Wednesday, September 2, 2026

90.கிருஷ்ண தரிசனம் – 7 (பகவத்கீதை)

 

 

கிருஷ்ண தரிசனம் – 7 (பகவத்கீதை)

          வழக்கறிஞர்களாக இருக்கும் எனது நண்பர்கள் இரண்டுபேர் அலுவலகத்திற்கு வந்து என்னைச் சந்தித்தனர். அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோதுபகவத்கீதைஇராமாயணத்தில் உள்ளதா? மகாபாரதத்தில் உள்ளதா? என்று கேட்டனர்! நான் அதிர்ந்துபோனேன். 

          பொதுவாகவே நம் கலாச்சாரத்தைப் படிப்பதில்லை. அவரவர் திறமைக்கேற்ப சட்டம், பொறியியல், மருத்துவம் போன்றவற்றை படிப்பவர்களாக இருக்கிறார்கள். நம் கலாச்சாரம் சார்ந்த தொன்மையான விஷயங்களெல்லாம் ஏதோ பூஜை செய்பவர்கள் படிக்கக் கூடியது என்கிற நிலை நிலவுகிறது. பகவத்கீதையைக் கூட வயது முதிர்ந்த காலத்தில்தான் படிக்க வேண்டும் என்கிற சிந்தனை நம்மிடையே உள்ளது.

          ஒரு பள்ளியில் தங்களிடம் படிக்கும் குழந்தைகளுக்கு அனைத்து விஷயங்களையும் மிக நேர்த்தியாக கற்பிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். அந்த பள்ளியில் +1 மற்றும் +2 படிக்கும் மாணவ, மாணவியர்களுக்காக நடைபெற்றவினாடி- வினா நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தேன். அங்கு போட்டி நடந்து கொண்டிருக்கும்போது, மகாபாரதத்தில், குருஷேத்திர போர் தொடங்கும் முன் பாண்டவர்களில் அர்ஜுனருக்கு தேரோட்டியாக விளங்கிய ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாபகவத்கீதையைபோதிக்கும் காட்சியை விளக்கும் மிகவும் பிரபலமான ஒரு படம். அதில் கிருஷ்ணருக்கு முன் அர்ஜுனர் மண்டியிட்டு உபதேசம் அருளும்படி கேட்கும் வகையில் இருக்கும். அந்த படத்தைக்காட்டிஇது எதைக்குறிக்கிறது?” என கேள்வி எழுப்பப்பட்டது. முதல் மூன்று சுற்றுகளிலுமே யாரும் சரியான பதில் சொல்ல முடியவில்லை. அதன்பின் பார்வையாளர்களாக கலந்துகொண்ட ஒரு பெண் சரியான பதிலைக்கூறினார். இதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.

ஆக, பகவத் கீதையை முதலில் அறிமுகம் செய்ய வேண்டியுள்ளது. பகவத் கீதை என்பது மகாபாரதத்தில் அதுவும் போர்க்களத்தில் நிகழ்ந்தது என்பதை மீண்டும் மீண்டும் மக்களிடம் பதிய வைக்க வேண்டியுள்ளது. அது நிகழ்வதற்கும் பல நூறு ஆண்டுகளுக்கும் முன்னர் இராமாயண நிகழ்ந்த காலமாக கருதப் படுகிறது.

நாம் கடந்த பதிவின்போது இரண்டாவது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள ஸ்லோகமான 47 வது ஸ்லோகத்தைப் பார்த்தோம். அதில் மூன்று விஷயங்கள் மிகத்தெளிவாக கூறப்பட்டுள்ளன. அதில் முதலாவதாக வேலை- பலன் பற்றி குறிப்பிடுகையில்பலனை எதிர்பார்த்து காரியங்களைச் செய்ய வேண்டாம்என்பதே. அதாவதுசம்பளத்தை எதிர்பார்த்து பணியைச் செய்யாதே! சுவையை எதிர்பார்த்து காபிக்கு ஆசைப்படாதே! ” என்பது போன்ற பொருள் தெரிகிறது. ஆனால் அதன் அர்த்தம் வருகிறது. உண்மையில்வரக்கூடிய பலனின்மீது எதிர்பார்ப்பு வைக்காமல் காரியங்களைச் செய்யவேண்டும்என்று தெளிவுறுத்தப்படுகிறது.

