கன்வார் யாத்திரை
என்றால் என்ன?
கன்வார் யாத்திரை – சமீபத்தில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது. அங்கே யாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்காக நிறைய கடைகள் உள்ளன. அந்தக் கடைகளின் பெயர்ப்பலகைகளில் கடை உரிமையாளர்களின் பெயர்கள் எழுதப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இவ்விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. சில, பல அரசியல் விஷயங்களும் கலந்திருந்தன!
கன்வார் யாத்திரை என்றால் என்ன?
நம் இந்தியாவில் உத்திரப்பிரதேசம்,
மத்தியப் பிரதேசம், பீகா, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களை கங்கை நதியுடன் தொடர்புபடுத்துவதுதான் ‘கன்வார் யாத்திரை’ ஆகும். மக்கள் தோளில் நீளமான கட்டையை வைத்து அதன் இரு முனைகளிலும் சிறிய, பெரிய பாத்திரங்களைக் கட்டிக்கொண்டு,
அவற்றில் சுமார் 20
-30 லிட்டர் அளவுள்ள நீரை கங்கை நதியிலிருந்து பாத யாத்திரையாக எடுத்துச்சென்று
அவர்களின் சொந்த ஊர்களில் உள்ள சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்வதாகும். இதுவே ’கன்வார் யாத்திரை’. இதனால் தங்கள் ஊருக்கும் தங்கள் குடும்பத்திற்கும் நல்லது நடக்கும் என்கிறா நம்ம்பிக்கை மக்களிடம் க்காலாம் காலாமாக வேரூன்றியிருக்கும் நம்பிக்கை. அவர்கள் தோளில் சுமந்து செல்லும் கம்பின் பெயர் ‘கன்வார்’. அவரவர்களுக்கு ஏதுவான பகுதியில் காங்கையிலிருந்து
நீரை எடுப்பர். அந்த அளவிற்கு கங்கை நதி என்றாலே புனிதம் என்கிற சிந்தனை இந்தியா முழுமையுமே படர்ந்திருக்கும் கலாச்சார சிந்தனை! சமீபத்தில் டெல்லிக்குச் சென்றிருந்த போதுகூட அந்த யாத்திரையை நேரில் கண்டேன். அவர்கள் ஆஅண்காள், பெண்கள் என சிறு சிறு குழுக்களாக யாத்திரை செல்கின்றனர்.
அப்போது அவர்கள் பக்திப்பெருக்கில் முழு உத்வேகத்துடன் வேகமாகச் செல்வர். அப்போது அவர்கள் மோதிக்கொள்ளாத வண்ணம் செல்ல வேண்டும். எருமைமாடுகளை அவர்களுக்கு குறுக்காக கொண்டுவிடுவதால் சில சந்தர்ப்பங்களில்
தகராறு ஏற்பட்டு சட்டம் ஒழுங்குப் பிரச்சினை உருவாகிறது. மக்கள்
யாத்திரை செல்லும் வழிநெடுக அவர்களின் உணவு, தங்குதல் போன்ற தேவைகளுக்காக ஸ்டால்கள்
அமைக்கப்படுகின்றன. இந்த யாத்திரையின் மீது நம்பிக்கையற்றவர்கள், இந்த மதத்தைச் சாராதவர்களும்
அந்த ஸ்டால்களை அமைக்கும்போது, அவர்கள் யாத்திரைக்கு ஒவ்வாத அசைவ உணவுகளை சமக்கும்
கூடங்களாக இருப்பதாக அரசுத்தரப்பு கூஈயது. அது சுப்ரீம் கோர்ட்டால் தடை செய்யப்பட்டுள்ளது.
நம் ஆடி, ஆவணி மாதங்களைச் சேர்த்து வரக்கூடிய ‘ஷ்ராவண் மாதம்’ ( தன் தாய்-தந்தையரை
தெய்வத்திற்கும் மேலாக போற்றி தொண்டு செய்த ’ஷ்ராவண்’ எனும் சிறுவனைப் போற்றும் விதமானது
இந்த மாதம்.) அந்த மாதத்தின் 13 ஆம் ஆளில் கங்கை நீரைக்கொண்டு அபிஷேகம் நடக்கும். கங்கையிலிருந்து
நீரை எடுத்து ஒவ்வொரு ஊரில் இருக்கும் லிங்கத்திற்கும், இமயமலைக்கும் நாம் நித்தியமான
கலாச்சாரத்தை பேணிவருகிறோம். இந்தக்கலாச்சாரப் பிணைப்பே நம் இந்தியாவின் பலம். காசி
– இராமேஸ்வரம் யாத்திரையை மேற்கொள்ளுவதும் இதன் அடிப்படையில்தான். கன்வார் யாத்திரை
உடலுக்கும் மனதிற்கும் பலம் சேர்ப்பதாகும். இவை இந்தியாவின் சிறப்புகள். மக்களின் தூய்மையான
பக்தி வெளிப்பாட்டிற்கும், தேசத்தின் பெருமைக்கு ப்பெருமை சேர்க்கவும் அரசாங்கங்கள்
ஆவன செய்ய வேண்டுமென்பதே என் அவா.
--------------------------------------------------
No comments:
Post a Comment