Monday, September 28, 2026

129. உள்ளாடையை ஊருக்கெல்லாம் காட்டுவதுதான் பெருமையா?

 

       உள்ளாடையை ஊருக்கெல்லாம்

         காட்டுவதுதான் பெருமையா?


பிரபலமான திரைப்பட நடிகர் திரு.’காதல்’ சுகுமார் அவர்கள், ’இன்னைக்கு எல்லாரும் ஜாதியை வச்சு படம் பண்ணிணா பெரிய ஆள் ஆகிடலாம்னு அந்த இடத்தை பிடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதை ஏற்கனவே ரெண்டு பேர் பிடிச்சு தொங்கிக்கிட்டு இருக்காங்க. அதைப் பார்த்து புதுசு புதுசா வர்றவங்களும் அதைத்தான் பண்ணிக்கிட்டு இருக்காங்க. ஜாதிங்கிறது ’ஜட்டி’ மாதிரி. நாம  போட்டுக்கலாம். ஆனா வெளியே காட்ட முடியாது. ஜாதியையும் பிளாஸ்டிக்கையும் அழிக்க முடியாது ஆனால் பயன்படுத்து தவிர்த்துக்கலாம்’ என மிக தீர்க்கமாகவும், தெளிவாகவும் துணிச்சலாகவும் பொதுவெளியில் தன்னுடைய கருத்தை நல்லதொரு பதிவாக செய்திருக்கிறார். ’ஜாதி என்பதை ஒருபோதும் அழிக்க முடியாது. அது ஒரு கூட்டுக்குடும்பத்தின் நீட்சியாகும். அது ஒரு குலம் என்பதுதான். ஆனால், அதற்குள்ளேயே நிலவும் வேஎறுபாடுகளை அழித்தொழிக்க வேஎண்டுமென்பதைத்தான் என்னுடைய அரசியல் பார்வையாகக் கொண்டுள்ளேன். ஏற்கனவே இதைப்பற்றி நான் கூட பலமுறை பேசியுள்ளேன். நமக்கு ’சாதி’ தேவைப்படலாம். அனால், அதை வெளியில் காட்டத்தேவையில்லை. ஒருவரின் தாயோ, தகப்பனோ ஐ.ஏ.எஸ், மந்திரியாகவோ இருந்தால், அதற்காக தினம்தோறும் வெளியில் செல்லுமிடமெல்லாம் ‘நான் இன்னார் தெரியுமா?’ என்று சொல்லித்திரியப் போவதில்லை. ஒருவேளை எங்காவது தேவைபட்டாலோ, அல்லது யாராவது கேட்டாலோ வெளியில் சொல்லக்கூடும். இதுதான் மரியதைக்குரிய விஷயமுமாகும். நாமே வெளிப்படுத்திக்கொண்டல் நம்மை நாமே பெருமை கொண்டாடுவது போலாகும். துபோல்தன் ஜாதியும். அது ஒரு உணர்வுப் பூர்வமானது. திருமணம், காதுகுத்து போன்ற சுப காரியங்களின்போது உறவினர்கள் ஒன்றாக கூடி மகிழ்ந்திருப்பதற்கான ஒரு தளமாகும். இதில் பெருமைப்பட்டுக்கொள்ள ஒன்றுமேயில்லை. ஒவ்வொரு ஜாதிக்கும் அவற்றின் பெருமைகளைச் சொல்லும் வகையில் தேவலோகத்திலிருந்தும், இந்திர லோகத்திலிருந்தும் விஷ்ணுவிடம் இருந்து வந்தவர் என்றெல்லாம் ஏதாவது ஒரு பின்னணிக்கதை இருக்கக்கூடும். அவை அவரவர் விருப்பம். ஆனால் எல்லோரும் மனிதர்களே. ஒரு சில ஜாதிகளுக்கென்று சில சாதனைகள் இருக்கக் கூடும். அவற்றை அவர்கள் தங்களுக்குள் கொண்டாடிக் கொள்ள வேண்டிய விஷயமாகும். அதற்காக இன்னொரு ஜாதிக்காரர்கள் அவர்களை உயர்த்திப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. திரு.காதல் சுகுமார் ஜாதிகளைப்பற்றிக் குறிப்பிட்டதுடன் ஜாதிகள் குறித்து சில படங்களையும் கூறியிருக்கிறார். 1960 களிலிருந்து வெளிவந்த தமிழ் சினிமாக்களில் ஜாதிகளைப்பற்றிய வார்த்தைகள் வந்திருக்கும்.  ஆனால், ஜாதிகளைக்குறிப்பிட்டு படங்கள் வந்ததாகத் தெரியவில்லை. அதன்பின் சின்னக்கவுண்டவர், தேவர்மகன் போன்ற திரைப்படங்கள் அந்தந்த சமூகங்களில் வாழ்ந்த கண்ணியமான மனிதர்களைப்பற்றியும், அவர்களின் வாழ்வியலைப் பற்றியும் வந்திருக்கின்றன. அவர்களுக்கு அந்த வட்டாரங்களில் ஜாதியின் பெயரே வந்ததால் அவற்றை நேர்த்தியாகக் கையாண்டிருப்பர். 

