குற்றம் செய்ததாக ஒப்பு கொண்டாலும்
நீதிமன்றத்தால் தண்டிக்க முடியாது? ஏன்?
இந்தியப் பாராளுமன்ரம், சட்டமன்றங்கள் என எல்லாவற்றிற்குமே தனித்துவமான இறையாண்மை உண்டு என்பதே நம் ஜனநாயகத்தின் சிறப்பு. இந்ந்த நிலையில் சமீபத்தில் நம் தமிழக சட்டமன்றத்தில் இந்நாள் நிதியமைச்சர் திரு.மரியவில்சன் அவர்கள் சட்டமன்றத்தில் உரையாற்றும்போது கடந்த ஆட்சியின்போது, அந்நாளைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மஹேஷ் அவர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக பேசினார். இப்படிப்பேசுவது குற்றமாகாதா? என்று பலரும் கேட்டனர். லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றமே. இதில் சுவாரஸ்சியமான விஷயம் என்னவெனில், அவர் (திரு.மரியவில்ஸன்) சட்டமன்றத்தில் பேசிய பேச்சை வெளியிடங்களில் பேசியிருந்தால் அவரைக் கைது செய்ய வாய்ப்புண்டு. ஆனால், அவர் சட்டமன்றத்தினுள் தான் லஞ்சம் கொடுத்ததாக தெரிவித்ததால் அவருக்கு ஒரு பாதுகாப்பு கிடைத்திருக்கிறது. இறையாண்மை என்பது நாம் உருவாக்குவதாகும். இந்திய அரசியல் அமைப்பு எப்படி அதை உருவாக்குகிறது என்றால், இது சம்பந்தமாக ஆர்ட்டிகல் 105 (பாராளுமன்றம்) மற்றும் ஆர்ட்டிகல் 194 (மாநி சட்டமன்றம்) ஆகிய இரண்டு ஆர்ட்டிகல்ஸை நாம் பார்க்க வேண்டும். முதலாவதாக, ’சபையில் ஒரு உறுப்பினர் பேசிய பேச்சிற்காக, அல்லது ஓட்டுப்போட்டார் என்பதற்காக அவர் மீது குற்றம் சாட்டி எந்த ஒரு நீதிமன்றமும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கைகளையோ, வழக்குகளுக்குள் அவரை ஆட்படுத்துவதோ முடியாது’ என்று தெரிவிக்கிறது. ஆர்ட்டிகல் 19 –இன்படி பேச்சுரிமை சுதந்திரம் என்று அனைவருக்கும், எல்லா இடத்திலும் உள்ளது. சிற்சில கட்டுப்பாடுகளும் உண்டு. அந்த கட்டுப்பாடுகளும் கூட வந்துவிடக்கூடாதென இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. ஏனென்றால், அதுதான் அந்த இறையாண்மையை உருவாக்குகிறது. ’நான் என் தொகுதி மக்களின் பிரதிநிதி. எனக்கு இங்கே பேச்சுரிமை உண்டு. மேலும், நான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் பரிபூரணமான உரிமை எனக்கு உள்ளது’ என அவையின் ஒவ்வொரு உறுப்பினரும் நடந்து கொள்ளும் வகையில் இறையாண்மைக்காக அரசியல் அமைப்பு வரையறுத்துள்ளது. அந்த உயரிய நோக்கத்தின் அடிப்படியைக்கொண்டுதான் திரு.மரிய வில்ஸன் அவர்கள் பேசிய பேச்சிற்காக அவரை கைது செய்யமுடியாது என முடிவு மேற்கொள்ளப்படுகிறது. உண்மையில் மரியவில்ஸன் அவர்கள் பேசியதை சபைக்குறிப்பில் பதிவு செய்யக்கூடாது. மிகவும் சாதுர்யமாகவும், நன்னிலைப் நோக்குடனும் நம் சபாநாயகர் திரு. ஜே.சி.டி.பிரபாகரன் அவர்கள் சபையை நடத்திக்காட்டுகிறார். அவர் திரு.மரிய வில்ஸன் அவர்களின் பேச்சை சபைக்குறிப்பிலிருந்து நீக்கியிருப்பார் என்றே நம்புகிறேன். எதிர்கட்சி வரிசையில் இருக்கும் தி.மு.கவோ ’நாங்கள் லஞ்சம் வாங்கவேயில்லை’ என்று மறுத்துப்பேசாமல், ‘வேண்டுமானால் வழக்குப்பதிவு செய்யுங்கள்’ என்று கூறுகிறார்கள். அவர்கள் கூறுவதின் உள் அர்த்தம் என்னவெனில், ‘லஞ்சம் கொடுத்தேன்’ என்று கூறும் உறுப்பினர் மீது முதலில் வழக்குப்பதிவு செய்யுங்கள்’ என்பதுதான்! தமிழக சட்டமன்றத்தில் எனக்குத்தெரிந்தவரை இதுபோன்ற பிரச்சினைகள் இதுவரை எழவில்லை.
