ஆச்சர்யமூட்டும் கொங்கு பகுதி
மக்களின் நடைமுறைகள்
ஒருவரைப்பற்றிக் குறிப்பிடும்போது ’அவருக்கென்னப்பா.. அவரு
பையன், பொண்ணுக்கு ஏழுதலைமுறைக்கான சொத்து வைத்திருக்கிறார்’ என்று பொதுவாக கூறுவர்.
அதற்கு என்ன பொருள் என்னவென்றால், அவர் இந்தத் தலைமுறையில் ஏழையாக வாய்ப்பில்லை என்பதே.
என்னதான் தவறான முறையில் பணத்தைச் செலவழித்தாலும் அவருக்கு ஏழு தலைமுறைக்கு பணம் இருக்கிறது!
என்னுடைய குருநாதர் என்ன சொல்வாரென்ரால், ‘பனம் என்பது தண்ணீர் போல. ஒரு கட்ட்த்திற்கும்
மேல் அதை சேர்த்து வைக்க முடியாது. அது ஓடிக்கொண்டே இருந்தால்தான் அது ஆரோக்கியமாக
இருக்கும். காட்டில் தண்ணீர் தேங்கி நின்றிருக்குமானால் அந்த்த் தண்ணீரே விஷமாகிவிடும்.
அதனால்தான், இதனால்தான் ஓடுகிற தண்ணீரை மட்டுமே பருகுமாறு வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.’ஓடாமல்
தேங்கி நிற்கும் தண்ணீரைக் பருகச் சொல்லவில்லை. இதேபோல்தாஅன் பணமும்! அது ஓடிக்கொண்டே
இருக்க வேண்டும். அதாவது உருவாகிக்கொண்டே இருக்க வேண்டும். அதேபோல் வேறிடத்தில் கலந்து
கொண்டே இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சுழற்சியை யார் கட்டுப்படுத்தி நிர்வகிக்கிறார்களோ..
அவர்களிடம்தான் பணம் இருக்கிறது! சிலர் பணக்காரர்களாக இருப்பர். அவர்களே திடீரென்று
ஏழையாகி விடுவர். வேறு சிலர் ஏழைகளாக இருப்பர். பின் அவர்கள் பணக்காரர்களாகி விடுவர்.
இந்த சுழற்சியானது நாம் ஆங்காங்கே பார்த்துக்கொண்டிருப்பதுதான். எவருமே ஏழு தலைமுறைக்கும்
சொத்து சேர்த்து வைத்திருக்க முடியாது. பணமானது தேங்கி நின்றுவிட்டால், அதை சரிவர நிர்வகிக்காமல்
விட்டுவிட்டால், அதுவே தேங்கிய விஷத்தண்ணீராக மாறி, மற்றவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களேகூட பயன்படுத்தமுடியாத சூழல் உண்டாகிவிடும். அப்படியானால்
இதனை எப்படி சரிவரச் செய்வது என்று பார்த்தோமானால், அந்த சமூகம் ஒரு நடைமுறையில் கைவைக்கிறது.
