கிருஷ்ண தரிசனம் -14 (பகவத்கீதை)
அத்தியாயம் 2- இல் 60 ஆவது ஸ்லோகத்தில்,”வேகம் மிக்கவையான புலன்கள் விவேகமும் விடாமுயற்சியையும்
உடைய மனிதனின் மனதைக்கூட வலுக்கட்டாயமாக இழுத்து அலைக்கழிக்கின்றன.”
இதன் மூலம் ஸ்ரீ கிருஷ்ண பகவான், “விவேகமும் புத்திபலமும் விடாமுயற்சியினால் வருமா? என்றால் அது அப்படி வருவதில்லை. அது மனோபாவத்தினால்
(Attitude) வருவது. தனது புத்தி நிலை பெற்ற ஒருவனுக்கு விவேகமும், விடாமுயற்சியும்
இருக்கலாம். ஆனால், இயல்பாகவே அவற்றை தன்னிடத்தில் கொண்டவனுக்குகூட
புலன்களின் இயக்கமானது காட்டாற்று வெள்ளம்போல் இழுத்துச் சென்றுவிடும்.
அப்பொழுது அவன் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” என்கிறார்.
இது இரண்டாவது Cause. முன்பு
genetic inclination இருக்கும் என்றார். மூன்றாவது புலனுணர்வுகளின் சக்தியைக் குறிப்பிடுகிறார். விவேகம், விடாமுயற்சியுடன் என்னதான் சாதித்திருந்தாலும், திடீரென பெரும்வேகத்துடன் அது தரதரவென இழுத்துச் செல்லபடலாம் என்கிறார். அவ்வாறு இழுத்துச்செல்லப்பட்டால் மீண்டும் தொடக்கப்புள்ளிகே வந்து சேர்ந்து மீண்டும் ஆரம்பப்புள்ளியிலிருந்து தொடங்க வேண்டும். இந்த இடத்தில் உலக அமைப்பின் எதார்த்தத்தை குறிப்பிடுகிறார். எங்கள் வயதுடையவர்களின் குழந்தைப்பருவத்தைவிட இன்றைய குழந்தைகளுக்கு ஏதாவது ஒன்றிற்கு”அடிமையாகுதல்”(Addiction)
என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. 1980,
90- களில் எங்கள் தலைமுறையின் குழந்தைப்பருவத்தில்
ரேடியோ, டி.வி, புத்தகங்கள் போன்றவற்றில் சிறு சிறு அளவில் Addiction இருந்தது. இவையெல்லாம் பொதுவாக விளங்கியவை. உணவு, செக்ஸ் போன்றவை
Genetic addictions. (நாம் இதனுள் நுழையத்தேவையில்லை). இன்றைக்கு செல்போனுக்கு அடிமையாவது பல மடங்கு பெருகிவிட்டது. பள்ளிகளில் செல்போனில் ஐபேடில் பாடங்களை ஆன்லைனில் நடத்துகிறார்கள் என்றால், ஆசிரியர்கள் தங்கள் வேலைப் பளுவைக் குறைத்துக்கொள்வதற்காக அவ்வாறு நடத்துகிறார்களா? என்று தெரியவில்லை. ஆனால், குழந்தைகள் அதைத்தான் காரணமாகச் சொல்கிறார்கள்.
எப்பொழுது கேட்டாலும் ”நான் செல்போனில் பாடம் படித்துக்கொண்டிருக்கிறேன். பள்ளியில் ஒரு அஸைன்மெண்ட் தந்தார்கள். இது இல்லாவிட்டால் பள்ளிக் கூடமே நடக்காது” என்று கூறுகிறார்கள்.
பள்ளி நிர்வாகங்கள் இவ்தனை தெரிந்து செய்கிறார்களா? அல்லது தெரியாமல் செய்கிறார்களா
? என்று புரியவில்லை. ஆனால், வீட்டில் இதைக் கட்டுப்படுத்த பெற்றோர்களுக்கு மிகப்பெரிய கஷ்டம் இருக்கின்றது.