1998 –இல் பாரதப்பிரதமராக காலஞ்சென்ற நரசிம்மராவ் அவர்கள்
பொறுப்பு வகித்தபோது, பாராளுமன்றத்தில் ’ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா’ கட்சியினர் ’பணம்
பெற்றுக்கொண்டு வாக்களித்தனர்’ என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. வழக்கு சி.பி.ஐ கைக்குச்
சென்றது. ஐந்து நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற விசாரணை நடைபெற்றது. அப்போது ’ஆர்ட்டிகல்
105 –இன் படி சபை உறுப்பினர்கள் பேசுவதற்கும், வாக்களிப்பதற்கும் சுதந்திரம் உள்ளது.
ஒருவேளை அவர்கள் பணம் பெற்றுக்கொண்டுதான் வாக்களித்தனர் என்றாலும் கூட, அதற்காக அவர்கள்
மேல் எவ்வித வழக்கும் பதிவுசெய்யக்கூடாது என்கிற
அளவிற்கு பாதுகாப்பு உள்ளது’ என்று தீர்ப்பினை
வழங்கிவிட்டனர்.
அடுத்து 2024-இல் அதே ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற
உறுப்பினர் சீதா சோரன், அப்போது நடைபெற்ற ராஜ்ய சபா தேர்தலின்போது, ’சீதா சோரன் அவர்கள்
கட்சியின் கொறடா ஆணையை நிறைவேற்றாமல், தனிப்பட்ட சுயேச்சையான ஒரு கட்சியிடம் பணம் பெற்றுக்கொண்டு
அந்தக் கட்சிக்கு வாக்களித்து விட்டார்.’ என வழக்குப்பதிவு செய்யப்பட்டது. (இதில் சுவாரஸ்யமான
விஷயம் என்னவென்றால், அவ்வாறு மாற்றி வேறுகட்சிக்கு தான் வாக்களிக்கவேயில்லை என்றார்.
உண்மையில் அதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.) இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு
வந்தபோது,’ஆர்ட்டிகல் 105 பேசுவதற்கும், வாக்களிப்பதற்கும் முழு சுதந்திரம் அளிக்கிறது.
அதற்காக பண்ம பெற்றுக்கொண்டு வாக்களிக்க முடியாது’ என்று கூறியது. ஒருவேளை பணம் பெற்றுக்கொண்டது
நிரூபணமாகி, கிரிமினல் வழக்காக மாறிவிட்டால், பாதுகாப்பு அளித்துக்கொண்டிருக்கும் ஆர்ட்டிகல்
105 தானாக வழக்கிலிருந்து வெளியேறியதாகி விடும். ஆக, அவர் மேல் வழக்கைப் பதிவு செய்யலாம்’
என தீர்ப்பு வழங்கியது.