ஒரு ஊரில் ஒரு பெரிய வீடு. அவர்களுக்கு ஒரு மகன். அவன் வளரும்போதே, ‘எங்கள் பாட்டன்
.. பூட்டன், பூட்டனுக்குப் பூட்டன் போன்றோரெல்லாம் எந்தளவிற்கு செல்வாக்கும், சொத்தும்
கொண்டவர்கள் தெரியுமா?’ என்கிற பெருமைகளோடு நடைபோடுகையில், அவனுக்கு தான் உழைத்து உண்ண
வேண்டும் என்கிற குறிக்கோளே இருக்காது. அந்த குறிக்கோள் வந்தாலும் கூட அவன் மூளையானது
சிந்திக்கும் திறனற்றுப்போயிருக்கும். அவன்
முன்னோர்கள் தேடித்தேடி சேர்த்து வைத்த செல்வத்தை அவன் தன் வாழ்நாளிலேயே மெல்ல
மெல்ல இழந்துவிடும் நிலை வந்துவிடும். அவனை அடுத்து வரும் சிலதலைமுறைகள் பொருளாதார
ரீதியில் வீழ்வதைக் கண்டிருக்கலாம். இதனால் விழிப்புற்ற கவுண்டர் சமூகத்தினர் இரண்டு
தலைமுறைக்கும் மேல் அவர்களது பூர்வீக வீட்டில் மூன்றாவது தலைமுறையினர் வசிக்க்க்கூடாது
என்கிற நிலைபாட்டை மேற்கொள்கிறார்கள். ஒருவர் ஒரு வீட்டைக் கட்டுகிறார். அதிலே அவர்
வாழலாம். அவருடைய மகனும் வாழலாம். அவருடைய பேரன் அதே வீட்டில் வளரலாம். ஆனால், அதே
பேரன் தன் திருமணத்திற்குப்பிறகு வேறு புதுவீடு கட்டி குடியேற வேண்டும். இதனால், வீணாகப்
பழம்பெருமைகளைப் பேசும் நிலை இருக்காது. தனக்கான வீட்டைக் கட்டிக்கொள்வதற்கான கட்டாயத்திற்கு
வந்துவிடுகிறார். ஒரு தொழிலுக்குள் அவர் புகுத்தப்படுகிறார். அவரே சோம்பேறியாகப் படுத்திருந்தால்கூட,
அவரைப்பார்க்கும் சமுதாயம், ‘போ.. ஒரு வேலையைப்பார். வீடு கட்டும் வழியைப்பார். ஏனென்றால்
மூன்றாவது தலைமுறை அங்கேயே இருந்தால் அது வீட்டுக்காகாது’ என்று கூறும். ஆக, ’மூன்றாவது
தலைமுறை வீட்டுக்காகாது’ என்பது சமய ரீதியில் வந்தால்கூட, வேறு எந்த பகுதிகளிலும் இந்த கருத்தாக்கம் இல்லை. மூன்றாவது தலைமுறை உழைக்கச்
செல்லாமல் சோம்பேறியாகி விடக்கூடாது என்பதற்கான உந்துசக்தியான கருத்தாக்கம் இது. இந்தக்காலத்திலும்
பெரும்பாலான குடும்பங்கள் இதைப் பின்பற்றிவருவதைக் காண்கிறேன். நம் ஒவ்வொரு நிலப்பரப்பிலும்
வாழும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சில சிறந்த குணாதிசயங்கள், மேன்மையான கலாச்சாரப்பண்புகள்
உண்டு. அவர்கள் தொடர்ந்து அவற்றை பின்பற்றுவதால் அந்த ஒட்டுமொத்த சமுதாயமும், அந்த
சமுதாயத்தின் ஒவ்வொரு தனிமனிதரும் சரி… அவர்கள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
இந்த விதமான நடைமுறையை வேறு சமூகங்களும், அதேபோல் எந்த சமூகத்தின் தனித்தனி குடும்பங்களும்
முன்னெடுக்கலாம். ஆனால், அதற்கு ஒரு பயத்தை உண்டாக்க வேண்டும். அதை ஒரு சமுதாயத்தில்
’கடவுள் குற்றம்’ என எளிதாக செய்து விடலாம். ஆனால், வீட்டில் பேரனிடம் கூறி என்ன ஆகி
விடப்போகிறது? அவன் பயந்தால்தானே? இல்லையென்றால், அவர்கள் தங்கள் காதில் போட்டுக்கொள்ளவே
மாட்டார்களே! இருப்பினும் இதுபோன்ற சிரப்பம்சங்கள் பாராட்டுதலுக்குரியவையே என்பது நிச்சயம்.
----------------------------------------------------------
No comments:
Post a Comment