Wednesday, September 2, 2026

99.கிருஷ்ண தரிசனம் -16 (பகவத்கீதை)

 

கிருஷ்ண தரிசனம் -16 (பகவத்கீதை)

          பொருட்களை நினைப்பதால் அவற்றின் மீது பற்று ஏற்படுகிறது. பற்று ஆசையாக உருவெடுக்கிறது. அந்த ஆசையால் கோபம். கோபத்தினால் மன மயக்கம். மன மயக்கத்தினால் நினைவு நழுவுதல். நினைவு நழுவுவதால் பகுத்தறிவின் சீர்கேடு. பகுத்தறிவின் சீர்கேட்டினால் மனிதனின் அழிவு. இதுதான் ஸ்லோகம் 62 மற்றும் 63 ஆகியவற்றின்  சாராம்சம். இவ்விரண்டு ஸ்லோகங்களும் என் மனதை மிகவும் கவர்ந்தவையாகும். இன்னும் சொல்லப்போனால் பகவத்கீதையின் மீது எனக்கு அதீத பற்று மிகுந்ததற்கு காரணமே இவைதான்! பொருட்கள்நாம் பார்க்கும் அனைத்துமே. நம் உணர்வுகள் எங்கெல்லாம் இணைகின்றனவோ அவையெல்லாம் பொருட்களே. சாலையில் பலரையும் பார்க்க வேண்டியிருக்கலாம். அவர்கள் எல்லோருமே உங்கள் சிந்தனைக்கு வருவதில்லை. ஆனால், யாராவது ஒருவரைப் பார்த்தவுடன் ஏதோ ஒரு சிந்தனை வருகின்றதா? ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஆசையோ அல்லது அபிலாஷையோ வருகின்றதா? ஒரு நபரைப் பார்த்ததும்இவர் பெரிய மனிதர் போல..’ என்கிற எண்ணம் ஏற்படுகின்றதா? அப்படியானால், இப்படிப்பட்ட தருணங்களில் நீங்கள் சிந்திக்கின்றீர்கள் என்று பொருள்.  இந்த இணைப்பு (connect) எப்படி வருகின்றது? இவற்றில்பெண்என்பவளை உதாரணமாக எடுத்துக்கொள்வது சற்று நன்றாக இருக்குமென்று கருதுகிறேன். ஏனென்றால் அது எல்லோருக்கும் எளிதாக புரிந்துவிடும். ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் ஆசை வருகிறதல்லவா? சிந்திக்கிறோம். நிறைய பெண்களைக் கடந்து செல்கிறீர்கள். ஆனால், அவர்களில் ஒரு சிலர் மட்டுமே மனதில் பதிகிறார்கள். அந்த பதிவின் மூல ஒரு யோசனை வருகிறது. கூடவே ஆசையும் வருகிறது. அத்தகைய ஆசையைத்தான்பற்றுஎன ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா விளக்குகிறார். ’பொருள், சிந்தனை, பற்றுஎன்பதே அந்த வரிசை. பற்று என்பது வரைக்கும் எந்த பிரச்சினையுமில்லை. ஏனென்றால் அவை அனைத்தும் உங்களுக்குள்ளே மட்டும் இருக்கிறது.

