கிருஷ்ண தரிசனம் – 5 (பகவத்கீதை)
பகவத்கீதையில் தொடர்ச்சியாக இதுவரை “ஆத்மா, ஆத்மாவின் குணநலன்கள்” ஆகியவற்றைக் கண்டோம். இப்போது அத்தியாயம் 2 –இல் ஸ்லோகம் 39–லிருந்து 53 -வரையிலும் சில விஷயங்களைப் பார்க்க இருக்கிறோம்.
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பகர்ந்தது: நான் ஆத்மாவைப்பற்றி நிறைய கூறினேன். இனிமேல் ஆத்மாவானது எதனுடன் சேர்ந்தால் கர்மத்தளையிலிருந்து (Bonding of Karma) விடுபட முடியுமோ அதைப்பற்றி கூறுவேன். அது எதுவெனில் புத்தி” என்கிறார்.
“புத்தி யோகம்” பகவத்கீதை ஒரே நேர்க்கோட்டில் செல்வதில்லை. ஆங்காங்கே யோகங்கள் மாறி மாறி வரும். மேலே குறிப்பிட்ட 15 ஸ்லோகங்களில் புத்தி யோகத்தைப்பற்றி அதிகமாக ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.
புத்தியோகத்தை விவரிக்கும் முன்னரே, இந்த புத்தியோகத்தைச்
சார்ந்த முயற்சியில் ஈடுபடும்போது எதிர்மறை
(Negative), பக்கவிளைவுகள் (Side Effects) ஏதும் அண்டாது. அனைத்துமே நேர்மறைதான் (Positive). இதில் எத்தனை படிநிலைகள் செல்கிறோமோ.. அவ்வளவிற்கு பயனுள்ளதாக அமையும். முடிவில்லாமல் செல்ல முடியும். ஒருவேளை தவறாக செய்துவிட்டால் (அதாவது மந்திரங்களை தவறாக
சொல்லிவிட்டாலோ, கடவுளை இடமிருந்து வலமாக
சுற்றாமல் வலமிருந்து இடமாக
சுற்றினாலோ, பூஜையின்போது உடைக்கப்படும் தேங்காய் சரிவர
உடைபடாமல் போனாலோ, கடவுளுக்கான நைவேத்யப்பழம் அழுகிவிட்டாலோ, பூவில் மண்
பட்டுவிட்டாலோ..)
”ஏதோ ஒன்று ஆகப்போகிறது” என்று நிமித்தங்களை எதிர்மறையாக எடுத்துக்கொண்டு பயப்பட வேண்டாம். எவ்வளவு நல்லெண்ணத்துடன் (intention) நற்காரியங்களை ஆற்றுகிறீர்களோ அந்த அளவிற்கு புத்தியோகத்தில்
நல்ல விஷயங்கள் பொதிந்துள்ளன. இதில் எந்தவிதமான தவறுகளும் நிகழப் போவதில்லை.”என்கிறார்.
இவை அனைத்துமே அகவளர்ச்சி (உள்வளர்ச்சியே) (internal development). புத்தியோகம் என்றாலே மனம் சார்ந்ததுதான்!
“மனம்” என்பதை நம் பாரம்பரியம் நான்கு வகைகளாகப் பிரித்துள்ளது.
ஆங்கிலத்தில்
Mind என்று சொல்லக்கூடிய வார்த்தையின் பொருளைப் பார்த்தால் ஆத்மா, உயிர் போன்ற அனைத்துமே அடுத்தடுத்து தொடர்புடைய வார்த்தைகள்.
மனிதர்களின் Mind
என்பதையே ”அகங்காரம், மனாஸ், சித்தி, புத்தி” என நான்காக வகைபடுத்தியுள்ளனர்.
”மனாஸ்” என்பதுதான் முதன்மை மனம் (primary
mind) ஆகும்.
”புத்தி” என்பது ‘அறிவாற்றல்’
(Intellect).
”சித்தி” என்பது ஒருவகையான சக்தி.
இதனாலேயே சித்தியில் மேம்பட்டவரை ”சித்தர்’ என்றும், புத்தியில் மேம்பட்டவரை “புத்தர்” அழைப்பது வழக்கம்.
இம்மூன்றையும் ஒருங்கிணைத்து, நம் முகம் போல செயல்படுவது “அகங்காரம்”.
