Friday, September 4, 2026

106.கள்வர்கள் எப்போது தலையெடுக்கிறார்கள்? (குறளின் குரல்-6)

 

கள்வர்கள் எப்போது தலையெடுக்கிறார்கள்? (குறளின் குரல்-6)

 

வான் சிறப்பு  (திருக்குறள் அதிகாரம் 2)

 

திருவள்ளுவர் முதலில் கடவுளுக்கு முக்கியத்துவம் தருகிறார். அதற்கடுத்து அவர் முக்கியத்துவம் தருவது மழைக்காக! அவரைப் பொறுத்த மட்டில் மழையால் தான் உணவு, ஒழுக்கம், தானம், தவம், கலாச்சாரம் ஆகிய அனைத்துமே! மழை என்பது வெறும் நீர் என்பதல்ல. மழை என்பது இல்லாமல் போனால் மேலே குறிப்பிட்ட எவையுமே கிடையாது. அதனால்தான் மழையை கடவுளுக்கு அடுத்த நிலையில் வைத்துள்ளார்.

இன்றைக்கும் கூட தமிழக அரசியலில்இவர் வந்துவிட்டால் மழை இருக்காதுஎன்கிற கற்பிதம் உண்டு. நல்ல மனம் இருந்தால்தான் மழை பொழியும். நல்லவர்களாக இருந்தால் மழை பொழியும். இறைவனும், நல்ல மனமும் ஒன்றாக இருந்தல்தான் மழை பொழியும். நல்ல மனம் இருந்தால்தான் அங்கே இறைவன் இருப்பான். இதையெல்லாம் நாம் அமெரிக்காவிலோ, சீனாவிலோ சென்று கூறினால் அவர்கள் நகைப்பார்கள்.

இந்தியா முழுமையும், குறிப்பாக தமிழகத்தில் மழைக்கும் மனிதர்களின் இயல்பிற்கும் உள்ள தொடர்பை திருவள்ளுவர் கூறியுள்ளார். மழை எப்படிப்பொழிகிறது? என்பதை நாம் அறிவோம். ஆனால் அதில் மனிதர்களின் மன இயல்பு, மனிதர்களுடைய ஒழுக்கம் போன்றவை சம்பந்தப்பட்டுள்ளனவா? என்று கேட்டால் அது காரணமாகவும்(Cause) விளைவுகளாகவுமே (Consequence) காணப்படும் ஒரு தர்க்கம்(Logic)தான்.

மனம் நன்றாக இருந்தால் மழைபொழியும்.

அப்படி மழை பொழியாவிட்டால் மனது நன்றாக இருக்காது.

மனம் நன்றாக இல்லையெனில் தவம், தானம் என எதுவும் நன்றாக இருக்காது.

மனம் நன்றாக இருந்தால் மழை பொழியும் என்பது, மழைக்கு காரணமாக (Cause) மனிதர்களின் மனம் வந்துவிடுகிறது.

மழை நன்றாக பொழியாவிட்டால் மனிதர்கலின் தவம், தானம் மற்றும் ஒழுக்கமும் விலகி விளைவுகளாக (Consequence) மாறிவிடுகிறது. ஆகையால்தான் இரண்டாவதாக ஒரு முக்கியமான அம்சமாக வள்ளுவர் வைத்துள்ளார்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.” (குறள் 12)

 

தமிழ்ப்பேச நினைப்பவர்கள் நேர்பட பேசும் விவாதங்கள், பட்டி மன்றங்களில் மேற்படி வார்த்தை ஜாலமிகுந்த இக்குறளை அடிக்கடி பயன்படுத்துவார்கள். இதன் எளிமையான பொருள் என்னவென்றால், ”சாப்பிடுவதற்கான உணவினை உற்பத்தி செய்ய பயன்படுவது மழை. அந்த உணவுக்கு மட்டுமல்லாமல், அதை உண்பவர்களுக்கு இன்னுமொரு உணவாகவும் பயன்படுவது மழையே!” என்கிறார் வள்ளுவர்.