அடுத்துஆசைவருகிறது. அது உங்களிலிருந்து வெளியே வருகிறது. அந்த பெண் யாரோ? எவரோ? அந்த பெண் சம்பந்தமாக நாம் என்ன செய்யப்போகிறோம்? உதாரணமாக, என் அலுவலகத்தில் இளம் வயதினர்களைக் கொண்ட டிஜிட்டல் குழுவில் ஒருஹீரோஇருக்கிறார். அவருக்கு ஒரு பெண்ணை பிடித்து விடுகிறது! எல்லா திரைப்படங்களிலும், ஹீரோ என்பவர் ஹீரோயினைப்பார்த்ததுமே, ‘என்மேல் விழுந்த மழைத்துளியே.., இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?’ என்று உணர்ச்சிவயப்படுவது போல் என் அலுவலக ஹீரோவும் அந்த உணர்விற்கு ஆளாகிறார். அவர் என்ன செய்வார்? அலுவலகப் பணி முடிந்ததும், அவர் செல்ல வேண்டிய ஏரியாசைதாப்பேட்டை!’. ஆனால் நம் ஹீரோ பாரீஸ் கார்னர் போவதற்காக தன் வண்டியைத் திருப்புகிறார். ஏன்? அந்த பெண் பாரீஸ் கார்னர் நோக்கிச் செல்கிறாள்! ஆக, செய்யப்பட வேண்டிய அவருடைய காரியத்தை விட்டுவிட்டு தன்னுடைய ஆசையினால் அந்தப்பெண்ணின் பின்னால் செல்கிறார். இதை நான் தவறென்று கூறமாட்டேன். ஏனென்றால், காதலிப்பது, திருமணம் செய்துகொள்வதெல்லாம் எப்படி தவறாகும்? இதில் பிரச்சினை எங்கே வருகிறதென்றால், ஒருவேளை அந்த பெண் நம் ஹீரோவை திரும்பியே பார்க்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். பத்து சிக்னல் கடந்து பாரீஸ் வரைக்கும் வந்தாயிற்று! ஆனால், அந்த பெண் ஒரு சிக்னலில் கூட நம்மவரை திரும்பி கூட பார்க்கவில்லை! அதனால் நம் ஹீரோவிற்கு கோபம் வந்துவிடுகிறது என்றால், அது ஒருரியாக்ஷன்’.

          ஒருவேளை அந்த பெண் திரும்பிப்பார்த்துவிட்டால்? அவளிடம் பேசப்போகிறார். மறுநாள் மீண்டும் இதே பாதை.. சில நாள்கள் இப்படியே கடந்துபோக, திடீரென அந்த பெண்கூட இன்னொரு பையன் (வில்லன்?) வருகிறான்! அதைக்கண்டதும், ‘என் ஹீரோயினுக்கு அவன் ரூட் விடுகிறானோஎன்று கருதினால் நம் ஹீரோவிற்கு வரக்கூடியது கோபம்’.  இந்த கோபமானது பலவழிகளிலும் வரலாம். இவருக்கோ கோபம் வந்துவிட்டது. நம் காதலின் குறுக்கே வேறொருவன் இடையில் புகுந்து விட்டானோ? என்கிற எண்ணத்தினால் அவரது கோபம் குரோதமாக உருபெறுகிறது. நேற்றுவரை அந்த இன்னொருவனுக்கும் நம் ஹீரோவிற்கும் எவ்விதமான சம்பந்தமுமில்லை. நம் ஹீரோ சைதாப்பேட்டை பக்கம்! அந்த இன்னொருவனோ அம்பத்தூர் பக்கம்! ஆனால், பிரச்சினை வந்துசேர்ந்து மையம் கொண்டது என்னவோ.. அந்த இருவருக்கும் சம்பந்தமே இல்லாத பாரீஸ் கார்னரில்!  