பசும்பொன் முத்துரமலிங்கத் தேவர் அவர்களுக்கு அவரது சமூகத்தின் பெயரான ‘தேவர்’ என்பதே மரியாதைக்குரிய அடைமொழியாக அமைந்துவிட்டது. சின்னக்கவுண்டர் திரைப்படத்திலும்கூட நடிகர்.விஜயகாந்த் அவர்களின் கதாப்பாத்திரத்தின் பெயர் ‘தவசி’ என்று சூட்டப்பட்டிருந்தாலும், அந்த வாழ்வியலைப்படம்பிடித்த வட்டாரச்சொல்லாடலாக ‘கவுண்டர்’என்கிற சொல் மரியாதைக்குரியவருக்கு சூட்டப்பட்ட அடைமொழியாக ‘சின்னக்கவுண்டர்’ என பட்த்தின் தலைப்பாகவே இடம்பெற்றது. சரி.. அப்படிப்பட்ட படங்கள் அப்போதெல்லாம் ஏன் வெளிவந்தன? என்று பார்த்தோமானால், அந்த காலக்கட்டத்தில்தான் அந்தந்த விவசாய சமுதாயங்களில் திரைப்படங்களை விரும்பிக் காணும் அளவிற்கு பணப்புழக்கம் கணிசமாக உயர்ந்தது. 1960 களிலிருந்து அதிகமாக திரைப்படங்கள் வெளியானதெல்லாம் நகரங்கள் மற்றும் பெருந்கரங்களில் மட்டுமே. நகரங்களில் படம் வெளியானபின் சுமார் ஆறு மாதங்களுக்கு மேற்பட்டுதான் கிராமப்புறங்களில் வெளியாகின. அப்போதைய காலகட்டத்தில் வெளியான படங்கள் பெரும்பாலும் நகர்புறங்களை மையமாகக்கொண்டும், வரலாறு சம்பந்தமான நிகழ்வுகளைக்கொண்டும் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். அத்தகைய கதைக்களங்களிலும் ஜாதி பெரும் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. பின்னாளில் நகர்புறங்களைப்போலவே ஏறத்தாழ சமகாலத்திலேயே கிராமப்புறங்களில் திரைப்படங்கள் வெளியாகத் தொடங்கி யதாலும், கிராமங்களும் மெல்ல மெல்ல வளர்ச்சியுறத் தொடங்கியதனாலும், கிராமப்புறங்களில் ஜாதிகள் எவ்வளவிற்கு முக்கியத்துவம் பெற்றிருந்தனவோ, அந்தந்த மனிதர்களின் வாழ்வியலை மையமாக்க்கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டன. அவரவர் தங்கள் சாதியின் கதைக்களம் அமைக்கப்பட்ட திரைப்படங்களை மக்கள் கண்டு ரசித்தனர். அதுமட்டுமில்லாமல் பிற சாதிகளைச் சேர்ந்தவர்களும் மாச்சரியமின்றி ரசித்தனர். நான் ஏற்கனவே கூறியதைப்போல் பொருளாதாரப்புழக்கம் என்பது பரவலாக எல்லா சமூகத்தவரிடமுமே வரத்தொடங்கின. நீலகிரி (ஊட்டி), கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் வாழும் பழங்குடியினரிடமும் கணிசமான பொருளாதாரம் காணப்படுகிறது. இது நம் நாட்டின் நல்ல வளர்ச்சியைக் குறிக்கிறது.

