற நிலைமை இல்லை. ஆக, எமோஷன் என்பது மனிதர்கள் வாழ்வில் தேவையான
ஒன்று. ஆனால், அது கிடைப்பது அரிதாகி விட்டது. இந்த எமோஷனல் பற்றாக்குறை எதை
நோக்கிச் செல்லும்? என்பது பெரும் பிரச்சினை. Lone man in the crowd என்னும் ஒரு புத்தகம்
இருக்கிறது. அதாவது ’நான் கூட்ட த்தினிடையே இருந்தாலும் தனியாக இருக்கிறேன்.’ என்று
பொருள் படும். அதனுடைய சைக்கலாஜிக்கல், பிஸியாலஜிக்கல், சோஸியல் பிரச்சினைகள் மிகவும்
அதிகம். அந்த நிலையை நோக்கித்தான் இப்போது இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா,
ஐரோப்பிய நாடுகளில் மக்கள் இனக்குழுவாக வாழும் கலாச்சாரமான வாழ்வியல் உடைந்து சில நூற்றாண்டுகளாகி
விட்டன. அதனால்தான் அங்குதான் அதிகபட்சமான மன அழுத்தம், கவலை, அதிகமான உளவியல் கட்டுப்பாடற்ற
தன்மை என்பதெல்லாம் மிக அதிகம். அளவில் நெடுங்காலமாக இனக்குழுவாக வாழும் கலாச்சாரம்
நம்முடைய கலாச்சாரமே. இந்நிலையில் நாமும் கூட அந்த மேற்கத்திய கலாச்சாரத்தை நோக்கித்தான்
நகர்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், நம் மக்கள் தொகையின் அடிப்படையில் எதிர்காலத்தைக்
கண்க்கீடு செய்தால் அது நமக்கு அச்சமூட்டும் வகையில் உள்ளது. ஆகையால் குழந்தை வளர்ப்பில்
‘No’ என்பதை எமோஷனலோடு சொல்லி குழந்தைகளைப் பழக்கப்படுத்த வேண்டும்.
------------------------------------------------------
No comments:
Post a Comment