கோபம் குரோதமாக உருவெடுத்தபின் அடுத்தநிலையாக வருவது மனமயக்கம். இந்த வார்த்தையை நாம் மிகச்சாதாரணமான வார்த்தையாக கருதக்கூடாது. இதன் பொருள்அறிவை இழப்பதுஆகும். இதற்கும் நம் ஹீரோவின் நிலைப்பாட்டிற்கும் என்ன சம்பந்தம்? ’இந்த உலகத்தில் அந்த பெண் ஒருவள் மட்டுமே இருக்கிறாள். அவளுக்காக மட்டுமே நான் இருக்கிறேன்என்கிற நிலையை எட்டிவிட்டால், அதாவது குரோதத்தின் அடுத்த படி நிலையான மனமயக்கம்”.  அந்த பெண்ணுக்கு வேறு யாரையும் கூட பிடிக்கலாம். அந்த பெண்ணுக்கு வேறு காதல் இருக்கலாம். சொந்த அத்தையின் மகனே (முறைமாமன்) தயாராக இருக்கலாம். இதுபோன்ற விஷயங்களில்தான் பெரும்பாலான காதல் தோல்விகள் ஏற்படுகின்றன. இது குறித்து என்னதான் தெளிவு இருந்தாலும், ஹார்மோன்களின் அதீத தாக்கத்தினால் தெளிவு கிட்டாது. இத்தகைய நிலையில் பொதுவாகவே எல்லோருமே சற்று தடுமாறத்தான் செய்வர். இப்படிப்பட்ட தருணத்தில்தான்புத்தி நிலைபெற்றஒரு நண்பனிடம், ’என்னப்பா.. நான் நினைப்பது சரிதானா?’ என்று கேட்க வேண்டும். அதைவிடுத்து, சம்பந்தப்பட்ட இன்னொருவனை வில்லனாக கருதிக்கொண்டுஎன் ஏரியா உள்ளே வராதே..’என்கிற ரீதியில் பாய்ந்து அவனை அடிக்கப்போனால், அதற்கு அவனும் பதில் தாக்குதல் நடத்துவான். இப்படிப்பட்ட அடுத்தநிலைக்குச் செல்வதற்கு காரணம் மனமயக்கம்’ . இந்த நிலையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் போல் சற்று அதிகமாகி, ‘ஒரு குவாட்டர் போட்டாத்தான் சமாளிக்கலாம்என்கிற நிலையை எட்டினால், அதுதான்நினைவு நழுவுதல்ஏனென்றால், தன் பிரச்சினைக்கான தீர்வை வெளியே தேடாமல், தன்னுள் தேட ஆரம்பித்தால் மனம் வக்கிரநிலைக்குச் (mind pervertion) செல்லும்.  இன்றையச்சூழலில் தமிழகத்தில் சென்னை மட்டுமின்றி, எங்கெல்லாம் கட்டுப்பாடான சமுதாயச் சூழல் நிலவுகின்றதோ, அங்கெல்லாம் நான் ஏற்கனவே கூறிய மன வக்கிரம் (mind pervertion) மிக மிக எளிதாக நடைபெறுகிறது. நினைவு நழுவுதல் என்பதை நான் அவ்வாறுதான் நோக்குகிறேன். அவ்வாறு நடந்துவிட்டால் அதனால் விளையும் சேதம் எப்படி வேண்டுமானாலும்  இருக்கலாம். பாலியல் சம்பந்தமானபோக்சோவழக்கில் முதிர்ந்த வயதானவர்கள் அதிகளவில் சிக்குவதுmind perversionநிலையால்தான் என்பது கவனிக்கத்தக்கது. இந்த mind perversion மிகவும் அபாயகரமானதாகும். இதைப்பற்றி நான் தெளிவாக கூற வேண்டுமானால், அதற்கு வேறு ஒரு வெளி உதாரணத்தின் மூலம் விளக்க வேண்டும். இது perversion – இன் விளைவாகும். பலரும் காதலித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஏன் மிகச்சிலருக்கு மட்டும் இது வருகிறதென்றால், அந்த பெண் வில்லனிடம் பழகியிருப்பாள். ஒரு பத்துநாள் கழித்துஇவன் நம் வாழ்க்கை முறைக்கு நமக்கு சரிப்பட்டு வரமாட்டான்என்கிற எண்ணம் அவளுக்குத் தோன்றி இருக்கலாம்.  