ஜார்கண்ட்டின் அந்த வழக்கிற்கும், தமிழக அமைச்சர் பேசியதற்கும்
என்ன வித்தியாசம் என்றால், தேர்தல் பணம் பெற்றுக்கொண்டு சட்டமன்றத்தினுள் வாக்களித்தால்
அந்தத் தீர்ப்பு செல்லுபடியாகிறது. ஆனால் ஏற்கனவே லஞ்சம் கொடுத்ததாகக் கூறினால் என்றால்
இந்தத் தீர்ப்பு தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏனெனில் சட்டமன்ற நடவடிக்கைகளுக்காக இதனைச்
செய்திருந்தால்தான் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியும். சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர்
‘’நான் கொலை செய்துவிட்டேன்’ என கூறியிருந்தால், அதை சபாநாயகர் அவைக் குறிப்பிலிருந்து
நீக்கி விட முடியும். அல்ல்து ‘இவர் கொலை செய்ததாகக் கூறுகிறார். இதை என்னவென்று விசாரியுங்கள்’என
பரிந்துரை செய்ய சபாநாயகருக்கு அந்த அதிகாரம் உள்ளது. அவரைத்தவிர காவல்துறையோ அல்லது
நீதிமன்றங்களோ இவ்விஷயத்தில் தனித்துவமாகச் செயல்பட்டு எதையுமே செய்துவிட முடியாது.
ஒருவேளை சபாநாயகர் ‘மேற்படி மாண்புமிகு உறுப்பினர் .. இவ்வாறு சொல்கிறார். என்னவென்று
விசாரிக்கவும்’ என்று சபாநாயகர் கூறினால், அப்போது காவல் துறை வழக்குப்பதிவு செய்ய
முகாந்திரம் உள்ளது. அப்போது உயர்நீதிமன்றம் தாமாக முன்வர முடியும். சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர் பேசியதை ஆதாரமாகக்
கொண்டு காவல்துறையால் நடவடிக்கை எடுக்க முடியாது! அவ்வகையில் இன்றைய சூழலில் திரு.மரிய
வில்சன் அவர்களைக் காப்பாற்றுவது சபாநாயகர் அவர்கள்தான். ஆக, சபாநாயகர் பரிந்துரை ஏதுமில்லாமல்,
எவ்வித ஆதாரத்தையும் திரட்டி வழக்குப் பதிவு செய்யவே முடியாது என்பதுதான் நிதர்சனமான
உண்மை. அமைச்சர் அவர்கள் பேசியது குறித்து மக்களிடையே மற்றும் பத்திரிக்கைகளில் விவாதம்
ஓடிக்கொண்டிருக்கிறது. இதையே ஒரு ஆதாரமாகக் கொண்டு வழக்குப்பதிவு செய்யமுடியுமா? என்றால்,
அதையும் செய்ய முடியாது. ஏனென்றால் சட்டத்தில் இவற்றிற்கு இடமில்லை! ஒருவர் கேட்டார்:
‘நீங்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கி விட்டீர்கள். சரி. ஆனால், சமூக வலைதளங்களில்
பரவிய வண்ணம் இருக்கிறதே..’என்றார். அதைத்தடுக்க வேறு வழியில்லை என்று சொல்லப் பட்டது.
ஆர்ட்டிகல் 105 கொடுத்த பரிபூரண சுதந்திரமானது, அமைச்சர் திரு.மரியவில்சன் அவர்களைப்பாதுகாக்கிறது.
அது மட்டும் இல்லையென்றால், நிலைமை வேறுமாதிரியாகியிருக்கும். இறையாண்மையைப்பாதுகாப்பதற்காக
அரசியல் அமைப்புச் சட்டம் கொடுத்திருக்கும் மிகச்சிறந்த விஷயம் ‘ஆர்ட்டிகல் 105’ ஆகும்.
இதுபோன்ற அம்சம் சர்வதேச அளவிலுள்ள ஜனநாயக நாடுகளில் நிலைத்து நிற்கும்படி அமைக்கப்பட்ட
ஒரு விதிமுறையாகும்! ஆகவே, இதில் அமைச்சருக்கு எவ்வித பிரச்சினையுமில்லை என்பதே தெளிவு!
-----------------------------------------------------------
No comments:
Post a Comment