பலனை எதிர்பார்ப்பதற்கும் மேலாக, ”அந்த பலன் எப்படி கிடைக்கும்? எப்போது கிடைக்கும்?” என்று வரவேண்டிய பலன் மீது மனதை ஈடுபடுத்தினால், வேலைகளை சரிவர நிகழ்த்த முடியாது. வேலையை துல்லியமாகவும் தெளிவாகவும் நல்ல தரத்துடன் செய்ய வைப்பதற்காகவே இது கூறப்பட்டுள்ளது. அதை தடுக்கக்கூடிய அம்சமாக பலனை எதிர்பார்ப்பது என்னும் கருத்தியல் உள்ளது.

காபி இன்ன அளவில், இந்தளவு சூட்டில், இப்படி இருக்க வேண்டுமென முடிவு செய்துவிட்டால், காபியை நாம் நன்கு அனுபவிக்க முடியாமல் போய்விடக்கூடும். (”காபியைப்பற்றி குறிப்பிடுவது ஒரு உதாரணத்திற்காக மட்டுமே. ஏனெனில் காபி என்பது ஒரு வேலை கிடையாது.

வேலைஎன்பது நாம் ஆற்ற வேஎண்டிய பெரும் பெரும் பணிகள், நிகழ்த்திவிடத் துடிக்கும் அரிய சாதனைகள் ஆகியவையே!

இதனை இன்றைக்கு இருக்கக்கூடிய சராசரியான வாழ்வியல் பயன்பாட்டைக் கொண்டு பார்க்கக்கூடாது.

சாதிக்க ஆசைப்படும் பெரிய விஷயங்களான சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றிபெறுவது, மருத்துவர் பட்டம் பெற படிப்பது, மென் பொறியியல் துறையில் ஒர் திட்ட வடிவமைப்பில் வெற்றி பெறுவது போன்றவற்றை வேலைகள் (கடமை) என்று கொள்ளலாம். 

இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்) ராக்கெட்டை ஏவுதல் என்பது ஒரு வேலை.

தினமும் காலையில் எழுந்து பல் துலக்கி, குளித்துமுடித்து டிபன் சாப்பிட்டுவிட்டுச் செல்வதெல்லாம் என்றால் வேலையாகாது.

பலன் மீது பற்று வைக்காமல் செய்ய வேண்டிய வேலையின் மீது பற்று வைக்கவேண்டும் என்று சொல்லப்படுகிறது. கிடைக்க வேண்டிய பலனைப்பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கக்கூடாது. அதை உங்களால் நிச்சயம் கட்டியாள முடியாது. அதை கடவுளிடம் விட்டுவிடுங்கள்என்று பகவத்கீதை கூறுகிறது.

இரண்டாவது அத்தியாயத்தின் 49 வது ஸ்லோகத்தில், “யோகம்என்றாலே ஒரு செயலை திறம்படச் செய்வதாகும். ஆனால் இன்றைய நடைமுறையில் எந்த ஒரு வேலையையும் செய்யாமலேயே இருக்கும்போது ஒரு பலன் கிட்டிவிட்டால்அவன் யோக்க்காரனப்பா!” என்று கூறக்கூடிய நிலை உள்ளது!

கிடைக்கக்கூடிய பலனை பொருட்டாக நினைக்காமல், நாம் வேலையின் மீது மட்டும் பற்று வைக்க வேண்டும். பலன் மீது அல்ல. கர்மத்தின் பலன்மேல் பற்று வைப்பதை தவிர்த்து கர்மத்தின் மீதே கண்வைக்கவேண்டும்.

இதைத்தான்கடமையைச் செய்.. பலனை எதிர்பாராதேஎன்று யாரோ ஒருவர் ரத்தினச்சுருக்கமாக பகவத்கீதையின் கருத்தை வடிவமைத்திருக்கிறார். 

நாமும் நம்முடைய சிறந்த வேலைகளுக்காக இந்த வழிகாட்டலின்படி நடப்போம்.

----------------------------------------------

No comments:

Post a Comment

93.கிருஷ்ண தரிசனம் -10 (பகவத்கீதை)

  கிருஷ்ண தரிசனம் -10 ( பகவத்கீதை )             அத்தியாயம் 2- இல் ஸ்லோகம் 56- இல் ” யருடைய மனம் துக்கத்தில் துவளுவதில்லையோ , சுகத...