 

சுவாரஸியமான அடுத்த திருக்குறள் என்னவென்றால்,

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்.” (குறள் 17)

இது ஒரு தர்க்கம். இது நடக்குமா? என யாரும் சோதிக்கமுடியாது. மழை பொய்த்துக்கொண்டே இருந்தால் கடல்கூட வற்றிவிடும். இப்படிப்பட்ட சூழலை இந்திய வரலாற்றிலோ, ஏன் உலக வரலாற்றிலோ கூட பார்த்திருக்க மாட்டோம். மழையே பொழியாமல் போனால் என்னவாகும்? அந்த பிரதேசமே பாலைவனமாகி விடும். ஆனால் கடலே வற்றிவிடுமென்றால் ஒரு தர்க்க ரீதியிலான முடிவு. அதற்கு வாய்ப்பிருக்கிறத? என்றால் ஒரு ஆயிரம் ஆண்டுகள் கழித்து வேண்டுமானால் இருக்குமா? என்றும் தெரியவில்லை. ஆனால், 3-இல் 1 பங்கு தண்ணீர் இந்த பூமியில் எங்காவது ஒரு வடிவத்தில் இருந்துதான் ஆக வேண்டும். அது பனிக்கட்டியாக மாறப்போகிறதா? அல்லது அடைய முடியாத அளவிற்கு இருக்கப்போகிறதா? வள்ளுவர் ஏன் அப்படி ஈர்க்க வைக்கிறார்? கடலைக்கூட வற்றச்செய்யும் அளவிற்கு அந்த நீரின் தாக்கம் இருக்கிறது என்கிறார்.

(இதில் சிறப்பு என்னவென்றால்) அமேசான் கடலில் கடலில் கலக்குமிடத்திற்கு ஒருவர் படகில் சென்றுகொண்டிருப்பார். அப்போது அங்கு புதிதாக சுற்றுலாப்பயணியாக வந்தவர்குடிக்க தண்ணீர் கிடைக்குமா?” என்று கேட்பார். அதற்கு அவர் கடலில் இருக்கும் தண்ணீரைக் குடிக்குமாறு கூறுவார். அதற்கு அந்த சுற்றுலாப்பயணிஎன்ன இவர் கடல்தண்ணீரைக் குடிக்குமாறு கூறுகிறாரே..! ஒரு மார்க்கமான ஆளாக இருப்பாரோ!?”என்று எண்ணி அவரைத்திட்ட, அதற்கு அவரோ கடல்நீரை குடிக்குமாறு மீண்டும் கூற, சுற்றுலாப்பயணியும் கடல்நீரை சிறிதளவு குடித்துப்பார்க்க அது மிகவும் சுவையாக இருக்கும்! கடலில் நதி கலக்குமிடத்திலிருந்து கடலினுள்ளே சுமார் நான்கு கிலோமீட்டர் வரையிலும் நீரானது சுவையாகவே இருக்கிறது. அந்த அமேசான் நதியின் வேகமானது கடல்நீரை உள்ளுக்குத்தள்ளி சுமார் 3000 முதல் 4000 ஆயிரம் மீட்டர்வரையிலும் நன்னீராக விளங்குகிறது. அதுபோல் ஒரு கடலையே சுருக்கக்கூடிய சக்தி இருப்பதாக வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

 

ஒரு சுவையான குறள் என்னவென்றால்,

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.   (குறள்18)

            மழைப்பொழிவு இல்லையென்றால் பூஜைகள் நடைபெறாதுவானம் பொய்த்துவிட்டது. ஆகவே பண்டிகையை மிக எளிமையாகக் கொண்டாடுவோம்என்று மக்கள் கூறுவதை இன்றைக்கும் நாம் கிராமங்களில் பார்க்கிறோம். அதேபோல் கடவுள் மேல் கோபம் கொண்டு, அவரிடம் சென்றுகோபத்திற்கு என்ன காரணம் என்று அறிய முற்படுவர். ”மழை பொழியாமல் போனால் தேவர்களுக்கு திருவிழாக்கள் நடைபெறாதுஎன்பது வெறும் திருவிழாவிற்காக அல்ல. திருவிழாவினால் கடவுள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ இல்லையோ.. மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள் என்று பொருள். இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை ஆவணப்படுத்துகிறார். வள்ளுவர் காலத்தில் மழை சரிவர பொழியாமல் போயிருக்கிறது. அதனால் திருவிழாக்களும் விமரிசையாக நடைபெராமல் போயிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. அக்காலத்தைய நாகரீகம் அனைத்துமே முழுமையாகவே மழையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டவை. நதியை ஆதாரமாகக்கொண்ட நாகரீகத்தில் இந்தப்பிரச்சினை அவ்வளவாக இருப்பதில்லை. கங்கைச் சமவெளி பிரதேசத்தில் மழை இல்லாமல் போனால் செழிப்பாக இருக்குமா? என்றால் அங்கு மழை இல்லாது போனலும் கூட செழிப்பிற்கு குறைவிருக்காது.