ஏன் புத்தகங்களுக்கு அடிமையாக இருப்பதற்கும், செல்போனுக்கு அடிமையாக இருபதற்கும் இவ்வளவு வித்தியாசம் இருக்கிறது? இது மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம். புத்தக அடிமைத்தனத்தில்
அதிக அளவில் பயன்படக்கூடியது கண்களும் மனதும்தான்! கண்கள் எழுத்துகளைப் பார்த்துப் படிக்கின்றன. அது ஒரு காதால் கதையாகவோ, சோகக்கதையாகவோ,
கொலை சம்பந்தமான கதையாகவோ இருக்கலாம். அந்த கதையை உள்ளே கிரகிக்கின்றன.
மனம் லயித்து அதன் கூடவே பயணிக்கிறது. அடுத்து என்ன நடக்கப்போகின்றது
என்கிற பேராவலால் இரவு முழுக்க கண் விழித்தும், கண்விழித்துப்படிப்பதற்காகவே சுறுசுறுப்பிற்காக
காபி குடித்தும் நாவல்களை படித்து முடிக்கும் பழக்கம் பெரும்பாலும் இருந்தது. ஆனால், இன்றைய தலைமுறையினருக்கு அத்தகையா வாய்ப்புகள் இல்லை என்றே கூற வேண்டும். ஆனால் அதைவிட மிகப்பெரிய இடம் ஒன்று உண்டு! அதுதான் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்கள் என்கிற செல்போனுக்கு அடிமையாகுதல்!
அதை கண்கள் பார்க்கின்றன! காதுகள் கூர் தீட்டிக்கேட்கின்றன! அதுவும் ஒரு பாடலோ, உரையோ, அல்லது மீம்ஸோ இப்படி எதுவாயினும் 3-டி எனப்படும் முப்பரிமாண கோணத்தில் வீடியோ தெரிகிறது. (இதுவே புத்தகத்தில்
1-டி தான்!) மேலும் இதுகுறித்து மற்ற குழந்தைகளுடன் கலந்துரையாடும்போது சிந்தனைக்குள்
3-டி தானாகவே உணர்வுகளுடன் கிரகிக்கப்படுகின்றன. ஆக எத்தனை புலன்கள் ஈடுபடுகின்றனவோ அந்த அளவிற்கு அடிமையாகுதல் ஆழமாக ஊடுருகின்றது.
ஆகவேதான் செல்போன்கள் என்பது புத்தகங்களைவிட அதிகமாக பாதிக்கிறது!
மனிதர்களின் ஐந்துபுலன்களுமே ஈடுபாட்டுடன் பங்கெடுப்பது ’ஜெனட்டிக் அடிக்ஷன்!” அதைப்பற்றி பகவத்கீதையில் இறுதியாக வரும் ஸ்லோகங்களில் காண்போம். இதுபோன்ற எதார்த்த உண்மைகளைத் தாண்டி புலன்களை உள்ளே இழுத்துக்கொள்ள வேண்டும். புத்தகத்தைப் பொறுத்தவரை கண்கள் எனும் புலனை மட்டும் உள்ளிழுத்தால் போதுமானது. செல்போன் விஷயத்தில் கண்கள், காதுகள் மற்றும் மனம் ஆகிய அனைத்தையும் உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் தாண்டிதான் ஒருவரின் புத்தி நிலைபெற வேண்டும்! என்பதை கிருஷ்ண பரமாத்மா விளக்குகிறார். இந்த இடத்திலும் கூட யாரையும் தனித்துவமாக அடையாளப்படுத்தவில்லை. அர்ஜுனன் கேட்ட கேள்விக்கான பதிலையே சுருக்கமான வடிவில் கூறுகிறார்.
----------------------------------------------
No comments:
Post a Comment