அகங்கராம் உள்ளவர்களை ’திமிர்பிடித்தவர்’ என்று நாம் பொருள் கொள்கிறோம். ஆனால் உண்மையில் பிறரின் பார்வைக்கும், கருத்திற்கும் நம் “தோற்ற வெளிப்பாடு” (image) ஆகும். இது நல்ல விதமாக இருந்தால் “அலங்காரம்”.
இல்லையேல் அதுவே
“கோரம்” ஆகும்.
புத்தியோகம் என்பது மனதில் இருக்கும் புத்திக்குள் போவது. இந்த புத்தியானது நிலைப்பட வேண்டும். இந்த கருத்தினை நாம் பகவத்கீதையில் அடிக்கடி காணலாம். நிலையான புத்தி என்றால் தடுமாறாத புத்தி, கலங்காத புத்தி என்று கூறலாம்.
”விழிப்புற்ற புத்தி” என்றால் “மயங்காத புத்தி” எனப்படும். உதாரணத்திற்கு ஒருவர் மது அருந்திவிட்டு செய்யும் செயலில் தவறு இழைப்பர். மதுவின் தாக்கத்தால் (Under
the influence of the alcohol) நடைபெறுகிரது என்பர். அந்த
influence எதில் செயல்படுகிறது என்றால் புத்தியில்தான்!
ஆக புத்தியை மழுங்கடிக்கிறது, மயக்குகிறது என்றால் நாம் செய்யும் காரியங்கள் சிரத்தையாகவோ, சிறப்பாகவோ இருக்காது என்பதுதான் சொல்லவருகின்ற விஷயம். அப்படியென்றால் யாருக்கெல்லாம் நிரந்தரமான புத்தியிருக்காது?
யாருக்கெல்லாம் புத்தியானது அயக்கத்திலு, கலக்கத்திலும் இருக்குமென்றால், விவேகமற்றவர்களிடத்தில் இருக்காது. விவேகமற்றவர்கள் என்றால் புத்தியே இல்லாதவர்கள் என்று கூறலாம். கடவுளால் அந்த புத்தியை கொடுக்கப்படாமலோ
அல்லது இருந்து அதை பயன்படுத்த விரும்பாதவர்கள் போன்றவர்கள் இப்பிரிவில் அடங்குவர். வேதங்களைப்பற்றி விவாதிப்பவர்களை
இப்பட்டியலில் கொண்டு வந்திருக்கிறார் என்பது ஆச்சரியமான ஒன்று.
இன்னொரு இடத்திலும் வேதங்களைப்பற்றி என்ன சொல்கிறார் என்பதையும் பார்க்கலாம். உலக சுகங்களைத்தவிர வேறு எவ்வித பயனும் இல்லை. அதாவது
material benefit (பொருள் பயன்கள்) –ஐ தவிர immetrial benefit என எதுவுமே இல்லை. ஏதாவது சாப்பிட்டால் சுவையாக இருக்கிறது. ஒரு சினிமா பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. யாராவது தலையை வருடிக்கொடுத்தால் சுகமாக இருக்கிறது. இவையெல்லாம்
material benefits ஆகும். இவற்றைத்தவிர வேறு எந்தவிதமான சுகமும் இருப்பதில்லை. உள்ளே ஒரு அமைதி, மனநிறைவு என்பதே இல்லை. சொர்க்கசுகத்தை தேடுபவர்கள். வேதத்தில் பல இடங்காளில் ”எனக்கு சொர்க்கத்தைக் கொடு”என்றுதான் கேட்கிறார்கள். ஆனால் பகவத்கீதைதான் சொர்க்கத்தைத் தேடுப்பவர்கள் எல்லோரும் “நிலையான புத்தி உள்ளவர்கள்” என்கிறது.
Material wealth (பொருள்
செல்வம்) என்பது வேறு,
Material happiness (பொருள் மகிழ்ச்சி) என்பது வேறு, நிலையான புத்தி வேறு என்கிறது!
“Material wealth (பொருள் செல்வம்) நீண்ட நாட்கள் இருக்கின்றபோது நிலையான புத்தி இல்லாமல் போவதற்கு வாய்ப்பிருக்கிறது” என்பதுதான் ஸ்ரீ கிருஷ்ணபகவானின்
கருத்து.