 

சிறப்புவாய்ந்த குறள் என்னவெனில்,

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்.   (குறள்19)

            இவ்வுலகில் மழை இல்லாதுபோனால் யாரும் இன்னொருவருக்கு தானம் வழங்க மாட்டார்கள். தனக்கான தவத்தையும் மேற்கொள்ள மாட்டார்கள்.

 

தானம் எப்போது வழங்குவார்கள்?

தன் கைக்கும் மேலாக கிடைக்கப் பெறும் போதுதான் தானம் வழங்குவர்!

தவம் எப்போது மேற்கொள்வர்?

தன் தேவைக்கு எல்லாம் இருக்கின்றன. அப்போது இறைவனுடன் ஒன்றிணைவதற்காகவே தவம். அந்த தவத்திற்குஏமம், நியமம்என்கிற கருத்துகளின் அடிப்படையில் அமையும். அவை இரண்டையுமே செய்யமாட்டார்கள். அதற்கான உந்துதலும் இல்லாது போகிறது. மழை இல்லாமல் போனால் அதற்கான தேவையற்று விடுகிறது. எவ்வளவுதான் பொருள் சம்பாதித்து வைத்திருந்தபோதும் மழை இல்லாவிட்டால் பாலைவனம்தான்.

 

தமிழர்க் கலாச்சாரத்தின் ஐந்திணைகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை என்பனவற்றில்பாலைத்திணையில் மட்டும்தான்கள்வர்என்கிற வார்த்தை இடம்பெறும்.

அது ஏன் பாலையில் மட்டும் வருகிறது?

எங்கு வறட்சி ஏற்படுகிறதோ அங்கு கள்வர்கள் வந்து விடுகிறார்கள்!

மழை இல்லாவிட்டால் தானம் செய்வதற்குக்கூட பணம் சேர்த்துவைக்க இயலாது. இதைத்தான் வள்ளுவர் கோடிட்டுக்காட்டுகிறார்.

 

இறுதியாக மிகச்சிறந்த குறள் எதுவெனில்,

நீர்இன்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்றி அமையாது ஒழுக்கு.   (குறள் 20)

 

            இங்கே நீரையும், வானையும், மழையையும் வள்ளுவர் பிரித்து விடுகிறார். நீர் இல்லையென்றால் இந்த உலகம் இருக்காது. ஆனால், அதைவிட மிகவும் முக்கியமானது, அந்த நீரானது மழை வடிவில் வந்து கொண்டேயிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இந்த உலகத்திற்கே உரித்தான தர்மமும் ஒழுக்கமும் இல்லாமல் போய்விடும்.

 

மேற்படி ஐந்து குறள்களிலும் வானம், மழை, நீர், மனிதர்களின் எண்ணத்தால் மழையும், மழையால் மனிதர்களின் எண்ணமும் மாறுகிறது. ஒட்டுமொத்த மனிதர்களின் எண்ணமே ஒரு சமுதாயத்தை உருவாக்குகிறது. மழை அந்தளவிற்கு முக்கிய அங்கம் வகிக்கிறது.

 

கடவுள் என்ன செய்வார்? எல்லா மனிதர்களின் எண்ணங்களையும் சரி செய்து அவர்களை உயர்த்துகிறார்.

 

சத்திய யுகத்தில் என்ன நடந்தது? அப்போது எல்லோரும் நல்லவர்களாக இருந்தனர். கலியுகத்தில் பெரும்பாலும் கெட்டவர்களாக இருக்கின்றனர். இதை மாற்றுவதற்கு அவதாரமெடுத்து கலியுகத்தில் வாழும் அத்தனைபேரையும் அழித்துவிட்டு, மீண்டும் சத்திய யுகத்திற்கு கொண்டு செல்கிறார். இதனாலேயே மழையை கடவுளுக்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தில் வைத்திருக்கிறார். ஆக நாம் எத்தனையோ வகையில் நாம் முன்னேறிக்கொண்டிருந்தாலும் மழையானது முக்கிய பங்காற்றிக்கொண்டிருக்கும் என்பது நிச்சயம்!

 

வான் சிறப்பைப் போற்றுவோம்.  

 

No comments:

Post a Comment

114.புல்லரிப்பதுபோல் நடிக்க முடியுமா? (குறளின் குரல் - 14)

  புல்லரிப்பதுபோல் நடிக்க முடியுமா? (குறளின் குரல் - 14) அதிகாரம் 8 - அன்புடைமை -குறள் 71             திருக்குறள்   உரை வரிசையில் இப்ப...