திருவள்ளுவர் நாத்திகரா?
(குறளின் குரல்-10)
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். (குறள் 2:)
நல்ல வளமான கல்வியை ஒருவர் கற்றதனால்
அவருக்கு என்ன பயன்? கடவுளின் கோயிலில்
அவன் வழிபடவில்லையென்றால் அந்த கல்வியினால் என்ன பயன்?
திருக்குறள் நூலில் முதல் அதிகாரத்தில்
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு’ என்கிற முதல்குறளுக்கு அடுத்ததாக வரும் 2 ஆவது குறள்.
திருக்குறளின் முதல் பத்து குறள்களுமே
கடவுள் வாழ்த்துதான்.
முதல் குறளான “அகர முதல எழுத்தெல்லாம்”. கணிதவியலில் infinite to minus infinite என்று கூறுவோம். கல்விசார்ந்த அனைத்து கற்றலுமே ”அ”விலிருந்தும், எண்களில் 1 –லிருந்துதான் தொடங்குகின்றன. ஒரு சிலர் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்குவர். கடவுளை வணங்காமல் இப்படியெல்லாம் கற்றுக்கொண்ட
கல்வியினால் என்ன பயன் கிட்டும்?
திருவள்ளுவர் ஜைனரா? பெளத்தரா? ஜீஸஸுடன் சேர்ந்தவரா? இந்துவா? என்றும், திருவள்ளுவருக்கு எப்படி காவியடிக்கலாம்? அவர் பொதுவானவர். அவர் இயற்றிய திருக்குறள் உலகப்பொதுமறை. உண்மையில் அவர் பொதுவானவரா? அல்லது அவர் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தைப்
பின்பற்றியபோதும் எல்லோருக்கும் பொதுவான கருத்துகளை முன்வைத்தாரா? என்பதெல்லாம் நன்கு ஆராயப்பட வேண்டிய
விஷயம்.
திருக்குறளில் அவர் “கடவுள் இருக்கிறார்” என்றும், கடவுள் சம்பந்தமாக முதல் பத்து குறள்களில்
கூறியிருக்கிறார். தொடர்ந்து நிறைய
இடங்களில் கடவுளின் பண்புகள் உள்ளிட்ட விஷயங்களை கையாண்டுள்ளார். இப்போதைக்கு நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய
விஷயம் என்ன வென்றால், திருவள்ளுவர் கண்டிப்பாக
கடவுளை நம்பியிருக்கிறார். அவர் நிச்சயமாக நாத்திகவாதி இல்லை! ஆத்திகவாதிதான்.
கடவுள் யாரென்பதில் ஒவ்வொரு மதங்களும்
ஒவ்வொரு கடவுளைக் கூறலாம். அவர் வாழ்ந்த காலம், தமிழகத்தில் சங்க்காலம் மருவிய காலத்தின்
தொடக்கநிலையான கி.பி.1 ஆம் நூற்றாண்டு என்று வைத்துக்கொள்வோம். அந்த காலகட்டம் அநேகமாக “ஜைனம், பெளத்தம், இந்துமதம்” ஆகியன தழைத்தோங்கிய காலம்தான். இவற்றின் சங்கமத்தினால் அதே காலகட்டத்தில்
வாழ்ந்த திருவள்ளுவர் எந்த ஒரு கடவுளின் பெயரையும் குறிப்பிடாமல், எதன் பின்னணியையும் சாராமல் பொதுவான
ஒரு கடவுள் என்கிற நோக்கில் தன் நூலை ஆக்கியுள்ளார் என்பதைக் காண்கிறோம். ஆனால், ”திருவள்ளுவர் நிச்சயமாக ஒரு நாத்திகர்
அல்ல”
என்கிற கருத்தை நாம் உள் வாங்கிக்கொள்வோம்.
பொதுவாக கல்விகற்காதவர்கள் கடவுளைப்பற்றிய
விஷயத்தில் அக்கறை செலுத்த மாட்டார்கள். ஆனால், கல்வி கற்றவர்கள் தாங்கள் அதிகம் படித்து விட்டதாகவும், தங்களுக்கு அறிவியல் தெரியும் என்றும், பகுத்தறிவு உடையவர்கள் என்றெல்லாம்
அவர்கள் எண்ணிக் கொள்வார்கள் என்கிற கருத்து வள்ளுவரிடத்தில் இருந்திருக்கிறது என்பதாகத்தான்
நான் உணர்கிறேன். திருவள்ளுவர் குறிப்பிட்டதைப்
போல்
“அகரமுதல எழுத்தெல்லாம்
கற்றறிந்தவராக இருந்தாலும், அவர்கள் தெய்வத்தைத் தொழாவிட்டால் அந்த கல்வியால் ஒரு பயனும்
இல்லை”என்பதை நாம் உள்வாங்கிக் கொள்வோம்.
-----------------------
No comments:
Post a Comment