சுகம் என்றால் “Comfort”. அடுத்து அந்தஸ்து. இது எல்லோருக்குமே இருக்கிறது. அந்தஸ்து என்றாலே “பணக்காரர், அரசியல்வாதி” என்றெல்லாம் நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் அது உண்மையல்ல. அதை Relevance(சம்பந்தம்) என்று கூறலாம். நாம் எந்த இடத்தில் இருக்கிறோமோ
அங்கிருக்கும் ‘அஸ்தி”
(5.53). மற்றவர்கள் நம்மை எப்படி மதிக்கிறார்கள்?
என்பதை நாம் மிகவும் உன்னிப்பாக கவனிக்க, கவனிக்க புத்தியானது தடுமாறிவிடும்.
ஞானிகளும் முனிவர்களும் இதைப்பற்றி ஒருபோதும் கவலைப்படுவதில்லை. இப்படி கவனிக்காமல் இருப்பவர்களுக்குத்தான் நிலையான புத்தி வரும்.
அடுத்ததாக
Under the influence of sex (காமம் நிறைந்தவர்கள்). ”அப்படியென்றால் குடும்பவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு
புத்தி நிலையாக இருக்காதா?” என்கிற கேள்வி எழும். ஆனால், அப்படியல்ல. அது ஒரு Balance. (எது சரியான Balance
– ஆக இருக்க முடியும்? இதில் எது அதிகம்? அல்லது எது குறைவு? என்பதை கடவுள்தான் உணர்த்த முடியும்.)
”மேலே சொல்லப்பட்ட வகையினர்தான் புத்தி தடுமாறிய நிலைக்கு ஆளாவார்கள். நீ அப்படிப்பட்டவனாக
இருக்கக்கூடாது. மேலும் நீ மூன்று குணங்களையும் கடந்தவனாக இரு!” என்று அர்ஜுனரைப்பார்த்து ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா கூறுகிறார்.
அவர் கூறும் அந்த மூன்று குணங்கள் என்னென்ன? அவை முறையே ”சத்வம், ரஜம் மற்றும் தமஸ்” ஆகும். இவ்வுலகத்தில் உள்ள அனைத்து பொருட்களுமே இம்மூன்று வகைக்குள்தான் வருகின்றன. இதுபோல் ஒவ்வொருவருக்கும் இந்த மூன்று குணங்களில் ஏதேனும் ஒன்று இருக்கத்தான் செய்யும்.
மேலே சொல்லப்பட்ட மூன்று குணங்களும் ஒருவருக்கு அமைந்திருக்கும் விகிதாச்சாரத்தின்
அடைப்படையில்தான் அவருடைய அதற்கேற்றார்போல் அவர்களுடைய ஆளுமை(Personality), இயக்கம் (Movement),
சிந்தனைச் செயல்முறை
(Thought process), ஆகியவற்றைப் பொறுத்துதான் அவர்களுடைய உண்மையான செயல்முறையும் அமைகிறது. இதைத்தான் நமது பாரம்பரியம், தத்துவங்கள், மகாபாரதம், இராமாயணம் ஆகிய அனைத்தும் சொல்கின்றன. நமது தொன்றுதொட்ட மருத்துவ முறையான “ஆயுர்வேத மருத்துவமுறையில்”
வகுக்கப்பட்டுள்ள “வாதம், பித்தம், கபம்” ஆகிய மூன்றும் கூட “சத்வம், ரஜம், தமஸ்” ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தவைதான். ஆகவே ”இந்த மூன்று குணங்களையும் சமச்சீராக்கினால்தான் புத்தி நிலைப்படும். புத்தி நிலைபெற்றால்தான் மனமும் நிலைப்படும்”என்பதே கிருஷ்ணபரமாத்மா பகரும் விஷயமாகும்.
கடந்த அத்தியாயத்தில் “இருமை” என்று கண்டோம். அந்த இருமையின் வகைகளான சுகம்;துக்கம், லாபம்;நஷ்டம், குளிர்;வெயில் போன்ற அனைத்தையும் சமமாக பாவித்தால் மட்டுமே புத்தி நிலைப்படும். ”அதுவே புத்தியோகம்” என ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.
