கிருஷ்ண தரிசனம் – 15 (பகவத்கீதை)
புலன்கள் விஷயத்தில் எளிதாக தன்னைக் கட்டுப்படுத்திக்
கொள்ளும் ஆமையைப்போன்ற இலகுத் தன்மையையும், நிஜத்தில் எவ்வளவு தாக்கம் இருக்கிறது என்றும் கிருஷ்ண பரமாத்மா தெளிவாக எடுத்துரைத்து,
எச்சரிக்கையும் தந்தார். இப்போது அதற்கான தீர்வையும் குறிப்பிடுகிறார்.
“நீ புத்தி நிலைபெற்றுவிட்டாய்! விவேகம் கைகூடிவிட்டது! விடா முயற்சியுடனும் இருக்கிறாய்! உனக்கு எதிராக செயல்படக்கூடிய இயற்கையின் தாக்கத்தை உணர்ந்து கொள்கிறாய்! உள்ளிருக்கும் ஜெனட்டிக் சம்பந்தமான விஷய ஞானமும் இருக்கிறது! இவையனைத்தும் இருந்தாலும் நீ இன்னும் இரண்டு விஷயங்கலைச் செய்தாக வேண்டும்.” என்கிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. அதாவது எல்லா புலன்களையும் வசப்படுத்தி, என்னில் நிலைபெற்று மன உறுதியுடன் இருக்க வேண்டும். யாருடைய புலன்கள் வசப்பட்டிருக்கின்றனவோ அவனுடைய புத்தி விழிப்புற்றிருக்கும். அது ஆமையின் ஓட்டிற்கு ஒப்பானதாகும். ஆமை தனது புலன்களை ஓட்டிற்குள் சுருக்கிக்கொண்டு
நிலையான புத்திக்குள் விடுகிறதோ.. இங்கு நிலையான புத்தி என்பது ஆமையின் ஓட்டிற்கும் மேலான இறைவன். இந்து மதத்தில் இங்குதான் இறைவன் வேண்டுமா? வேண்டாமா? என்கிற இரண்டு தர்ஷனங்கள் உள்ளன. ஆமையின் ஓட்டின் அளவிற்கு புத்தி நிலைபெற்றுவிட்டால், இறைவன் தேவையில்லை. ஒருவேளை அப்படி இல்லையென்றால் ஆமையின் ஓடுபோல இறைவன் வேண்டும். இதுதான் புரிந்துகொல்ள வெண்டிய விஷயம்.
இரண்டாவதாக ’மனதில் உறுதி’.
மனதில் உறுதி என்றால், ஒன்று இறைவன் இருக்கிறான் என்கிற நம்பிக்கை அல்லது இறைவன் இல்லை என்கிற நம்பிக்கை.
இறைவன் இல்லையென்று கருதினால் நாம் ஆமை ஓடுபோல விளங்க வேண்டும். இறைவன் இருக்கிறான் எனக் கருதினால், அவரை எளிதாக தனதாக்கலாம். இவ்வாறெல்லாம் நடக்கும்போது கிருஷ்ண பரமாத்மா தன்னை ஒரு தொகுப்பாளராக,
மேற்கோளாக காட்டக்கூடிய நபராக தன்னையே வெளிக்காட்டிக் கொள்கிறார். அப்படி அவரை நாம் எடுத்துக்கொண்டால்
நாம் பக்தி யோகத்தில் பயணிக்கிறோம் என்று அர்த்தமாகும்.
ஒருவேளை அவ்வாறு எடுத்துக்கொள்ளவில்லை என்றால் ராஜயோகத்திலோ, அல்லது கர்ம யோகத்திலேயோ பயணிக்கிறோம் என்று பொருள் கொள்ளலாம். இன்னும் ஸ்லோகம் 72 வரையிலும் அர்ஜுனர் கேட்ட கேள்விக்கு கிருஷ்ண பரமாத்மாவின் பதில்களே உள்ளன.
இரண்டாவது அத்தியாயத்தில் ஸ்லோகம் 63 ஆவது ஸ்லோகம் எனக்கு மிகவும் பிடித்தமானது ஆகும். அதை விஞ்ஞானப்பூர்வமான
ஸ்லோகம் என்று கூறலாம்.
----------------------------------------------
No comments:
Post a Comment