Friday, September 4, 2026

108.இறைவன் திருவடி அவசியமா? (குறளின் குரல்- 8)

 

 

இறைவன் திருவடி அவசியமா? (குறளின் குரல்- 8)

 

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.      (குறள்:10)

 

பிறவிப்பெருங்கடல்என்னும் வார்த்தை நாம் அடிக்கடி பயன்படுத்துகிற வார்த்தைதான். இந்த பிறவிப்பெருங்கடலில் யார் நீந்துவார்களென்றால்இறைவனடி சேராதவர்களே.” என்கிறார் வள்ளுவர். பிறவியை பெருங்கடல் என்பது ஏன்?

மொத்த பிறவிகள் ஏழுஎன்கிற கருத்து இந்து சமயத்தில் உண்டு. அடுத்து, ஒரு பிறவி முடிந்து மறுபிறவி என்றால் இந்த பிறப்பை முடித்துக்கொள்வதல்ல.. மீண்டும் ஒரு பிறப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான். ஒரு பிறவி முடிந்து மறுபிறவி. இதையே பிறப்புச் சங்கிலி (Chain of Birth) என்கிறோம். அவரவர் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப இது தொடரும் என்பது நம்பிக்கை. இந்த சங்கிலித்தொடர்பை அறுத்தெரிய வைகுண்ட பிராப்தி, கைலாயப்பிராப்தி என்று கூறுவதெல்லாம்பிறவிப்பெருந்தளையை அறுத்துவிட்டார்என்பதற்காகவே.

          ஒருவர் பிறவிப்பெருங்கடலை நீந்திவிட்டார் என்றால், மீண்டும் அவருக்கு பிறப்பு கிடையாது என்கிற பொருளில்தான் பலரும் இதனை நோக்குகிறார்கள்.

          பிறப்பு, மறுபிறப்பு (Birth, Re-Birth) என்பது நூறுசதவீதம் உண்மையா? என்று கேட்டால், விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கமுடியாது. தர்க்கரீதியாக (Logic) கூறியுள்ளனர். இன்னும் போகப்போக,  அது என்ன விதமான  தர்க்கம் என்பதை ஆராயலாம்.

நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், இறைவனின் திருவடியைச் சேராமல் பிறவிபெருங்கடலை நீந்த முடியாது என்பதுதான். அது இந்தப்பிறவியின் பெருங்கடலாக இருக்கலாம். அல்லது அடுத்தடுத்தப் பிறவிக்காகவோகூட இருக்கலாம். பிறவிகள் வராத பெருங்கடலாகக்கூட இருக்கலாம். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அந்தப்பிறவியின் பெருங்கடலை நீந்துவதற்காக இருக்கலாம். ஆனால், இறைவனின் திருவடியைச் சேராமல் இந்த மூன்றுமே நடக்கப்போவதில்லை என்பதுதான் இந்தக் குறள் கூறும் கருத்தாகும்.

 

 

 

 

----------------------

 

 

 

 

No comments:

Post a Comment

114.புல்லரிப்பதுபோல் நடிக்க முடியுமா? (குறளின் குரல் - 14)

  புல்லரிப்பதுபோல் நடிக்க முடியுமா? (குறளின் குரல் - 14) அதிகாரம் 8 - அன்புடைமை -குறள் 71             திருக்குறள்   உரை வரிசையில் இப்ப...