புத்தியோகம் என்றால், “என்னென்னவெல்லாம்
இருந்தால் புத்தி நிலைப்படாது? எவையெல்லாம் இருந்தால் புத்தி நிலைப்படும்?”என்ற ஸ்ரீ கிருஷ்ணர், மேலும் ‘புத்தியோகத்தில்
சிறந்திருந்தால் அந்த யோக வாழ்க்கையில் உனக்கு எல்லாவித மகிழ்ச்சியும் அமையும். அவ்வாறு இருந்தால்தான் கருத்தியல் உன்னை நோக்கி பயணிப்பதில் இருக்கும். இல்லையென்றால் பலவிதமான முகங்கள் மற்றும் நோக்கங்களில் சிக்கி அல்லல்பட வேண்டியிருக்கும்”
என்கிறார்.
இது மட்டுமின்றி “தேடவோ, பாதுக்காக்கவோ அற்ற மனநிலையில் இருக்க வேண்டும்” என்கிறார். இதற்கு என்ன அர்த்தம்?
“Prcession let go” என்கிற அணுகுமுறை வேண்டும். ”அடடா… எப்படியாவது செல்வத்தைத்தேட வேண்டுமே..”, ஒருவேளை தேடி, அது கிடைத்துவிட்டால்”எப்படியாவது காப்பாற்ற வேண்டுமே…” போன்ற என்ணங்கள் இருந்தால் நிலைத்த புத்தி இருக்கவே இருக்காது. இந்த வகையில் பார்த்தால் இல்லறத்தில் இருப்பவர்கள், வணிகம் செய்பவர்கள் ஆகீயோர் எதையுமே தேடக் கூடாதா? எதையும் சேர்த்து வைக்கக் கூடாதா? என்று கேட்டால், இங்குதான் ஒரு சமச்சீரான உணர்தல் தேவைப்படுவதாக பரமாத்மா குறிப்பிடுகிறார்.
(08:50 பகவத்கீதையைப்பற்றிய விஷயங்களை முடித்தபின் இது
சம்பந்தமாக நாம்
விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாத்தான் போகிறோம்.)
மேலே சொல்லப்பட்டுள்ள எதையுமே செய்யாமல் வேதத்தைப் படிப்பதனால் எதுவும் ஆகப்போவதில்லை என்கின்றனர். ஏன்?
வேதத்தைப் படித்திருந்தால்தான் விவாதிக்க முடியும். வேதத்தை நன்கு உள்வாங்கினால் இவையெல்லாம் சாத்தியாமாகும் என்கிற பொருளில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.
அதேசமயம் வேதத்தை நன்கு உள்வாங்கிவிட்டால் மீண்டும் அதைப்பற்றி பேசவே தேவையில்லை. வெள்ளம் பெருகி ஓடிக் கொண்டிருக்கும்போது ஏரித்தண்ணீரைக் கொண்டு என்ன செய்யப் போகிறோம்? (இன்றைய காலத்தில் ஓடும்
வெள்ளத்தைக் குடிக்க முடியாது. ஏனென்றால் அந்த
அளவிற்கு அமிலக்கலப்பு ஏற்பட்டிருக்கிறது!) அன்றைய காலத்தில் ஓடிய வெள்ள நீரானது மிகவும் சுத்தமான தண்ணீர். அப்படி வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கும்
போது ஏரித்தண்ணீரை எப்படி குடிக்கப் போகிறாய்? மெய்யான ஞானம் உன்னிடத்தில் வந்துவிட்டால் வேதத்தைத்தெரிந்து
கொண்டு என்ன செய்யப்போகிறாய்? ஆகையால் வேதத்தை தெரிந்துகொள்வதே
வீண்” என்று கடந்துபோகிறார் பரமாத்மா.
இவற்றையெல்லாம் கூறிவிட்டு, இந்த புத்தியோகத்தை மிகவும் எளிதாக காட்சிப்படுத்துவதற்குத்தான் இரண்டாவது அத்தியாயத்தில் அதிமுக்கியமான
47 ஆவது வாசகம். அதுதான் “கடமையைச் செய் பலனை எதிர்பாராதே” என்பதாகும். பகவத்கீதையின் அடிப்படை சாரம்சமாக இந்த வாசகத்தைத்தான் அனைத்து இடங்களிலும் மக்கள் காட்சிப்படுத்துகிறார்கள். இந்த வாசகம் மிகமிக எளிமையான ஒன்று. ஆனால் விரிவான விளக்கங்களை உள்ளடக்கிய வாசகமாகும். அந்த விரிவான விளக்கத்தைப்பற்றி
மீண்டும் அடுத்த நகர்வில் ஆலோசிப்போம்.
-------------------------------------
No comments:
Post a Comment