ஆனால், அந்த வில்லன் ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம். ஏன் ஒப்புக்கொள்ள மாட்டான்? ‘இவளுக்கு என்னை பிடித்திருக்கிறது. ஆனால், என்னிடம் பணமில்லை. அதனால்தான் அவள் என்னை ஏற்க மறுக்கிறாள்என்று வில்லன் நினைக்கலாம்! அல்லதுஎன்னைவிட அதிகமான பணம் அவனிடத்தில் இருக்கிறது. அதனால் அவன் பக்கம் சாய்ந்துவிட எண்ணுகிறாள்.’ அல்லதுஅவள் என்னுடன் நேரத்தை செலவிட்டபின், என்னை கழற்றிவிடப்பார்க்கிறாள்என்றெல்லாம் யோசிக்கத் தொடங்குகிறான்! அந்த பெண் ஒருமுறை அவனை பிடித்துவிட்டதாக கூறிவிட்டால், அவள் தன்னுடனே வாழ்நாள் முழுக்க இருந்தாக வேண்டும் என்று நினைக்கிறான். உண்மையில், ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணை எப்போது வேண்டுமனாலும் பிடிக்காமல் போக வாய்ப்புள்ளதோ, அதேபோல் ஒரு பெண்ணுக்கும் ஒரு ஆணை பிடிக்காமல் போக வாய்ப்புள்ளது! அந்த காலத்தில் ஒருவன் ஒருத்தியை 5 ஆண்டுகளுக்கும் மேலாகசைட்அடித்துக்கொண்டிருப்பான். ஒருவேளை அவளுடன் பேசத்தொடங்கிய பத்துநாள்களில் அவளை பிடிக்காமல் போவதுண்டு. காரணம் என்ன? அந்த பெண்ணுக்கென தனித்துவமான ஒரு புரிதல் இருக்கலாம். பாதுகாப்பு உணர்வு இருக்கும். இத்தகைய நிலைப்பாட்டைவில்லன்ஆண்கள் ஒப்புக் கொள்வதில்லை. அது ஒரு perversion. அப்போதுதான்இவளுக்கு திமிர் அவள் அழகுதானே.. அவள் முகம்தானே..’ என்று முடிவெடுத்து, அவள் அழகை சேதப்படுத்தவேண்டும் என்கிற mind pervertion உண்டாகிறது.  ஆண்களுக்குள் mind perversion எவ்வளவு மறைந்துள்ளது என்பதை பெண்களால் அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாது. அவனைப் பெற்று, 20 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்த்து ஆளாக்கியவர்களுக்கே அவனைப்பற்றி தெரிந்து கொள்ள முடிவதில்லை. அப்படிப்பட்ட அவனுடன் வெறும் 10 நாள்கள் பழகிய பெண்களால் எப்படி அவனை முழுமையாக புரிந்து கொள்ள முடியும்? இதைத்தான் நான் இளம் பெண்கள் தரப்பிற்கு அடிக்கடி கூறி எச்சரிக்கை செய்கிறேன். இது போன்ற ஒரு உறவு முறிவு (Breakup) ஆகும் நிலை உண்டானால், உடனடியாக அதுகுறித்து பெற்றோர், உறவினர், நண்பர்கள் போன்றோரிடம் உடனடியாக தெரிவித்து விட வேண்டும். ஏனென்றால் ஆசிடேக்ட் என்கிற நிலை அவர்கள் உறவின் இரண்டாம் கட்டமாக வருகிறது. அது எப்படி என்றால், உறவு முறிவு (Breakup) ஆனபின், ’கடைசியாக ஒருமுறை உன்னுடன் பேச வேண்டும். என்னைப்பற்றி புரிய வைக்க வேண்டும்என்று அவன் அழைப்பை ஏற்று சந்திக்கச்செல்லும் போதுதான் பெரும்பாலும் விபரீதங்கள் நிகழ்கின்றன. இது எப்போது நிகழும் என இளம்பெண்களால் அனுமானிக்க இயலாது. ஒருவேளை சந்தித்து விபரீதம் ஏதாவது நிகழ்ந்துவிட்டால், வாழ்க்கை விகாரமாகும் நிலை அந்த இருதரப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பெண்ணைப்பொறுத்தவரையில் அவள் தன் வாழ்நாள் முழுக்க தினந்தோறும் துடிதுடித்து