கிருஷ்ண தரிசனம் -10 (பகவத்கீதை)
அத்தியாயம் 2- இல் ஸ்லோகம் 56-இல் ”யருடைய மனம் துக்கத்தில் துவளுவதில்லையோ, சுகத்தை நாடுவதில்லையோ, பர்று, பயம், கோபம் ஆகியவற்றை விட்டவன் யாரோ அவனே புத்தி விழிப்புற்ற முனிவன் என அழைக்கப்படுகிறான்.” என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்.
எண்ணற்ற மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. நிறைய
உரைகள் இருக்கின்றன. நாம் தமிழில் மிக எளிய உரையை அப்படியே எடுத்துக்கொண்டு கலந்துரையாடுகிறோம். அதை ஆக்கியவர்களுக்கே இதன் பெருமையையும் தந்து விடுகிறேன்.
இதில் மூன்று விஷயங்களைக்கூறுகிறார். முதலில் தன்னிலே திருப்தி கொள்வது, ”இப்போது துக்கத்தில் துவளுவதில்லையோ,
சுகத்தில் நாட்டம் கொள்வதில்லையோ, பற்று, பயம், கோபம் கொள்வதில்லையோ..” என்கிறார். இவையெல்லாம் cause
(காரணம்) என்பதில் அடங்கும்.
Cause என்றால் என்ன?
நமக்குள் அதிருப்தி மனப்பான்மையை உண்டாக்கும் காரணி.
அதிருப்தி உண்டாக்கக்கூடியவை
என்னென்ன?
துக்க, கோபம், பயம் ஆகியவை வருகின்றன. இவையெல்லாம் மனதை கொந்தளிக்கச் செய்யக்கூடியவை ஆகும்.
யாருக்கு துக்கமில்லை?
துக்கத்தினுள் மூழ்காதவனுக்கு!
பயம், கோபம், ஆசை ஆகியவற்றில் அதற்கான வாய்ப்பில்லை. சுகத்தில் நாட்டம் கொள்வதில்லை.
சிலர் “எனக்கு துக்கத்தில் துவளுவது அறவே பிடிக்காது. சுகத்தில் நாட்டம் கொள்வது பிடித்தமான விஷயம்.” என சொல்வதுண்டு. இது ஒரு package (தொகுப்பு) போல் உள்ளது. இது இருந்தால் அது இருக்க முடியாது. சுகத்தில் நாட்டமிருந்தால் துக்கத்தில் துவளவேண்டிய கட்டாயம் வரும். இதை பயிற்சி செய்யும்போதுதான்
இதன் பொருள் நமக்கு புரியத்தொடங்கலாம். ஆதனால்தான் நம் மதக்கோட்பாடுகளில் ”விரதம்” மேற்கொள்கிறோம். விரதத்திற்காக நாம் உணவை தியாகம் செய்கிறோம். நமக்கு பசி எடுக்கிறது. நம் சுகத்தை தள்ளி வைக்கிறோம். அப்படிப்பட்ட சுகத்தை தள்ளிவைப்பதால்
(விரதம் மேற்கொள்வது) ஒருவேளை நாளை பட்டினி என்கிற துக்கநிலை
வந்துவிட்டால் அதை எளிதாக எதிர்கொள்ளும் தைரியம் இயல்பாகவே வந்துவிடுகிறது. சுகத்தை நாமாக தள்ளிவைப்பதால்,
துக்கத்தை எளிதாக எதிர்கொள்ளும் ஆற்றலும் பக்குவமும் கிடைத்துவிடுகிறது. சுகத்தை விரும்பி ஏற்றால் துக்கமும் தானாகவே நம்மைத்தேடி வந்துவிடுகிறது.
ஆக, இம்மூன்றும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்தவை. இந்நிலையே புத்தி நிலைபெற்ற நிலையாகும். இப்படிப்பட்ட நபரையே ”முனிவர்” என்கிறோம்.
இப்படிப்பட்டவர்களைக் குறிக்க சித்தர்கள், சாதுக்கள், சாமியார்கள், நாயன்மார்கள்,
ஆழ்வார்கள், அவதாரங்கள், கடவுள் என பல வார்த்தைகள் உண்டு. இவர்களுக்குள் விகிதாச்சார வேறுபாடு இருக்கின்றனவா? என்று கேட்டால் “ஆம். இருக்கின்றது” என்றே எண்ண வேண்டியுள்ளது.
இது குறித்து நாம் தொடர்ந்துபேசுவோம்.
-------------------------------
No comments:
Post a Comment