நாற்பதாண்டுகளுக்கும் முன்னர் ஊட்டியைச் சேர்ந்த படுகர் இன மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள் வெளியாகியிருந்தால் அவை வெற்றிபெற்றிருக்காது. கோவையிலுள்ளவர்களே பார்த்திருக்கமாட்டார்கள். அதே படுகர் இன மக்கள் ஊட்டியிலிருந்து கோவைக்கு வந்தெல்லாம் பட பார்க்க முனைந்ததில்லை. ஆனால், தற்போது அவ்வாறு வெளியானால், படுகர் இனத்திலிருந்து சுமார் 2 இலட்சம் மக்கள் பார்க்கக்கூடும். ஆக, இதைப்போன்ற காரணிகளை ஒரு சில இயக்குனர்கள் ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டு, ஒரு சில ஜாதிகளால் அடக்குமுறை நடத்தப்படுவதாக அதையும் மிக வன்மமாகவும், தங்கள் ஜாதிகள் மீது பரிதாபத்தை வரவழைக்க வேண்டுமென, அதிகபட்ச சினிமாத்தனத்துடனும் மிகப்படுத்திக் காட்டுகின்றனர். அவ்வாறு படங்களை வெளியிடும்போது அந்த சமுதாய மக்கள் கழிவிரக்கத்துடன் அதிக எண்ணிக்கையில் அந்தப்படங்களைப் பார்ப்பார்கள் என்றும், அதனால் தாங்கள் பெரும்பணக்கார்ர்கள் ஆகிவிடலாம் எனும் வணிக நோக்கமுடைய மனோபாவம் அதிகரித்திருக்கிறது. இத்தகைய தன்மையைத்தான் திரு.காதல் சுகுமார் அவர்களின் கருத்துடன் ஒத்துப்போவதாகக் காண்கிறேன்.  ஒரு படைப்பில் அந்த படைப்பாளியின் நல்லெண்ணம் இருக்கிறதா? இல்லையா? என அந்தந்த படைப்பாளியின் மனசாட்சிக்குத்தான் தெரியும். ஆனால், வணிக நோக்கத்தின் பெயரால் சில சமூகங்களுக்கிடையே நிலவும் நல்லுணர்வை நீர்த்துப்போகச் செய்து, அவர்களுக்குள் பகையுணர்ச்சியை தூண்டிவிடுமளவிற்குச் செல்வது சரிதானா? என்று கேட்கத்தோன்றுகிறது. அத்தகையோர் எதிர்காலத்தில் மக்கள் மத்தியிலும், இயற்கையிடமும் பதில் கூற வேண்டியிருக்கும் என்பது திண்ணம்.

------------------------------------------------------------

No comments:

Post a Comment

129. உள்ளாடையை ஊருக்கெல்லாம் காட்டுவதுதான் பெருமையா?

         உள்ளாடையை ஊருக்கெல்லாம்          காட்டுவதுதான் பெருமையா? பிரபலமான திரைப்பட நடிகர் திரு .’ காதல் ’ சுகுமார் அவர்கள் , ’ இன்ன...