செத்துவாழும் நிலையைக் கொடுத்து விடுகிறது. அவள் முகத்தை அவள் காணவே மிக அவலட்சணமாகவும், அருவெறுப்பாகவும் இருக்கும். ஆண்கள் தலையில் இயல்பாக விழும் வழுக்கையை தாங்கிக்கொள்ள முடியாதபோது, தனக்கு இழைக்கப்பட்ட கோரத்தை ஒரு இளம்பெண்ணால் எப்படி எதிர்கொள்ள முடியும்? அவளுக்கு அதீதமானமனவலிஇருக்கும். அதை அவள் தன் வாழ்நாள் முழுக்க தாங்கிக்கொண்டாக வேண்டும். அவள்மன அழுத்தம்என்கிற படுகுழியில் விழுந்துவிடாமல் இருந்தாலே பெரிய ஆச்சரியம்! அவளுக்கு கொடூர பாதிப்பை ஏற்படுத்தியவனை இந்த சமூகம் அப்படியே விட்டுவிடப்போவதில்லை. அவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 15 ஆண்டுகளாவது சிறைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டு, அவன் வாழ்க்கையும் கிட்டத்தட்ட பயனற்ற நிலைக்குச் செல்லவேண்டிய நிலை உண்டாகிவிடும். அவன் தப்பிக்க எந்த வாய்ப்பும் இருப்பதில்லை. ஒருவேளை சட்டத்தின் பிடியில் அவன் தப்பித்து விட்டாலும், இறைவன் அவ்வளவு எளிதாக அவனை விட்டுவிடுவதில்லை. இருந்தபோதும், அந்த perversion , எப்படி தவிர்ப்பது? பெண்கள் முதலில் ஒருவன் காதலை ஒப்புக்கொண்டு, அதன்பின் சிலகாலம் கழித்து, ‘உன்னை காதலிக்கவில்லை  என்று கூறும் போதுதான் விபரீதம் நிகழ்கிறது. ’.கே. நோஎன்று சொல்லப்படாத காதலில் இத்தகைய அவலம் நிகழ்வதில்லை. ஆகவே, பெண்கள் இதுகுறித்து மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதை மீண்டும் ஒரு முறை எச்சரிப்பதையே என் தாழ்மையான வேண்டுகோளாக வைக்கிறேன். ஆக, pervertion வந்துவிட்டாலே புத்தி அழிந்துபோனது என்று சொல்லலாம். இங்கே புத்தி என்று நான் குறிப்பிடுவது Knowledge, Wisdom, Clarity ஆகியவற்றையே. இங்கே ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா 09; 05புத்தி நிலைபெற்றவனுடைய நிலையையும், புத்தி நிலைபெறாதவனுடைய நிலையையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். கிட்டத்தட்ட நாம் இவையிரண்டிற்குள்தான் வாழ்ந்து வருகிறோம். தன் காதலி வேறொருவனை திருமனம் செய்கிறாளென்றால், ‘எங்கிருந்தாலும் நீ வாழ்கஎன்று கூறிச்சென்று விடுபவனைபுத்தி நிலை பெற்றவன்என்று வைத்துக்கொள்ளலாம்.’புத்தி நிலைபெறாதவன்புத்தி அழிந்தவன்என்று கொள்ளலாம். ஆகவே, நாம் புத்தி நிலைபெற்ற திசையில் பயணிக்க வேண்டும் என்பதை நடைபெற்றுக்கொண்டிருக்கும் 21 ஆம் நூற்றாண்டிலும் ஸ்ரீ கிருஷ்ணர் தெரிவிக்கிறார் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.  இதுதான் 2;63 ஆம் ஸ்லோகம் தரும் பொருள்.

---------------------------------------------------------

No comments:

Post a Comment

99.கிருஷ்ண தரிசனம் -16 (பகவத்கீதை)

  கிருஷ்ண தரிசனம் -16 ( பகவத்கீதை )           ” பொருட்களை நினைப்பதால் அவற்றின் மீது பற்று ஏற்படுகிறது . பற்று ஆசையாக உருவெடுக்கிறது...